என்னுள் சங்கீதமாய் நீ 16

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 16



ஒரு வாரமாகவே ஹர்ஷினி மிகுந்த மன உளைச்சலுடனே சுற்றி கொண்டிருந்தாள்.. எதிலும் பெரிதாக ஈடுபாடும் இல்லை.. மிகவும் சோர்ந்தே இருந்தாள்.. ராஜீவ் பிரச்னையால் தான் அவள் இப்படி இருக்கிறாள் என்றே அனைவரும் நினைத்தனர்..

ஆனால் உண்மை அதுவல்லவே.. ஜெய் தான் அவளின் சோர்விற்கும், மன உளைச்சலுக்கும் காரணமாக இருந்தான்..

ராஜீவ் பிரச்னை நடந்த அன்று தன்னை கூர்மையாக பார்த்தவனின் பார்வையில் உள்ள பொருள் புரியாமல் மறுநாள் கொஞ்சம் குழப்பத்துடனே காலேஜீற்கு வந்த ஹர்ஷினியை,

ஜெய் கண் கொண்டு பார்க்கவே இல்ல, அன்றோடு இல்லாமல் அடுத்த நாளும் அப்படியே தான் இருந்தான். தப்பி தவறி எதிரே வந்து விட்டாலும் முகத்தை திருப்பி கொண்டு சென்று விட்டான்.. அந்த இரண்டு நாட்களும் தன்னை பார்க்காமலே சுற்றி கொண்டிருந்த ஜெய்,

மூன்றாவது நாளிலிருந்து காலேஜிர்க்கே வரவில்லை. அவனிடம் சந்தேகம் கேட்க வேண்டும் என்ற பேரில், ஏன் வரவில்லையென்று அவன் நண்பர்களிடமும் ஜாடை மாடையாக விசாரித்து பார்த்ததில் அவர்களுக்கும் ஏதும் தெரியவில்லை.

அவனை பார்க்காமல் இருந்ததில் ஹர்ஷினி மனதுக்குள் மிகவும் ஒடுங்கியே விட்டாள். அவனின் பிரிவும், பாராமுகமும் தன்னை இவ்வளவு துன்பப்படுத்துமா..?

இந்த குறுகிய காலத்திலே ஜெய் தன்னை இவ்வளவு பாதித்து இருக்கிறானா..?

தனக்கும் அவனை பிடிக்கும் தான்.. ஆனால் அதற்கு மேல் என்ன..? என்ற யோசிக்கவே பயந்து கொண்டிருந்தவளின், இத்தனை நாள் பயத்தை ஜெய்யின் பிரிவு உடைத்து அவளின் காதலை உறக்க அறிவித்து விட்டது.

ஜெய் எனும் கம்பீர ஆண்மகன் தன்னை அடியோடு சாய்த்து விட்டான் என்று உச்சந்தலையில் ஆணி அடித்தது போல் புரிந்தது. அந்த புரிதல் மிகுந்த பரவசத்தையே கொடுத்தது ஹர்ஷினிக்கு. வானில் சிறகே இல்லாமல் பறக்கும் உணர்வு.. மனதும், உடலும் எந்நேரமும் கனவுலகிலே மிதந்தது.

ஜெய்க்கான தன்னுடைய காதலை உணர்ந்த இந்த கொஞ்ச நாட்களிலே அவனை எப்போது பார்ப்போம்..? என்று ஏங்கவே ஆரம்பித்து விட்டாள். அவனை பார்க்காமல் எதுவும் ருசிக்கவில்லை. அவனின் பிரிவு மிகுந்த மன உளைச்சலையே கொடுத்தது.

இதில் இன்று தான் இன்டெர் காலேஜ் மீட்டில் பார்ட்டிசிபேட் செய்ய பேர் கொடுக்க கடைசி நாள் என்பதால் நேற்று ஜெய்யின் நண்பர்கள் அவன் வீட்டிற்கே சென்று பார்த்ததாகவும்,

அவன் இந்த முறை “இன்டெர் காலேஜ் மீட்டில் பார்ட்டிசிபேட் செய்ய உறுதியாக மறுத்து விட்டான் என கேள்வி பட்டதில் இருந்து, ஹர்ஷினிக்கு இன்னும்.. இன்னும்.. குழப்பமாகத்தான் இருந்தது.

அதனாலே இன்று அவளுடைய நண்பர்கள் இன்டெர் காலேஜ் மீட்டில் பார்ட்டிசிபேட் செய்ய அவள் பெயரை கொடுக்க கம்பெல் செய்த போதும் வேண்டாம் என்று மறுத்து விட்டு கேன்டீனுக்கு வந்துவிட்டாள்.

ஏன் இப்படி செய்கிறான்..? என்ன ஆச்சு..? ஏன் காலேஜிக்கும் வரலை..? என்று ஜெய்யை பற்றியே யோசித்து கொண்டிருந்தவளின் முன் நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தவள்,

தன் எண்ணத்தின் “நாயகனான ஜெய் ஆகாஷே” நேரில் நிற்கவும், வேகமாக எழுந்து நின்றவள், இத்தனை நாள் பிரிவின் ஏக்கத்தோடு அவனை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தன் கண்களில் அவனுக்கான முழு காதலையும் தேக்கி காதலாக பார்த்தாள்.

அவளின் கண்களில் தெரிந்த தனக்கான காதலை புரிந்து கொண்ட ஜெய் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். “ஹர்ஷினியும் என்னை காதலிக்கிறாளா..?”

அவளுக்கு தன்னை பிடிக்கும்.. என்று அவளின் பார்வையிலே முதலில் புரிந்து கொண்ட ஜெய்க்கு, இந்த பிடித்தம் எப்போது காதலாக மாறும் என்ற ஏக்கத்திலே சுற்றி கொண்டிருந்தான்,

இப்பொழுது ஹர்ஷினியின் கண்களில் தனக்கான அளவில்லா காதலை பார்க்கவும்..! இன்ப அதிர்ச்சியில் தான் அவளிடம் பேச வந்ததையே மறந்து அவளை காதலாக பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

அப்பொழுது பிரேக் பெல் அடிக்கும் சத்தம் கேட்கவும் தங்கள் காதல் உலகிலுருந்து வெளிய வந்த இருவரில், ஹர்ஷினி ச்சே.. இப்படியா..? அவரை விடாம பாத்து வைப்பேன் என்று வெட்கத்தில் சிவந்த முகத்துடன் வேகமாக குனிந்து கொள்ளவும்

அவளையே பார்த்து கொண்டிருந்த ஜெய், அவள் வெட்கத்துடன் குனிந்து கொள்ளவும் நிமிர்ந்திருந்த அவன் நெஞ்சு இன்னும் இன்னும் நிமிர்ந்தது காதல் கர்வத்தில்..

மிகுந்த உல்லாசமான மனதுடன் இருந்தவன், அவளை சீண்டும் விதமாக “என்னை ரொம்ப தேடுன போல..?” என்று குறுஞ்சிறுப்புடன் கேட்கவும்,

இப்படி பறக்காவெட்டி மாதிரி பார்த்து வச்சா, இப்படித்தான் மானம் போகும் என்று மனதுக்குள் நொந்தவள்.. குனிந்தவாறே “இல்ல..” எனும் விதமாக தலை அசைக்கவும்,

அப்படியா..? ஆனா என் ப்ரண்ட்ஸ் நீ எதோ சந்தேகம் கேட்க என்னை ரொம்ப தேடுனதா சொன்னாங்க.. என்று குறும்பாக கேட்டான்,

அய்யோ நான் கேட்டதை இந்த சீனியர்ஸ் சொல்லிட்டாங்க போலே.. என் முகத்தை மறைக்க எவ்வளவுதான் குனியரது..

அது.. அது.. சந்தேகம் தான்.. ஆனா இப்போ இல்ல.. என்று கொஞ்சம் திக்கி சொல்லவும், அவளின் அவஸ்த்தையில் கொஞ்சம் சத்தமாகவே சிரித்து விட்டான்.

தன்னுடைய நிலையை கண்டு அவன் சிரிக்கவும் கடுப்பான ஹர்ஷினி, அங்கிருந்து கிளம்ப முயலவும், புரிந்து கொண்ட ஜெய், ஓகே.. ஓகே .. நான் சிரிக்கல, இப்போ உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்றான், ஹர்ஷினி கேள்வியாக பார்க்கவும்,

இன்டெர் காலேஜ் மீட்ல பார்ட்டிசிபேட் செய்ய நீ ஏன் உன் பேரை கொடுக்கல..? என்று அதுவரை அவன் குரலில் இருந்த உல்லாசம் இல்லாமல் சீரியசாக கேட்கவும்,

அவனின் இந்த திடீர் கேள்வியில், “உன்னால தான்..” என்று சொல்லமுடியாமல்.. சிறிது நேரம் என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனம் சாதித்தவள்,

பின் நீங்க.. நீங்க.. ஏன்..? என்று முடிக்க முடியாமல் நிறுத்தவும், அவளின் கேள்வியை புரிந்து கொண்ட ஜெய், தன்னை எதிர்பார்க்கிறாள் என்ற கர்வமான புன்னகையுடன்,

“எனக்கு இந்த வருஷம் நீ தான் விண் பண்ணனும்..” என்று சொல்லவும். ஹர்ஷினிக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று புரியவில்லை.

ஒரு பக்கம் தனக்காக “அவன் விட்டு கொடுப்பது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தாலும், மறுபக்கம் கொஞ்சமா கோவம் வரவே செய்தது.” அவளின் முகத்தில் இருந்தே அவளின் கோவத்தை கண்டு கொண்டவன்,அதற்கான காரணத்தையும் புரிந்து கொண்டு,

நான் பார்ட்டிசிபேட் பண்ணாலும் நீ தான் கண்டிப்பா ஜெயிப்ப.. நான் உனக்கு விட்டு எல்லாம் கொடுக்கல.. ஆனா அதே சமயம் உனக்கும் எனக்கும் போட்டி நடக்கறது எல்லாம் கண்டிப்பா என்னால எக்காலத்திலும் ஏத்துக்க முடியாது.. அந்த சூழ்நிலைக்கும் போகவும் நான் விட மாட்டேன் என்று அளவில்லா காதலுடன் உறுதியாக சொன்னான் ஜெய்.

அவன் சொல்ல.. சொல்ல.. ஹர்ஷினி திகைத்தே நின்று விட்டாள். “முதல்.. தன் மனவோட்டத்தை கண்டு கொண்டது, அடுத்து.. தங்கள் இருவருக்கும் இடையில் போட்டியே வேண்டாம் என்ற அவனின் எண்ணம் சொல்ல முடியாத உணர்வையே கொடுத்தது ஹர்ஷினிக்கு.

ஜெய் சொன்னதில் ஒரு மனசுணக்கமும் இருந்தது ஹர்ஷினிக்கு.

இரண்டு பேரில் நான் தான் விண் பண்ணுவேன்..! என்று என் டான்ஸ் மேல் அவன் வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கை,” சந்தோஷத்தை கொடுத்தாலும்,

ஜெய்யும் தனக்கு நிகராகவே டான்ஸ் ஆடுபவன், அப்படி இருக்கும் போது அவர் எப்படி நான் தான் விண் பண்ணுவேன்ன்னு சொல்லலாம், அவர் கண்டிப்பாக யாரிடமும் பேச்சில் கூட தோற்கும் எண்ணம்.. அது தன்னிடமே என்றாலும், என்று மனதளவில் கோவம் கொண்டவள்,

அதை வெளிப்படுத்தும் விதமாக “நான்.. என் 5 வயசுல இருந்து டான்ஸ் கத்துக்கிட்டு ஆடுறேன், நான் நல்லா டான்ஸ் ஆடுறது பெரிய விஷயம் இல்ல,” ஆனா.. “நீங்க யார்கிட்டயும் டான்ஸ் கத்துக்காம இவ்வளவு சூப்பரா டான்ஸ் ஆடுறது தான் உண்மையிலே ரொம்ப பெரிய விஷயம்.”. என்று கொஞ்சம் ஆதங்கமான குரலுடன் சொன்னாள்.

அவள் தனக்காக.. தன்னிடமே.. சப்போர்ட் செய்து பேசுவதும், அதிலும் இருவரில் “அவள் தான் ஜெயிப்பாள்..” என்று நான் சொன்னது அவளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பது மட்டுமில்லாமல் தான் யாரிடமும் தோற்க கூடாது என்ற அவளின் எண்ணத்தையும், கோவத்தையும் புரிந்து கொண்டவனுக்கு, அவளின் காதலை கண்டு வானத்தையே வசப்படுத்திய உணர்வு.

ஓகே.. ஓகே.. நான் சொன்னது தப்பு தான் என்று உடனடியாக ஒத்து கொண்டவன், விடாமல் இன்னைக்கு தான் கடைசி டேட்.. உன் பேரை கொடுத்துடுலாம் தானே என்று கேட்கவும்,

தன்னால் தானே ஜெய் கலந்து கொள்ளவில்லை என்ற எண்ணத்தில் ஹர்ஷினி இல்லை.. நான் என் பேரை கொடுக்கல.. வேண்டாம்.. என்று மறுக்கவும்., ஜெய் விடாப்பிடியாக அவளை கலந்து கொள்ள சொன்னவன், லஞ்சுக்குள்ள உன் பேரை கொடுதுட்டு எனக்கு வந்து சொல்ற.. என்று கட்டளையாக சொன்னவன், கிளம்பியும் விட்டான்.

அவர் என்னால தான் பார்ட்டிசிபேட் செய்யலன்னும் பொது.. எனக்கு கஷ்டமா இருக்காதா.. அதை புரிஞ்சிக்காம எப்ப பாரு அதிகாரமே என்று மனதுக்குள் பொரிந்தவள்.. முதல் வேலையாக தன் பேரை கொடுத்து விட்டு லன்ச் டிமேல் ஜெயிடம் சொல்ல அவனின் கிளாஸிற்கு செல்லவும்.

ஹர்ஷினியை பார்த்த ஜெய் வேகமாக அவள் அருகில் வந்தவுடன், பேரை கொடுத்திட்டியா..? என்று அதிகாரமாக கேட்கவும்,

ம்ம் கொடுத்துட்டேன்..

ஓகே இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.. இன்னிக்கே பிராக்டிஸ் ஆரம்பிச்சுரு.. ஓகே என்று சொன்னவள், கொஞ்சம் தயங்கி கொன்டே நீங்க ஏன் காலேஜேக்கு வரல..? என்று கேட்கவும்,

முகம் இறுக ஆரம்பித்தது ஜெய்க்கு.. கோவத்தில் பல்லை கடித்து கொன்டே அது உனக்கு எதுக்கு..? நீ கிளம்பு என்று அதட்டடவும், அப்படி என்ன கேட்டுட்டேன்.. ஏன் வரல கேட்டதுக்கு இவ்ளோ கோவமா..? என்று மனதுக்குள் சுருங்கி கொண்டவள், வேறேதுவும் பேசாமல் கிளம்பிவிட்டாள்.

ஜெய் சொன்னது போல் அன்றே ப்ராக்டிஸ் ஆரம்பித்து விட்டவள், முழு மூச்சாக பயிற்சி செய்தாள். தனக்காக இல்லாவிட்டாலும் ஜெய்க்காக தான் கண்டிப்பாக விண் செய்ய வேண்டும் என்ற உறுதியில் எந்த சான்சும் எடுக்க கூடாது என்று தன்னுடைய முழு உழைப்பையும் கொட்டி முழு நேரமும் விடாது பயிற்சி செய்தாள்.

அதில் ஆச்சார்யாவிற்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏகப்பட்ட வருத்தமே. இவ்வளவு கஷ்ட படவேண்டுமா..? என்று ஆச்சார்யா கேட்ட போதும் ஹர்ஷினி கொஞ்ச நாள் தான் தாத்தா.. என்று அவரை சமாளித்து விட்டாள்..

தினமும் அவள் காலேஜில் பிராக்டிஸ் செய்யும் போது வந்து 5 நிமிடம் மட்டுமே பார்க்கும் ஜெய், எதுவும் பேசமாட்டான். ஹர்ஷினிக்கும் அவனை பார்ப்பதே போதும்.. என்பதால் அவளும் பேச முயற்சி செய்யமாட்டாள்.

அதோடு ஜெய் செய்த வேலையை பற்றி அவள் கேள்விப்பட்ட விஷயமும் அவ்வளவு உவப்பானதாக இல்ல.. ஏன் கொஞ்சம் கோவமும் கூட அவன் மேல்.. அதான் அன்னிக்கு ஏன் காலேஜ்க்கு வரல கேட்டதுக்கு சாருக்கு அவ்வளவு கோவம் வந்துச்சா..? என்று மனதுக்குள் பொங்கினாலும், டான்ஸ் பிராக்டிஸில் எந்த விதமான மன தடங்கலும் இல்லாமல் பார்த்து கொண்டாள்.

அவர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த காலேஜ் மீட்டும் ஆரம்பித்தது, ஹர்ஷினி அவள் முறை வரும் முன் ஆகாஷை தேடவும், எங்கிருந்தோ அவள் அருகில் வந்தவன் எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டவும், ஹர்ஷினியும் எதுவும் பேச தோன்றாமல் தலையசைத்து விட்டு உறுதியான நடையுடன் மேடையேறி தன் ஈர்க்கும் நடனத்தின் மூலம் எல்லா சுற்றிலும் வெற்றி பெற்று,

“பைனல் ரவுண்டில்.. ஜோதியை கண்ணனாக அலங்கரித்து ஹர்ஷினி ராதையாக மாறி.. கண்களில் கண்ணனுக்காக காதலை தேக்கி உருக்கமாக ஆடவும், பலத்த கைதட்டலை பெற்று முழுமனதாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றியை தட்டி சென்றாள்..

அதுவரை அவளிடம் பேச எந்த விதவிதமான முயற்சியும் செய்யாத ஜெய், எல்லா கொண்டாட்டங்களும் முடிந்து ஹர்ஷினி தனியாக கிளம்பும் சமயம் அருகில் வந்தவன்..

“விண் பண்ணிட்டே..” என்று உற்சகமாக பேச ஆரம்பிக்கும் சமயம், ஹர்ஷினி கொஞ்சம் கோவமாக

ராஜீவை என்ன செஞ்சீங்க..? என்று கேட்கவும், நொடியில் முகம் இறுகிய ஜெய்.. எதுவும் பேசாமல் அவளை கூர்மையாக பார்க்கவும், அவனின் பார்வையில் கொஞ்சம் தயக்கம் வந்தாலும்,

என்ன கையை புடிச்ச.. அவன் கையை உடைச்சிருக்கீங்க..? அப்படித்தானே..? அதனால தான் காலேஜ் வரல.. என்று கேட்கவும்,

அலட்சியமாக தோளை குலுக்கியவன் எதுவும் பேசாமல் நிற்கவும், அதான் ஏற்கனவே பனிஷ் பண்ணியாச்சு இல்ல.. நீங்க ஏன் அவன் கையை உடைச்சீங்க.. என்று விடாமல் கேட்கவும்,

அதெல்லாம் உனக்கு புரியாது.. விடு.. என்று லேசான கோபத்துடன் ஜெய் சொன்னான்,

அதெப்படி புரியாம போகும்.. அதெல்லாம் புரியும் சொல்லுங்க என்று பிடிவாதமாக நிற்கவும்,

என்ன புரியும் உனக்கு.. நான் இருக்கிற இடத்துலே ஒருத்தன் உன் கையை புடிச்சுருக்கான்.. அது எனக்கு எவ்வளவு கோவத்தை, ஆத்திரத்தை கொடுக்கும் தெரியுமா உனக்கு..?

என்னால உன் முகத்தை கூட நிமிந்து பாக்க முடியல. அதான் அவன் வீட்டில் இல்லன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் நாலு நாளா அந்த ராஸ்களை தேடி அலைஞ்சு, அவங்க கெஸ்ட் ஹவுஸுல இருந்த அவன் கையை உடைச்சேன்..

அவனை முதல் நாளே தட்டியிருக்கணும்.. அவனை விட்டது தான் என் தப்பு.. இப்போ கூட அவனை நினைச்சா.. என்று ஆத்திரத்தில் பல்லை கடித்தவன்.. அதான் தேடி புடிச்சு அவன் கையை உடைச்சேன் போதுமா..? வந்துட்டா என்னை பெருசா கேள்வி கேக்க “போடி..” என்று கோவத்தில் கத்தவே செய்தான்.

.................................................................................................................................................



ஹாய் ப்ரண்ட்ஸ்

என்னுள் சங்கீதமாய் நீ 16 போஸ்ட் பண்ணிட்டேன். படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க ப்ரண்ட்ஸ்.. thank you
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top