என்னுள் சங்கீதமாய் நீ 1

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 1



நம் தமிழ் நாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்றான கோயம்பத்தூரில் உள்ள “ஆச்சார்யா விலாஸில்” எப்பொழுதும் போல் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுடனே நடந்து கொண்டிருந்தது .

"இன்னிக்கு என்னமோ மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கே... இப்படி எல்லாம் நமக்கு இருக்காதே பார்ப்போம், என்னதான் நடக்குது..?" என யோசித்து கொன்டே கிளம்பி கொண்டிருந்தாள் “நம் நாயகி ஹர்ஷினி” .

இன்டெர் காம் ஒலிக்கவும் அத காதுக்கு கொடுத்தாள், "ஹர்ஷி.. பிரேக் பாஸ்ட் க்கு டைம் ஆச்சு" என ரேணுகா ஹர்ஷினியின் அம்மா கூப்பிடவும், "இதோ வந்துட்டேன்மா". வேகமாக மொபைல் எடுத்து கொண்டு கீழே சென்றாள் .

ஹர்ஷினி வரும் சத்தத்தில் ரேணுகா தன் மகளை பார்த்தார் "பால் போல மாசு மறு இல்லா முகம் பிரம்மன் செதுக்கிய சிலையாகவே இருந்தாள் . இவளை பார்த்தா யாரும் 26 வயசு சொல்ல மாட்டாங்க 20 வயசு பெண் போல இருந்தாள் . என்ன இருந்து என்ன பிரயோஜனம்.?" என பெருமூச்சு விட்டுக்கொண்டார் ரேணுகா .

அவரின் முக பாவத்தில் இருந்தே அவரின் யோசனையை புரிந்து கொண்டவள். "ம்மா..டைம் ஆச்சு டிபன் கொடுங்க” என்றாள் ஹர்ஷினி. "வா சாப்புடு" என பரிமாற ஆரம்பித்தார் .

"என்னமா.. நம்ம வீட்டு நாட்டாமை”
தன் படையோடு கிளம்பியாச்சா..?" என்றாள் நக்கலாக .

"ஹர்ஷி.. இப்படி பேசத்தாயேன் அவர் உன் தாத்தா “என்றார் கண்டிப்பாக . அவர் சொன்னதற்கு நக்கலாக தோளை குலுக்கி கொண்டதே அவளின் பதில் . ok நான் கிளம்புறேன் .

"ஹர்ஷி.. இன்னிக்கு போர்ட் மீட்டிங்ல தாத்தாகிட்ட எதுவும் வம்பு வச்சுக்காத..அப்பா கண்டிப்பா சொல்லிட்டு போயிருக்கார்.." என ரேணுகா கொஞ்சம் வேண்டுகோளகவே சொன்னார் எனலாம், ஹர்ஷினி பதில் எதுவும் சொல்லாமல் அவரை அழுத்தமாக பார்த்து விட்டு கிளம்பி விட்டாள் .

எல்லா விஷயத்திலும் நல்ல பெண்ணே ஆனால் தாத்தா என்றால் மட்டும் ஏன் இப்படி இவள்தான் இப்படி என்றால் தன் “இளைய நாத்தனார் சுபத்ரா” இவளுக்கு மேல் இருக்கிறாள் . கடவுளே இன்னிக்கு எந்த பெரிய பிரச்னையும் ஆகாம பாத்துக்கோ என வேண்டவே ஆரம்பித்துவிட்டார் ரேணுகா .

"என்ன சார் சொல்றீங்க..? சுபத்ரா, ஹர்ஷினி மேமும் வரங்களா போர்டு மீட்டிங்குக்கு..? போச்சு.. இன்னிக்கு மீட்டிங் முடிஞ்சு நாம வீட்டுக்கு போன மாதிரிதான்" என்றார் ஒருவர்.

"இன்னிக்கு என்ன பிரச்னை ஆக போகுதோ..?" என்றார் இன்னொருவர்

"ஸ்ஸ்.. அவங்க எல்லாம் வராங்க.." என எச்சரித்தார் அருகில் இருந்தவர் .

“75 வயதுமிக்க ஆச்சார்யா” கம்பீர நடையுடன் வர அவர் பின்னால் அவரது இரு மகன்கள் “சந்திரன், இந்திரன்” இரு மகள்களில் மூத்தவரான “மேனகா தன் கணவரான சுரேந்தருடன்” வந்தார்.

"இளைய மகள் சுபத்ரா . ஹர்ஷினி சந்திரனின் ஒரே மகள் . இந்திரனுக்கு அபிஷேக் .அடுத்து ஸ்வேதா என இரு பிள்ளைகள் . மேனகாவிற்கு கார்த்திக் , ஹாசினி என இரு பிள்ளைகள் இதுதான் ஆச்சார்யாவின் குடும்பம்".

ஆச்சார்யா வரவும் எல்லோரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர் . ஆச்சார்யா உட்காரவும் மற்றவர்களும் அமர்ந்தனர் .

“AD குரூப் ஆப் 7 ஸ்டார் ஹோட்டல்ஸ் “. தமிழ் நாடு முழுவதும்” 5 பிரான்ச்” உள்ளது இந்த . வயதிலும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே மிகவும் வெற்றிகரமாக தொழில் நடத்தி வருபவர் ஹோட்டல் மட்டும் இல்லாமல் குடும்பத்திலும் எல்லோரும் ஆச்சார்யாவின் கட்டுப்பாட்டிலே . நம் நாயகி ஹர்ஷினி , சுபத்ரா தவிர.

மீட்டிங் ஆரம்பிக்க ஆச்சார்யா கை அசைக்கும் சமயம் “சுபத்ரா தன் வேக நடையுடன்” வந்தார் . அவருடன் இவர்கள் குடும்பத்தின் வாரிசுகளில் இருவரான “அபிஷேக் , ஹர்ஷினி” இருவரும் வந்தனர். எல்லோரையும் பார்த்து மரியாதை நிமித்தமாக வணக்கம் செய்து தன் இருக்கையில் அமர்ந்தனர் மூவரும் .

சந்திரன் பொதுவாக எல்லோரையும் வரவேற்று இந்த “வருட வளர்ச்சி விகிதத்தை” விவரித்தார். பின்பு பொதுவான பேச்சுகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு என்ன “என்ன மாற்றங்கள் செய்யலாம்” என கேட்கவும் அதுவரை “யாருக்கு வந்த விருந்தோ” என அமர்ந்து இருந்த சுபத்ரா ஹர்ஷினி இருவரும் நன்றாக நிமிர்ந்து அமர்ந்தனர் . அவர்களை பார்த்தவுடனே தெரிந்து விட்டது இன்னிக்கு ஏழரைய இழுத்து தெருவில் விட போகின்றனர் என .

சுபத்ரா முதல் ஆளாக "நம் எல்லா ஹோட்டேலியும் ஒரு டான்ஸ் புளோர் ஓபன்” செய்யலாம் என்றார் மிகவும் சீரியஸாகவே . "கரெக்ட் அத்தை.. நானும் இதை தான் யோசிச்சேன்" என்றாள் ஹர்ஷினியும் சந்தோஷமாக .

"ஆரம்பிச்சுட்டாங்க.." என தலை மேலே கை வைத்து விட்டான் அபிஷேக். "அப்புறம் எல்லா மாசமும் டான்ஸ் போட்டி வைக்கலாம்.. அதுல விண் பண்றவங்க நம்ம ஹோட்டல்ல ஒரு வாரத்துக்கு ப்ரீயா தங்கலாம் என அறிவிக்கலாம்.." என ஹர்ஷினி மிகவும் குதூகலமாக சொன்னாள்.

"ஹர்ஷினி.." என மேனகா கண்டிப்போடு அதட்டவும் "ஒ அத்தை உங்க கிட்ட சொல்லனுமா..?"

"ஓகே... இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு.. அது என்னனா..? சுபத்ரா அத்தை மாதிரி என்ன மாதிரி முரட்டு சிங்கிள்ஸ் { நீ சிங்கிளா ஹர்ஷி } மட்டும் குளிக்க தனியா ஒரு ஸ்விமிங் பூல் கட்டணும்."

"இந்த கபிள்ஸ் தொல்லை தாங்கல.. என்னடா அபி..?" என அபியை பார்த்து கண்ணடித்தாள் ஹர்ஷினி . "அப்படியா அபி..?" என சுபத்ராவும் குறும்பாக கேட்கவும் "அய்யயோ.. சைடு கேப்ல என்ன போட்டு கொடுங்கறாங்களே . வீட்டுக்கு போன உடனே நாட்டாமை துண்டை உதறி பஞ்சாயத்து பண்ண ஆரம்பிச்சுடுவாரே..?" என மனதுக்குள் அலறினான் அபிஷேக் .

"போதும் நிறுத்துங்க.. இது போர்டு மீட்டிங்..! நீங்க ஆட்டம் போடும் இடம் இல்ல" என ஆச்சார்யா கண்டிக்கவும்.

சுபத்ரா அலட்டாமல் "oh இது போர்டு மீட்டிங்கா..?" என்றார் நக்கலாக. "சுபத்ரா.." என இந்திரன் அதட்டவும்,

ஹர்ஷினி அவரை பார்த்து "எல்லோரையுடைய கருத்தையும் கேக்கறது தான் போர்டு மீட்டிங்.. தான் மட்டும் டெசிஷன் எடுக்க எதுக்கு மீட்டிங்..?" என்றாள் நிதானமாக .

"பிஸ்னஸ் பத்தி எதுவும் தெரியாம..? என்ன கருத்தை சொல்ல போறாங்களாம்..? சண்டை போட மட்டும் தான் தெரியும்.. அதோட எங்க எப்படி நடந்துக்கணும் அப்படின்னும் தெரியல.." என்றார் ஆச்சார்யா கண்டிப்புடன்.

"என்ன பண்றது..? எங்க அப்பா சண்டை போட சொல்லிக்கொடுத்த அளவு பிஸ்னஸ் பத்தி சொல்லி கொடுக்கல.." என்றார் சுபத்ராவும் விடாதவராக .

"எங்க வீட்லயும் எங்க எப்படி நடந்துக்கணும் சொல்லி தரல” என்றாள் ஹர்ஷினியும் நக்கலாக.

"ஹர்ஷினி.. சுபத்ரா போதும், ரெண்டு பேரும் அமைதியா இருங்க.." என சந்திரன் கோவமாக அதட்டவும் அவர் முகத்தை கூட பார்க்காமல் திரும்பி கொண்டனர் இருவரும்.

"சொந்த மகள் ஹர்ஷினி.. மகள் போல் வளர்த்தவர் சுபத்ரா” இருவரும் சண்டை போட கூட தன்னுடன் பேசமாட்டார்கள் என ஒவ்வொரு முறையும் உணர்த்தினார்கள் சந்திரனுக்கு .

அதுவரை கோவமாக இருந்த சந்திரனின் முகம் இவர்கள் முகம் திருப்பவும் அளவு கடந்த வேதனையை பிரதிபலித்தது . ஆச்சார்யா தன் பெரிய மகனின் வேதனையை அவரின் முகத்தில் இருந்தே புரிந்து கொண்டார் .

"ஓகே.. ஆப்டர் லஞ்ச் பாக்கலாம்” என ஆச்சார்யா சொல்லவும் அனைவரும் சென்றனர். "சுபத்ராவும் ஹர்ஷினி.. நீங்க வெயிட் பண்ணுங்க" என்றார் ஆச்சார்யா கண்டிப்புடன்.

"சுபத்ரா.. நான் உன்கிட்ட சொன்னதுக்கு என்ன முடிவு எடுத்து இருக்க..?" என கோவமாக ஆச்சார்யா கேட்கவும். “நான் முடியாதுன்னு அப்பவே சொன்னதா ஞாபகம்" என்றார் சுபத்ராவும் இறுக்கமாக .

"எத்தனை வருஷமா கேட்குறேன் அந்த டான்ஸ் விட்டு தொலைன்னுட்டு.. கேட்க மாட்ட அப்படித்தானே..?"

"நீங்க எத்தனை வருஷம் கேட்டாலும் எல்லா வருஷமும் என் பதில் முடியாதுதான்” என உறுதியுடன் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் சுபத்ரா.

அவர் கிளம்பவும் ஆச்சார்யா கோவமாக "ஹர்ஷினி உனக்கு வயசு 26.. எப்போ கல்யாணத்துக்கு ஓகே சொல்ல போற.?"

"எப்பவும் ஓகே சொல்ல மாட்டேன்.." என்றாள் ஹர்ஷினி உறுதியாக.

"நீயும் உன் பிடிவாதத்தை விடமாட்ட அப்படித்தானே.?" என ஆச்சார்யா கடுப்போடு கேட்கவும்.

"நீங்க என்ன எப்பவும் டான்ஸ் பண்ண கூடாதுன்னு சத்தியம் வாங்கல.. அதே மாதிரி நானும் எப்பவும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு எனக்குள்ள சத்யம் பண்ணிக்கிட்டேன்.."

"எப்பவும் நாம பண்ண சத்தியத்தை காப்பாத்தணும் அப்படின்னு.. எங்க தாத்தா எங்களுக்கு சொல்லி கொடுத்து இருக்கார்” என்றாள் நக்கலாக ஹர்ஷினி.

………………………………………………………………………….


"கடவுளின் தேசமான கேரளாவில் உள்ள மூணாறு இன்றைய சுற்றுலா தளங்களில் மூனாரும்" மக்கள் மனதில் மிகவும் விரும்பும் இடமாக இடம்பெற்று உள்ள பார்க்கும் இடம் எல்லாம் பசுமையாகவும் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது.

ஆனால் நம் “நாயகன் ஜெய் ஆகாஷிற்கு” இந்த குளிர் எல்லாம் ஒரு பொருட்டே இல்ல என்பது போல் வெறித்தனமாக “டேன்ஸ்” ஆடி கொண்டிருந்தான் . மைனஸ் டிகிரி குளிரில் ஒரு நார்மல் பாண்ட் , டீ ஷர்ட் இதுதான் அவன் ஆடை . மனதின் வெப்பம் ஒருவேளை குளிரை உணர வைக்க முடியவில்லையோ.

மாஸ்டர் என “ஜெயின் PA மோகன்” அழைப்பால் தான் தன் ஆட்டத்தை நிறுத்தினான் ஜெய் . இந்த “ஸ்டெப்ஸ் எல்லாம் ப்ராக்டிஸ் பண்ணுங்க.." என குருப் டான்சர்ஸ்க்கு உத்தரவிட்டு மோகனுடன் சென்றான் .

"இவ்ளோ வேகமா ஆடினாரு பாதி புரியல என்ன பண்றது..?"

"போய்.. அவர்கிட்ட கேட்டுட்டு வரியா ரவி..?" என்றான் மற்றவன். "அதுக்கு இந்த மலை மேல இருந்து என்ன தள்ளிவிட்டுடா சாமி.. எப்போ வேணாலும் வெடிக்கிற எரிமலை மாதிரி இருக்காரு.. அவர்கிட்ட என்ன கோத்துவிட்டு சோளிய முடிக்க பாக்குற , நான் சிக்கமாட்டேன்டா.." என்றான் நடுங்கும் குரலில் ரவி .

"இந்தியா அளவிலான டான்ஸ் போட்டியில் ஜெய் கோரியோ க்ராப் செய்த பாடலுக்கு தான் விருது” கிடைத்து உள்ளது . டான்ஸில் சாதிக்கணும்ன்னு எத்தனை வருட கனவு லட்சியம் ஏன் ஒரு விதமான வெறி என்றே சொல்லலாம் ஜெய் ஆகாஷிற்கு .

ஆனால்.. இந்த சந்தோசத்தை முழுதாக உணர முடியவில்லை . அதுவே இன்னும் பயங்கரமான கோவத்தை கொடுத்தது ஜெய்க்கு .

"மாஸ்டர்.. நிறைய போன் கால்ஸ், வாழ்த்து வந்துகிட்டே இருக்கு நீங்க யாருக்கும் ரெஸ்பாண்ட் பண்ணாம இருக்கீங்க.. பிரஸ்ல இருந்து வேற ரொம்ப நேரமா வெய்ட் பன்றாங்க.. பிளீஸ் ஜி.." என ஜெய்யின் PA மோகன் கூறிக்கொன்டே இருக்கும் போது ஜெய்யின் பெர்சனல் போன் ஒலிக்கவும் வேகமாக சென்று எடுத்தான்

"ஹலோ.. எங்க இருக்கா..?"

“ கோயம்புத்தூர்.. ஓகே நான் காலையிலே அங்க இருப்பேன் . நான் வரது அவளுக்கு தெரியக்கூடாது" என கண்டிப்புடன் விழுந்தது வார்த்தைகள் .

“ஹர்ஷினி” அவளை நினைச்சாலே வெயிலும் பனியும் கலந்தே தோன்றியது ஜெய்க்கு . “9 வருட காதல்” இருவரதும் . அதை உடைப்பது போலே அவளின் நடவடிக்கைகள் இருந்தது

அதுவும் ஜெய் “கல்யாணம் பண்ணிக்கலாம்” என கேட்ட தினத்தில் இருந்தே. அவளை பார்த்தே 3 மாசம் ஆயிடிச்சி. போன் பண்ணாலும் எடுப்பதில்லை பாத்துக்கிறேன் . என்கிட்டே இருந்து இன்னிக்கு எப்படி தப்பிக்கிறேன்ன்னு

"இதுவரைக்கும் இருந்த ஜெய் வேற.. இதுக்கு மேல நீ வேற ஜெய் தான் பாக்கப்போற, ரெடியா இரு ஹர்ஷ்..?" என மனதுக்குள் சூளுரைத்து கொண்டான் ஜெய் ஆகாஷ்.

……………………………………………………………………………………………………………………………
….
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "என்னுள்
சங்கீதமாய் நீ"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
நிதி கண்ணா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top