என்னுள்ளே சங்கீதமாய் நீ Final 2

Advertisement

Seyon

Well-Known Member
Nice story sis. Ella characters positive ah approach panirukinga lovely sis. First story mathiri illa your way of writing nice sis. Keep rocking with many new stories. (y):love:
 

Hema Guru

Well-Known Member
என்னுள்ளே சங்கீதமாய் நீ Final 2



எல்லோரின் அதிருப்தியை உணர்ந்தாலும்.. மேலும் சிரிப்புடன் நின்ற ஆச்சார்யா, “இது.. இது.. எப்படி சொல்ல..? இது என்னோட பாசம் ஜெயிச்சதால வந்த சிரிப்பு..” என்று சிரித்து கொண்டே சொல்ல,

எல்லோரும் அவர் சொல்ல வருவதை புரியாமல் பார்த்தனர், ஜெய், ஹர்ஷினியை தவிர, அதை புரிந்து கொண்ட ஆச்சார்யா எல்லையில்லா ஆனந்தத்தோடு ஹர்ஷினியை அணைக்க, ஹர்ஷினியும் அவரின் மகிழ்ச்சியில் தன் வருத்தத்தை மறைத்து சிரிக்கவே செய்தாள்.

“என் பேத்தி.. என் பேத்தி.. என் தேவி தான் இவ.. என் தேவி தான்” என்று தொடர்ந்து சொல்லியாவரே அவளை பாசமாகி தாங்கி நெற்றியில் முத்தமிட்டவர், தானும் அமர்ந்து அவளை தன் பக்கத்தில் அமரவைத்து கொண்டவர்,

“இப்போ நான் எதுக்கு சிரிக்கறன்னு தானே பாக்கிறீங்க..? என்று அனைவரையும் பார்த்து கேட்டவர்,

“ம்ஹூம்.. அதை சொல்றதுக்கு முன்னாடி, நான் உங்களை எல்லாம் எதுக்கு வரசொன்னேன்னு சொல்லிடுறேன்” என்றவர், அதுக்கு முன்னாடி.. “ஜெய் இங்க வாப்பா..” என்று அவனை அழைக்க,

தணியாத கோவத்திலே வந்த ஜெய், “என்ன தாத்தா..?” என்று கேட்க,

“இது உனக்கு தான்” என்று ஒரு பாத்திரத்தை நீட்ட, புரியாமல் அதை கையிலே வாங்காமல் நின்ற ஜெய்..

“இது என்ன..? எதுக்கு..?” என்று சந்தேகமாக கேட்க,

“முதல்ல இதை கையில வாங்கு ஜெய்” என்று வற்புறுத்த அசையாமல் நின்ற ஜெய், ஹர்ஷினியை முறைக்க, தனக்கும் என்ன என்று தெரியாமல் குழப்பமாக பார்த்து கொண்டிருந்த ஹர்ஷினி அவனின் முறைப்பில், வேகமாக எழுந்து நின்று,

“இது என்னன்னா எனக்கும் தெரியாது..” என்று “அவன் கஷ்டப்படும் காலங்களில் கூட தன்னிடமோ ஏன் தன் தந்தையிடம் கூட பணம் கேட்காமல் தானே வேலை பார்த்து சாதித்தவனிடம் ஆச்சார்யா டாக்குமெண்டை நீட்ட அவனின் தன்மானம் தெரிந்ததால் பயத்துடன் சொன்னாள்”.

“ஜெய் இதை பத்தி அவளுக்கு எதுவும் தெரியாது.. சரி நானே சொல்லிடுறேன்.. இது உன்னோட டான்ஸ் ஸ்கூலுக்கான டாகுமெண்ட் வித் கியோட.. இனி எப்போதும் போல் நீ உன்னோட கனவை நிறைவேத்தி இன்னும் இன்னும் சாதிக்கலாம்” என, எல்லோருக்கும் எல்லையில்லா அதிர்ச்சி.

அவரின் டான்ஸ்க்கான ஒப்புதலில் ஆனந்த அதிர்ச்சி அடைந்தவன், சந்தோஷமாக ஹர்ஷினியை பார்க்க, “அவளோ கண்களில் கண்ணீரோடு தன்னையும்.. ஆச்சார்யாவையும் பார்த்து மலைத்து போய் கனவு போல் நின்றிருக்க”, அதை ரசித்தவன்,

யாரை பற்றியும் கவலை படாமல் அவளை நெருங்கி அணைத்து கொள்ள, ஹர்ஷினியின் கண்ணீரோடு அவனை அணைத்து கொண்டாள், எல்லோருக்கும் மிக பெரிய பிரச்சனை தீர்ந்ததில் மிகவும் ஆசுவாசமாக உணர்ந்தனர்,

சந்திரன் ஒரு படி மேலே சென்று தன் தந்தையை சந்தோஷத்தோடு அணைத்து கொள்ள, ஆச்சார்யாவும் சிரிப்புடன் மகனை அணைத்து கொண்டார்.

“ரொம்ப சந்தோஷம்ப்பா.. உங்க வேதனை, பயம் எல்லாம் எனக்கு நல்லா தெரியும்ப்ப்பா.. அதான் அது தெரிஞ்சும் எப்படி நானும் இதை கேட்டு உங்களை இன்னும் கஷ்டப்படுத்தன்னு தான் இத்தனை நாளா கேட்காம இருந்தேன்ப்பா.. ரொம்ப சந்தோஷம்ப்பா” என்று

“எல்லா விதமான மன சங்கடமும் முடிவுக்கு வந்து மகள் நிம்மதியான வாழ்வை வாழ்வாள்” என்ற அளவில்லா நிம்மதியில் சொன்னார். ஹர்ஷினியும்..ஜெயும் மனதின் சந்தோசம் முகத்தில் பிரதிபலிக்க நின்றிருக்க, அவர்களிடம் சென்ற ஆச்சார்யா.. இருவரின் கையையும் பற்றி கொண்டு..

“எனக்கு என் பேத்தி சந்தோஷத்தை விட.. என்னோட பயம்.. வெறுப்பு எல்லாம் முக்கியமா தெரியலை.. அதுவும் அவ மனசு கஷ்டத்தோட வீட்டை விட்டு வெளியே போனது எல்லாம்.. என்று வேதனையுடன் சொன்னவர், தொடர்ந்து..

“என்னால எப்படி அவ பட்ற கஷ்டத்தை பாத்துட்டு கல்லு போல இருக்க முடியும்.. எனக்காக அவங்க இதை செய்யும் போது.. அவங்களுக்காக நான் என்னோட பயத்தை விட்டா என்ன தப்பு..? சொல்ல போனா இந்த முடிவை எடுத்ததுக்கு அப்பறம் தான் எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு” என்று மனதார சொன்னவர், ஹர்ஷினியை பாசத்தோடு பார்த்து,

“நான் இந்த முடிவை சொன்னதுக்கு அப்பறம்.. நீ என்கிட்டே மனசார பேசிருந்தா கண்டிப்பா.. அது எனக்கு இப்போ நீ மனசார உன்னோட எண்ணத்தை சொன்னதுக்கு அப்பறம் கிடைச்ச சந்தோஷம்.. நிறைவு கொடுத்திருக்காது..”

“எனக்கு பலமுறை தோணும் ஹர்ஷி.. என் பேத்தி எனக்காக அந்த டான்ஸை விட்டுட்டு முன்ன போல என்கூட அன்பா இருப்பாளான்னு தோணும்..”

“என்னை விட அவளுக்கு அந்த டான்ஸ் எந்த விதத்துல முக்கியம்ன்னு நிறைய கோவம் வரும்”

“என் பாசம்.. அவளுக்கு முக்கியமா தெரியலான்னு விரக்தி வரும்.”.

“ஆனா.. நீ இப்போ அந்த டான்ஸ் வேண்டாம்.. நான் தான் வேணும்ன்னு சொன்னப்போ எனக்கு கிடைச்ச சந்தோஷம்.. அது எல்லாம் சொல்ல கூடிய விஷயம் இல்லை.. மனசார உணரக்கூடிய ரொம்ப அழகான உணர்வு..” என்று முடித்தவர்,

ஜெயயை மிகுந்த வாஞ்சனையோடு அணைத்து விலகியவர், “உனக்கு எப்படி நன்றி சொல்லன்னு எனக்கு தெரியல..” என்று சொல்ல, ஜெய் பேச வர, அவனை தடுத்தவர்,

“இல்லை ஜெய்.. எனக்காக.. என் பேத்திக்காக நீ உன்னோட கனவை விட்டது.. எல்லாம் ரொம்ப ரொம்ப பெரிய விஷயம்.. அந்த விதத்துல நீ என்னை விட மனசுல ரொம்ப பெரிய மனுஷன்.. நீ மாப்பிள்ளையா கிடைக்க நாங்களும் என் பேத்தியும் ரொம்ப கொடுத்து வச்சிருக்கோம்..” என்று மனதார நெகிழ்ச்சியுடன் சொன்னவர்,

மஹாதேவனிடம் சென்று அவரின் கையை பிடித்து கொண்டு, “உங்களை எல்லாம் என்னோட பயத்தாலா ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன், அப்படி இருந்தும் நீங்க எங்க கூட சம்மந்தம் வச்சிக்க ஒத்துக்கிட்டீங்க ரொம்ப பெரிய மனசு உங்களுக்கு” என,

பக்கத்தில் இருந்த விஜயா நக்கலாக செரும, அவரின் புகழ்ச்சியில் மெலிதான சங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்த மஹாதேவன் மனைவியின் நக்கலலில் திரும்பி முறைத்தவர், பின் திடமாகவே பேசி தான் ஜெயின் தந்தை என்று நிரூபித்தார்.

“எனக்கு உங்க மேல நிறைய கோவம் இருந்தது தான்.. நான் இல்லைன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்.. நான் என் கோவத்தை வெளிப்படையா தான் காமிக்கவும் செஞ்சேன்..”

“இனி உங்க கிட்ட மறைக்க என்ன இருக்கு..? என் மகன் முன்னமே சொன்னமாதிரி இனி நாம எல்லாம் ஒரே குடும்பம் தானே..”

“எனக்கும்.. முதல்ல உங்களை மாதிரி என் மகன் டான்ஸ்க்குள்ள போறேன் சொன்னப்போ கோவம் தான்.. அந்த கோவத்துலதான் அவனுக்கு காசு கூட அனுப்பலை.. அப்படியாவது அதை விட்டுட்டு வந்துடுவானேன்னு தான் அனுப்பலை..”

ஆனா.. “அவன் பார்ட் டைம் வேலை பார்த்து அவன் நினைச்சதை சாதிச்சப்போ ஒரு அப்பாவா அது எனக்கு எவ்வளவு பெருமையா..!! கர்வமா..!! இருந்துச்சி”

அதான்.. “நீங்க அதை விட சொன்னப்போ.. என் மகனோட உழைப்பு எல்லாம் வீணே போகுதுன்னு கோவம்..”

ஆனா.. “ என் மருமகளுக்காகவே அதை நான் ஏத்துக்கிட்டேன்..” என்று ஹர்ஷினியை பெருமையாக பார்த்து கொண்டு சொல்ல, ஹர்ஷினிக்கு அவரின் பெருமையில் உள்ளம் எல்லாம் நிறைந்து போனது, அவளுக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் தான்.

“அப்புறம்.. என் மகனுக்கு இதெல்லாம் வேண்டாம்..” என்று டான்ஸ் அகாடமிக்கு அவர் சொத்தாக செய்து கொடுத்ததை குறிப்பிட்டவர், “நானே என் மகனுக்கு செய்யணும்ன்னு நினைக்கிறேன். நீங்க என் மருமகளை மட்டும் எங்களுக்கு கொடுத்தா போதும்” என்று முடிக்க, அவரின் பேச்சில் அவரிடம் இருந்து இத்தகைய பேச்சை எதிர்பார்க்காமல்.. எல்லோருமே அசந்தே நின்றுவிட்டனர்

ஆச்சார்யா.. அவரின் பேச்சில் மகிழ்ந்தாலும், “இது என் பேத்தியோட புருஷனுக்கு செய்யறதில்லை.. என் பேரனுக்கு நான் செய்றது.. அதை யாரும் தடுக்க மாட்டீங்கன்னு நம்புறேன்” என்று வேண்டுகோளாகவே மஹாதேவனோடு, ஜெயயை பார்த்தே சொன்னார், அவனின் தன்மானம் அவரும் அறிந்தது ஆயிற்றே..

இருந்தும் ஜெயால் அதை ஏற்று கொள்ள முடியாமல் மறுக்க, ஆச்சார்யா மட்டுமல்லாது வீட்டினர் எல்லோருமே வற்புறுத்த வேறுவழி இல்லாமல் அவர்களின் அன்பை மறுக்க முடியமால் அரை மனதாக தான் ஏற்று கொண்டான்,

ஹர்ஷினி பாசத்தோடு ஆச்சார்யாவை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடிக்க, “என்ன நம்ம வீட்டில கொஞ்சநாளா பாசமலர் படமாத்தான் ஓடுது.. அதுவும் நம்ம வீட்டு ரெண்டு ஜான்சிராணிகளும் இப்படி அழுமூஞ்சியா மாறும்ன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல” என்று கார்த்திக் சூழ்நிலையை மாற்றும் பொருட்டு கிண்டலாக சொல்ல,

யாருடா அழுமூஞ்சி..? என்று சுபத்ரா கார்த்தியை அடிக்க, ஹர்ஷினியும், தன்னை அழுமூஞ்சி என்றதில் வீறு கொண்டு எழுந்தவள், “இன்னும் நல்லா அடிங்க அத்தை” என்று கோவமாக சொல்ல,

“அவ்வளவு அழுகையிலும் என்னை அடிக்கிறதுக்கு மட்டும் கரெக்ட்டா வந்துடுவியே..” என்று சுபத்ராவின் அடிகளை வாங்கி கொண்டே வலியில் கார்த்திக் கடுப்பாக நொடிக்க,

“பின்ன அக்கான்னா சும்மாவாடா..?” என்று கெத்தாய் சொன்னவள், தானும் சேர்ந்து அடிக்க, ஹாசினியும் நானும் என்று அடிக்க, அவர்களின் செல்ல சண்டையில் எல்லாரும் மனதார சிரிக்க.

“ஒரு சின்ன பையனை அடிக்கிறதை பாத்து இப்படி எல்லாம் சிரிச்சிட்டு இருக்கீங்களே..? இந்த அநியாத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா..?” என்று கத்த.. இப்படியே எல்லா பிரச்சனையும், வேதனையும் முடிவுக்கு வந்ததில் அவ்வீட்டு இளவரசியின் திருமணம் ஒரு திருவிழா போலே கோலாகலமாக ஆரம்பித்தது.

எல்லோரும் வியக்கும் வண்ணம் மிகவும் கிராண்டாக.. உயிர்ப்போடு.. மகிழ்ச்சியோடு நடக்க, “ஜெயும்.. ஹர்ஷினியும் அமைதியாக.. ஆழ்ந்த நிம்மதியுடன் எல்லா விதமான கொண்டாட்டங்களிலும்.. சம்பிரதாயங்களிலும் மனதார பங்கேற்று உளமார தங்களின் திருமணத்தை தாங்களே மிகவும் ரசித்தனர்..”

“எத்தனை வருட போராட்டம் சுபமாக முடிந்ததில் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்த போதும் வெளியே அமைதியாகவே தங்களின் இணையின் மகிழ்ச்சியை ரசித்து திருமண நேரத்தை மிகவும் எதிர்பார்த்து இருந்தனர்”,

அப்போதும்.. “முகூர்த்த புடவை குங்கும கலரில் எடுத்து” ஹர்ஷினியை கோவப்படுத்தி, அவள் கேட்க, “இதுக்கு மட்டுமில்ல நம்ம பர்ஸ்ட் நைட்டுக்கும் இந்த கலர் புடவை தான்” என்று அளவில்லா மயக்கத்துடன் கண்ணடிக்க, வெட்கம் மற்றும் கோவத்தில் சிவந்த முகத்துடன் எப்போதும் போல் ஹர்ஷினி தான் பின் வாங்க வேண்டியிருந்தது மகிழ்ச்சியுடன் தான்,

முகூர்த்த நேரம் நெருங்க.. நெருங்க.. “ஹர்ஷினிக்கு பதட்டம் ஒரு புறம்.. எதிர்பார்ப்பு ஒருபுறம்.. தங்களின் காதல் பெற்றோர்களின் ஆசீர்வாதத்தோடு எவ்வித குறையும் இல்லாமல் நடக்க அளவில்லா சந்தோஷம் ஒரு புறம்” என்று மிகவும் திண்டாடி போனாள்..

அதே டென்க்ஷனில் ஜெயின் பக்கத்தில் மணமேடையில் அமர, அவளின் மணபெண் அலங்காரத்தை மிகவும் ரசித்து நிறைவோடு பார்த்து கொண்டிருந்த ஜெய், அவள் முகத்தில் தெரிந்த டென்க்ஷனில், அவள் கையோடு தன் கையை இறுக்கமாக கோர்க்க,

அவனை நிமிர்ந்து பார்த்த ஹர்ஷினி.. “அவன் கண்களில் தெரிந்த அளவில்லா காதலில் எல்லா விதமான டென்க்ஷனும் வடிய, நிறைவாக புன்னைகைக்க”,

“பொற்தாலியை வணங்கி.. அவளின் கண்களை காதலோடு பார்த்து கொண்டே மூன்று முடிச்சையும் தானே போட.. தாலி தன் நெஞ்சில் உரசியதில் ஹர்ஷினியின் உடல் அளவில்லா உணர்ச்சியின் துடிப்பில் சிலிர்த்து அடங்கியது”,

“அவர்களின் ஆழமான காதல் புரிந்ததால் தாராணியும் தன் நாத்தனார் முடிச்சு போடும் உரிமையை அவர்களுக்காக விட்டு கொடுத்தாள். அவர்களின் காதலை பார்த்திருந்த எல்லோர் கண்களிலும் ஆனந்த் கண்ணீர் தோன்றாமல் இல்லை”.

அதற்கு பின் நடைபெற்ற எல்லா சடங்குகளிலும்.. “ஹர்ஷினியும்.. ஜெயும் தங்கள் உலகில் தாங்கள் மட்டுமே.. என்பது போல் கனவுலகிலே மிதந்த படியே தான் செய்தனர்”,

திருமணம் இனிதே நிறைவுற ஜெய் மிகவும் எதிர்ப்பார்த்த அவர்களுக்கான இரவும் வர, “ஹர்ஷினி மிகுந்த தயக்கத்துடனும், கொஞ்சம் பயத்துடனும், எல்லையில்லா காதலுடனும்”,

“ஜெயின் அடாவடி விருப்பம் போல்.. குங்கும கலர் புடவையே கட்டி கொண்டு, மிதமான அலங்காரத்தில் தலை நிறைய மல்லிகை பூ மணக்க, தனி பொலிவில் முகம் இன்னும் அழகாக மினுமினுக்க, தேவதையாய் அன்னநடையிட்டு வந்தவளை, ரசனையோடும்.. கிறக்கத்தோடும்.. காதல் தாபத்தோடும் பார்த்தவன்”..

ஹர்ஷினி அருகில் வந்தும் எதுவும் பேசாமல் அவளையே பார்க்க, மெலிதான நடுக்கத்துடன் குனிந்து நின்றிருந்த ஹர்ஷினி, அவனின் அமைதியில் நிமிர்ந்து கேள்வியாக பார்க்க, குறும்புடன் கண்ணடித்தவன், காதலாக அவளை கட்டிக்கொள்ள, ஹர்ஷினியும் அதே காதலோடு அவனை கட்டி கொண்டாள்.

சிறிது நேரம் இருவருமே தங்களின் மகிழ்ச்சியை தங்களின் இணையை கட்டி கொண்டு முழுதாக அனுபவித்தனர்.. நேரம் கடந்தும் ஜெய் வெறுமனே கட்டிக்கொண்டு நிற்க, ஹர்ஷினிக்கு தான்

“என்ன இவர்..? அமைதியாவே இருக்கார்..?” என்று யோசனையுடன் விலகி அவனை கேள்வியாக பார்க்க,

“என்ன ஹர்ஷ்..?” என்று ஒன்றும் தெரியாதவன் போல் அப்பாவியாக வினவ, அவளுக்குத்தான் எப்படி கேட்பது..? என்று குழப்பம், வெட்கத்தோடு பார்க்க, “என்ன ஹர்ஷ்..? எதாவது சொல்லனுமா..?” என்று கேட்க,

அவனின் கண்ணோர சுருக்க குறும்பு சிரிப்பில் அவனை கண்டு கொண்ட ஹர்ஷினி, “ஆமா.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.. நான் தூங்கணும்” என்று நக்கலாக சொல்ல,

“ஏய் என்னடி விளையாடுறியா..? தூக்கம் வருதாம் இல்லை தூக்கம்.. கொன்னுடுவேன்.. பாத்துக்கோ” என்று கொலைவெறியுடன் மிரட்டியவன், “இப்போ எப்படி தூக்கம் வருதுன்னு நானும் பாக்கிறேன்..?” என்று எல்லையில்லா தாபத்தில் சூளுரைத்தவன்,

புயல் வேகத்தில் அவளை ஆக்கரமிக்க, ஹர்ஷினிதான் அவனின் வேகத்தில் திண்டாடி போனாள். தங்களின் காதல் வாழ்க்கையை நிறைவாக ஆரம்பித்த ஜெய்.. களைத்து தன் நெஞ்சின் மேல் படுத்திருக்கும் ஹர்ஷினியின் உச்சி தலையில் முத்தமிட்டவன்..

“ஹர்ஷ்..” என்று அழைக்க.. நிமிர்ந்து பார்த்தவளை.. எல்லையில்லா காதலாக பார்த்தவன்..

“I LOVE YOU..!!” என,

தன்னிடம் முதல் முறையாக காதலை சொல்பவனை கண்களில் கண்ணீரோடு பார்த்தவள்.. மறுபடியும் அவனின் நெஞ்சிலே முகம் புதைக்க,

“ஏய்.. நீயும் சொல்லுடி” என்று காதலாக எதிர்பார்ப்புடன் மிரட்ட,

“எனக்கு தோணும் போது தான் நான் சொல்லுவேன்..” என்று ஹர்ஷினி அவன் செய்ததை இப்போது தானும் செய்ய.. புரிந்து கொண்ட ஜெய்..

“ஏய் ஒழுங்கா சொல்லிடு” என்று மிரட்ட.. ஹர்ஷினி மறுக்க.. எப்போதும் போல் செல்ல.. செல்ல.. காதல் சண்டைகளுடனும்,

“ஜெயின் கோவம், குறும்பு மற்றும் எல்லையில்லா காதலுடனும்.. ஹர்ஷினியின் புரிதலுடனும் அவர்களின் வாழக்கை இனி இனிதே இருக்கும்” என்ற நிறைவுடன்.. நாமும் கிளம்புவோமாக..


.....................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்

எப்படி சொல்ல..? எங்கிருந்து சொல்ல..? இதுதான் என்னோட மனநிலையும் கூட.. முழுதாக ஒரு கதையை முடிக்கும் உணர்வு.. இன்னும் கூட எனக்கு சிலிர்ப்பு அடங்கலன்னு தான் சொல்லணும்.. இதுதான் என்னோட முதல் கதை.. எப்படி எழுதியிருக்கன்னு எனக்கே தெரியல.. ஆனா மனசு மட்டும் ரொம்ப நிறைஞ்சி போச்சி..
உங்களோட கருத்துக்கள் எப்போதும் போல் என்னை ஊக்குவிக்க வரவேற்கப்படுகின்றன. நிறை.. குறைகளை சொல்லுங்கள்.. ப்ரண்ட்ஸ். வேற என்ன சொல்ல..? எப்போதும் போல் எனக்கு சப்போர்ட் செய்த உங்க எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றியை தவிர..
நன்றி.. நன்றி..
Superb story, very nice way of writing. நெகிழ்ச்சியான முடிவு அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top