எந்தன் காதல் நீதானே P2

Advertisement

Ramya Rajan

Well-Known Member
திருமணத்திற்கு பத்திரிகை அடித்து வந்துவிட்டது. அதை குல தெய்வ கோவிலில் வைக்க இரண்டு குடும்பமும் பொள்ளாச்சி அருகில் இருக்கும், அவர்கள் பூர்வீக ஊருக்கு சென்றனர்.
வேலை இருக்கிறது என சொல்லி கரன் வரவில்லை. வெண்ணிலாவை மட்டும் தனியே வீட்டில் விட முடியாது என அவளையும் அழைத்துக் கொண்டு இரு குடும்பமும் சென்றனர். அப்படியே திரும்பி வரும் வழியில் அவர்கள் சொந்த ஊரில் இருக்கும் உறவினர்களுக்கு பத்திரிகை வைத்து விட்டு வந்து விடலாம் என எண்ணம்.

********************************************************************************************************************

ஒரு நாள் கிரைண்டர் வேலை செய்யவில்லை. அதனால் அத்தை உரலில் மாவு ஆட்டும் போது, நான் தள்ளி விடுறேன் என வெண்ணிலா ஆசைப்பட்டுக் கேட்க, அமுதாவும் சரியென்றார். அப்போது அவள் ஏழாம் வகுப்பில் இருந்தாள். அமுதா அரைக்க, வெண்ணிலா அரிசியை தள்ளி விட்டுக் கொண்டிருந்தாள். அப்போது அவள் தெரியாமல் விரலை உரலில் கொடுத்து விட, அமுதாவும் கவனிக்காமல் அவள் விரலை நசுக்கி விட்டார்.
வெண்ணிலா வலியில் துடிக்க, அமுதா தண்ணீர் இருந்த பாத்திரத்தில் அவள் கையை விட சொல்லிக் கொண்டிருந்தார். அந்த நேரம் வெளியில் இருந்து வந்த ஜெய், என்ன நடந்தது என கேட்டு தெரிந்து கொண்டவன், வெண்ணிலாவின் கண்ணில் கண்ணீரை பார்க்கவும் தாங்க முடியாமல், “அதுதான் வீட்ல கிரைண்டர் இருக்கு இல்ல... பிறகு ஏன் இதுல ஆட்டி, அந்தப் பிள்ளை கையை நசுக்கிநீங்க. இது இருந்தா தானே ஆட்டுவீங்க.” என்றவன், எல்லோரும் கத்த கத்த, ஆட்டும் குழவியை தூக்கி சென்று பின்கட்டில் போட்டு விட்டு வர... அவன் அடிக்கும் கூத்தை பார்த்து, வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு ஒரே சிரிப்பு.

**********************************************************************************************************************

மாமன் மகள்களோடு வெண்ணிலா வீட்டை சுற்றி பார்த்து விட்டு ஹாலில் வந்து உட்கார, அப்போது வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டு வெண்ணிலா ஆவலாக வாசலைப் பார்க்க, அவள் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல் வந்தது ஜெய் ஆனந்தன் தான்.
அவனைப் பார்த்ததும் வரவேற்கும் விதமாக மலர்ந்த முகத்துடன், வெண்ணிலா எழுந்து நிற்க, அவளைப் பார்த்தும் கண்டுகொள்ளாது ஜெய் அவளைக் கடந்து செல்ல, அடிவாங்கிய குழந்தை போல வெண்ணிலாவின் முகம் மாறி விட்டது.
அவள் மீண்டும் சோபாவில் அமர்ந்து கொள்ள, வீட்டினருக்கே சங்கடமாக இருக்க, ஜெயந்தி மட்டும் சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
ஜெய் உணவைக் கூட மாடிக்கு வரவழைத்து உண்டான். பாட்டி வீடென்றால் பாட்டிக்கு பிறகு நியாபகம் வருவது ஜெய் தான். அவன் தன்னை பார்க்க கூட விரும்பாதது வெண்ணிலாவுக்கு மிகுந்த வலியை கொடுத்தது.

***************************************************************************************************************

“இன்னைக்கு என்னை இங்க வர விட்டதே பெரிசு. நான் ரொம்ப அசையா வந்தேன். ஜெய் அத்தான் என்னோட பேசவே இல்லை. அது தான் எனக்கு வருத்தம். இனி நான் எப்ப இங்க வருவேன்னு கூட தெரியாது.” சொல்லும் போதே வெண்ணிலாவின் கண்கள் கண்ணீரை சிந்த,
“அவனுக்கு உன் மேல மட்டும் இல்லை. எங்க எல்லார் மேலும் கோபம்.”
“ஏன்?”
“இனி தெரிஞ்சு ஒன்னும் ஆகப்போறது இல்லை. நீ சந்தோஷமா போய்ட்டு வா...” என அமுதா சொல்லும் போதே....
“இவ எங்கப் போனா?” என கற்பகம் வர... வெண்ணிலா கண்ணீரை வேகமாக துடைத்து விட்டு வெளியே சென்றாள்.
பெரிய விழிகள் சிவந்து, அவள் அழுத சுவடு நன்றாக தெரிய, யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் சென்று காரில் ஏறினாள். கார் கிளம்பும் போது கூட, எங்காவது ஜெய் தென்படுகிறானா என அவள் விழிகள் தேடி அலைந்தது.
 

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா இது ரொம்ப கோபமா இருக்கான்.......
வீட்டுக்கு வந்தவளை பார்க்கவே இல்லை.......

உரலுக்குள்ள mostly எல்லோரும் கையை விட்டிருப்பாங்க........
ஆனாலும் யாரும் தூக்கி போடலையே......
இவன் என்ன கடாசிட்டு போய்ட்டான்.......

கரண் பிடிச்சி கல்யாணம் பண்ணுறானா இல்லை அம்மாவுக்காகவா???
கல்யாணம் வரை வராமலே இருக்கட்டும்.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நானும்தான் எத்தனையோ தடவை அரிசி, பருப்பு தள்ளும் பொழுது அக்கா கையை நசுக்கிடுவாங்க
அக்காவின் கையையும் நான் நசுக்கியிருக்கேன்
ஆனால் யாரும் கிரைண்டர் வாங்கித் தரலைப்பா
ஹ்ம்ம்......எல்லோரும் வெண்ணிலா ஆக முடியுமா?
"விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்......."
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top