என்னில் நிறைந்தவளே - 22

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 22

நாட்கள் கடந்து மாதங்களாகி, மாதங்கள் வருடங்களில் வந்து நின்றது தேவி இறுதியாண்டு படிப்பை முடிக்க ப்ராஜெக்ட் வேலை மட்டுமே இருந்தது

பிரகாஷும் அவனுடைய இறுதியாண்டில் இருந்தான்.பிரகாஷ் சொல்வதை பட்டுமே தேவி செய்து அவளின் தன்மையை முழுமையாக இழந்திருந்தாள்

அனிதாவிற்கு அது நன்றாகவே தெரிந்தது அவளாலும் தேவியிடம் கூற முடியவில்லை தேவியின் நடவடிக்கைகளில் சிறிது மாற்றம் வந்த போதே அனிதா அவளிடம்”தேவி நீ முன்புபோல் இல்லை நிறைய மாறிவிட்டாய்”

தேவி “தெரியும் அனிதா நான் இப்படி இருப்பது பிரகாசுக்கு பிடித்து இருக்கிறது அவனின் மூலம் நான் இழந்த அன்பு எனக்கு கிடைக்கும் என்னும்போது அதற்காக என்னை நான் மாற்றி கொள்வதில் தவறில்லை”

தேவி அவ்வாறு கூறும்பொழுது அணிதாவினாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை தேவியின் செய்கைகளை பார்த்து அனிதா மிகவும் கவலை கொண்டாள் அனைத்தையும் மாற்றி கொண்டாலும் படிப்பின் மீது இருக்கும் தனது கவனத்தை சிதறவிடவில்லை அது மட்டுமே அப்பொழுது நிம்மதி அளித்தது அனிதாவிற்கு

கல்லூரி முடிவடைய இரண்டே நாட்கள் இருந்த நிலையில் பிரகாஷின் நண்பர்களில் ஒருவன் தேவியை சந்திக்க வந்தான் அவன்தான் முன்பு இதுயெல்லாம் வேண்டாம் என தேவிக்காக பேசியது.பிரகாஷின் நடவடிக்கைகள் அவனுக்கு எதிராக நிற்க செய்தது அவனுடைய நண்பனை

தேவியை சந்திக்க வந்தவன் அவளிடம் “தேவி உங்களிடம் நான் கொஞ்சம் பேசணும் இப்பொழுது நீங்க freeயா இருக்கிங்களா”

தேவியும் அவனை பிரகாசுடன் பார்த்து உள்ளதால் அவனிடம் “என்ன பேசணும் அண்ணா சொல்லுங்க”

அவன் “என்னை அண்ணா என்று ௯ப்பிட்டதற்கு தேங்க்ஸ் மா ஆனா நான் சொல்ல வந்த செய்தியை கவனமாக கேட்டு முடிவு எடு தேவி”

தேவி “பீடிகை போடாமல் என்ன என்று சொல்லுங்கள்”

அவன் “சிறிது தயங்கி விட்டு பின் நீ பிரகாசை விட்டு விலகிவிடு தேவி அவன் உன்னை ஏமாற்றுகிறான் எங்க மற்ற நண்பர்களுடன் சவால்விட்டான் உன்னை அவனின் பின்னே சுற்ற வைப்பதாக, அதனால்தான் உன்னை காதலிப்பதாக கூறினான்”

தேவி அவன் கூறியதை சிறிதும் நம்பாமல் நீங்க ஏன் இதை முன்பே என்னிடம் சொல்லவில்லை அதோடு இப்பொழுது வந்து சொல்ல காரணம்”

அவன் “முன்பே சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை முதலில் நீ அவனை திருப்பியும் பார்க்க மாட்டாய் என எண்ணினேன் அவன் உன்னை லேபிற்கு அழைத்து பேசிய அன்று நான் விடுமுறை எடுத்து இருந்தேன் இல்லையென்றால் அன்றே உன்னிடம் அனைத்தும் சொல்லி தடுத்து இருப்பேன். அதன்பின் உன்னை தனியாக சந்திக்கும் சமயம் கிடைக்கவில்லை சமயம் கிடைக்கவில்லை என்பதை விட அப்படி ஒரு சந்திப்பு நிகழ பிரகாஷ் விடவில்லை”

தேவி இப்பொழுதும் அவனை நம்பாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.அவன் பிரகாஷின் மீது உள்ள பொறாமையால் இவ்வாறு சொல்வதாக நினைத்துகொண்டாள்

அன்று கல்லூரியின் கடைசி நாள் தன்னுடைய ப்ராஜெக்ட் வைவாவை முடித்து வெளியில் வந்த தேவி அனிதாவிடம் “அனிதா நான் சென்று பிரகாசை பார்த்துவிட்டு வருகிறேன்”

இவள் வேண்டாம் என்றாலும் கேட்டமாட்டாள் என்று அறிந்த அனிதா தான் hostel செல்வதாக கூறி அங்கிருந்து சென்றுவிட்டாள்

தேவி பிரகாசை பார்க்க சென்றாள் அங்கு சென்றவளுக்கோ பேரதிர்ச்சி காத்திருந்தது

தேவி பிரகாசை பார்க்க அவனிருக்கும் இடத்தை அடைய அவன் தனது நண்பர்களுடன் பேசிகொண்டிருந்தான் அதை கண்ட தேவி அவன் வருவரை காத்திருக்கலாம் என்று நினைத்து அருகில் உள்ள மரத்தின் அடியில் நின்றாள் அவள் இருக்கும் இடத்தில் இருந்து அவர்கள் பேசுவது அவளுக்கு தெளிவாககேட்டது

தேவியிடம் பிரகாசை பற்றி கூறியவன் தேவி தங்கள் பேசுவதை கேட்கும் தொலைவில் நின்றிருப்பதை கண்டு பிரகாஷ் இன்னும் அவள் வந்ததை பார்க்கவில்லை என்பதையும் அறிந்து இந்த சமயத்தை பயன்படுத்தி பிரகாசின் வாயிலாகவே உண்மையை தேவிக்கு உணர்த்திட வேண்டும் என்று நினைத்தான்

தெரிந்தே ஒரு பெண்ணை ஏமாற்ற துணைபோவது தவறு என்று எண்ணி பிரகாஷிடம் “பிரகாஷ் இன்றோடு நமக்கு கடைசி நாள் தேவியிடம் என்ன சொல்ல போகிறாய்”

தேவி தனது பெயரை அவன் எதற்கு இப்பொழுது எடுத்தான் என அறிந்துகொள்ள அவர்களின் உரையாடலை கவனிக்க ஆரம்பித்தாள்

மற்ற நண்பர்களும் ஆமா பிரகாஷ் அவளிடம் உண்மையை சொல்ல போகின்றாயா இல்லை சொல்லாமல் தொடரபோகிறாயா”

தேவி “எந்த உண்மை என நினைத்து என்னும் அவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிக்கலானால்”

பிரகாஷ் “நானே உங்களிடம் சவால் விட்டதற்காக மட்டுமே அவளிடம் காதலிப்பதாக கூறினேன் அவளின் மீது எனக்கு எந்த விருப்பமும் இல்லை ஆனால் நான் அவளிடம் எதுவும் சொல்ல போவதில்லை இன்று மட்டும் நான் இங்கு இருப்பேன் நாளை இரவு பெங்களூர் செல்கிறேன்

அங்கு சென்று வேலையில் சேர்ந்ததும் அவளின் தொடர்புகளை முழுவதுமாக துண்டித்துவிடுவேன்”

இதை அனைத்தும் கேட்ட தேவி அதே இடத்தில் கல்லாய் சமைந்து நின்றாள். அடுத்து என்ன செய்வது என்றுகூட தெரியாமல் அவள் நின்ற இடத்திலே அமர்ந்திருந்தாள்

அவர்கள் அனைவரும் சென்றபின்பு பிரகாசின் நண்பன் தேவியிடம் வந்து “தேவி இப்பொழுதாவது நான் சொன்னவை உண்மையென்று நம்புகிறாயா பிரகாஷ் அவன் வாயிலாகவே சொல்லிவிட்டான் இனிமேல் ஆவது அவனை நம்பிகொண்டு இருக்காமல் உன்னுடைய வழியை பார்த்துகொள்”

அவன் பேசியது எதுவும் தேவியின் காதில் விழவே இல்லை பிரகாஷ் சொல்லி சென்ற வார்த்தைகள் மட்டுமே அவளின் காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொளித்து கொண்டிருந்தது

hostel அறையில் பிரம்மை பிடித்தவள்போல் அமர்ந்திருந்தாள் தேவி எப்படி அந்த இடத்தில் இருந்து இங்கு வந்தாள் என்பது அவளிடம் கேட்டால் அவளுக்கே தெரியாது. வார்டனை பார்த்துவிட்டு வந்த அனிதா தேவி ஏதோ பித்துபிடித்தவள் போல் அமர்ந்திருப்பதை கண்டு தேவி,தேவி என ௯ப்பிட்டாள் அதற்கு எந்த பிரதிபலிப்பும் இல்லை

அனிதா அவள் அசையாது இருப்பதை பார்த்து தேவியின் அருகில் சென்று அவளை உலுக்கினாள் அதற்கும் எந்த அசைவும் அவளிடம் இல்லை என்றவுடன் தேவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்

அனிதா அடித்ததில் சுயவுணர்வு பெற்ற தேவி அனிதா தனது அருகில் அமர்ந்திருப்பதை கண்டு அவளை கட்டிகொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்

அனிதாவோ என்ன நடந்தது எதற்கு அழுகிறாள் என்று தெரியாமல் அவளின் முதுகை வருடிகொடுத்தாள். “எனக்கு தெரிந்து இந்த நான்கு வருடங்களில் இவள் அழுது நான் பார்த்ததே இல்லை இப்பொழுது அழும் அளவிற்கு என்ன நடந்தது”

தேவியின் அழுகை குறையவும் அவளை அருகில் அமரவைத்து குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தாள் தேவி அதை பருகியதும் “என்ன நடந்தது தேவி எதற்கு அழுதுகொண்டிருக்கிறாய்”

தேவி “பிரகாஷின் நண்பன் தன்னிடம் கூறியது முதல் அவள் அதை நம்பாமல் பிரகாசை பார்க்க சென்றது பின் அவன் வாயிலாகவே தன்னை ஏமாற்றியதை அறிந்து கொண்டது வரை அனைத்தையும் கூறினாள்”

இதை கேட்ட அனிதா கோவம் ஏற மீண்டும் தேவியின் கன்னத்தில் ஒரு அரையை பரிசாக கொடுத்தாள்

தேவியோ எதற்கு தன்னை அடித்தால் என தெரியாமல் அனிதாவையே பார்த்துகொண்டு அவள் அடித்த கன்னத்தை கைகளில் தாங்கி அமர்ந்திருந்தாள்

அனிதா “என்ன பார்க்கிறாய் எதற்கு அடித்தேன் என்று யோசிக்கிறாயா அவன் உன்னை ஏமாற்றியது தெரிந்து அங்கேயே அவனின் சட்டையை பிடித்து நாலு அறைவிடாமல் இங்கு வந்து அழுதுகொண்டிருக்கிறாய் இதுவே பழைய தேவியை இருந்திருந்தால் அங்கேயே அவனை நன்றாக திட்டிவிட்டு வந்திருப்பாய் அதற்குதான் இந்த அடி”

தேவி “அவன் ஏமாற்றியதற்கு ஒன்றும் அழவில்லை இப்படி பட்ட ஒருத்தனை நம்பினேனே என்று என்னை நினைத்து எனக்கே அவுமானமாக உள்ளது. அதுவும் இல்லாமல் என் வாழ்க்கையில் என்மீது அக்கறைகாட்டி தவறு செய்தால் கண்டித்து வழிகாட்ட யாருமே இல்லை என நினைக்கும்போது தானாகவே கண்ணீர் வருகிறது என்று அழுகையுடனே கூறிவிட்டு” அப்படியே தரையில் சுருண்டு படுத்து கொண்டாள்

சிறிது நேரத்தில் hostelலில் வேலை பார்க்கும் ஒருவர் வந்து தேவியை பார்க்க அவளுடைய அப்பா வந்துள்ளதாக கூறி சென்றார்.

நிறைவாள்.................

Hai friends I am back அடுத்த எபி போட்டுவிட்டேன் படித்து எப்படி இருக்கு என்று சொல்லிவிட்டு போங்க friends அப்பொழுதுதான் நான் happy ஓகே வா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top