என்னுள் சங்கீதமாய் நீ 21

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 21





அங்கிள் இப்போ தாத்தாக்கு எப்படி இருக்கு..? என்று ஆச்சார்யாவிற்கு செக் அப் முடித்ததும் டாக்டர் கணேஷிடம், ஹர்ஷினி கவலையுடன் கேட்க,

இப்போ ஓகே ஹர்ஷினி.. பட் இன்னும் ஒரு வாரத்துக்கு கம்ப்ளீட் பெட் ரெஸ்ட்ல தான் இருக்கணும், நோ மோர் ஸ்ட்ரெஸ் ஆச்சார்யா.. என்று ஆச்சார்யாவிடம் கண்டிப்புடன் சொன்னார்.

ம்ம் அதெல்லாம் சரி... நான் வீட்டுக்கு போகணும்… என்று ஆச்சார்யா அடமாக ஆரம்பிக்க,

வாட்...? என்ன விளையாடுறியா நீ..? நான் என்ன சொல்லிட்டுருக்கேன்.. நீ என்ன சொல்ற..? இன்னும் மூணு நாளைக்கு நீ இங்க தான் இருக்கணும்.. வீட்டுக்கு எல்லாம் போக முடியாது..

என்னது இன்னும் மூணு நாளா..? அதெல்லாம் முடியாது, என்னால இதுக்கும் மேல இங்க இருக்க முடியாது.. எனக்கு வீட்டுக்கு போகணும்.. உனக்கு என்ன நான் ஸ்ட்ரெஸ் எடுத்துக்க கூடாது அதானே..

அதுமட்டுமில்ல கண்டிப்பா உனக்கு ரெஸ்ட்டும் வேணும்..,

ரெஸ்ட் தானே.., நான் வீட்லே ரெஸ்ட்ல இருந்துப்பேன்..

யாரு நீ..? உனக்கு உங்க ஹோட்டலுக்கு போகலேன்னாவே தூக்கம் வராது.. நீ எங்க வீட்ல ரெஸ்ட் எடுக்க போற என்று நக்கலாக கணேஷ் சொல்ல,

கடுப்பான ஆச்சார்யா, எனக்கு இந்த ஹாஸ்பிடல் அட்மாஸ்பியரே பிடிக்கல.. நான் இன்னிக்கு வீட்டுக்கு போயே ஆகணும், அவ்வளவுதான் என்று உறுதியாக நிற்க,

அவரின் ஹாஸ்பிடல் விருப்பமின்மையை புரிந்து கொண்ட.. ஹர்ஷினியும் ஆச்சார்யாவிற்காக, “தாத்தாவை நீங்க சொன்ன படியே நான் பாத்துக்கிறேன் அங்கிள்..” என்று சொல்ல, வேறு வழி இல்லாமல் ஒத்துக்கொண்ட கணேஷ்,

ஓகே ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்றேன்.. பட் மூணு நாளைக்காவது என் ஸ்டாப் அங்க உன்கூட இருப்பாங்க என்று முடித்துவிட, ஆச்சார்யாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் வீட்டுக்கு போன போதும் என்ற மனநிலையுடன் ஓகே என்றுவிட்டார்.

ஓகே.. இவ்ளோ நேரம் ரெஸ்ட் எடுக்காம பேசிட்டு இருந்துட்ட.. சோ இப்போ நீ கண்டிப்பா ரெஸ்ட் எடுக்கணும். என்று ஆச்சார்யாவிடம் சொன்னவர்,

ஹர்ஷினி நீ என்னோட வா.. என்று கையோடு அவளை அழைத்து கொண்டு வெளியே வந்துவிடவும், ஆச்சார்யா சுபத்ராவை பற்றி சொல்ல வந்தது சொல்ல முடியாமலே போய்விட்டது.

ஹர்ஷினி டாக்டரிடம் ஆச்சார்யாவிற்கான உணவு முறை மற்றும் பிற சந்தேகங்களை கேட்டுகொண்டு வந்தவள், ரேணுகாவிடமும், மாலதியுடனும் அதை பற்றி பேசி கொண்டிருக்கும் போது, அங்கு வேகமாக வந்த சுபத்ரா,

அப்பாக்கு என்ன ஆச்சு..? ஏன் தீடிர்ன்னு இப்படி..? இப்போ எப்படி இருக்கார்..? யாராவது பதில் சொல்லுங்க.. என்று பதட்டத்துடன் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்கவும்,

அத்தை.. “தாத்தா இப்போ பெர்பெக்ட்லி ஆல்டரைட்.. நீங்க பதட்டப்படாம முதல்ல ரிலாக்ஸா உட்காருங்க..” என்று சொல்லியபடியே அவரின் கையை பிடித்து சேரில் உட்கார வைத்த ஹர்ஷினி, அம்மா தண்ணி கொண்டு வாங்க.. என்று ரேணுகாவிடம் சொல்ல,

வேகமாக தண்ணி கொண்டு வந்தவர், இந்தா இந்த தண்ணியை குடி முதல்ல.. மாமா இப்போ நல்ல இருக்க்காருன்னு, நாங்க தான் போன்லே சொன்னோம் இல்ல சுபா..

உங்க அண்ணன் டிரைவர் அரேஞ் பண்றதுக்குள்ள உன்னை யாரு சென்னையிலிருந்து தனியா டிரைவ் பண்ணிட்டு வர சொன்னது..? என்று கண்டிப்புடன் சொல்ல,

ஆமா அக்கா, அதுவும் இவ்வளவு டென்க்ஷன்ல வண்டிய ஓட்டிட்டு வந்திருக்கா பாருங்க.., எதுக்கு இந்த மாதிரி ரிஸ்க் எடுக்கற சுபா நீ என்று மாலதியும் கடிந்து கொண்டனர்.

ச்சு.. இனி இப்படி பண்ண மாட்டேன்.. “எனக்கு பர்ஸ்ட் அப்பாவை பார்க்கணும்” எனவும்,

அவர் இப்போ தான் தூங்கினார் அத்தை,

பரவாயில்ல ஹர்ஷினி.. எனக்கு அவரை பாத்தா போதும் என்றவர், ஹர்ஷினியுடன் சென்று ஆச்சார்யாவை பார்த்து விட்டு வந்தவர்,

என்ன ஆச்சு அண்ணி..? அப்பாக்கு ஏன் திடீர்னு இப்படி..? என்று கேட்க, ரேணுகா, மாலதி இருவரும் ஹர்ஷினியை தான் பார்த்தனர், “என்ன நடந்ததென்று எப்படி சொல்ல..?” என்று புரியாமல் தயக்கமாக பார்க்கவும், புரிந்து கொண்ட ஹர்ஷினி,

“நான் வெளியே கார்டென்ல் இருக்கேன்..” என்று விட்டு வேகமாக எழுந்து செல்லவும், என்னவென்று புரியாமல் குழப்பமாக பார்த்த சுபத்ரா, ப்ளீஸ் அண்ணி, அப்பாக்கு என்ன ஆச்சின்னு சொல்லுங்க..” பயத்துடன் கேட்க,

“மாமாக்கு பர்ஸ்ட் ஹார்ட் அட்டாக்..” என்று ரேணுகா வேதனையுடன் சொல்ல,

வாட்... என்ன அப்பாக்கு ஹார்ட் அட்டாக்கா ... எப்படி..? ஏன்..? என்று அதிர்ச்சியுடன் அழுகையாக கேட்டார்.

மூணு நாளைக்கு முன்னாடி தான் மாமாக்கு இப்படி ஆச்சு.. என்று மாலதி சொல்லவும்,

அப்பவே ஏன் அண்ணி..? நீங்க யாரும் என்கிட்ட சொல்லலை..

நாங்க உன்கிட்ட சொல்ல எவ்ளோ ட்ரை பண்ணோம்.. பட் நீ கேம்ப் போயிருந்த இடத்தை எங்களால ரீச் பண்ண முடியல.. வேற வழி இல்லாமல் உங்க கேம்ப் ஆர்கனைசேர் கிட்ட சொல்லி வச்சோம்,

ம்ம்... அந்த காட்டுல சிக்னலே கிடைக்கல.. நான் சென்னை ரீச் ஆகவும் தான், “அப்பா ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிருக்காருன்னு..” எனக்கு தகவலே வந்தது, என்னவோ..? ஏதோண்ற..? பதட்டத்துல அப்படியே கிளம்பிட்டேன், என்று சொல்லி முடித்த சுபத்ரா,

என்ன பிரச்சனை அண்ணி ..? அப்பாக்கு ஏன் திடீர்னு இப்படி..? ஹர்ஷினி ஏன் என்னவோ போல இருக்கா..? என்று கேட்கும் போதே, ரேணுகா அழுகவும், பதறி போன சுபத்ரா,

அண்ணி ஏன் அழறீங்க..? நீங்க சொன்னாத்தானே எனக்கு தெரியும், சொல்லுங்க அண்ணி.. என்று ரேணுகாவிடம் திரும்ப.. திரும்ப.. கேட்டும் பதில் சொல்லாமல் அவர் அழுது கொண்டே இருக்கவும்,

என்னதான் ஆச்சின்னு நீங்களாவது சொல்லுங்க அண்ணி...? என்று மாலதியிடம் வற்புறுத்தலாக கேட்கவும், அவர் தயங்கி கொன்டே, “ஆச்சார்யா, ஹர்ஷினி காலேஜில் காளிதாஸை பார்த்தது, அதை தொடர்ந்து வீட்டில் ஆச்சார்யா ஹர்ஷினியிடம் சத்தியம் வாங்கியது வரை..” நடந்த அத்தனையும் சொல்ல,

என்ன சத்தியம் வாங்கிட்டாரா..? அப்பா எப்படி இப்படி செய்யாலாம்..? ஹர்ஷினிகிட்ட டான்ஸ் ஆடக்கூடாதுன்னு சத்தியம் வாங்க அப்பாக்கு எப்படி மனசு வந்துச்சு..? அதுவும் அந்த காளிதாஸ் கேட்டதுக்காகவா..? என்று கோவத்தில் கத்தியவர்,

நீங்களும் யாரும் அப்பாவை தடுக்கலையா..? என்று ஆத்திரமாக கேட்கவும், மாமாக்கு அப்போ நெஞ்சு வலி, ஹாஸ்பிடல் போகலாம்ன்னு கெஞ்சினோம், ஆனா அவர் ஹர்ஷினி சத்தியம் பண்ணத்தான் வருவேன்னு உறுதியா நின்னுட்டார்.. என்று ரேணுகா அழுதபடியே சொல்லவும்,

அந்த சூழ்நிலையை புரிந்து கொண்ட சுபத்ரா, நான் ஹர்ஷினியை பாத்துட்டு வரேன் என்று விட்டு கார்டெனில் தனியாக அமர்ந்த படி அங்கிருக்கும் மரத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தவளின் அருகில் அமர்ந்த படி அவளின் கையை பற்றி தன் கையோடு கோர்க்கவும், திரும்பி பார்த்தவள் எதுவும் பேசாமல் அவரின் தோள் சாய்ந்து கொள்ளவும், அவளை அணைத்து பிடித்த சுபத்ரா,

என்னடா ரொம்ப கஷ்டமா இருக்கா..? என்று பரிவோடு கேட்கவும், ம்ஹூம் இல்ல அத்தை.. என்று கமறிய குரலில் சொன்னவள், கண்மூடி கொள்ளவும்,



என்னோட பிரச்னையியால தான் உனக்கு இப்படி..? என்று அவர் சொல்ல ஆரம்பிக்கும் போதே, சட்டென்று உடைந்து விட்ட ஹர்ஷினி அவரின் மடியை கட்டி கொண்டு கதறவும், பதை பதைத்து போனார் சுபத்ரா.

அவர் மட்டுமல்ல அவர்களின் பின்னால் உள்ள கல்லில் அமர்ந்திருந்த “ஜெயும் தான்..” ஹர்ஷினியின் கதறலில் துடித்து விட்டான்.

அத்தை என்னால முடியல.. உங்களுக்கு தெரியுமில்ல எனக்கு டான்ஸ்ல எதாவது பேர் சொல்ற மாதிரி சாதிக்கணும்ன்னு.. ஆனா இனி முடியாது அத்தை.. என்னோட ஆசை, கனவு, இத்தனை வருஷ உழைப்பு எல்லாம் போச்சி... என்னால ஒன்னும் பண்ண முடியாது.. ஐம் ஹெல்ப்லெஸ் அத்தை... என்னால தாங்க முடியல... என்று அரற்றிய படியே கதறியவளை,

ஒன்றும் செய்ய முடியாத தவிப்பில் மனதுள் துடித்து கொண்டிருந்தான் ஜெய். என்ன ஆச்சின்னு தெரியலே..? ஏன் இப்படி அழறா..? டான்ஸ் ஆட முடியாதுன்னு வேற கதறுறாளே..? ஏன் ஆடமுடியாதுன்னு வேற தெரியலயே ..? ச்சே... இப்போ என்னால அவ பக்கத்துல கூட போக முடியலேயே.. நான் என்ன செய்ய..? என்று தவிப்பில் அமர்ந்து இருந்தான் ஜெய்.

சுபத்ராவிற்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.. அதோடு அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் என்ன ஆறுதல் சொல்லிவிட முடியும்..? என்ற வேதனையோடு ஹர்ஷினியை அணைத்து கொண்டவாறே,

ஹர்ஷி ப்ளீஸ்.. கண்ட்ரோல் யுவர்செல்ப்.. அப்பா உனக்கு பண்ணது ரொம்ப பெரிய அநியாயம்.. அவர் ஏன் இப்படி பண்ணாரு..? அவருக்கு நல்லா தெரியுமே உன்னோட லட்சியத்தை பத்தி.. ம்ப்ச்... அவர்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை.. என்று கோவமாக சொல்லவும்,

அழுகையில் கரைந்து கொண்டிருந்த ஹர்ஷினி, ஆச்சார்யா சொன்னதை நினைத்து பார்த்தவள், சுபத்ராவை விட்டு பிரிந்து கண்களை துடைத்தவாறே அவர் பக்கம் அவருக்குன்னு ஒரு நியாயம் இருக்கலாம் அத்தை.., என்று சொல்லவும்,

கலைந்த அவளின் தலை முடியை ஒதுக்கியவாறே, அப்படி என்ன பொல்லாத நியாயம்..? எனக்கு மனசே ஆறலை ஹர்ஷினி என்று குமுறினார்.

அவர்களின் பேச்சு புரிந்தும்.. புரியாமலும் அமர்ந்து இருந்த ஜெய், அடுத்து ஹர்ஷினி சொன்னதை கேட்டு உச்ச கட்ட அதிர்ச்சிக்குள்ளானான்.

அவர் என்கிட்டஇனி நீ எப்பவும் டான்ஸ் ஆடக்கூடாதுன்னு சத்தியம் கேட்டப்போ..? என்று கலங்கிய குரலில் நிறுத்தியவள், அளவில்லா துக்கத்தில் அடைத்த தொண்டையை செறுமிய படி, எனக்கும் அவரா இப்படின்னு தான் தோணுச்சு..

“என்னோட வருத்தமெல்லாம் என்னால இனி எப்பவும் டான்ஸ்ல எனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்க முடியாதுன்னு தான்..” என்று சொல்லும் போதே மறுபடியும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டவும்,

ப்ளீஸ் ஹர்ஷினி.. இப்படி அழாதே.. என்னால தானோ இதெல்லாம்ன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. இதுக்கு எதாவது செய்ய முடியுமான்னு பார்க்கலாம்.. என்று கண்களில் கண்ணீரோடு சுபத்ரா சொல்லும் போதே, அங்கு வந்த மாலதி,

மாமாக்கு முழிப்பு வந்துருச்சி, உங்களை வர சொல்றார்.. என்றவர் சுபத்ராவின் முகத்தில் உள்ள கோவத்தை புரிந்து கொண்டு.. சுபா மாமா கஷ்டப்படுற மாதிரி எதுவும் பேசிடாத.. அவர் ஹெல்த் கண்டிஷன் தெரியுமில்ல.. என்று வேண்டுகோளாகவே கேட்ட படி இருவரையும் அழைத்து கொண்டு சென்றார்.

குமார் போன் செய்து அம்மா செக் அப்க்காக ஹாஸ்பிடல் வந்தப்போ, நம்ம தில்லானா அம்மிணியை பார்த்தேண்டா.. என்று சொல்லவும், அடித்து, பிடித்து “இன்று எப்படியாவது அவளை பார்த்து பேசி விட வேண்டும்..” என்ற தவிப்பில் வேகமாக வந்த ஜெய்,

கார்டெனில் அமர்ந்து இருந்த ஹர்ஷினியை தேடி கண்டு கொண்டு அவளிடம் பேச வந்தவன், அவனுக்கு முன்னே சென்ற பெண்மணி, அவளருகில் அமரவும், சட்டென்று அவர்களுக்கு பின்னால் உள்ள கல்லில் அமர்ந்தவாறே,

ஹர்ஷினியின் பேச்சில் இருந்தே அனைத்தையும் தெரிந்து கொண்ட ஜெய், அவளின் வேதனையை, ஏமாற்றத்தை, முழுவதுமாக புரிந்து கொண்டவன், எதாவது செய்து அவளின் வேதனையை போக்கி விட முடியாதா..? என்ற தவிப்புடன் எழுந்து வீட்டிற்கு சென்றவனின் எண்ணம் முழுவதும் அடுத்த ஒரு வாரத்திற்கு இதை பற்றியே தான் இருந்தது.
 

banumathi jayaraman

Well-Known Member
சுபத்ராவைப் பற்றி ஆச்சார்யா என்ன சொல்ல வந்து சொல்லாமல் விட்டுட்டார்?
காதலிக்காக அவளால் தொடர முடியாத டான்ஸ்ஸை சுபத்ராவிடம் ஜெய் ஆகாஷ் கத்துக்கறானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top