எனை எரிக்கும் ஈர நினைவுகள்! - (teaser)

Vishnu Priya

Well-Known Member
#1
முழு எபிசோட் விரைவில்....

எனை எரிக்கும் ஈர நினைவுகள்!! ஒரு முன்னோட்டம்..

(அநேகமாக நான் ரியல் லைப் செலிப்ரிட்டீஸ், கேரக்டர்ஸை கதைகளில் புகுத்துறது வழமை.. அந்த வகையில் இந்த முறை.. இந்த கதையில் கெஸ்ட் ரோல் பண்ண போறாரு.. 'கீழடி அகழ்வாராய்ச்சிக்குப் பொறுப்பான டாக்டர். அமர்நாத் ராமகிருஷ்ணன்.. என்ட் கீழ்க்காணும் உரையாடலில் வர்ற அனைத்துக் குறிப்புக்களும் கீழடியில் கிடைத்த சான்றுகள் மற்றும் உண்மைகள் தான்)

வாசிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க.. அப்போ தான் சீக்கிரமே எபி வரும்.
*******************************************************************************************
யாழினியோ தன் கையிலிருந்த பேப்பர்ஸை அவர் முன்னே காட்டி,

“என்ன சார் இது..? கால்வாய்கள், கிணறுகள், பாதைகள்னு வியக்க வைக்குற பல விஷயங்கள் இன்னும்... இந்த அகழிக்குள் புதைஞ்சிருக்கு.. இப்போ போய் நிறுத்த சொல்லி ஆர்டர்??.. உங்களை வேற அஸாம்க்கு இடமாற்றம் பண்ணியிருக்குறதா ஃபேக்ஸ் வந்திருக்கு.. என்ன சார் இது?” என்ற அவள் கேள்வியின் ஆதங்கத்தின் இறுதியில் அவளது கண் மை அஞ்சனம் தீட்டா விழிகளின் ஓரம் இலேசாக நீர் துளிக்கவாரம்பித்தது.

யாழினிப் பெண்ணின் ஆதங்கம், கவலை, கோபம் எல்லாம் அவருக்குள்ளும் இருக்கத் தான் செய்தது. யாழினி இளரத்தம் அல்லவா?? ஆதலால் சீறுகிறாள்!!

இவர் அனுபவ முதிர்ச்சியாளர் அல்லவா?? ஆதலால் புன்முறுவல் பூத்தார்.

தன் உணர்ச்சிகள் அத்தனையையும் ஒற்றைப் புன்முறுவலுக்குள் மறைத்து விட்டு, யாழினியைப் பார்த்தவர் சொன்னார்,

“என்ன பண்றதுமா?? நாங்க ஒண்ணு நினைச்சோம்.. கடவுள் ஒண்ணு நினைக்குறான்..” என்று.

அதைக் கேட்டு அவளது விழிகள் அகல விரிந்தன.

பிற நேரமாயிருந்தால் பேராசிரியரின் நிதானத்தைக் கண்டு அவள் மெய்மறந்து நின்றிருக்கக் கூடும்!!


ஆனால் சூழ்நிலை தான் அதற்கு கை கூடவில்லை.

“ஸோ.. இதை ஸ்டாப் பண்ண போறீங்களா? சிந்து நாகரிகத்தை விட பழமையான நாகரிகம்!!.. இந்தியாவின் நம்ம தமிழ் நாட்டில் இருக்குன்றதுக்கான ப்ரூஃப் சார் இது..

இதை நிறுத்தணுமா? கால்வாய்கள், கிணறுன்னு இந்த ஐம்பது சென்ட்..நிலத்திலேயே இத்தனை ஆர்ட்டிஃபேக்ட்ஸ் கிடைச்சிருக்கு.. முழுசா நூத்திப்பத்து ஏக்கர்லேயும் பண்ணோம்னா இன்னும் ஆர்ட்டிஃபேக்ட்ஸ் கிடைக்கும் சார்..

ஆப்கானிஸ்தானில் இருந்து சூதுபவளம் பொறிக்கப்பட்ட ஆபரணம்!! ரோமில் இருந்து வந்த மண்பாண்டம்..!! சாயப்பட்டறைகள்!! னு அந்தக்காலத்திலேயே நாகரிகமா வாழ்ந்திருக்கான் தமிழன்னு காட்டுறதுக்கான ஆதாரம் சார் இது..”

என்று உணர்ச்சி வசப்பட்டு, மூச்செடுக்கக் கூட இடைவெளியே அற்று பேசிக் கொண்டே போனவள்,

இறுதியில் ஒரு கட்டத்தில் நிறுத்தினாள்; தன் பேராசிரியரின் முகம் பார்த்தாள்;

பின்பு மிக மிக ஒடிந்து போன மெல்லிய குரலில் சொன்னாள்,
“இந்த அகழ்வாராய்ச்சியின் முடிவில்.. இந்திய சரித்திரமே ம்மாறும் சார்..!!” என்று.

அதுக்கும் அவரிடமிருந்து சிறு புன்முறுவலே வந்தது.

“அது தான்மா அவங்க பிரச்சினையே!”- இத்தனை சதிராட்டத்துக்கும் பின்னாலுள்ள முதன்மைக் காரணத்தை எளிமையாக சொன்னார் பேராசிரியர்.

விரைவில்....
 

Latest profile posts

Sorna santhanakumar sis waiting for ur update
விட்டு செல்லாதே கண்மணியே அடுத்த வாரத்தில் இருந்து தொடரும் ஃப்ரெண்ட்ஸ்.....எக்ஸாம் and ஹெல்த் problemனால இந்த லேட்...மன்னிக்கனும் தோழமைகளே !
hiii friends... manjal vaanam konjam megam episode 2 posted.. read and share ur comments.. :) :)
எனை எரிக்கும் ஈர நினைவுகள்! 12 போட்டாச்சு. படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை என் கூட பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.

Sponsored

Recent Updates