உறவால் உயிரானவள் P29

mila

Writers Team
Tamil Novel Writer
#1
image_default_171565ba5ddd1cc881.jpg

"ஆதி சீனுவை அடிச்சிட்டு பைக்குல போன ரெண்டு பேரையும் சீசீடிவி மூலம் கண்டு புடிச்சு போலீஸ் ஸ்டேஷன்ல வச்சிருக்கேன். கத்தியால் குத்தினவன் தான் கரும்பு காட்டுக்குள்ள புகுந்து எஸ் ஆகிட்டான். அவனை உன் ஆளுங்க தேடிகிட்டு இருக்காங்க. நைட் என்கிறதால கொஞ்சம் கஷ்டம். எப்படியும் விடியிறதுக்குள்ள ஆள் உள்ள இருப்பான். ஆனா சுபாஷ் தான் செய்ய சொன்னான்னு வாக்குமூலம் கொடுக்க மாட்டானுங்க""பைக்குல வந்தவனுங்க என்ன சொல்லுறானுங்க""உன்ன பார்க்க வந்த போது சீனு மரியாதையில்லாம பேசினானாம் அதனால அடிச்சானாம். கத்தியால் குத்தினவங்களுக்கும் இவனுங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லையாம்""ஒஹ்... ஓஹ்.. லயா கண்ணு முழிக்கட்டும் சுபாஷுக்கு வைக்கிறேன் ஆப்பு"


download (9).jpg
"ஆதி அவன் சிங்கப்பூர் போய்ட்டானு சொன்னாங்களே! அவனுக்கு எப்படி நியூஸ் போய் இருக்கும்? அதுவும் நாம சென்னைல இருக்குறத தெரிஞ்சிதானே இங்க ஆள வச்சி இவ்வளவும் பண்ணி இருக்கானுங்க""ஏற்கனவே என்ன கண்காணிக்க ஆள் வச்சிருப்பான். சரியான டைம்ல பயன்படுத்திக்கிட்டான். டி.ஜி.பி. மூலமா விஷயம் போக வாய்ப்பில்லை. அப்படி போய் இருந்தா நாம கம்பளைண்ட் கொடுத்த அன்னைக்கே அவனுக்கு தெரிஞ்சி இருக்கணும். இன்னைக்குத்தான் தெரிஞ்சிருக்கு. கண்டிப்பா அவன் இந்தியா வந்திருப்பான். டி.ஜி.பி. அவனை அரெஸ்ட் பண்ண மூவ் பண்ண போய் அது சம்பந்தமான யாராவதுதான் அவனுக்கு தகவல் சொல்லி இருக்கணும்""யு ஆர் ரைட். குமரகுரு பாதுகாப்பா இருக்கிறார். நான் விசாரிச்சிட்டேன்""இப்போவும் நம்ம மேல கண்ண வச்சிருப்பான். அதனால நம்பிக்கையான ஆட்கள் வேணும். உன் பிரென்ட் மிஸ்டர் தீரன் கிட்ட உதவி கேட்கலாம்ல""கண்டிப்பா பண்ணுவான். என்ன பண்ணனும்னு சொல்லு." கார்த்திக் காதுகளை கூர்மையாக்க, வாசுவை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்ட ஆதி தன் திட்டத்தை விவரிக்கலானான்.

images (18).jpg

சீனுவை பார்க்க முடியாமல் தீப்தி தவிக்க, மேனகையை மீறி சென்று பார்க்க மனம் வரமால் அமைதியாக அமர்ந்திருக்க, சாந்தினி அவள் கைகளை ஆறுதலாக பற்றிப் பிடித்திருந்தாள்.மனம் கனத்திருந்தாலும், கண்கள் சிவந்திருந்தாலும் கண்ணீரை சிந்த விடக் கூடாதென்பதில் பிடிவாதமாக நின்றிருந்தாள்.

சீனுவுக்கு நினைவு திரும்பியதாக தாதி வந்து சொல்ல தீவிர சிகிச்சை பிரிவினுள் நுழைந்த டாக்டர் பரிசோதித்து விட்டு வந்து"சீனுவின் மனைவி யாருங்க" என்று கேட்க அனைவரும் முழிக்கலாயினர்"என்ன பேயறைஞ்ச மாதிரி பாக்குறாங்க" என்ற முகபாவனையை கொடுத்த மருத்துவர் மாறி மாறி பார்க்கஅவரருகில் ஓடிவந்த மேனகை "நான்தான் அவன் அம்மா... அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல டாக்டர். என் பையனுக்கு என்ன ஆச்சு" என்று புடவை முந்தியை வாயில் வைத்து அழ ஆரம்பிக்க, அனைவரும் மருத்துவரை சூழ்ந்துகொள்ள குழப்பத்தில் ஆழ்ந்தார் மருத்துவர்."என்ன டாக்டர் பிரச்சினை" ஆதி யோசனையாக கேட்க கார்த்திக் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.


images (10).jpg

"அது வந்து... தலைல அடிபட்டத்துல அவருக்கு அவர் மனைவி மட்டும்தான் நியாபகம் இருக்கு. என் மனைவியை கூபிடுங்கனு சொல்லுறாரு. இந்தம்மா என்னடானா கல்யாணமே ஆகலானு சொல்லுறாங்க.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes