என்னுள் சங்கீதமாய் நீ 19

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 19



"காளிதாஸ்.." அவன் பேரை சொல்லும் போதே ஆச்சார்யாவிற்கு அவ்வளவு ரௌத்திரம்..!

அவன் இங்க பன்றான்.? என்று காலேஜ் பங்க்ஷன் ஆரம்பிக்கும் இடத்தில் தூரத்தில் அமர்ந்துஇருந்த மனிதரை பார்த்து ஆத்திரத்துடன் கேட்க,

அவரை ஏன் தாத்தா இவ்வளவு கோவமா பாக்குறாரு..? என்னவாக இருக்கும்..? என்று அவரை பார்த்துகொன்டே

யாரை தாத்தா சொல்றீங்க..? அவரையா..? என்று தங்களையே பார்த்து கொண்டிருந்த மனிதரை கைகட்டி ஹர்ஷினி புரியாமல் கேட்கவும், அவனுக்கு மரியாதை ஒண்ணுதான் குறைச்சல்.. ராஸ்கல்.. என்று பல்லை கடித்து வார்த்தைகளை துப்பினார்.

ஹர்ஷி.. “இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களோட டான்ஸ் ஸ்டார்ட் ஆகப்போகுது.. நீ இன்னும் ரேடியே ஆகலை பாரு,” சீக்கிரம் வா போலாம் என்றபடி ஜோதி வரவும்,

ஹர்ஷினி பதில் ஏதும் சொல்லாமல் தாத்தா சொன்ன காளிதாஸ் என்ற மனிதரையே பார்த்துக்கொண்டிருந்தாள். இவர்.. இவர் தான் சுபத்ரா அத்தை.. என்று யோசனையாக பார்த்துக்கொண்டிருக்கவும்,

ஜோதி கேட்டதுக்கு பதில் சொல்லாத பேத்தியின் கவனம் அவனிடம் இருப்பதை புரிந்து, தன்னை சுதாரித்து கொண்ட ஆச்சார்யா, நீ போ ஹர்ஷினி.. என்று சொல்ல,

தாத்தா, அவர்.. “அவர் தானே சுபத்ரா அத்தை..?” என்று குழப்பமாக இழுக்கவும், ஹர்ஷினி.. நீ கிளம்புன்னு சொன்னேன்.. கட்டளையாக ஆச்சார்யா சொல்ல, மீறமுடியாமல் சரி தாத்தா.. என்றவள் யோசனையுடனே ஜோதியுடன் சென்றாள்.

குழப்பமான முகத்துடன் உள்ளே வந்த ஹர்ஷினியை கண்ட ஜெய் அவளை நெருங்கி, என்ன ஆச்சு..? என்று கேட்கவும், அவனை பார்த்தவள்,

எனக்கும் தெரியல..? புரியல..? என்று அதே குழப்பத்துடன் சொன்னாள். அவளின் பதிலில் என்ன சொல்றா இவ..? என்பது போல் பார்த்தவன்,

என்ன உனக்கு தெரியல..? புரியல..?..

அது வெளியே ஒருத்தரை பாத்ததும் தாத்தாக்கு அவ்வளவு கோவம்.. அவர் பேர் காளிதாஸ்.. இந்த பேரை நிறைய டைம் எங்க வீட்ல சொல்ல.. ம்ஹூம் நிறைய திட்ட கேட்டிருக்கேன்..

“இவருக்கும் எங்க அத்தைக்கு நடந்த பிரச்சனைக்கும்..? எதாவது சம்மந்தம் இருக்குமோன்னு தோணுது..” என்று யோசனையாக ஹர்ஷினி சொல்ல கேட்ட ஜெய், ஓஹ்.. இப்போ... என்று பேச ஆரம்பிக்கும் போது,

ஜெய், ஹர்ஷி.. இன்னும் கிளம்பாம என்ன பேசிட்டு இருக்கீங்க..? டைம் ஆச்சு..? சீக்கிரம் என்று செல்வம், குமார் வர,

ஒரு 2 மினிட்ஸ்டா என்று அவர்களை அனுப்பிவிட்டவன், ஹர்ஷ்.. நாம இதைப்பத்தி அப்பறம் பேசலாம்.. இப்போ போய் கிளம்பு.. எதா இருந்தாலும் பாத்துக்கலாம் சரியா..? என்று ஆறுதலுடன் சொல்லவும்,

சரி.. என்று தலையாட்டிவிட்டு ரூமிற்குள் வந்து தயாராக ஆரம்பித்தவளின் எண்ணம் முழுவதும் அந்த காளிதாஸயே தான் சுற்றி வந்தது. அவர் தங்களை பார்த்த பார்வை.. அதில் இருக்கும் பொருள்.. ஒன்றும் சொல்லி கொள்ளும்படியாகவே தோன்றவில்லை.

அவரை பார்த்ததிலிருந்து ஏதோ தவறாக நடக்க போகிறது..? என்று மட்டும் உள்ளுணர்வு உந்தி கொண்டேயிருந்தது, என்னவாக இருக்கும்..? என்று யோசித்து கொண்டிருந்தவளிடம் வந்த செல்வி,

வாவ் ஹர்ஷி.. ரொம்ப அழகா இருக்க.. அதுவும் இந்த ட்ரெஸ் உனக்கு செமயா இருக்கு..

ஆமா இந்த குங்கும கலர் பரதநாட்டிய சாரீ உனக்கு ரொம்ப சூப்பரா இருக்கு ஹர்ஷி.. என்று ஜோதியும் சொல்ல, தன் சிந்தனையிலிருந்து வெளி வந்த ஹர்ஷினி, அவர்கள் சொல்லவும்தான் கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தவள், பார்த்த படியே நின்றாள்.

இந்த கலரை உனக்காக ரொம்ப தேடி பிடிச்சி வாங்கிருக்கேன் என்று ஜெய் உற்சாகமாக சொல்ல, அப்படி என்ன கலர்..? என்று அவன் கொடுத்த பாக்ஸை தன் கையில் வாங்கி பிரித்து பார்த்தவள்,

குங்கும பூ கலர்..? ரொம்ப நல்ல கலர்தான்.. ஆனா அப்படி தேடி பிடிச்சு வாங்கும் அளவுக்கு என்ன ஸ்பெஷல் இருக்கு இந்த கலர்ல..?

என்ன இப்படி கேட்டுட்ட..? என்ன ஸ்பெஷலா..? உன்னோட மாமனுக்கு ரொம்ப பிடிச்ச கலர்.. அதுவும் நீ இந்த புடவையை கட்டுனா பாக்க அப்படி இருப்ப.. அப்படியே அள்ளும் போ என்று குதூகலத்துடன் அன்று ஜெய் சொன்னதை நினைத்து பார்த்தவளின் முகம் அன்று போல் இன்றும் தானாகவே வெட்கத்தில் சிவந்து விட்டது.

ம்ம்.. அவர் சொன்னது கரெக்ட்தான், இந்த கலர் உண்மையிலே எனக்கு ரொம்ப நல்லா இருக்கு.. அன்னிக்கு சொல்லும் போதே அவ்வளவு எக்ஸய்ட் ஆனவர், இப்போ நேரிலே பார்க்கும் பொழுது என்ன சொல்லுவார்.. என்று நினைத்தவுடனே ஹர்ஷினிக்கு எதிர்பார்ப்பு, வெட்கம் கலந்த இனிமையான படபடப்பு உண்டானது.

அவளின் எதிர்பார்ப்பை வீணாக்காத ஜெய், அவளுக்கு மேட்ச்சாக குங்கும கலர் ஷர்ட், சந்தன கலர் பாண்ட் போட்டு வெஸ்டர்ன் ஸ்டைலில் தயாராகி இருந்தவன், நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தயாராகி வெளியே வந்த ஹர்ஷினியை கண்டதும் அவளின் ஆளை அசரடிக்கும் அழகில், உறைந்து சிலை போலே நின்றுவிட்டான்.

அவனையே பார்க்காமல் பார்த்து கொண்டிருந்த ஹர்ஷினிக்கு அவனின் ஆளை முழுங்கும் பார்வையில் இதயம் தாளம் தப்பியது.. உச்சி முதல் பாதம் வரை வெட்கத்தில் செங்கொழுந்தாகவே மாறிவிட்டாள்.

அய்யோ.. எல்லாரும் இருக்கிற இடத்தில இப்படியா பாத்து வைப்பாரு..? கண்ணை கூட சிமிட்ட மாட்டேங்கறாரே..? யாராவது பாத்துட்டா..? என்ற பயம் வந்தவுடன் தன் கண்களாலே அவனை திரும்பும் படி மிரட்டியவளை,

அவன் கண்டு கொண்டால் தானே.. யார் இருந்தா எனக்கென்ன..? நான் இப்படி தான் பார்ப்பேன்..! என்று சட்டமாகவே அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்து கொண்டிருந்தான். அவனின் அடாவடியில் இவளுக்கு தான் வேர்த்து கொட்டி கொண்டிருந்தது.

“அடுத்து உங்க டான்ஸ் தான்..” என்று குமார் சொல்லவும், இருவரும் மேடையின் பின்புறம் வந்து நின்றனர்.. எதோ சொல்வது போல் அவளை நெருங்கியவன்,

“செமயா இருக்கடி.. நான் நினைச்சு பார்த்ததை விட இன்னும் இன்னும் அழகா இருக்க..” என்று கிறங்கிய குரலில் கிசு கிசுப்பாக சொல்லவும், வெட்கத்தில் சிவந்து நின்ற ஹர்ஷினி, இன்னும் அழகாகவே தோன்றினாள் ஜெய்க்கு,

“இப்படி வெட்கப்படாதேடி..” என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியல.. இப்போ கூட பாரு என் கை என் பேச்சை கேட்காம உன்னை தொடவே வருது.., என்று தன்னை தொடுவது போல் வந்த அவனின் கையை கண்டவள், வேகமாக அவனை விட்டு இரண்டடி தள்ளியே நின்றாள்.

எதுக்குடி தள்ளி போற..? என்று அதட்டியவன், அவளை மறுபடியும் நெருங்கும் போது, மேடையில் இவர்கள் பேர் சொல்லவும், ச்சே.. உன்னை அப்பறம் கவனிச்சுக்கறேன்டி.., என்று மிரட்டிவிட்டு முன்னால் செல்லவும், சிரிப்புடன் அவனை பின்தொடர்ந்தவள்,

அதே மனநிலையில் தன் குழப்பத்தை எல்லாம் மறந்து மிகவும் சிறப்பாகவே ஆடினாள்.. அவளுக்கு ஈகுவலாகவே ஜெயும் மிக சிறப்பாக ஆடினான்.. இருவரில் யார் நடனத்தை பார்ப்பது என்று எல்லோரும் தவிக்கும் அளவுக்கு இருந்தது அவர்களின் டான்ஸ்.

ஜெயும், ஹர்ஷினியும் ஆடிக்கொன்டே மற்றவரின் நடனத்தை ரசித்து பார்த்தனர்... இவர்கள் டான்ஸ் முடியவும் கைதட்டல் வானை பிளந்தது என்றே சொல்லலாம். இருவரும் எல்லோரையும் பார்த்து தலை குனிந்து நன்றி சொல்லும் போதும் தான் தன் தாத்தாவை பார்த்த ஹர்ஷினி..

அச்சோ.. இவரை எப்படி மறந்தேன்..? என்று அவரை பார்த்தவள், அவரின் கோவ பார்வையில் என்ன என்றே தெரியாமல் ஒரு நிமிடம் நின்று விட்டவள், பின் வேகமாக கீழ் இறங்கி நேராக அவரிடம் செல்லும் போது தான் கவனித்தாள்,

அந்த காளிதாஸ் தாத்தாவிடம் ஏதோ சொல்வதும், அதற்கு ஆச்சார்யாவின் முகத்தில் தோன்றும் கட்டுங்கடங்கா கோவத்தையும் அவதானித்து கொண்டே அவர்களை நெருங்கியவள்,

தாத்தா.. என்ன ஆச்சு..? என்று பதட்டத்துடன் கேட்கும் போதே, அவளின் கையை இறுக்கமாக பற்றியவர், அந்த காளிதாஸை நெருப்பாக பொசுக்கும் பார்வை பார்த்து,

இதுக்கு அப்பறம் ஒரு வார்த்தை பேசின, “உன்னை ஆளே அடையாளம் தெரியாத படி மாத்திருவேன்.. என்னை நீ ஒன்னும்.. என்று தன் தலை முடியை காட்டி சொன்னவர்.."

அவரின் கர்ஜனையில் அரண்டு போய் நின்று இருந்த காளிதாஸயே பார்த்து கொண்டிருந்த ஹர்ஷினியை,
வா போலாம்.. என்று இழுத்து கொண்டு அங்கிருந்து உடனடியாக கிளம்பியும் விட்டார்.

அவர்களையே பார்த்து கொண்டிருந்த ஜெய்க்கு, ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. மனமும் சொல்ல முடியாத, எதோ விரும்பத்தகாதது நடக்க போகும் தவிப்பில் செல்லும் அவர்களையே பார்த்து கொண்டிருந்தான்.

காரில் ஆச்சார்யாவுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த, ஹர்ஷினியோ மிகவும் பதட்டத்தில் இருந்தாள். தாத்தாவின் முகம்.. அதில் இருக்கும் கடுமை, ஆத்திரம். கோவம் எல்லாம் மிகுந்த பயத்தையே கொடுத்தது.

என்ன என்று எதுவும் கேட்கவும்..? ஆச்சார்யாவின் இறுகிய முகம் அனுமதிக்க வில்லை.. என்ன ஆச்சி..? ஏன் இப்படி இருக்கார்..? இதுக்கு கண்டிப்பா அந்த காளிதாஸ் தான் காரணம்.. அவர் தான் எதோ சொல்லிட்டு இருந்தார்.

ஆனா இவர் இவ்வளவு கோவப்பட்டு அவரை மிரட்டுற அளவுக்கு அப்படி என்ன சொன்னாருன்னு தெரியலையே..? என்ற யோசனையுடனே வந்தவள், வீடு வரவும் இறங்கி நின்ற இவளின் கையை பிடித்த ஆச்சார்யா வேகமாக உள்ளே வந்தவர்,

நடு ஹாலில் மாட்டப்பட்டு இருந்த “தேவியின்..” படத்தின் முன் நின்று, நான் என்ன சொன்னாலும் கேட்பியா..? என்று பதட்டத்துடன் வேர்த்து கொண்டிருந்த தன் நெற்றியை துடைத்து கொன்டே கேட்கவும்,

அவரின் தோற்றத்தில், பதட்டத்தில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொண்டவள், என்ன ஆச்சு தாத்தா..? ஏன் இப்படி வேர்க்குது.. என்று பேசிக்கொண்டே, தன் கையை பிடித்திருந்த அவர் கையை நடுக்கத்தையும் கண்டு கொண்டவள்.

அம்மா.. அப்பா.. யாராவது வாங்க என்று சத்தமாக அழுகையுடன் கத்தவும், என்ன..? என்ன ஆச்சு..? ஏன் இப்படி கத்துற..? என்று கேள்வி கேட்ட படி அனைவரும் வேகமாக வந்தவர்கள், ஆச்சார்யாவின் உடல் நிலைய கண்டு,

அப்பா.. என்ன பண்ணுது..? என்று இந்திரனும், சந்திரனும், மாமா.. ஏன் இப்படி வேர்க்குது..? என்று ரேணுகாவும், மாலதியும் பதட்டத்துடன் கேட்டாலும், அவர்களுக்கு எந்த விதமான பதில் சொல்லாத ஆச்சார்யாவின் பார்வை முழுவதும் ஹர்ஷினியிடமே இருந்தது.

ஹர்ஷினி.. முதலில் நான் கேள்வி கேட்டதுக்கு பதில் சொல்லு..?

என்ன பதில் சொல்லணும்.. என்னடி ஆச்சு தாத்தாக்கு..? என்ன பிரச்சனை சொல்லு..? என்று ரேணுகா மகளிடம் கேட்க,

எனக்கும் தெரியலம்மா..? தாத்தா.. என்ன பண்ணுது உங்களுக்கு..? என்று பயத்துடன் கேட்க,

“ஹர்ஷினி.. நான் உன்கிட்ட என்ன கேட்டேன்..? அதுக்கு முதல்ல பதில் சொல்லு..?” என்று வேகமாக கத்தவும், அவரின் கோவத்தில் அதிர்ச்சியடைந்த அனைவரும் அவரையே பார்த்தனர்.

பதில் சொல்லு..? என்று மறுபடியும் கட்டளையாக கர்ஜிக்கவும்,

கேட்பேன்.. கேட்பேன்.. கண்டிப்பா நான் உங்க பேச்சை கேட்பேன்.. என்ன செய்யணும்..? சொல்லுங்க தாத்தா.. அழுகையுடன் கேட்க,

ம்ஹூம்.. “செய்யணும் இல்லை… இனிமேல் எப்பவும் செய்யவே கூடாதுன்னு உன் பாட்டி, உன் முதல் குரு மேல சத்தியம் பண்ணு..” எனவும் உட்ச கட்ட அதிர்ச்சி அடைந்த ஹர்ஷினி..

எதை செய்ய கூடாது..? எதுக்கு பாட்டி மேல சத்தியம் பண்ணனும் என்று வேகமாக துடிக்கும் இதயத்துடன் கேட்க,

“இனிமேல் நீ எப்பவும் டான்ஸ் ஆடமாட்டேன்னு சத்தியம் பண்ணு..” என்று யாரும் கனவிலும் நினைக்காத, எதிர்பார்க்காததை எகின் குரலுடன் சிறிதும் இளகாமல், “நீ இதை செய்தே ஆகவேண்டும்..” என்ற உறுதியுடன் கேட்டார்.

அவர் சொன்னதை கேட்டவுடன் வீட்டில் குண்டூசி போட்டால் கூட கேட்கும் அளவு நிசப்தம். நம்ப முடியாமல் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்து கொண்டனர்.. பேச்சே வரவில்லை யாருக்கும்.. தொண்டையில் அடைத்த உணர்வு..

சத்தியம் பண்ணு ஹர்ஷினி.. என்று “இதுதான் முடிவு..” என்ற தீர்க்கத்துடன் கேட்க, அவர் சொன்னதை கேட்டவுடன் உறைந்து நின்றிருந்த ஹர்ஷினி,

தா.. தாத்தா.. தாத்தா.. நான்.. பேச முடியாமல் திக்கியவாறே அழுகையுடன் நின்றவள், பின் வேகமாக அவரையே கட்டி பிடித்து கொண்டு கதறினாள்..

வேணாம்.. தாத்தா.. என்னால முடியாது.. நீங்க இப்படி கேட்கலாமா..? உங்களக்கு தெரியுமில்ல.. எனக்கு டான்ஸ்ன்னா உயிர்.. எனக்கு டான்ஸ்ல எதாவது சாதிக்கணும் தாத்தா.. டோன்ட் டூ திஸ் டு மீ தாத்தா..

தாத்தா உங்களுக்கே தெரியுமில்ல.. எனக்கு டான்ஸ்ன்னா சின்ன வயசுலே புடிக்கும், அதை கண்டு பிடிச்சு நீங்க தானே பாட்டி கிட்ட சொல்லி 5 வயசுலே என்னை டான்ஸ் ஆட கத்துக்க வச்சீங்க..

“அதுதான் என் லைபிலே நான் பண்ண மிக பெரிய தப்பு..” என்று வெறுப்புடன் சொன்ன ஆச்சார்யாவை விட்டு வேகமாக விலகி நின்ற ஹர்ஷினி, நீங்களா இப்படி சொன்னீங்க..? என்பது போல் நம்பாமல் அவரை பார்த்தாள்.



மாமா ப்ளீஸ்.. அவ ரொம்ப அழகுறா.. வேணாம் மாமா.. என் பொண்ணு தாங்கமாட்டா மாமா.. என்று ரேணுகா கையேந்தி கேட்க,

அப்பா என்னதான்ப்பா ஆச்சு..?, ஹர்ஷினி பாவம்ப்பா. ஏதா இருந்தாலும் பாத்துக்கலாம்.. சொல்லுங்கப்பா என்று சந்திரனும் வற்புறுத்தலுடன் கேட்கவும்,

அந்த காளிதாஸ்.. “என் பேத்தியை சினிமாவில நடிக்க கேட்கிறான்.. இப்படித்தான் என் பொண்ணு வாழ்க்கையை தான் அவன் பாழக்கினான்.. இப்போ அடுத்து என் பேத்தி வாழ்க்கையில விளையாட பாக்குறான்.. இந்த டைம் நான் விட மாட்டேன்.. நான் விட மாட்டேன்.. விட மாட்டேன்..” என்று உணர்ச்சிவசத்தில் கத்தியவர்,

நிற்க முடியாமல் தடுமாறி கீழே விழ பார்க்கவும், வேகமாக அவரை தாங்கி கொண்ட ஹர்ஷினி, சந்திரன், ஹாஸ்பிடல் போலாம் என்று கத்தவும்,

முடியாது.. நான் எங்கேயும் வரமாட்டேன், முதல்ல நீ சத்தியம் பண்ணு.. என்று பக்கத்திலிருக்கும் டேபிளை பிடித்து கொண்டு உறுதியுடன் சொல்லவும், அப்பா வாங்க ஹாஸ்பிடல் போலாம் என்று எல்லோரும் கெஞ்சினாலும் அவர் பார்வை ஹர்ஷினியிடம் தான் இருந்தது.

அவரின் பயம், பரிதவிப்பு புரிந்தது. காளிதாஸ் சொன்னதால் கோவத்தில் நிதானமிழந்து சத்தியம் கேட்கிறார். தான் சத்தியம் செய்யாமல் அவர் கண்டிப்பாகவே ஹாஸ்பிடல் வரமாட்டார் என்ற அவரின் உறுதி புரிந்தது.

இருந்தாலும் கடைசி முயற்சியாக “நான் நடிக்க எல்லாம் போக மாட்டேன்.. என்னை நம்புங்க தாத்தா.. டான்ஸல எனக்குன்னு ஒரு அங்கீகாரம்,அடையாளம் கிடைச்சா போதும்.. அதுக்கு அப்பறம் நானே டான்ஸை விட்டுடுறேன் தாத்தா.. ப்ளீஸ் தாத்தா..”

முடியாது.. நீ சத்தியம் பண்ணு..

வேண்டாம் தாத்தா.. இப்படி கேட்காதீங்க.. ப்ளீஸ்..

அப்போ எனக்காக சத்தியம் பண்ண மாட்ட.. உனக்கு அந்த டான்ஸ் தான் முக்கியம்.. நான் இல்ல அப்படித்தானே.. என்று கலங்கிய குரலில் பரிதவிப்போடு கேட்டவர் நெஞ்சில் சுருக்கென்று அதிகமான வலி தோன்றுவதை அவரின் முகத்தில் இருந்தே அனைவரும் புரிந்து கொண்டனர்.

அவரா..? டான்ஸா..? என்றால் கண்டிப்பாக அவர்தான்.. இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை தான். ஆனால் “டான்ஸை விட வேண்டும் எனும் போது, இதயம் முழுவதும் தோன்றும் அந்த வலி, ஒருவித மரத்த உணர்வு, ஆற்றாமை, ஏதும் செய்ய முடியாத தன்னுடைய இயலாமை..” எல்லாம் சேர்ந்து ஹர்ஷினிக்கு மனதுக்குள் நரக வேதனை..

அவளுடைய வேதனைய புரிந்து கொண்ட ரேணுகா, “வேண்டாம் மாமா.. அவ ரொம்ப அர்ப்பணிப்போடு, ஆசையோடு கத்துக்கிட்டா.. மொத்தமா அவகிட்டிருந்து பிடுங்காதீங்க மாமா” என்று அவரின் கையை பிடித்து கொண்டு மகளுக்காக கதறவும்,

அப்படி எல்லாம் இல்ல மருமகளே.. அவ ஆடட்டும்.. ஆனா மேடையில, சினிமாவுக்கு இப்படி பொதுவுல, ம்ம்ம் என்று மூச்சை இழுத்து விட்டு நெஞ்சு வலியில் தவித்தவாறே, சாதிக்கணும்ன்னு சொல்றா பாரு இந்த மாதிரி எல்லாம் ஆட மாட்டேன்ன்னு சத்தியம் பண்ண சொல்லு.. என்று மூச்சி வாங்கி கொன்டே பேசவும்,

ப்ளீஸ் ஹர்ஷினி.. என்று அனைவரும் அவளை கெஞ்சலுடன் பார்க்கவும், ஆச்சார்யாவையே வெறித்து பார்த்து கொண்டிருந்த ஹர்ஷினி, கல் போன்ற முகத்துடன் தேவியின் படத்தை நெருங்கியவள்,

அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கின் மேல் கை வைத்து “இனி மேல் தாத்தா சொன்ன மாதிரி எங்கேயும் ஆட மாட்டேன்..” என்று அப்படியே எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் மேல் கையை வைக்கவும்,

பதை பதைத்து போன ரேணுகா, ஹர்ஷினி என்ன பண்ற.. உன் கை என்று வேகமாக சென்று அவளின் கையை பிடித்து தூக்கினார். ஒரு வட்டம் முழுவதும் உள்ளங்கை வெந்து போயிருந்தது..

ஆனால் அவளின் முகத்தில் அந்த வலிக்கு உண்டான எந்த அடையாளமும் இல்லாமல் இறுகி போய் நின்று இருந்தவள் ரேணுகாவிடம் இருந்து தன் கையை பிரித்து விட்டு,

நெஞ்சு வலியில் தவித்தவாறே தன்னை பார்த்து கொண்டிருந்த ஆச்சார்யாவை நெருங்கி, அவரின் கையை பற்றி எழுப்பியவாறே, அப்பா கை பிடிங்க போலாம், சித்தப்பா கார் ஸ்டார்ட் பண்ணுங்க என்று வேகமாக செயல் பட்டதில் அடுத்த 10 நிமிடத்தில் ஹாஸ்பிடல் ICU வில் இருந்தார் ஆச்சார்யா.


...........................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போட்டுட்டேன்.. மறக்காம படிச்சுட்டு உங்க கருத்தை ஷேர் பண்ணுங்க மக்களே.. நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
எவன்டா அவன் காளிதாஸ்?
வீணாப் போனவன்
அவன் சினிமாவில் நடிக்கக் கேட்டதுக்கு ஹர்ஷினியை டான்ஸ் ஆடக் கூடாதுன்னு சொல்லி ஆச்சார்யா சத்தியம் வாங்கிட்டாரே
இது என்ன நியாயம்?
ஹர்ஷினியை சினிமாவில் நடிக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கலாமே

சுபத்ராவுக்கும் காளிதாஸுக்கும் இடையே என்ன பிரச்சனை?
இதை ஆச்சார்யாவால் தீர்க்க முடியலையா?
நம்ப முடியலையே, நிதி டியர்

சுபத்ராவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி காளிதாஸ் ஏமாத்திட்டானா?
இல்லை ஒருவேளை ஹர்ஷினி சுபத்ரா காளிதாஸின் மகளா?
 
Last edited:

Nithi Kanna

Well-Known Member
எவன்டா அவன் காளிதாஸ்?
வீணாப் போனவன்
அவன் சினிமாவில் நடிக்கக் கேட்டதுக்கு ஹர்ஷினியை டான்ஸ் ஆடக் கூடாதுன்னு சொல்லி ஆச்சார்யா சத்தியம் வாங்கிட்டாரே
இது என்ன நியாயம்?
ஹர்ஷினியை சினிமாவில் நடிக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கலாமே

சுபத்ராவுக்கும் காளிதாஸுக்கும் இடையே என்ன பிரச்சனை?
இதை ஆச்சார்யாவால் தீர்க்க முடியலையா?
நம்ப முடியலையே, நிதி டியர்

சுபத்ராவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி காளிதாஸ் ஏமாத்திட்டானா?
இல்லை ஒருவேளை ஹர்ஷினி சுபத்ரா காளிதாஸின் மகளா?
banu Sis Neenga Payangarama yosikireenga.. Harshi subathara ponnu ellam illai.. Renuga Ammakku therinchathu Nama katham katham than
 

Nithi Kanna

Well-Known Member
எவன்டா அவன் காளிதாஸ்?
வீணாப் போனவன்
அவன் சினிமாவில் நடிக்கக் கேட்டதுக்கு ஹர்ஷினியை டான்ஸ் ஆடக் கூடாதுன்னு சொல்லி ஆச்சார்யா சத்தியம் வாங்கிட்டாரே
இது என்ன நியாயம்?
ஹர்ஷினியை சினிமாவில் நடிக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கலாமே

சுபத்ராவுக்கும் காளிதாஸுக்கும் இடையே என்ன பிரச்சனை?
இதை ஆச்சார்யாவால் தீர்க்க முடியலையா?
நம்ப முடியலையே, நிதி டியர்

சுபத்ராவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி காளிதாஸ் ஏமாத்திட்டானா?
இல்லை ஒருவேளை ஹர்ஷினி சுபத்ரா காளிதாஸின் மகளா?
Thank you sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top