Vidya Venkatesh
Well-Known Member
ஓம் சாயிராம்
அன்புள்ளங்களே!
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, இத்தளத்தில் கதைகள் எழுதி வரும் என்னை எத்தனை பேர் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியாது.
என் பெயர் வித்யா வெங்கடேஷ். இதுவரை இரண்டு முழு நாவல்களும், சில சிறுகதைகளையும் இத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன். தற்போது "கோதையின் பிரேமை" என்ற புதுக்கதை Ongoingல் பதிவிட்டு வருகிறேன்.
எழுத எழுத, வாசகர்கள் நம்மை அடையாளம் கண்டுகொண்டு, நம் கதைகளைத் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பார்கள் என்று தான் ஒவ்வொரு எழுத்தாளரும் நினைப்பார். நானும் அதற்கு விதிவிலக்கில்லை.
ஆனால் என் விஷயத்தில் எல்லாம் தலைகீழாக மாறுவது போல ஒரு உணர்வு. முதல் கதைக்குக் கிடைத்த வரவேற்பு கூட, அதற்குப் பின் பதிவிட்ட கதைகளுக்குக் கிடைக்கவில்லை. நாளுக்கு நாள், அத்தியாயத்திற்கு அத்தியாயம், வாசகர்கள் லைக்ஸ் & கமெண்ட்ஸ் குறைந்து கொண்டே வருகிறது.
என் எழுத்தில் ஏதாவது குறை இருந்தால், அதை என்னிடம் வெளிப்படையாகக் கூறுங்கள் தோழமைகளே! திருத்திக் கொள்ள வேண்டிய ஒன்றாக இருந்தால் நிச்சயம் திருத்திக்கொள்வேன்.
உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களே, எழுத்துலகில் கத்துக்குட்டியான என்னைப் போன்றவர்களின் எழுத்துப் பணி மேம்பட பேருவகையாக இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.
உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
வித்யா வெங்கடேஷ்.

Last edited: