என்னுள் சங்கீதமாய் நீ 15

Nithi Kanna

Well-Known Member
#1
என்னுள் சங்கீதமாய் நீ 15ஹர்ஷினி.. இந்த மாசம் “இன்டெர் காலேஜ் மீட் “ இருக்குன்னு சொல்ராங்க.. உன் பேரையும் கொடு.. நீ தான் சூப்பரா டான்ஸ் ஆடுறயே.. என்று ஜோதி லன்ச் பிரேக்கில் வெளியே அமர்ந்து சாப்பிடும் போது சொல்லவும்,

ஆமா ஹர்ஷி.. நீ மட்டும் பார்ட்டிசிபேட் பண்ணா கண்டிப்பா “நீ தான் விண் பண்ணுவ..” என்று மற்றொரு தோழியான செல்வியும் சொன்னாள்.

அதெப்படி நம்ம “சீனியர் ஜெய்..” தான் 3 வருஷமா விண் பண்ணிகிட்டு இருக்கார். அவரும் சூப்பரா தான் டான்ஸ் ஆடுறாரு.. நாம பார்த்தோம் இல்லை என்று ரோஹன் சொல்லவும். தங்கள் டிபார்ட்மென்ட் பங்க்ஷனில் ஜெய்யும் தன்னை போலவே டான்ஸை ரசித்து.., அர்ப்பணிப்போடு ஆடுனதை நினைத்து பார்த்தாள் ஹர்ஷினி.

ஹேய் ஹர்ஷி.. பெட்டர் ஐடியா ஒன்னு என்கிட்ட இருக்கு.. நீ பேசாம நம்ம “சீனியர் ஜெய் கூட சேர்ந்து டான்ஸ் ஆடு..” செமயா இருக்கும். கண்டிப்பா நாம தான் விண் பண்ணுவோம் என்று அவளின் கிளாஸ் மெட் சுதாகர் சொல்லவும்

ஆமா ஹர்ஷினி.. நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து “ஜோடியா ஆடினா.. பாக்கவே செமையா இருக்கும்..”, என்று மற்றொருவனும் சொன்னான்.

அவர்கள் சொல்வதை கேட்கும் போதே மனதில் கொஞ்சம் சாரல் அடிக்க தான் செய்தது. நானும், அவருமா..? எப்படி இருக்கும் என்று மனக்கண்ணில் ஓட்டி பார்க்கும் போதே சிலிர்த்தது ஹர்ஷினிக்கு.

தன் மன சிலிர்ப்பை மறைத்தவள், சாதரணமாக "பாக்கலாம்பா.." என்று முடித்து விட்டு, நான் கிளாஸ்க்கு போறேன் நீங்க வாங்க.. என்றவள் ஆகாஷை பற்றி சுகமாக நினைத்து கொன்டே சென்றாள்.

அவர் “என்னை பர்ஸ்ட் பாக்கும் போது ரொம்ப அலட்சியமா..! தானே பாத்தாரு..” அப்பறம் கொஞ்சம் “ஆச்சரியமா..!” பாத்தாரு. ஆனா ஏன் அப்படி ஆச்சரியமா பாத்தாருன்னு தான் தெரியல..

அப்பறம்.. அவர் “என்னை ராக் பண்ண டான்ஸ் ஆட சொன்ன மாதிரி தெரியல.. அவர் கண்ணுல என் டான்ஸை பாக்கணும்ன்னு எதிர்பார்ப்பு தானே தெரிஞ்சது.. ஆனா அவருக்கு நான் டான்ஸ் ஆடுவேன்னு எப்படி தெரியும்..?”

ஆனா அதுக்கு அப்பறம் இருந்து தான் என்னை ரசனையா பாக்க ஆரம்பிச்சாரு.. இப்போ என்று நினைத்தவுடன் வெட்கத்தில் காது மடல் வரை சிவந்து விட்டது ஹர்ஷினிக்கு.. என்ன பார்வை அது..? அப்படியே என்னை உயிரோட உறிஞ்சுற பார்வை..!

அதுவும் எந்த இடத்திலும், எவ்வளவு கூட்டத்திலும்..! என்னை மட்டுமே பார்க்கும் அவரின் பிரத்தியோகமான சிலிர்க்க வைக்கும், உரிமையான பார்வை..

அவரின் தீவிரமான பார்வைலியே அவர் மனசு புரியாத்தான் செய்து.. ஆனா எனக்கு தான் என்னமோ பயமா இருக்கே..

முதல்ல என்னால நேரா நிமிந்து அவர் முகத்தை கூட பாக்க முடியறதில்லயே.. அவரை பாக்கும் போது மட்டும் என் தைரியம் எல்லாம் எங்க போய் ஒளிஞ்சுக்குதுன்னு தான் தெரியல

எனக்கும் அவரை பிடிச்சிருக்கு தான்.. ஆனா எப்போலிருந்து அவரை பிடிக்க ஆரம்பிச்சதுன்னு தான் தெரியல.. ஒருவேளை அவரை பர்ஸ்ட் டைம் பார்த்த போதே பிடிச்சுருக்குமோ..? அப்படித்தான் இருக்கும்.. முதல்ல இருந்தே அவர் பார்வையிலே அவர் மனசை என்னால புரிஞ்சிக்க முடியுதே..

அவரோட ஆளுமையான தோரணை, அசட்டுத்தனம் இல்லா கம்பீரமான நடை, உடை, பாவனை, பேச்சு, சிரிப்பு, எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கே..

ஆனா என்னமோ ஒரு தயக்கம், பயம், வெட்கம் எல்லாம் என்னை போட்டு பாடா படுத்துதே.. இன்னிக்கு அந்த ராஜீவ் என்கிட்டே பேசினத்துக்கு எவ்ளோ கோவம்..

அந்த பேச்சு பேசுறாரு.. ஆனா அவரோட அந்த உரிமையான கோவமும் ரொம்ப பிடிக்கதான் செய்யுது.. என்று ஆகாஷை நினைத்து கொண்டே கனவுலகில் மிதந்து கொண்டிருந்தவள்..

யாரோ தன்னை ஹர்ஷி.. என்று கூப்பிடும் குரல் ஒலிக்கவும் சுய நினைவிற்கு வந்தவள், தன் முன்னே வந்து வழி மறைத்தார் போல் நின்றிருந்த ராஜீவை பார்க்கவும் முகத்தில் தானாகவே எரிச்சல் வந்து ஒட்டி கொண்டது,

அவனோ மிகவும் கோவமான முகத்துடன் “நான் கேன்டீன்ல பேசிட்டு இருக்கும் போதே நீ எப்படி போலாம் ஹர்ஷி..?” என்று திமிராக கேட்கவும்,

அவனின் திமிரான பேச்சில் ஆத்திரமடைந்த ஹர்ஷினி இவன் கிட்ட எதுவும் பேசவே கூடாது என்று விலகி நடக்க தொடங்கினாள்.

ராஜீவோ உன்னை இன்று விட்டேனா பார் என்று மறுபடியும் வழி மறித்து “நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம.. அமைதியா போனா என்ன அர்த்தம்..?” என்று கேட்கவும்,

இவன் அடங்க மாட்டான்… என்று புரிந்து கொண்ட ஹர்ஷினி “பதில் சொல்ல பிடிக்கலன்னு அர்த்தம்..” என்று அழுத்தமாக சொன்னாள்.

அப்போ அந்த ஜெய் கேள்வி கேட்டா மட்டும் பதில் சொல்ல பிடிக்குதோ..?

ஆமா அப்படித்தான்.. அவர் கேள்வி கேட்டா மட்டும் தான் நான் பதில் சொல்லுவேன்...

ஓஹ் அந்த அளவுக்கு ஆச்சா..? அதென்ன அவன் கேள்வி கேட்டா மட்டும் பதில் சொல்லுவ. அப்படியென்ன அவன் ஸ்பெஷல் உனக்கு..?

அவர் எனக்கு ஸ்பெஷலா.. இல்லையான்னு.. உங்க கிட்ட சொல்லணும்ன்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை..

இப்படி சொல்லிட்டா ஆச்சா..? அதான் நானே கேன்டீன்ல பாத்தேனே.. நான் உன்கிட்ட பேசணுத்துக்கு அவன் என்ன அந்த பொங்கு பொங்குறான்.. அவன் மனசுல என்ன இருக்குன்னு தான் தெரியுதே.. நீ எப்படி..? என்று ஆத்திரமாக கேட்டான்.

நான் முதலே சொல்லிட்டேன்.. என் மனசுல என்ன இருக்குன்னு உங்க கிட்ட சொல்லணும்ன்னு எந்த அவசியமும் இல்லை எனக்கு..

முடியாது நீ எனக்கு சொல்லித்தான் ஆகணும்.. என்று அதிகாரமாக கத்தவும்,

சொல்ல முடியாது.. என்று உறுதியாக சொன்னாள்,

அதெப்படி எனக்கு நீ சொல்லி தான் ஆகணும்.. அவனுக்கும்.. உனக்கும் நடுவுல என்ன இருக்கு..?

அவனின் கேள்வியில் அளவுக்கு அதிகமான கோவம் கொண்ட ஹர்ஷினி.. இப்போ நீ எனக்கு வழி விட்டலன்னா அப்பறம் கண்டிப்பா வருத்த படுவ..

என்ன மிரட்டுறியா என்னை..

ஆமா அப்படியே வச்சிக்கோ.. என்று சொன்னவள், என் பின்னாடி சுத்த ஆரம்பிச்ச முதல் நாளே நான் உன்னை கூப்பிட்டு எனக்கு பிடிக்கலை சொன்னேன் இல்ல..

அதுக்கு அப்பறமும் நீ அடங்கலை.. ஆனா உனக்கு இது தான் பைனல் வார்னிங் ராஜீவ்.. இனிமேல் என் பின்னாடி வராத.. என்று நிறுத்தி நிதானமாக அழுத்தி சொன்னவள் நடக்க ஆரம்பிக்கவும்,

அவளின் பேச்சில் ஆத்திரத்தில் அறிவிழந்த ராஜீவ் அவளின் கையை பிடிக்கவும், கொதித்தெழுந்த ஹர்ஷினி அவனை ஓங்கி அறைந்தே விட்டாள்.

ஆச்சார்யாவின் தோள் சாய்ந்தே அதை நினைத்து பார்த்தவள்.. ஜெய் கேன்டீன்ல சொன்னது கரெக்ட்தான். நான் அவன்கிட்ட இந்தளவு பொறுமையா இருந்திருக்க கூடாது..

அதுதான் அவனுக்கு அட்வான்டேஜா போயிருச்சு.. கடைசியில ராஸ்கல் என் கையைவே புடிச்சிட்டான்.. என்று மனதுக்குள் ராஜீவை திட்டிய ஹர்ஷினி, இப்போ கண்டிப்பா இதுக்கும் ஜெய் கோவப்படுவாரு.. அவன் என்கிட்ட பேசனத்துக்கே அவ்ளோ கோவம் அவருக்கு இப்போ சொல்லவும் வேண்டாம்..

இந்த விஷயம் தெரிஞ்சு இங்க வந்தப்போ என்ன கோவம் அவர் முகத்துல..

அப்போ மட்டும் அவர் வந்த வேகத்துல தாத்தா மட்டும் வரலைன்னா.. கண்டிப்பா அவரே ராஜீவை அடிச்சிருப்பார். அப்பறம் இது வேற மாதிரி பிரச்னையாகிருக்கும். நல்ல வேளை அதுக்குள்ளே தாத்தா வந்துட்டார் என்று நினைத்தவாறே லேசாக நிமிர்ந்து ஆகாஷை பார்த்தவள்..

யாரோ ஆகாஷை மறைத்தவாறு நின்று பேசி கொண்டிருக்கவும், மன சோர்வின் காரணமாக மறுபடியும் ஆச்சார்யாவின் தோளிலே கண் மூடி சாய்ந்து விட்டாள்.மச்சி.. இங்க என்ன பண்ற..? சரி வா போலாம்.. இங்க எல்லாரையும் போக சொல்ராங்க என்றபடி ஆகாஷின் கிளாஸ் மேட் சிவா வரவும்,

நான் வரல நீ போடா.. என்றான் ஜெய்,

டேய் இங்க யாரும் இருக்க கூடாதாம்டா.. நானே டவுட் கேக்க வந்துட்டு மேமை மீட் பண்ண கூட முடியலை.. எல்லாரையும் போக சொல்ராங்கடா.

ச்சு.. நான் வரல, நீ கிளம்புடா..

மச்சி அந்த ராஜீவ் பிரச்சனை பெருசாகும் போலடா.. அவன் அப்பா வேற வந்துட்டு இருக்கார்.. அதான் இங்க யாரும் இருக்க கூடாதுன்னு சொல்ராங்க, வாடா போலாம்..

நான் தான் வரலன்னு சொல்றேன் இல்லை.. நீ கிளம்புடா என்று கோவத்தில் கத்தவும்,

டேய் நீ ஏன்டா கத்துற.. உனக்கு எதுக்குடா இவ்ளோ கோவம்..

அதெல்லாம் உனக்கு எதுக்கு.. நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு..

மச்சி நீ ஏதோ சரியில்லை.. வா போலாம்.. அந்த ப்ரின்ஸி வேற நம்ம கிட்ட தான் வாராருடா.. வாடா போலாம் என்று கெஞ்சியபடியே ஆகாஷின் கையை பற்றி இழுத்து கொன்டே செல்லவும்,

டேய்.. என்ன விட்றா.. டேய் சிவா.. உன்னை கொல்ல போறேன், விட்றா என்னை..

டேய் கத்தமா வாடா.. ஜெய் மறுக்க மறுக்க அவனை இழுத்து கொண்டு வந்துவிட்டான் சிவா.

எதுக்குடா என்னை இழுத்துட்டு வந்த.. என்று ஜெய் கோவத்தில் கத்தவும்,

எதுக்கா..? முதல்ல அங்க உனக்கென்ன வேலை.. ஆமா நீ எதுக்கு இவ்ளோ கோவப்பட்ற..? என்று சந்தேகமாக சிவா கேட்கவும்,

அவனின் சந்தேகத்தில் கடுப்பான ஜெய் “அது உனக்கு எதுக்கு..?” கோவமாக எகிரவும்,

எனக்கு எதுக்கா...? டேய் ஏற்கனவே நம்ம டிபார்ட்மெண்டுக்கும், அந்த ராஜீவ் டிபார்ட்மெண்டுக்கும் ஜென்ம பகை.. இதுல புதுசா இந்த பிரச்னை வேற.. எல்லாரும் என்ன ஆகுமோன்னு பயந்துட்டு இருக்காங்க..

நீ தான் நம்ம டிபார்ட்மெண்ட் ரெப்ரெசென்ட் வேற.. நீ அங்க நின்னா.. அதுவும் இவ்ளோ கோவமா நின்னா எப்படிடா.. அதான் தேவையில்லாத பிரச்சனை வேணாம்ன்னு தான் உன்னை இழுத்துட்டு வந்தேன்..

ம்ப்ச்.. போடா என்று ஆத்திரத்துடன் கத்திய ஜெய் தங்கள் ஆஸ்தான இடமான மரத்தடி மேடைக்கு சென்று உட்காரவும், சிவாவும் அமைதியாக அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

ராஜீவின் அப்பா கார் உள்ளே வரவும் “டேய் மச்சி அந்த ராஜீவோட அப்பா வந்துட்டாருடா.. என்ன ஆகுமோ..?” பரபரப்புடன் சிவா சொல்லவும்,

அவனை திரும்பி முறைத்த ஜெய்.. மவனே இதுக்கப்புறம் ஒரு வார்த்தை நீ பேசுனா..! இன்னைக்கு கைமா தான்டா நீ.. என்று விரல் நீட்டி கொலைவெறியுடன் மிரட்டவும், ஜெயின் கோவம் தெரிந்ததால் கப்பென தன் வாயை மூடி கொண்டான் சிவா.

அடுத்த அரை மணிநேரத்திலே தொங்கி போன முகத்துடன் தன் அப்பாவுடன் வெளியே வந்த ராஜீவ்.. அவர்கள் காரில் ஏறி அங்கிருந்து கிளம்பி விட்டான்.

பிறகு ஹர்ஷினியுடன் வெளியே வந்த ஆச்சார்யா, சந்திரன் இருவரும் கிளம்பும் முன், எங்களோடே வந்துடு ஹர்ஷி, வீட்டுக்கு போலாம்.. எனவும்

இல்லை தாத்தா.. காலேஜ் முடிய இன்னும் டைம் இருக்கு, எப்பவும் போல நானே வந்துடுறேன்..

ஓகே பாத்துக்கோ.. நாங்க கிளம்புறோம், என்றவர்கள் கிளம்பவும், ஹர்ஷினி தன் கிளாஸ்ஸிற்கு சென்றுவிட்டாள்.

என்னங்கடா கிளாஸ்சிக்கே வராம இங்கேயே இருந்துட்டீங்க என்ற படி காலேஜ் முடியவும் ஆகாஷின் ப்ரண்ட்ஸ் அனைவரும் மரத்தடி மேடைக்கு வந்தனர்.

ஜெயின் கோவத்தில் அரண்டு போயிருந்த சிவா எல்லாரும் வரவும், தப்பிச்சோம்டா சாமி.. எல்லாம் வந்துட்டாங்க.. ஒரு மனுஷன் இவ்ளோ நேரமாவா கோவமா இருப்பான்..

என்னடா சிவா இப்படி அரண்டு போய் உக்காந்திருக்க.. செல்வம் கேட்கவும்,

ஏன் கேக்க மாட்ட..? எல்லாம் என் நேரம்டா.. என்று கடுப்பாக சொல்லவும்.

டேய் அவனை விடுடா.. எங்க நம்ம உளவு துறை.. என்ன ஆச்சு..? அந்த ராஜீவ் பிரச்சனை.. ஆர்வத்துடன் குமார் கேட்கவும்,

ஆமாடா.. எனக்கு எப்படா கிளாஸ் முடியும்ன்னு இருந்தது.. என்ன ஆச்சுன்னு தெரியலன்னா மண்டையே வெடிச்சுடும் போல, என்று அசோக் சொல்லும் போதே, அங்கு வந்த பாண்டுவை பார்த்ததும்,

வாடா.. வாடா.. “எங்க ஜேம்ஸ் பாண்டு..” உன்னை தான் தேடிட்டு இருந்தோம்.. அந்த ராஜீவ் மேட்டர் என்னடா ஆச்சு..? என்று குமார் கேட்கவும்,

அதெல்லாம் சிறப்பா முடிஞ்சிருக்கு... அந்த ராஜீவ் இனிமேல் எக்ஸாம் எழுத மட்டும் தான் காலேஜ்க்கு வரமுடியும்..

என்னடா சொல்ற..? என்று அதிர்ச்சியாக செல்வம் கேட்கவும்

ஆமாடா.. அதுவும் ஹர்ஷினி சொன்னதாலதான்.. இல்லாட்டி TC தான் அவனுக்கு.,

நிஜமாவாடா.. அவனோட அப்பா MLA ஆச்சே.. விட்டிருக்க மாட்டாரே..

அவர் MLA கெத்து வேலைக்கு கூட ஆகல.. அந்த ஹர்ஷினி அம்மிணியோட தாத்தா யாரு தெரியுமா..?

யார்டா..?

யாரா..? AD குரூப் ஆப் செவன் ஸ்டார் ஹோட்டல் இருக்குல்ல,

ஆமா நல்ல பெரிய ஹோட்டேல்டா..

அது அவங்களோடது தான்..

ஓஹ் அந்த அம்மிணி பென்ஸ் கார்ல வரும்போதே நினைச்சோமே .. பெரிய இடம்தான்னு, என்று குமார் சொல்லவும்

ஆமாடா அவர் பேறு ஆச்சார்யா.. அவருக்கு சென்ட்ரல் வரைக்கும் நல்ல பவர் இருக்கும் போல.. அவரு தான் கண்டிப்பா TC கொடுக்கணும்ன்னு சொல்லிருக்காரு..

ஆனா ஹர்ஷினி தான் அதெல்லாம் வேண்டாம்ன்னு அவங்க தாத்தாகிட்ட சொல்லிருக்கா.. அதுக்கு அப்பறம் தான் ராஜீவ் எக்ஸாம்க்கு மட்டும் வர மாதிரி முடிவு பண்ணிருக்காங்க..

சூப்பர்டா.. அவனுக்கு தேவை.. எவ்வளவு திமிரு..

கரெக்ட் அவனுக்கு வேண்டியதுதான், போன டைம் அவன் தேவையில்லாம போட்ட சண்டையால எவ்ளோ பெரிய பிரச்சனை.. எத்தனை பேருக்கு அடிபட்டுச்சு.. அப்போ அவங்க அப்பா பவரை வச்சி ஒண்ணுமில்லா செஞ்சுட்டாங்க..

அதுக்கெல்லாம் சேர்ந்து தான் இப்போ சங்கு அவனுக்கு.. அந்த அம்மிணிக்கு செம தைரியம் தான்.. என்று செல்வம் சொல்லவும்,

பின்ன நான் சும்மாவா அந்த அம்மிணிக்கு “தில்லானான்னு” பேர் வச்சிருக்கேன் என்று பெருமையாக குமார் சொல்லவும்,

டேய் அந்த “தில்லானா..” பேருக்கும்.. அந்த அம்மிணி தைரியத்துக்கும் என்னடா சம்மந்தம்..

அந்த அம்மிணி "நல்லா டான்ஸ்.." ஆடுது.. அதனால "தில்லானா மோகனாம்பாள்" படத்துல வர பேரு வச்சிருக்கே.. ஆனா இப்போ நீ என்ன புதுசா கதை கட்ட பாக்குற என்று அசோக் நக்கலாக சொல்லவும்,

டேய் அதுவும் ஒரு காரணம் தான்.. அது இல்லாம இன்னொன்னும் இருக்கு அந்த பேருல என்று பெருமையாக குமார் சொல்லவும்,

எங்களுக்கு தெரியல., நீயே சொல்லு.. அப்படி என்னதான் காரணம் இருக்குன்னு நாங்களும் கேக்குறோம்.. என்று செல்வம் கேட்டான்.

தில்லானா.. அந்த பேருலே "தில்.." வருது பாத்தியா, அந்த அம்மிணிக்கு ஏகப்பட்ட தில்லு தானே, வந்த முத நாளே "சீனியர்ஸ்ன்னு கூட பயப்படாம.. நம்மள என்ன ஒட்டு ஓட்டுச்சு.." அதான் அப்பவே என் முழு அறிவையும் பயன்படுத்தி இந்த பேரை வச்சேன்.. சூப்பர்ல.. என்று குமார் பெருமையான முகத்துடன் சொல்லவும்,

டேய் அறிவு கொழுந்து.. பேர் வைக்குற முகரையை பாரு,, நீ அந்த பேரை வச்சு நம்மளயும் தான்டா கேவலப்படுத்துற,

நாம பல்பு வாங்கினதை அந்த அம்மிணி மறந்தாலும், இவன் இன்னும் அதை மறக்காம சொல்லி நம்மளை தான்டா டேமேஜ் பன்றான்.

ஆமாடா.. இதுல என்னமோ பெரிய இவன் மாதிரி மூஞ்சியில ஏகப்பட்ட பெருமை வேற.. போட்றா அவனை என்று ஆளாளுக்கு அவனை மொத்த ஆரம்பித்தனர்.

டேய் அவனை விடுங்கடா.. அந்த ஹர்ஷினி அம்மிணி வருது பாரு.. மொத்த காலேஜும் அந்த அம்மிணியை தான்டா பாக்குது..

பின்ன சும்மாவா என்ன தைரியம்.. இனிமேல் கண்டிப்பா இவதாண்டா நம்ம காலேஜ் குயினா இருக்க போற.. சான்ஸே இல்ல..

இவர்கள் பேசுவது எல்லாம் காதில் விழுந்தாலும் ஜெயின் பார்வை முழுவதும் நடந்து வரும் ஹர்ஷினியின் மேலே இருந்தது..

பார்க்காமலே ஹர்ஷினிக்கும் ஜெயின் பார்வையை உணர முடிந்தது.. அவர்கள் அமர்ந்து இருக்கும் இடத்தை கடக்கும் போது கடைக்கண்ணால் ஜெயை பார்த்தவள், அவனின் கூர்மையான ஆளுமையான பார்வையில்.. தன் காரில் ஏறி கிளம்பிய பிறகும், அதிகரிக்கும் அவளின் இதய துடிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை…

..................................................................................


ஹாய் ப்ரண்ட்ஸ்..

என்னுள் சங்கீதமாய் நீ 15 போஸ்ட் பண்ணிட்டேன். படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க ப்ரண்ட்ஸ்.. thank you...
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement