உறவுகள்

Advertisement

Sasireka

Member
மனிதனின் பிறப்பும் சரி
அதன் பிறகு வாழும் வாழ்க்கையும் சரி
கடைசியில் இறப்பும் சரி
உறவுகளைக் கொண்டே உறவுகளால் சூழ்ந்தே நடந்தேருகிறது. மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் உறவுகளை மையமாகக் கொண்டே நடக்கிறது. ஆக, உறவு என்பது நம் வாழ்வின் அச்சாணி. ஆம், அதைக் கொண்டே நம் வாழ்வில் நடக்கும் நல்லதும் கெட்டதும் கையாளப்படுகிறது.

ஆகவே, நாம் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா ? நாம் வாழ்வில் வெற்றி அடைய வேண்டுமா ? நம்மை வழி நடத்தும் குரு வேண்டுமா? ஆறுதலாக துணை வேண்டுமா?

என்ன வேண்டும் வாழ்வில் ,
அனைத்தையும் பெறுவாய்,
நல்ல உறவுகளால் சூழப்பட்டிருந்தால் !
ஆம் ! நீ யாரால் சூழப்படுகிராய் என்பதைப் பொறுத்தே, உன் வாழ்க்கையில் எதுவாக இப்போது இருக்கிராய் என்பது !!

ஆகவே, எப்போதும் நினைவில் கொள் ,
நல்ல உறவுகள் மட்டும் உன்னை கையாள வேண்டும் என்று ! பொருந்தாத உறவுகளை களைய வேண்டும் என்று !!
 

Daya

Well-Known Member
உண்மை. ஆனாலும், "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்பார்கள். எல்லா மனிதர்களிடமும் நல்லதும் கெட்டதும் கலந்திருக்கும். அதை நாம் அறிந்து, புரிந்து பார்த்துப் பழக வேண்டும்.
 

Sasireka

Member
உண்மை. ஆனாலும், "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்பார்கள். எல்லா மனிதர்களிடமும் நல்லதும் கெட்டதும் கலந்திருக்கும். அதை நாம் அறிந்து, புரிந்து பார்த்துப் பழக வேண்டும்.
Exactly.. it's true what you said.. we should know where to stop.. where to say NO.. where to invite.. where to avoid.. where to protect.. etc etc..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top