என்னில் நிறைந்தவளே - 24

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 24

தேவி “சொல்லுங்க பிரகாஷ் என்ன வேலையாக என்னை பார்க்க வந்திருக்கிங்க உங்களுக்கு வீடு கட்டி கொடுக்கனுமா என எதுவும் தெரியாதது போல் கேட்க”

பிரகாஷ் “நீ என்மீது கோவமாக இருப்பாய் என்று தெரியும் தேவி இருந்தும் நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன். எனக்கு எதுக்கு தேவி வீடு உன்னுடைய வீட்டில் எனக்கு ஒரு இடம் தரமாட்டாயா ஆனால் நான் வந்தது என்று அவன் வந்ததற்கான காரணத்தை கூறினான்”

அனிதா “பாத்து பேசு பிரகாஷ் இது எங்களுடைய அலுவலகம்” என அவன் மீது உள்ள எரிச்சலில் பதில் கொடுத்தாள்

தேவி அவன் வீட்டில் இடம் கிடைக்குமா என கேட்டதற்கு ஒரு இகழ்ச்சி புன்னைகையை சிந்தினாள் பின் “நாளையில் இருந்து வேலை ஆரம்பம் ஆகிவிடும் நீங்க நேராக சைட்டிற்கு வந்திதிடுங்க பிரகாஷ்”

பிரகாஷ் “ஏன் தேவி நீ கூட்டி செல்ல மாட்டாயா”

தேவிக்கு அவன் பேசுவது கோவத்தையும்,எரிச்சலையும் தந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் “இல்லை பிரகாஷ் எனக்கு மற்ற சைட்டில் வேலை இருக்கு அனிதா நாளை உங்களுடன் வேலை நடக்கும் இடத்திற்கு வருவாள்”

பிரகாஷ் “இத்தனை வருடம் பார்க்கவில்லை என கோவத்தில் இருக்கா போல அதை முதலில் சரி செய்வோம் எப்படியும் வெளியில் பெண் பார்த்தால் இவ்வளவு சொத்துகளுடன் பெண் கிடைக்குமா” திருமணம் செய்துகொண்டு முன்பை போல் தன் பின்னால் சுற்றுமாறு மாற்றிவிடுவோம் என தேவியின் இப்போதைய நிலை தெரியாமல் தன்னுள்ளே திட்டங்களை வகுத்து கொண்டிருந்தான்

தேவியை நாளை திரும்ப சந்தித்து அவளின் மனதை முன்புபோல் மாற்றலாம் என்று அங்கிருந்து விடைபெற்று செல்ல அவன் சென்றவுடன்

அனிதா “உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கு தேவி அவனை உட்கார வைத்து பேசி கொண்டிருக்க அவன் உனக்கு செய்தவையெல்லாம் மறந்துவிட்டதா”

தேவி “எதுவும் கூறாமல் அனிதாவை பார்த்து புன்னகைத்தாள்”

அனிதா “நீ நடந்துகொள்ளும் முறை எனக்கு புரியவுமில்லை, பிடிக்கவுமில்லை” என சொல்லி அங்கிருந்து சென்றுவிட்டாள்

அவள் சென்றதும் தேவியின் கவனம் தருணின் புறம் திரும்பியது. தருணோ எரிமலையின் சீற்றத்துடன் கண்களில் அனல் பறக்க தேவியை முறைத்து கொண்டிருந்தான்

தேவி “போச்சு தேவி இவன் வேற ரொம்ப கோவமாக இருக்கான்” என அவள் நினைக்கும் போதே சோபாவில் இருந்து எழுந்த தருண் தேவியை நோக்கி தனது அழுத்தமான காலடியுடன் நெருங்கினான்

இப்பொழுது எதுக்கு கிட்டவரான் ஒருவேளை அடித்து விடுவனோ” ஆனா தேவி நீ யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று சொல்லுவ இப்பொழுது இவனை பார்த்து இப்படி பயப்படுகிறாய் என அவளுடைய மனம் அவளை கேலி செய்ய அதை புறம்தள்ளி தேவி தருணை பார்த்தாள்

தருண் அவளின் அருகே வந்து அவள் அமர்ந்திருந்த இருக்கையின் இருபுறமும் கைகளை வைத்து அவள் எழாதவாறு செய்ய அவனுடைய செயல்களையே கண் இமைக்காது பார்த்து கொண்டிருந்தாள் தேவி

தருண் அவளின் அருகே குனிந்து அவளை நேர் பார்வை பார்த்தான்

தேவி ஒருவாறு தைரியத்தை திரட்டி Mr.விஜய் என்ன செய்றிங்க முதலில் கையை எடுங்க

தருண் “மிகவும் நக்கலாக மேம் என்ன செய்கிறேன் என தெரியவில்லையா இல்லை தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிங்களா”

தேவி “என்ன சொல்ல வரிங்க Mr.விஜய்”

தருண் “ஏன்டி நான் மட்டும் உனக்கு Mr.விஜய் அவன் மட்டும் பிரகாசா அப்படியே சிரித்து பேசிகிட்டு இருக்க அவனிடன். உனக்கு என்னை பார்த்தால் எப்படி தெரியுது நான் உன்னை விரும்புவது உனக்கு தெரியாது”

தேவி “எதுவும் பேசாமல் அமைதிகாத்தாள்”

தருண் “உன்னுடைய அமைதியே பதில் சொல்கிறது உனக்கு தெரியும் என்று. இப்பொழுது பேசுடி இவ்ளோ நேரம் Mr. விஜய் என்று கூப்பிட்ட இப்ப கூப்பிடு பார்க்கலாம்”

தேவியும் அவன் தன்னை உரிமையுடன் டி போட்டு அழைப்பதை நினைத்து மகிழ்ந்தாள் பின் தருணை நோக்கி “நீ எப்பொழுது விஜய் என்னை விரும்புவதாக என்னிடம் கூறினாய் அதுவும் இல்லாமல் நீ என்னுடைய PA அதனால் உன்னை Mr.விஜய் என அழைத்தேன் இதில் என்ன தவறு உள்ளது”

தேவி பேச பேச தருணின் கோவம் எல்லைகடந்தது நேராக அவளுடைய கண்களை பார்த்து “என்னடி சொன்ன நான் உன் PA வா ஆமாடி நான் உன்னுடைய personal assistant தான் அதுவும் உனக்கு மட்டும்தான்.

உன்னுடைய personalலில் தலையிட எனக்கு மட்டுமே உரிமை உள்ளது

அவன் அவ்வாறு கூறவும் தேவிக்கு வானத்தில் பார்ப்பதை போன்ற உணர்வை தந்தது அது அவளுடைய முகத்திலும் பிரதிபலித்தது

இவனோ அவள் என்ன மாதிரி உணர்கிறாள் இவன் சொன்னதை கேட்டு என காணாது அவளை பார்த்து “உன்னை இவ்வளவு நாட்கள் விட்டு வைத்தது என்னுடைய தப்புடி அன்று நீ போதையில் உளருனியே என்னை பிடித்திருப்பதாக அன்றே உன்னை தூக்கிக்கொண்டு போய் தாலிகட்டிருக்க வேண்டும்

எதோ உன் மனதை உறுத்துகிறது அது தெளிவடைந்து நீயாக என்னிடம் வருவாய் என நினைத்து சும்மா இருந்தேன் பார் என்னை சொல்லணும்

தேவி “நாம எப்ப இவனை விருப்புவதாக இவனிடம் கூறினோம்” என்ற சிந்தனையில் இருக்க அதை கலைக்கும் விதமாக அவளில் அறையின் கதவு தட்ட பட தருண் அவளிடம் இருந்து விலகி எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்தான்

தேவி அனுமதி அளிக்க உள்ளே வந்த ரமேஷ் அமைதியாக இருவரும் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதையும் தருணின் கைகளில் எந்த பையில்களும் இல்லாமல் இருப்பதை அறிந்து எதோ நிகழ்ந்துள்ளது என யூகித்து மேம் நீங்க கேட்ட அக்கோண்ட்ஸ் பற்றிய விவரங்கள் இதில் உள்ளது என ஒரு கோப்பை வைத்து விட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறினான்

ரமேஷ் உள்ளே வந்ததும் தன்னை சிறிது நிதான படுத்திகொண்டன் தருண்

அவன் சென்றதும் தேவி “Mr.விஜய் என வழக்கம் போல் அழைக்க”

தருண் அவளை முறைத்து “இன்னொரு முறை நீ என்னை Mr.விஜய் என்று அழைத்தால் நடக்கும் சேதாரத்திற்கு நான் பொறுப்பில்லை” என அவளின் உதடுகளை பார்த்து கொண்ட கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்

தேவி “ஒரு Mr போட்டதற்கு என்ன கோவம் வருது இவனை கட்டிக்கொண்டு நான் என்ன பாடுபட போறேனோ தெரியவில்லை” என எண்ண அவள் நினைத்ததை உணர்ந்து வர வர இவனால் நீ ரொம்ப கெட்டு போய்விட்ட தேவி என தன் தலையில் தானே அடித்து கொண்டாள்

ஒரு மாதம் கடந்தும் பிரகாசினால் தேவியை தனிமையில் சந்திக்கவும் தனது திட்டத்தில் முதல் அடியை கூட எடுத்து வைக்க முடியவில்லை. எடுத்து வைக்க முடியவில்லை என்பதைவிட தருண் அதை செயலாற்ற தடையாக இருந்தான்.

நிறைவாள்.................

Hai friends I am come with next update படித்து எப்படி இருக்கு என சொல்லிவிட்டு போங்க அப்படியே ஒரு லைக்கையும் பட்டுவிட்டு சென்றிர்கள் என்றால் me so happy
 

mila

Writers Team
Tamil Novel Writer
prakasha devi oru vali pannuvala?? vijay pannuvana?? rendu perum serthu vachu seivangala??:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top