Vidya Venkatesh
Well-Known Member
வாவ்! அழகிய விளக்கம்! எனக்கு மட்டுமல்ல; கதை எழுத ஆர்வம் கொண்ட ஒவ்வொருவருக்கும் பயனுள்ள கருத்து பதிவு.ஆரம்பத்திலேயே கதையில் ஒரு முடிச்சு
அந்த முடிச்சியை எவ்வாறு,
அவிழ்க்கும் விதம்தான் சுவாரஸ்யம் அடுத்து என்ன என்ற ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கும் கதை...
படிப்பவர்களை தூண்டச் செய்யும்....
மெல்லிய காதல் கதை
குடும்ப கதை.....
நட்புக்கதை....
துப்பறியும் கதை..... இதை மையமாகக் கொண்டு தான் பல கதைகள் இங்கு எழுதப்படுகிறது அதில் நிகழ்வுகளும் சூழ்நிலைகளையும் அதை கையாளும் விதத்தை எவ்வாறு விவரிக்கிறார்கள் என்பதிலேயே கதையின் சுவாரஸ்யமும் அழுத்தமும் எண்ணங்களை விதைத்துச் செல்லும் .....
ஒரு கதை என்ன செய்து விட முடியும் நம்மை அழ வைக்க முடியும்
சிந்திக்க வைக்க முடியும்
அதில் உள்ள கதாபாத்திரங்களுடன் இணைத்துக் கொள்ளச் செய்யும்
உருகச் செய்யும்
சூழ்நிலைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று தெளிவை ஏற்படுத்த செய்யும்
பொழுது போக்காக இருந்தாலும் அதில் ஒரு பொது கருத்து இருக்கத்தான் செய்யும் இவை அனைத்தும் இருக்கும் கதைகள் நிச்சயம் வெற்றி அடையச் செய்யும்.....
நீங்கள் சொன்ன பெரும்பாலான விஷயங்களை என்னால் முடிந்த அளவிற்குக் கதையில் இணைத்துள்ளேன் என்று நம்புகிறேன். எனது அத்தனை கதைகளையும் படித்து, ஆத்மார்த்தமான கவிதை கருத்துக்களைப் பதிவிட்ட உங்கள் அன்பு எதற்கும் ஈடாகாது.
தொடர்ந்து கதைகள் படித்து, நிறைகுறைகளைப் பகிருங்கள் நட்பே!!!