என்னுள் சங்கீதமாய் நீ 22

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 22



மாமாவை.. டிஸ்சார்ஜ் செய்து நாங்களே வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுறோம்.. நீங்க ரெண்டு பேறும் கிளம்புங்க... என்று இந்திரன் வரவும், ரேணுகா சொல்ல, சுபத்ராவிற்கும் “நெடு நேரம் கார் ஓட்டியதால்..” களைப்பாக இருந்ததால், ஹர்ஷினியுடன் வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.

மாலை நெருங்கவும், வீட்டில் உள்ள அனைவரும் ஆச்சார்யா வருவதற்காக காத்திருக்கும் போது, வந்தனர் “இளங்கோ..” குடும்பத்தினர். அவர்களை பார்த்ததும் பதட்டமடைந்த சுபத்ரா, வேகமாக அவர்கள் அருகில் சென்றவாறே வாங்க.. வாங்க என்று வரவேற்கவும்,

“யார் இவர்கள்..?” என்று தெரியாமல் குழப்பமடைந்த சந்திரனும், ஹர்ஷினியும், வீட்டு ஆட்களாய் முறையாக “வாங்க.. உட்காருங்க..” என்றனர்.

அண்ணா.. “இவர் இளங்கோ.. இது அவங்க அப்பா, அம்மா..” என்று சந்திரனிடமும், இது என்னோட பெரிய அண்ணா, அவரோட பொண்ணு ஹர்ஷினி என்றபடி இரு பக்கமும் முறையாக அறிமுக செய்தார் சுபத்ரா.

யார்..? என்ன..? என்று தெரியாத போதிலும், சுபத்ராவிற்காக வரவவேற்று உட்கார செய்த சந்திரன், காபி, பலகாரம் கொண்டு வரச்செய்து அவர்களை உபசரிக்கவும்,

இருக்கட்டும்ப்பா..? இப்போ அப்பாக்கு எப்படி இருக்கு..? என்று வயதான அந்த பெண்மணி கேட்கவும், “இப்போ நல்லா இருக்கார்.. வீட்டுக்கு வர டைம் தான்” எனவும்,

ஓஹ் நல்லதா போச்சு, நாங்கலே ஹாஸ்பிடல் போய் அவரை பாக்கலாம்ன்னா..? எந்த ஹாஸ்பிடல்ன்னு தெரியல.. அதான் வீட்டுக்கே வந்துட்டோம் என்று இளங்கோவின் அப்பா சொன்னார்.

என்னங்கடா இது..? இவ்வளவு உரிமையா பேசுறாங்க.. யாருன்னே தெரியல..? சரி அத்தை கிட்டே கேட்டுரலாம் என்று யோசித்தபடி சுபத்ராவை பார்த்த ஹர்ஷினி அதிர்ச்சியில் உறைந்தே விட்டாள்.

இளங்கோவை பார்க்காமல் பார்த்த படி இருந்த, “சுபத்ராவின் கண்களில் தெரிந்த காதல்.. அவர் முகத்தில் உள்ள வெட்க சிவப்பு, கொஞ்சம் பதட்டம்.. இதெல்லாம் ஜெயயை பார்க்கும் போது தனக்குள் ஏற்படும் அதே தடுமாற்றம்.. அப்படி என்றால் அத்தை லவ் பண்றங்களா..?” என்று நினைத்தவுடன்,

அதிர்ச்சியில் கண்களை பெரிதாக விரித்தவாறே, தன் கையை கொண்டு வாயை மூடியபடி, இளங்கோவையும், சுபத்ராவையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.

அப்பொழுது இளங்கோவிடம் இருந்து மெலிதான சிரிப்பு சத்தம் கேட்கவும், அவரை பார்த்த ஹர்ஷினி, அவர் தன்னை பார்த்து தான் சிரிக்கிறார் என்று புரிந்தவுடன், தன் கையை வாயிலிருந்து எடுத்துவிட்டு அவரை நன்றாக பார்த்தாள்.

திடகாத்திரமான தோற்றம், கம்பீரமாக அமர்ந்து இருந்த விதம், மாநிறத்தில் மிகவும் களையான முகம், அதோடு அவர் கண்களில் எந்தவிதமான கள்ளமும் இல்லாமல், மிகவும் நல்லவிதமாக தான் தெரிந்தார்,

எல்லாவற்றயும் விட, சுபத்ராவை பார்க்கும் போது தெரிந்த அவரின் கண்களில் தெரிந்த அளவில்லா காதல்.. ஒன்றே ஹர்ஷினிக்கு போதுமானதாக இருந்தது.

அவரோட அப்பா, அம்மாவும் நல்ல ஆளுங்களாத்தான் இருக்காங்க.. என்ற படி அவர்களை தனக்கு தெரிந்த வரை எடை போட்டவள், மறுபடியும் ஆராய்ச்சியாக இளங்கோவை பார்க்கவும், அவர் சைகையாலே..

உங்க அத்தைக்கு நான் ஓகேவா இருக்கேனா.? என்று கண்களில் சிரிப்புடன் கேட்க, முதலில் அதிர்ந்தாலும், பின்பு

எங்க அத்தை அழகுக்கு, நீங்க ஓகே ரகம் தான்.. எனும் விதமாக இவளும் குறும்பாக சைகை காட்ட, சிரித்த இளங்கோவை கவனித்த சுபத்ரா, என்ன ஹர்ஷினி..? என்று ஆவலாக கேட்க,

நீ பேசாத அத்தை.. என்கிட்ட நீ சொல்லவே இல்ல போ..? என்று முறுக்கவும், ஹர்ஷினிக்கு தெரிந்து விட்டது என்று புரிந்து கொண்ட சுபத்ரா.. தடுமாற்றத்துடன் அப்பாகிட்ட சொல்லிருக்கேன்.. அவர் ஓகே சொன்னதுக்கு அப்பறம் உங்ககிட்ட சொல்லலாம்ன்னு நினைச்சேன் என்று வெட்கத்துடன் சொல்லவும்,

அத்தை நீங்க வெட்கப்பட்டா இன்னும் இன்னும் அழகா இருக்கீங்க.. என்று கொஞ்சிய படி அவரை கட்டிப்பிடித்து கொண்டாள். இளங்கோ அப்பா, அம்மாவிடம் பொதுவாக பேசியபடி இருந்த சந்திரனுக்கு போன் வரவும். நான் இதோ வந்துடுறேன் என்று விட்டு, அவர் பேச எழுந்து தள்ளி செல்லவும்,

என்ன சுபா இது..? அவ்வளவு தூரம் தனியாவே வண்டி ஓட்டிட்டு வந்திருக்க, இளங்கோ போன் பண்ணாலும் எடுக்கல, அதான் உன்னையும் பாத்துட்டு, அப்படியே அப்பாவையும் பாத்துட்டு போகலாம்ன்னு நாங்களும் சென்னையிலிருந்து கிளம்பி வந்துட்டோம் என்று இளங்கோவின் அம்மா அன்னபூரணி சொல்லவும்,

அவர்களின் அலைச்சலை புரிந்து கொண்ட சுபத்ரா குற்ற உணர்ச்சியுடன், இல்லம்மா, அப்பா ஹாஸ்பிடல்ல இருக்காருன்னு சொன்னதும், என்ன ஆச்சோங்கிற பயத்துல கிளம்பிட்டேன்.. என்று விளக்கம் கொடுத்தவாறே இளங்கோவை பார்த்தவர்,

அவர் கோவமாக முறைக்கவும், சாரி.. என்று சொல்ல, “இனி எப்பவும் இப்படி செய்ய கூடாது..? இது தான் பைனல்..” என்று கண்டிப்புடன் இளங்கோ சொல்லவும், ஓகே என்று சுபத்ரா சொல்லும் போதே,

அங்கு வந்த சந்திரன், “வந்ததிலிருந்து எதுவும் சாப்பிடாம இருக்கீங்க, இந்த காபியாவது எடுத்துக்கோங்க..” என்று உபசரிப்பாக சொல்லவும்,

“என்னதான் நாங்க பொழப்புக்காக மெட்ராஸ்ல இருந்தாலும், எங்க வேர் கிராமம் தான், அதுவும் எங்க பக்கத்துல நாங்க சம்மந்தியாக போற இடத்துல பரிசம் போடாம கை நனைக்க மாட்டோம் என்று பளிச்சென்று இளங்கோவின் அப்பா தண்டபாணி சொல்லிவிடவும்,

என்ன சொல்றீங்க..? சம்மந்தம் பண்ற இடமா..? என்ன சுபத்ரா இதெல்லாம்..? என்று சந்திரன் கோவமாக கேட்க,

அண்ணா.. ப்ளீஸ் கோவப்படாம பொறுமையா பேசுங்க.. நான் இந்த விஷயத்தை பத்தி ஏற்கனவே அப்பாட்ட சொல்லிட்டேன்.. என்று கெஞ்சலாக சுபத்ரா சொல்லவும்,

அப்படியா..? அப்பா என்ன சொன்னார்..?

அது.. அது.. யோசிச்சி சொல்றேன்னு சொன்னார்.. என்று தடுமாற்றத்துடன் சொல்ல

ஓஹ்.. அதான் அப்பா ஒரு வாரமா ரொம்ப யோசனையா, கவலையாவே இருந்தாரா..? “இதில் எதோ ஆச்சார்யாவிற்கு பிடிக்கல..” என்று புரிந்து கொண்ட சந்திரன்,

எதுக்கு யோசிக்கிறேன்னு சொன்னார்..? என்ன அப்பாக்கு பிடிக்கல..? என்று இளங்கோவையும், சுபத்ராவையும் கூர்மையாக பார்த்தபடி கேட்டார்,

அண்ணா நாம கொஞ்சம் உள்ள போய் பேசலாமா..? என்று சுபத்ரா சொல்லி கொண்டிருக்கும் பொதே..

“நான் 3 வருஷம் ஜெயில்ல இருந்தேன்.. கொலை குற்றத்திற்காக..?” என்று இளங்கோ பட்டென்று தைரியமாக உடைத்து விட,

அதிர்ச்சியில் கல்லாய் சமைந்து விட்டனர் சந்திரனும், ஹர்ஷினியும்.. அண்ணா..? என்று சுபத்ரா பயத்துடன் கூப்பிடவும், நீ பேசாத..? என்று விரல் நீட்டி மிரட்டியவர், இளங்கோவை ஆத்திரமாக பார்த்து,

“ஜெயிலுக்கு போன உனக்கு என் தங்கச்சி கேக்குதா..?” என்றபடி ஆவேசமாக சந்திரன் கத்தவும்,

தம்பி கொஞ்சம் பொறுமையா பேசலாம்.. என்று அன்னபூரணி சொல்ல,

இதில பொறுமையா பேச என்ன இருக்கு,..? உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா உங்க கொலைகார மகனுக்கு பொண்ணு கேட்டு எங்க வீட்டுக்கே வருவீங்க..?

என் தங்கச்சிக்கு ஒரு கொலைகாரன் மாப்பிள்ளையா..? என்ற ஆத்திரத்தில் என்ன சொல்ல வருகிறார்கள்..? என்று யார் சொல்ல வருவதையும் கேட்காமல் கோவத்தில் எகிறியவாறே இருந்தார்.

தம்பி அவசரப்பட்டு அப்படி எல்லாம் சொல்லாதப்பா.. ஏன் “என் புள்ள ஜெயிலுக்கு போச்சுன்னு கேட்டுட்டு அப்பறம் பேசுப்பா..” என்று இறைஞ்சுதலாக அன்னபூரணி கேட்டார் என்றால்,

தண்டபாணியும் மகனுக்காக பொறுமையாவே சந்திரனிடம் பேசி புரிய வைக்க முயற்சி செய்தார்.. சுபத்ராவும் “அண்ணா.. அவசரப்பட்டு எதுவும் பேசாதீங்க ப்ளீஸ்ன்னா..” என்று கெஞ்சவே செய்தார்.

முதலில் அதிர்ச்சியடைந்த ஹர்ஷினியும், இளங்கோவின் கண்களில் இருக்கும் நேர்மையை கண்டு, கண்டிப்பா எதாவது காரணம் இருக்கும் என்று புரிந்து கொண்டு, “அப்பா.. பொறுமையா பேசலாம்..” என்று சுபத்ராவுடன் சேர்ந்து கெஞ்சவே செய்தாள்.

இளங்கோவுமே நான் சொல்றதை பொறுமையா கேளுங்க.. என் பக்கம் உள்ள நியாயம் புரியும் என்று வேண்டுகோளாகவே கேட்டார்.

ஆனால் ஆத்திரத்தில் நிதானமிழந்த சந்திரன் யார் பேசுவதையும் கேட்காமல், இளங்கோ கொலைகாரன், அவனுக்கு என் தங்கச்சி கேட்குதா..? என்ற ரீதியிலே திரும்ப திரும்ப பேசவும், பொறுமையிழந்த தண்டபாணி,

தம்பி மனுஷனுக்கு முதல்ல பொறுமை ரொம்ப அவசியம், நாங்க சொல்ல வரதை கூட கேட்காம இப்படி கோவத்தில கத்தினா எப்படி..? என்று சத்தமாக அதட்டவும், அவரின் அதட்டலில் மேலும் ஆத்திரம் கொண்ட சந்திரன்,

என் வீட்டுக்கே வந்து எனக்கு புத்திமதி சொல்லறது எல்லாம் இருக்கட்டும்.. உன் கொலைகார மகனுக்கு புத்தி சொல்லி வளத்திருந்தா அவன் ஏன் இப்படி கொலைகாரானா நிக்க போறான்..? வந்துட்டார் எனக்கு புத்தி சொல்ல என்று மரியாதை இல்லாமல் பேசவும்,

கொதித்தெழுந்த இளங்கோ, எங்க அப்பாவையே மரியாதை இல்லாமல் பேசுரீங்க ..அவரை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு.. என்று கோவமாக பேச, பதிலுக்கு சந்திரனும் பேச, பிரச்சனை முற்றி, என் வீட்டை விட்டு வெளியே போங்க என்று சந்திரன் சொல்லிவிட,

அதுவரை பொறுமையாக கெஞ்சி கொண்டிருந்த சுபத்ரா, சந்திரன் சொன்னதை கேட்டவுடன் பொறுமை இழந்து,

அதை நீங்க சொல்ல கூடாது.. எனக்கும் இந்த வீட்ல உரிமை இருக்கு என்று கோவமாக சொல்லவும்,

ஓஹ் அந்தளவுக்கு ஆயிடுச்சா..? உனக்கு என்னை விட இவன்தான் முக்கியமா போய்ட்டானா..?

ஆமா.. அப்படித்தான்.. என்று சுபத்ரா உறுதியுடன் சொல்ல, என்ன சொன்ன..?என்ற படி அவரை அறைய கை ஓங்கவும், ஓங்கிய கையை பாதியிலே பிடித்து விட்ட இளங்கோ,

“அவங்க மேல கை வைக்கிற வேலை எல்லாம் வேண்டாம்..” என்று கோவமாக சொல்லவும், உச்ச கட்ட கோவத்தில் அறிவிழந்த சந்திரன்,

என் வீட்டுக்கே வந்து என்ன கையவாடா பிடிக்கிற..? வெளியே போடா.. என்று கத்திய படி இளங்கோவின் கையை பிடித்து இழுத்து கொண்டு கேட்டுக்கு வெளியே தள்ளவும்,

அவர்கள் வீடு இருந்த இடம் மெயின் ரோடு என்பதால் இளங்கோ தடுமாறி கீழே விழும் சமயம்,அந்த பக்கமாக சென்றுகொண்டிருந்த கார் ஒன்று அவரின் வலது கால் மேல் ஏறிவிட்டது..

கண் இமைக்கும் நொடியில் நிகழ்ந்து விட்ட கொடூரத்தில், ஐயோ.. அம்மா.. ஏங்க.. இளங்கோ.. தம்பி என்று பலவிதமான குரல் எதிரொலித்தது, தள்ளி விட்ட சந்திரனும், அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு..” என்ற பொன்மொழியை உண்மையாக்கினார் சந்திரன்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் வந்து விட, அவர்களின் உதவியுடன் ஒரு ஆட்டோவில் இளங்கோவை ஏற்றி கொண்டு அன்னப்பூரணி, தண்டபாணி இருவரும் ஹாஸ்பிடல் கிளம்பிவிட்டனர்.

பின்னாலே இன்னொரு ஆட்டோவில் சென்ற சுபத்ராவும், ஹர்ஷினியும், அவர்கள் எந்த ஹாஸ்பிடல் சென்றார்கள், எங்கு சென்றார்கள் என்று தெரியாமல் நெடு நேரம் தேடியவர்கள், கிடைக்காமல் வீடு திரும்பினர்.

சரியாக அப்பொழுது வந்த ஆச்சார்யாவும் விஷயம் கேள்விப்பட்டு, அங்கு சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைத்து ஹாஸ்பிடலில் தேடியும், அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை.

"உன்கிட்ட நான் இதை எதிர்ப்பார்க்கலை பெரியவனே.." என்று நடந்த அத்தனையும் விசாரித்து தெரிந்து கொண்ட ஆச்சார்யா வெறுப்பாக சொன்னார் என்றால், சுபத்ராவும், ஹர்ஷினியும் அவரின் முகத்தை கூட பார்க்க மறுத்தனர்.

………………………………………………………………….



ஹாய் ப்ரண்ட்ஸ்


இன்னிக்கு ரெண்டு எபி போட்டுஇருக்கேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்கப்பா.. thank you ப்ரண்ட்ஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
அய்யோ அம்மா
படிக்கும் பொழுதே நெஞ்சு பதறுதே
அடுத்தவனை ஊனமாக்கற அளவுக்கு சந்திரனுக்கு இவ்வளவு கோபம் வந்திருக்கக் கூடாது
இவன் தங்கை சுபத்ரா என்ன பதினாறு வயது சின்னப் பெண்ணா?
அத்தனை பேர் சொல்லியும் கேட்காமல் அப்படியென்ன திமிரு?
நிதானமில்லாமல் பேசி இளங்கோவை முடமாக்கிய சந்திரன் மீது கோபப்பட்டு சுபத்ராவும் ஹர்ஷினியும் பேசாமல் இருப்பது தப்பேயில்லை
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top