என்னுள் சங்கீதமாய் நீ 2

Nithi Kanna

Well-Known Member
#1
என்னுள் சங்கீதமாய் நீ 2

ஹர்ஷினி ,ஆச்சார்யா இருவரும் ஒருவருக்கு ஒருவர் தாங்கள் சளைத்தவர்கள் இல்ல என முறைத்துகொன்டே நின்றனர். ஹர்ஷி இது “வீண் பிடிவாதம்” உனக்கு எப்படி புரியவைப்பேன் என ஆச்சார்யா கொஞ்சம் சலிப்பாகவே கேட்டார்.

விட்டுடுங்க.. புரியவைக்க வேண்டாமுன்னு தான் நானும் சொல்றேன் என்றாள் ஹர்ஷினியும் விடாதவளாக.

உங்க “அத்தை மாதிரியே” நீயும் வீண் பிடிவாதம் பிடிக்காத என ஆச்சார்யா கோவமாக சொல்லவும்.

எங்க அத்தை “எங்க தாத்தா மாதிரி” என்று கொஞ்சம் கேலியாகவே சொன்னாள் ஹர்ஷினி .

ஹர்ஷினி.. என ஆச்சார்யா அதட்டும் போதே சந்திரன் கதவை தட்டிவிட்டு உள்ளே வரவும் அவரை பார்த்தாவுடன் ஹர்ஷினி வேகமாக அங்கிருந்து கிளம்பிவிட்டாள் .

ஆச்சார்யாவின் கோவமான முகத்தை பார்த்ததும் இது எதிர்பாத்துதானே ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் கிட்ட பேசினாலே அவர் “பிபி எகிறும்” இதுல ரெண்டு பேர்கிட்டேயும் ஒண்ணா பேசிட்டு அவர் வெடிக்குமா இருக்கறதே பெரிய விஷயம்.

ம்ம்ம்.. என பெருமூச்சு விட்டவர் ஆச்சார்யாவிடம் "அப்பா ப்ளீஸ்" இப்போ சாப்பிடலாம் என கொஞ்சம் கெஞ்சலாகவே கேட்டவர் அவரை சாப்பிட அழைத்து சென்றார் .

ஹர்ஷினி லஞ்ச் ஹாலுக்குள் செல்லும் போது போன் ஒலிக்கவும் யாரென்று பார்த்தவள் பார்த்ததாகவே நின்றாள். “பேசவும் இல்ல, அதே சமயம் கட் செய்யவும் இல்ல” . இதுதான் ஹர்ஷினியின் மனநிலையும் கூட . “ஜெய் ஆகாஷ் ஹர்ஷினியின் மிக பெரிய பலவீனம்” . உலகத்தில் உள்ள எல்லோரையும் எதிர்க்கும் தைரியம் கொண்டவளால் ஆகாஷிற்கு எதிரே சாதாரணமாக கூட நிற்க முடிந்ததில்லை .

அவனோடு என்றென்றும் இருக்கவேண்டும்... என்று “தவிப்பவளும் அவளே ஆனால் அதை தவிர்ப்பவளும் அவளே”

ஆச்சார்யா சந்திரன் இருவரும் அவளை பார்த்து கொண்டே கடந்து சென்றதை கூட உணர முடியாமல் நின்று இருந்தாள் .

என்னடா ஆச்சு அவளுக்கு..? என ஆச்சார்யா மிகவும் கவலையாக சந்திரனிடம் கேட்கவும் அவரும் கவலையாகவே தெரியலப்பா என கூறினார்.

அவளின் முகத்தில் தெரிந்த “அளவு கடந்த வேதனையே” அவர்களின் கவலைக்கு காரணம் . பின்னர் இருவரும் தான் அபியை அனுப்பினார் ஹர்ஷினியை அழைக்க . .

என்ன ஆச்சு ஹர்ஷ்..? ஏன் போனவே வெறிச்சு பாத்துட்டு இருக்கே.. என அபிஷேக் கொஞ்சம் சத்தமாக கேட்கவும் தான் உணர்விற்கு வந்தவள் ஒண்ணுமில்ல.. என அமைதியாக தலையாட்டவும் .

என்ன தாத்தா கிட்ட மறுபடியும் பிரச்சனையா..? என கேட்கவும் ச்சு.. ஒன்னும் இல்ல விடு, வா சாப்பிட போலாம் என அவனோடு சாப்பிட சென்றாள் . அங்கு சாப்பிடும் இடத்தில் சுபத்ரா சந்தோஷமாக போன் பேசிக்கொண்டிருக்கவும் ஹர்ஷினி அமைதியாக அருகில் உட்கார்ந்தாள்.

பபே முறை என்பதால் அபி உணவு கொண்டு வர சென்றான் மூவருக்கும் . ரொம்ப சந்தோசம் சாதிச்சுட்ட.. என மிகவும் சந்தோஷமாக போன் பேசி முடித்தவர்.

ஹர்ஷி உனக்கு தெரியும் இல்ல “என்னோட ஸ்டுடென்ட் ஜெய்” அவனுக்கு “பெஸ்ட் கோரியோ கிராபர் அவார்ட் அதுவும் நேஷனல் லெவெல்ல” கிடைச்சிருக்கு இப்போதான் சொன்னான் என சுபத்ரா மிகுந்த உற்சாகமாக சொல்லவும்.

தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா... என்ன என்ன சொல்றீங்க..? ஜெய்க்கு அவார்ட்... அவார்ட்.. என திக்கவும்.

ஹர்ஷி என்ன ஆச்சு..? உனக்கு ஜெய்க்கு தான் கிடைச்சிருக்கு.. என சுபத்ரா மறுபடியும் சொல்லவும் ஹர்ஷினியின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வரவும் .

ஹர்ஷி ஏன் அழற..? என்ன ஆச்சு..? என சுபத்ரா பதறி போனவராய் கேட்கவும் . ஒண்ணுமில்ல என வேகமாக தலையாட்டியவள் நான்.. நான்.. ச்சே.. இந்த பேச்சே வரமாட்டேங்குது ரெஸ்ட் ரூம் என சைகை காட்டியவள் அங்கிருந்து வேகமாக ஓடினாள் .

கதவ தாளிட்டவள் “ஜெய் ஜெய் I லவ் யூ ஐ லவ் யூ”. சாதிச்சிட்ட ஜெய் சாதிச்சுட்ட ஐ லவ் யூ ஐ லவ் யூ சோ மச் என தொடர்ந்து அளவு கடந்த சந்தோஷத்தில் அழுது கொன்டே இருந்தாள் .

ஹர்ஷி., ஹர்ஷி.., என்ன ஆச்சு உனக்கு கதவ திற என சுபத்ரா படபடப்பாக கதவை தட்டவும் தான் இருக்கும் இடம் உணர்ந்து இதோ வரேன் என குரல் கொடுத்தவள் முகத்தை கழுவி கொண்டு வெளியே வரவும் .

என்னடி ஆச்சு உனக்கு ஏன் இப்படி அழற..? என சுபத்ரா பரிதவிப்பாக கேட்கவும், ஒன்னும் இல்ல அத்தை.

என்ன ஒன்னும் இல்ல.. சொல்லு என்ன ஆச்சு..? என விடாமல் கேட்கவும்,

அய்யோ... விட மாட்டாங்க போலே.. என வேகமாக யோசித்தவள் டான்ஸ் அவார்ட் சொன்னதால கொஞ்சம் “பழைய ஞாபகம்” வேற ஒன்னும் இல்ல என ஹர்ஷினி சொல்லவும,

சுபத்ரா அவளின் முகத்தை பார்த்தவர் என்னடி லைட் போட்ட மாதிரி முகம் இப்படி ஜொலிக்குது, ஓவர் சந்தோஷமும் பொங்குது, என அவளின் பேச்சை நம்பாமல் சந்தேகமாக கேட்கவும்.

அத்தை அது அது என இழுத்தவள் “என்னோட ட்ரீமை அவர் அச்சீவ் பண்ணி இருக்கிறாரே” அதோட ஜெய் உன்னோட ஸ்டூடெண்ட் தானே சோ அந்த சந்தோஷம் தான் என சமாளிப்பாக சொன்னவள் அவர் நம்பாமல் பார்க்கவும் வா அத்தை மீட்டிங் டைம் ஆச்சு சாப்புட்டு போவோம் என அவரை இழுத்து கொண்டு சென்றாள் .

சுபத்ரா ஹர்ஷிய நம்பாமல் அன்று முழுவதும் அவளை சந்தேக கண் கொன்டே பார்த்து கொண்டிருந்தார் என்றால் ஆச்சார்யா சந்திரனனும் கூட ஹர்ஷிய சந்தேகமாகவே பார்த்தனர்.

முதலில் அவள் முகத்தில் வேதனையை கண்டு மிகவும் கவலைப்பட்டவர்கள் ஆயிற்றே. ஆனால் அதற்கு நேர் மாறாக சிறிது நேரத்திலே அவளின் முகத்தில் “மின்னும் சந்தோஷத்தை” கண்டு கொண்டனர் .

எதனால் இப்படி இருக்கிறாள் என “சுபத்ரா, ஆச்சார்யா ,சந்திரன்” மூவரும் அவளை நினைத்து கவலை பட்டனர் என்றால்……

நம் ஹர்ஷினி சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தாள் . அவளுக்கு ஜெய்ய தவிர மத்த எல்லாம் அவுட் ஆப் போகஸ் என்கிற மனநிலையிலே இருந்தாள்.
.
காலிங் பெல் சத்தம் கேட்கவும் மணி 4 என காட்டியது இந்த நேரத்துக்கு யாரு வந்திருக்கா என” விஜயா மகாலிங்கத்திடம்” கேட்கவும் தெரில பாக்கலாம் இரு என கூறிக்கொன்டே இருவரும் ரூமை விட்டு வெளியே வரவும் வீட்டில் வேளை செய்யும் பொன்னி சென்று கதவை திறந்து கொண்டிருந்தார்.

வெளியே "ஜெய் ஆகாஷ்"நிற்கவும் வாப்பா என சந்தோஷமாக முன்னாள் சென்று வரவேற்றார் விஜயா . என்னப்பா இந்த நேரத்துல நேத்து நைட் பேசும் போது கூட வரேன்னு சொல்லல என மகாலிங்கம் கேட்கவும்.

ப்பா , ம்மா முதல்ல ரெண்டு பேரும் ஒண்ணா நில்லுங்க என சொன்னவன் இருவரின் “கால்களில் விழுந்து ஆசீர்வாதம்” வாங்கவும் தீர்க்க ஆயுசோடும் எப்பவும் சந்தோஷமாவும் இருக்கணும் என சந்தோஷமாக வாழ்த்தினார்கள் .

சரி உக்காரு முதல்ல காபி குடிக்கிறாயா என விஜயா கேட்கவும் இல்ல ம்மா நான் “தூங்க போறேன்” காலையிலே பேசலாம் என அமைதியாக சொல்லவும் அவனின் முகத்தில் உள்ள இறுக்கத்தை உணர்ந்து சரி நீ போயிட்டு ரெஸ்ட் எடுப்பா என மகாலிங்கம் சொல்லவும் தலையாட்டியவன் ரூமிற்கு சென்று விட்டான் .

என்னங்க ஏன் இப்படி இருக்கான் . அவனோட “பெரிய கனவு பலிச்சுருக்கு” அந்த சந்தோஷமே இல்ல அவன் முகத்திலே என விஜயா கவலையாக கேட்கவும் விடு ட்ராவல் பண்ணது டயர்ட் இருக்கும் என சமாதானமாக மகாலிங்கம் கூறினாலும் அவருக்குமே என்ன என்றே இருந்தது .

எப்பவும் அளவாக பேசுபவன் தான் ஜெய் என்றாலும் அவனின் முகத்தில் உள்ள இறுக்கம் இருவருக்கும் பயத்தையே கொடுத்தது .

ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரிந்தவனாக இருந்த ஜெய் இப்பொழுது மிகவும் பிரபலமாகிவிட்டான் . சோசியல் மீடியா, நியூஸ் பேப்பர் என காணும் இடமெல்லாம் ஜெய்யின் புகழே.

ஜெய் கிட்ட பேசலாமா என "போன் எடுப்பதும் பின் அவளே வேண்டாம் என வைப்பதுமாகவே" இருந்தாள் ஹர்ஷினி . நேற்றிலுருந்தே இப்படித்தான் இருந்தாள் . ஜெய் கிட்ட பேசியே முழுசா 3 மாசம் ஆயிடுச்சு.

அவன்கிட்ட பேச மிகவும் தவிப்பாக இருந்தாலும் அதற்கு பிறகு என்பதே அவளின் பயமாக இருந்தது . ஆனாலும் ஒரு டைம் பேசினா போதும் என மனதுக்குள் மிகவும் ஏங்கவே ஆரம்பித்துவிட்டாள் .

கதவு தட்டும் சத்தம் கேட்கவும் முகத்தை சீராக்கிக்கொண்டு ஸ் எனவும் மேம் உங்கள பார்க்க “தாரிணி “வந்திருக்காங்க என ஹர்ஷினியின் “செகரட்டரி ரூபா” சொல்லவும்.

ஓ உடனே வர சொல்லுங்க என்றாள் அவசரமாக . ஜெய்யின் ஒரே “தங்கை தான் தாரிணி” அதோடு ஹர்ஷினியின் “காலேஜ் ஜூனியரும்” கூட . இவர்கள் காதல் தெரிந்த இரண்டாமவள் .

தாரணிக்கு இரண்டு வருடம் முன்பு தான் திருமணம் முடிந்து இருந்தது . அவளின் கணவன் ரமேஷ் கோயம்பத்தூரிலே மில் வைத்து இருப்பவர்.

ஜெய் வந்தது கேள்விப்பட்டு காலையில் அவனை பார்க்க சந்தோஷமாக சென்று இருந்தாள் . ஆனால் அங்கு ஜெய்யின் முக இறுக்கத்தை பார்த்து விட்டு அவளும் என்னமோ என்று கவலை படவே செய்தாள் . இதில் விஜயா வேறு மகனை நினைத்து புலம்பி கொண்டே இருந்தார் .

வா தாரிணி என வரவேற்றவள் குடிக்க காபி வரவைத்தாள் .ஹர்ஷினியின் வரவேற்பிற்கு தாரிணி தலை ஆட்டியதோடு சரி அமைதியாகவே இருந்தாள் .

ரமேஷும் குட்டி பாப்பாவும் எப்படி இருக்காங்க என ஹர்ஷினி கேட்கவும் நல்லா இருக்காங்க என சுருக்கமாகவே முடித்துவிட்டாள் . ஏன் இப்படி இருக்கா என ஹர்ஷினி யோசிக்கவும் தாரணி அமைதியாகவே காபி குடித்தவள் உங்க கிட்ட “ஒரு விஷயம் சொல்ல சொன்னார் அண்ணா” என்றாள் .

ஹர்ஷினி மனதிற்குள் கொஞ்சம் படபடப்பாகவே உணர்ந்தவள் என்ன என மெதுவாக கேட்கவும் “அண்ணா அவார்ட் வாங்க போக மாட்டேன்” சொல்லிட்டாரு என்றாள் கொஞ்சம் கோவமாகவே .

என்ன ஏன் ஏன் என வேகமாக ஹர்ஷினி கேட்கவும்......

“உங்களால்தான்” என்றாள் தாரிணியும் வேகமாக ......

என்ன என்னாலவா என அதிர்ச்சியாக கேட்கவும்.......

ஆமா அவர் உங்கள “மீட் பண்ணனுமா” இல்லாட்டி போகமாட்டேன் சொல்லிட்டாரு இப்போ முடிவு உங்க கைலதான் என்றாள் தாரிணி .

இப்போ” வீட்ல தான் இருக்காரு” எனவும்......

ஏன் ஷூட்டிங் கேரளா தானே என ஹர்ஷினி கேட்கவும் தாரிணி முறைப்பாகவே காலையில தான் வந்தாரு என்றாள் .

ஹர்ஷினி என்ன இது ஏன் இப்படி பன்றார் என மனதுக்குள் மிகவும் கலங்கவே செய்தாள் . அவளின் வேதனையான முகத்தை பார்த்து தாரிணியும் வேதனை படவே செய்தாள் .

தாரணியின் போன் ஒலிக்கவும் நான் கிளம்புறேன் என தாரிணி சொல்லவும் ...............

இரு சாப்புட்டு போ ..........

இல்ல பாப்பா அழறா போல.......

ஓ அடுத்த டைம் பாப்பா கூட்டிகிட்டு வா என்றாள் ஹர்ஷினி .

சரி நீங்க கொஞ்சம் பாருங்க என பொறுமையாகவே சொன்னவள் கிளம்பிவிட்டாள் .

வேற எதுவும் பேசிட முடியாது இருவரிடமும். “அழுத்தம் பிடித்தவர்கள் “அதோடு இருவரும் “மிகவும் பிரைவசி பார்ப்பவர்கள்” இப்போ நான் கொஞ்சம் கோவமா ஹர்ஷிக்கிட்ட பேசினது மட்டும் அண்ணாக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். என யோசித்தவாரே கிளம்பிவிட்டாள் தாரிணி .

இப்போ கண்டிப்பா கால் செஞ்சுதான் ஆகணும் ஜெய்க்கு ஏன் இப்படி பன்றார் என யோசித்தவாறே கால் செய்தாள் .

முழுசா 3 மாசத்துக்கு அப்பறம் பேச போறோம் என சந்தோஷ பட முடியாமல் பயம் தான் அதிகம் இருந்தது . ரிங் போகவும் டென்க்ஷனில் உள்ளங்கை எல்லாம் வேர்த்தது ஹர்ஷினிக்கு .
 
Last edited:
#4
அவன் போன் பண்ணும் பொழுது எடுக்கலை
ஆனால் ஜெய்க்கு அவார்டுன்னவுடனே சந்தோஷமா?
ஒண்ணும் புரியலையே
ஆச்சார்யா, சந்திரன் and சுபத்ரா மட்டுமில்லை எனக்கும் கூட ஒரே கவலையாத்தான் இருக்கு
கூடவே குழப்பமாவும் இருக்கு,
நிதி டியர்
ஹா ஹா ஹா
போன் ரிங் போகும் பொழுதே ஹர்ஷினிக்கு கை வேர்க்குதா?
ஜெய் ஆகாஷ்ஷிடம் அவ்வளவு பயமா?
 
Last edited:

Advertisement

Sponsored

New Episodes