உறவால் உயிரானவள் teaser 5

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி teaser:geek::geek:

DLc9ycNV4AIsX3C.jpg

"இந்த கல்யாணம் நடக்க கூடாது" கவி ஆள் காட்டி விரலால் அவளையும், ஆதியையும் மாறி மாறி காட்டியவாறே சொல்லதனது இருகைகளையும் கோர்த்து முழங்கையை மேசையின் மீது ஊண்டி தாடையை புறங்கையில் மேல் வைத்து கவியையே கண் சிமிட்டாமல் மெளனமாக பாத்திருந்தான் ஆதித்யா."என்ன இவன் இப்படி சைட் அடிக்கிறான். கல்யாணம் பண்ண போற பொண்ணு என்ற என்னமோ!" ஆதித்யாவின் பார்வையால் ஒருநிலையில்லாமல் கவியின் மனம் தடுமாற "ஹலோ சார். நா சொன்னது புரிஞ்சுதா?""இப்போ எதுக்கு நம்ம கல்யாணத்த மட்டும் நிறுத்த சொல்லுற?" கோபம் கொஞ்சம் எட்டிப் பார்க்க ஆதித்யா கேக்க"ஒரே குடும்பத்துல அண்ணனையும், தங்கையையும் கல்யாணம் பண்ணுவதா தான் முடிவு பண்ணி இருக்கோம். மாப்புள நீங்க என்றால் கார்த்தி, என் உறவு மாறிடும்" ஆதித்யாவை குழம்பினாள் கவி."இங்க பாரு லயா சொல்றத தெளிவா சொல்லு""அன்னைக்கி ரெஸ்டூரண்ட்டுல உங்க கிட்ட என்ன சொன்னேன்""என்ன சொன்ன" ஆதி திருப்பிக் கேக்க"மறதிக்கு பொறந்த மன்மதனா இருக்கான். இவனையெல்லாம் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுத்தவங்கள சொல்லணும்" என்று முணுமுணுத்தவள் "என் அப்பா அண்ட் சித் அப்பா ஆச நானும், கார்த்திக்கும் கல்யாணம் பண்ணிக்கணும் என்கிறது, நானும் அவனும் திக் பிரெண்ட்ஸ் அதனால ஒரே குடும்பத்துல அண்ணன், தங்கையை நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு செய்திருக்கிறோம் னு சொன்னேனே""ஆமா சொன்ன""தக்காளிக்கு நீங்க மாமா மகன்னா என் கண்டிஷன் மீறின மாதிரி இல்ல. அதான் கல்யாணத்த நிறுத்த சொல்லுறேன்""கார்த்திக், ஆரு கல்யாணத்தையும் சேர்த்து நிறுத்தணுமா?""இல்ல இல்ல இல்ல..... அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறாங்களே! அந்த கல்யாணம் நடக்கட்டும். நம்ம கல்யாணம் நடக்க வேணாம்""புரியல ஏன் நம்ம கல்யாணம் நடக்க கூடாது""ஒரே குடும்பத்துல அண்ணனையும், தங்கச்சியையும் கல்யாணம் பண்ணா தான் எனக்கும், கார்த்திக்கும் பொறக்க போற குழந்தைகளை கல்யாணம் பண்ணி வச்சி எங்க அப்பாக்களுடைய ஆசையா நிறைவேத்தலாம்" முகம் கொள்ளா புன்னகையில் கவி சொல்ல மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான் ஆதித்யா."இவள பார்த்த அன்னைக்கே மனச பறி கொடுத்தது தெரியாம, அத உணரும் போது படிப்பு முக்கியமாக தோன இவளை தேடாம விட்டது தப்பா போச்சு. அதுக்கு பிறகு அப்பாவோட திடீர் மரணம், ஏகப்பட்ட பிரச்சினை தலைமேல் இருக்க கல்யாணமே வேணாம் னு இருந்த என்ன தேடி வந்து தரிசனம் கொடுத்து, வானதி மேடம் பொண்ணா அவதாரம் எடுத்து, கல்யாணம் கைகூடுற நேரத்துல கேட்ட போடுறாளே! இவள..." ஆதித்யா கவியை முறைக்கவும் முடியாமல், தலையில் கைவைத்து அவளையே பாத்திருக்க"ஹலோ எக்ஸ்கியூஸ் மீ... என்ன யோசிக்கிறீங்க?"

5a646cc9-5682-4287-8356-9297451935a0.jpg

:love::love::love::love::love:
 
Last edited:
#4
ஏங்கண்ணு கவிஇஇஇஇஇலயா?
எப்படி இம்புட்டு அறிவாஆஆஆஆ பேசுறே?
உன்னை இந்த வானதி பெத்தாங்களா?
இல்லை கடையில் ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா, கவி டியர்?
கலெக்டர் ஆவும் முன்னாடியே
கவிப் புள்ளையை எம்மெல்லே
பயங்கரமா சைட் அடிச்சிருப்பார்
போலவே, மிலா டியர்
:unsure::unsure::unsure:
 
mila

Writers Team
Tamil Novel Writer
#6
ஏங்கண்ணு கவிஇஇஇஇஇலயா?
எப்படி இம்புட்டு அறிவாஆஆஆஆ பேசுறே?
உன்னை இந்த வானதி பெத்தாங்களா?
இல்லை கடையில் ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா, கவி டியர்?
கலெக்டர் ஆவும் முன்னாடியே
கவிப் புள்ளையை எம்மெல்லே
பயங்கரமா சைட் அடிச்சிருப்பார்
போலவே, மிலா டியர்
:unsure::unsure::unsure:
முதலாம் சந்திப்பில் நாம் அறிமுகமானோமே!
இரண்டாம் சந்திப்பில் இதயம் கொடுத்தேன்! ஆதி பாட வேண்டியது காலம் செய்த சோதனையால் காவிய தேடாம விட்டுட்டான்...:):)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes