என்னுள் சங்கீதமாய் நீ 20

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 20


“ICU..” வில் இருக்கும் ஆச்சயர்யவிற்கு சிகிச்சை முடிந்து “டாக்டர் கணேஷ்” வெளியே வரவும், பதட்டத்துடன் அவரை நெருங்கியவர்கள், அங்கிள் அப்பாக்கு என்ன ஆச்சு..? இப்போ எப்படி இருக்கார்.? மாமாவை நாங்க பாக்கலாமா..? என்று ஒருவர் ஒருவர் மாற்றி கேட்கவும்,

முதல்ல எல்லாரும் பொறுமையா இருங்க. ஆச்சார்யா இப்போ நல்லா இருக்கார்.., ஆனா நீங்க இப்போ அவரை பாக்க முடியாது.. அவர் மயக்கத்துல இருக்கார், நாளைக்கு தான் கண் முழிப்பார்... என்று முடித்தவர்,

இந்திரன், சந்திரன் நீங்க ரெண்டு பேரும் வாங்க. உங்ககிட்ட தனியா பேசணும் என்று சொல்லவும், என்னமோ.. ஏதோ.. என்ற பயத்துடன் என்ன ஆச்சு மாமாக்கு..? நீங்க ஏதா இருந்தாலும் இங்கேயே சொல்லுங்க.. என்று ரேணுகா பயத்துடன் கேட்க, ஆமா எங்களுக்கும் சொல்லுங்க... என்று மாலதியும் சொல்ல,

“பரவாயில்லை அங்கிள்..” எதுவா இருந்தாலும் இங்க எல்லார் முன்னாடியும் சொல்லிடுங்க.. என்று ஓரத்தில் கண்மூடி நின்றிருந்த ஹர்ஷினியை பார்த்த படியே சொன்னார் சந்திரன்.

அவர்தான் அவர்களின் பேமிலி டாக்டர்,அதோடு ஆச்சார்யாவின் நண்பரும் கூட என்பதால், அவர்களின் குடும்பத்தை பற்றி நன்றாகவே தெரியும்.. அதனால் ஓகே உங்க விஷ் என்றவர்,

“ஆச்சார்யாவுக்கு இது பர்ஸ்ட் ஹார்ட் அட்டாக்...” என்று சொல்லவும், “இதுவாகத்தான் இருக்கும்…?” என்று அனைவருக்கும் முன்னமே யூகம் இருந்தாலும், அவர் சொல்லும் போது மனம் பதைபதைக்க தான் செய்தது.

அவருக்கு அட்டாக் வரதுக்கு முன்னாடி அதுக்குள்ள அறிகுறி கண்டிப்பா தெரிஞ்சிருக்குமே, உங்க கிட்ட சொல்லலையா அவர்..? என்றபடி அனைவரது முகத்தையும் பார்த்தவருக்கு, “இவர்களுக்கு தெரிந்திருக்கிறது..” என்று சொல்லாமலே புரிந்தது.

ரொம்ப நேரம் அந்த வலியில இருந்திருக்கார்.. இது ஹைலி ரிஸ்க்... என்னவேனாலும் நடந்திருக்கலாம்., இனியாவது அவரை கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க, என்று அவர்களிடம் கொஞ்சம் கடுமையாக கணேஷ் சொல்லி செல்லவும், அனைவரும் இறுகிய முகத்துடன் கண்மூடி நின்றிருந்த ஹர்ஷினியை தான் பார்த்தனர்.

மறுநாள் ஆச்சார்யா கண்முழித்ததும் முதலில் தேடியது ஹர்ஷினியை தான், நர்ஸ் வெளியே வந்து அவருக்கு முழிப்பு வந்தது விட்டது என்று இவர்களிடம் சொல்லவும், ஒவ்வொரு வராக சென்று அவரை பார்த்து வந்தனர்.

கடைசியாக சென்ற ஹர்ஷினி கதவருகிலே நின்று ஒரு வார்த்தை கூட பேசாமல் அவரை வெறுமையாக பார்க்கவும், ஆச்சார்யாவின் மனது பேத்தியின் பார்வையில் நிலையில்லாமல் தவிக்க ஆரம்பித்தது.

“ ப்ளீஸ் ஹர்ஷி.. தாத்தாவை அப்படி பாக்காத..” என்று கஷ்ட பட்டுக்கொண்டே பேசவும், வேகமாக அவர் அருகில் வந்தவள்,
“இப்போ எதுவும் பேச வேண்டாம், ஏதா இருந்தாலும் நாம அப்பறம் பேசிக்கலாம், ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க..”, என்று உணர்வற்ற குரலில் சொன்னவள், ஆச்சார்யா எதோ பேசவருகிறார் என்று தெரிந்தும்,”நான் வரேன்..” என்று சென்றவள் உடனடியாக அங்கிருந்து கிளம்பியும் விட்டாள்.


அன்று அவளுடைய ரூமில் அடைந்தவள் தான், அதற்கு பிறகு வெளியே வரவும் இல்லை, யாரிடமும் பேசவும் இல்லை. ரேணுகாவிடம் போனில் அவரின் உடல்நிலையை பற்றி கேட்டுக்கொண்டதோடு சரி.

பேத்தியின் ஒதுக்கத்தில் மிகவும் வேதனையடைந்த ஆச்சார்யா, “அவளிடம் பேச வேண்டும்..” என்று ரேணுகா,சந்திரன் மூலமாக சொன்ன போதும், ஹர்ஷினி அவரை பார்க்க செல்லல்லை..

என்னதான் அவர் மேல் இருந்த பாசத்தில், அவரின் அன்றய உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் கேட்டதுக்கு சத்தியம் செய்து கொடுத்து இருந்தாலும்,”கோவம், இயலாமை, ஏமாற்றம்..” எல்லாம் தீராத நெருப்பு போல் மனதுள் கனன்று கொண்டே தான் இருந்தது.

“ஹர்ஷினி..” தாத்தா மேல இருக்கிற உன்னோட கோவம், வருத்தம் எல்லாம் நியாயம் தான். பட் அதை காண்பிக்கிற நேரம் இது இல்லை.. அவர் கண்டிஷன் தெரியுமில்லை.. இந்த டைம்ல நீ இப்படி அவர் கிட்ட நடத்துகிறது சரியில்லை..

அதோட இந்த ஒரு காரணத்துக்காக அவரை நீ ஒதுக்குறது அதுவும் இந்த நிலையில ஒதுக்குறது ரொம்ப ரொம்ப தப்பு.. என்று ஆச்சார்யாவின் வேதனையை கண்ட ரேணுகா போனில் கண்டிப்புடன் சொல்லவும்,

ஹர்ஷினியின் மனதுக்குள்ளும் இந்த எண்ணம் இருந்தாலும், எங்கு அவரை பார்த்தால், அவரிடம் தன் கோவத்தை கட்டிவிடுவோமா..? அது இப்போதிருக்கும் உடல்நிலையில் மறுபடியும் அவருக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ..? என்ற பயம் ஒரு புறம் இருந்தாலும்,

அவரை பார்க்காமல்.. அதுவும் இந்த நிலையில் அவருடன் தான் இல்லாமல் இருப்பது ஹர்ஷினிக்குமே கொஞ்சம் உறுத்தலாக தான் இருந்தது, என்பதாலுமே அவள் ஆச்சார்யாவை பார்க்க ஹாஸ்பிடல் வந்தாள்.

மூன்று நாள் கழித்து தன்னை பார்க்க வந்த பேத்தி 5 நிமிடங்கள் ஆகியும் எதுவும் பேசாமல் குனிந்து தன் விரல்களையே பார்த்த வண்ணம் இருக்க, அவளுக்கு தன் மேல் இருக்கும் கோவத்தை உணர்ந்து கொண்ட ஆச்சார்யா,

ஹர்ஷினி தாத்தா மேல கோவமா இருக்கியா..? ஹர்ஷினியிடம் மௌனமே பதில்..

எனக்கு தெரியும் நீ கண்டிப்பா என்மேல ரொம்ப கோவமா தான் இருக்கன்னு.., ஆமாத்தானே.. இதற்கும் பதில் இல்லது போகவும்,

“எதாவது பேசு ஹர்ஷினி, இல்ல என் மேல கோவமாவது படு.. இப்படி யாரோ மாதிரி என்கிட்ட இருக்காத..”என்ற அவரின் வேதனையை குரலிலே உணர்ந்த ஹர்ஷினி, அடைத்த தன் தொண்டையை செறுமிய படி

எப்படி இருக்கீங்க..? என்று மிகவும் பார்முலாக கேட்கவும், அளவில்லா வருத்தத்தை கண்களில் தேக்கி அவளை பார்த்தவர்,
ஏன்டா இப்படி யாரோ போல பேசுற..?


“அப்படி எல்லாம் இல்லை..” என்று மொட்டையாக உறவு முறை இல்லாமல் பேசவும், கண்டு கொண்ட ஆச்சார்யா,
அன்னையிலிருந்து இதுவரை.. “ஒரு டைம் கூட நீ என்னை தாத்தான்னே கூப்பிடலை..” எனக்கு உன்னோட கோவம், வருத்தம் எல்லாம் புரியாம இல்லை..


ஆனா.. “என்னோட பயம்.?” அதை உன்கிட்ட எப்படி சொல்ல..?

என்ன உங்களுக்கு பயமா..?

ஆனா ஏன் பயம்..? யார்கிட்ட பயம்..? ஒருவேளை அந்த காளிதாஸா இருக்குமோ..? என்று யோசித்தவாறே நம்பாமல் சந்தேகமாக கேட்க,

அவளின் சந்தேகத்தை உணர்ந்த ஆச்சார்யா, விரக்தியாக சிரித்தவாறே, எனக்கு ஒரு விஷயத்து மேல தான் பயம்.. மத்தபடி யார்கிட்டேயும் பயம் இல்ல..

அதை "விதி.."ன்னு சொல்லலாம்., இல்லை ஒரு வகையான "சாபம்.."ன்னு கூட சொல்லலாம்., இல்லை தீர்க்கதரிசங்க சொன்ன "சொல்லா..? கூட இருக்கலாம்.. என்று கசங்கிய முகத்துடன், கலங்கிய குரலுடன் சொன்னார்,

அவர் முகத்திலே அவரின் வேதனையை புரிந்து கொண்ட ஹர்ஷினி, ஓகே இப்போ டிரீட்மென்ட்ல இருக்கும் போது எதுவும் பேச வேண்டாம், நாம இதை பத்தி எல்லாம் அப்பறம் பேசலாம்..

இல்லை ஹர்ஷினி, நான் இன்னிக்கு சொல்லியே ஆகணும்.. என்னால இதுக்கு மேலயும் உன்கிட்ட சொல்லாம இருக்க முடியாது..,
இதற்கு மேல் கேட்டு ஆகப்போவது என்ன..? என்று தோன்றினாலும், அவருக்காக கேட்க நினைத்தவள், பேசலாம்.., ஆனா இப்போ வேண்டாம், இன்னொரு நாள்.,
இல்லை ஹர்ஷினி எனக்கு இப்பவே என் பக்க நியாத்தை உன்கிட்ட சொல்லியே ஆகணும்., என்று உறுதியுடன் சொல்ல ஆரம்பித்தவர்,


ஹர்ஷினி உனக்கு தெரியுமில்லை, நான் தேவிக்கு டான்ஸ் அகாடமி ஆரம்பிச்சி கொடுத்தது, "ஆமா.." என்று ஹர்ஷினி தலையாட்டவும்,
அது எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே பிடிக்கல.. அவங்க அப்போ என்கிட்ட ஒருவார்த்தை சொன்னாங்க.. என்று வருத்தத்துடன் சொன்னவர்,


“இந்த டான்ஸால நீ பின்னாடி ரொம்ப கஷ்ப்படுவேன்னு…” சொன்னாங்க.

அவங்களுக்கு அன்னிக்கு எதோ தோணபோய்த்தான் அப்படி சொன்னாங்க போல.. அவங்க சொன்னதும் உண்மையாகிடுச்சி.. என்று தன் வாழ்க்கையின் கருப்பு பக்கத்தை புரட்டியவர்,

உங்க அத்தை சுபத்ராவுமே, உன்னை போல சின்ன வயசுல இருந்தே டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சா, ஆனா அவ பரதம் மட்டும் கத்துக்கல.. தேடி பிடிச்சி இன்னும் நிறைய வகையான டான்ஸ் கத்துக்கிட்டா..

தேவி மாதிரித்தான் சுபத்ராவும் டான்ஸ் மேல அவ்வளவு ஈடுபாடு, இப்போ நீ சொன்னயில்ல..? அது போலத்தான் அன்னிக்கு சுபத்ராவும் சொன்னா.. அவளுக்கு டான்ஸ்ல எதாவது சாதிக்கணும், டான்ஸ்ல தனக்குன்னு ஒரு அடையாளம், அங்கீகாரம் வேணும்ன்னு பிடிவாதமா நின்னா,

தேவியும் மகளுக்கு சப்போர்ட் பண்ணினா.. ஒருவேளை அவளுக்கு அவளால தொடர்ந்து டான்ஸ் ஆடமுடியாம போன ஏக்கம் மனசுக்குள்ள இருந்திருக்கும் போல.. ஆனா அவ அதை கடைசி வரை வெளிக்காட்டிக்கவே இல்லை, என்று மனைவியை பற்றி சொல்லும் போது.

அவரின் கண்களில் தெரிந்த காதலை கண்டு கொண்ட ஹர்ஷினிக்கு, தன்னிடம் மூன்று நாட்களாக எல்லா வழியிலும் பேச முயற்சித்து கொண்டிருக்கும் ஜெய் தான் ஞாபகத்திற்கு வந்தான்.

அதனால மகளும் நம்மை போல கஷ்டப்படக்கூடாதுன்னு தான் சுபத்ராவுக்கு சப்போர்ட் பண்ணா தேவி, அப்பவே “என் மனசுக்குள்ள ஏதோ ஒப்பாத மாதிரி இருந்தது”, அதனால நான் அதெல்லாம் வேணாம்.. கல்யாணம் செஞ்சுக்கோன்னு உறுதியா சொல்லிட்டு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.

கரெக்ட்டா அந்த நேரம் பார்த்து வந்தவன் தான் இந்த “காளிதாஸ் சினிமா ப்ரோடியூசர்..”, எதோ வெல்பேர் ப்ரோகிராம்க்கு சுபத்ரா ஆடினதை பார்த்துட்டு, “சினிமாவுல அவளை நடிக்க..” வைக்க கேட்டு ஒரு நாள் வீட்டுக்கு வந்தான்.

நான் அதெல்லாம் கண்டிப்பாவே முடியாதுன்னு சொல்லிட்டேன்.. ஆனா அவன் டான்ஸ் அகாடமிக்கே போய் தேவிகிட்டேயும், சுபத்ராகிட்டேயும் பேசிருக்கான். அப்போ சுபத்ராவுக்கு டான்ஸ்ல சாதிக்கணும்ன்னு எண்ணம் இருந்ததை தெரிஞ்சுக்கிட்டு, அதை வச்சே

“நீ சினிமாவுல பெருசா சாதிக்கலாம், டான்ஸ்ன்னாலே அது சுபத்ரா தான் அப்படின்னு இந்த உலகத்துக்கே சினிமா மூலம் காட்டலாம்..” இது போல விடாம அவங்களை பாத்து பேசியே அவங்க ரெண்டு பேரையும் ஒத்துக்க வச்சி, அவங்க மூலமா என்னையும் ஒத்துக்க வச்சான் ராஸ்கல்.

ஆனா அப்பவும் “படத்துல வர ஒரு பரதநாட்டிய பாட்டுக்கு மட்டும் தான் சுபத்ரா ஆடுற மாதிரி ஒத்துக்கிட்டேன்..” இல்லாட்டி அதுவும் முடியாதுன்னு நான் உறுதியா சொல்லவும், வேறு வழி இல்லாமல் அவன் காரியத்துக்காக ஒத்துக்கிட்டான் அந்த பொறுக்கி. அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க வேற.. இதுல,

“அவனுக்கு சுபத்ரா மேல ஆசை…” என்று சொல்லும் போதே ஆத்திரத்தில் பல்லை கடித்த ஆச்சார்யா, அது எங்க யாருக்கும் அப்போ தெரியல.. அவ்வளவு நல்லவன் மாதிரி நடந்துக்கிட்டான்.

சுபத்ரா ஆசைப்பட்ட மாதிரி அந்த படத்துல அவ ஆடுன டான்ஸ் அப்போ ரொம்ப பேமஸ் ஆச்சி.. இதுதான் வாய்ப்புன்னு மறுபடியும் இதைவச்சே அவன் இன்னொரு படத்துக்கு கேட்கவும், நான் உறுதியா முடியாதுன்னு சொல்லிட்டு “சுபத்ராக்கு மாப்பிள்ளை..” பாக்க ஆரம்பிச்சேன்.

தேவி, சுபத்ராக்குமே அவங்க சாதிக்கணும்ன்னு ஆசை பூர்த்தியானதால அவங்களும் என்னோட முடிவை முழு மனசோட ஏத்துக்கிட்டு அந்த ராஸ்கல்கிட்ட முடியாதுன்னு சொல்லிட்டாங்க..

நம்மோட தூரத்து சொந்தத்திலே ஒரு வரன் வந்துச்சு... அவங்களும் நம்மை போல பரம்பரை பணக்காரங்க.. பேர் சொல்ல கூடிய பாரம்பரியம் கொண்டவங்க.. எல்லாருக்கும் அந்த வரன் பிடிச்சி போய் அவங்க உறுதி பண்ண நம்ம வீட்டுக்கு வந்திருந்த சமயம்,

அந்த காளிதாஸ் வந்தான்.. கையில ஒரு 20 போட்டோ எடுத்துக்கிட்டு வந்தான்.. அது எல்லாமே அவனும்.. சுபத்ராவும் நெருக்கமா இருக்கிற மாதிரி அவனா உருவாக்கின மார்பிங் போட்டோஸ்.. என்று கண்மூடி கொஞ்சம் மெலிதாக திக்கி... திணறிய குரலில் சொன்ன ஆச்சார்யா, அப்பொழுது தான் அடைந்த வேதனையை இப்பொழுதும் உணர்ந்தார்.

அவர் சொன்னதில் உச்சகட்ட அதிர்ச்சி ஆன ஹர்ஷினி, அவரின் மௌனத்தில், அவரின் மனநிலைய உணர்ந்து கொண்டு ஆறுதலாக அவரின் கையை தன் கையால் பற்றி கொண்டு,

“வேண்டாம் விடுங்க தாத்தா, எதுவும் சொல்லாதீங்க..” என்று சொல்லவும் கண்திறந்து ஹர்ஷினியை பார்த்த ஆச்சார்யா, “இல்ல ஹர்ஷினி, நான் சொல்லிடுறேன்.. அப்போதான் என் நிலையை உன்னால புரிஞ்சுக்க முடியும்..”

அவன் கொண்டு வந்த போட்டோவை பார்த்துட்டு, முதல்ல யாருக்குமே பேச்சே வரலன்னு தான் சொல்லணும். எங்களால நம்பவே முடியல.. அப்போதான் அவனோட எண்ணத்தையே நாங்க புரிஞ்சிகிட்டோம்.


“பொய்யடா சொல்ற..? உன்னை என்னை பண்றேன் பாருன்னு.. சந்திரன் கோவப்பட்டு அவனை அடிக்க போய் கொஞ்ச நேரம் அந்த இடமே கலவரமா ஆகிடுச்சு...
அந்த “மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும். அவன் கொண்டு வந்த போட்டோவை உண்மைன்னு நினைச்சு, சுபத்ராவை சபையிலே வச்சி தப்பா பேச.. நாங்களும் அது எல்லாம் உண்மை இல்லன்னு எவ்ளோ சொல்லியும் நம்பாமல்... எல்லாம் முடிஞ்சிருச்சு..”


அப்பவும் அந்த காளிதாஸ் அடங்காம, அவங்க போனா போறாங்க.. “நான் என் பொண்டாட்டியை விவாகரத்து பண்ணிட்டு, சுபத்ராவை கட்டிக்கிறேன்ன்னு” தைரியமா சுபத்ராவை பொண்ணு வேறு கேட்டான்.

இதுக்கு அப்பறமும் அவனை விட்டா சரிவாரதுன்னு அவனை அன்னிக்கு என்ன என்ன பண்ண முடியுமோ..? அத்தனையும் பண்ணியாச்சு, தொழிலையும் முடக்கியாச்சி..? அன்னிக்கி போனவன் தான் மறுபடியும் அவனை இப்போதான் பார்த்தேன்.

இப்பவும் எவ்வளவு தைரியம் இருந்தா உன்னை நடிக்க வைக்க கேப்பான்.. அவனை பாத்துக்கிறேன்.. அப்பவே அவனை உருத்தெரியாம அழிச்சிருப்பேன்.. தேவி தான் அதெல்லாம் வேண்டாம்ன்னு சொன்னதால் தான் அவன் தப்பிச்சான்.

“ஆனா.. அதுக்கு அப்பறம் இந்த விஷயம் பேப்பர்ல எல்லாம் வந்து ஊர், உலகம் எல்லாம் பரவி, சுபத்ரா பேர் ரொம்ப அடிபட்டு வர வரன் எல்லாம் நின்னு போய்... ரொம்ப கொடுமையான நாட்கள் அது..”

அந்த கஷ்டம் அதோட முடியல.. இந்த பிரச்சனையில நாங்க தேவியை சரியா கவனிக்காம விட்டுட்டோம், “என் பொண்ணு வாழ்க்கை அழிய நானே காரணமா ஆயிட்டேனேன்னு அவளுக்கு மனசுக்குள்ள ரொம்ப குற்ற உணர்ச்சி மாதிரி ஆகிருச்சு..”

“சுபத்ரா ஆசைப்பட்டாலும்.. நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணியிருக்க கூடாது. ஒரு அம்மாவா நான் யோசிக்கலை.. ஒரு குருவாதான் யோசிச்சேன்.. என்னோட ஆசையை, ஏக்கத்தை அவ மூலம் தீர்க்க நினைச்சி, இப்போ அவ பேர் கெட நானே காரணமா ஆயிட்டேனேன்னு..” அவளுக்குள்ளே ரொம்ப மருகி இருக்கா..

இதுவே ஒரு மாதிரி “மன அழுத்தம்..” ஆகி ஒரு நாள் மயக்கம் போட்டு விழுந்துட்டா.. அப்பறம் தான் அவளோட எண்ணம் புரிஞ்சு, “இதுக்கு எல்லாம் நீ காரணமில்லைன்னு..” நாங்க எல்லாரும் எவ்ளோ சொன்னோம், அவ ஏத்துக்கவே இல்லை.

அந்த “மன அழுத்தமே அவ இதயத்தை அடைக்க, இரத்த நாளங்கள் எல்லாம் உள்ளுக்குள்ள வெடிச்சி, கடைசி காலத்துல மனசால, உடம்பால ரொம்ப கஷ்டப்பட்டுட்டா..”
அந்த டைம்ல தான் அவ “எங்க அப்பா, அம்மா சொன்னது உண்மை ஆகிருச்சுன்னு சொன்னா.. எனக்கும் அவங்க சொன்னது உண்மை தான் போலன்னு மனசுல பதிந்திருச்சு..”


எவ்ளோ ட்ரீட்மெண்ட் கொடுத்ததும் தேவியை காப்பாத்த முடியல.. எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு தான் நாங்க நினைச்சோம் ஆனா உங்க அத்தை, நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன், இனி டான்ஸ் தான் என் வாழ்க்கைன்னு எங்ககிட்ட சண்டை போட்டு இத்தனை வருஷம் உறுதியா நின்னுட்டா,

ஆனா இப்போ தான் .. என்று ஆரம்பித்தவர், சரியாக அந்த நேரம் டாக்டர் செக் அப் வரவே அவர் சொல்ல வந்தது, சொல்லாமலே நின்று விட்டது, ஒரு வேளை அவர் ஹர்ஷினியிடம் சொல்லிருந்தால்.....

...............................................................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்.

அடுத்த எபி போட்டுட்டேன்.. படிச்சுட்டு மறக்காம உங்க கருத்தை சொல்லிடுங்க.. thank you ப்ரண்ட்ஸ்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top