உறவால் உயிரானவள் P28

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
images (8).jpg

அந்த மாலை நேர காற்று இதமாக வீச தனக்கு வரப்போகும் ஆபத்து அறியாமல் வரளிநாயகியோடு அமர்ந்திருந்தாள் கவிலயா.



"இந்த கரும்பு தோட்டத்துக்கு விளிம்புல இப்படியொரு ரோட்டை போட்டு இந்த நேரத்துல சுகமான காத்து வீசையில உக்காந்து இருக்கிறதே தனி சுகம் தான்" வரளிநாயகி சொல்ல



"இன்னைக்கின்னு வண்டியெல்லாம் இந்தப்பக்கமாகவே போகுது போல. இந்த நீரோடையோட சலசலப்பும், சிலுசிலு காத்தும் சுகமா இருக்கு" நீரோடையின் பக்கம் திரும்பி அமர்ந்தவாறு கவி.



"ஏய் சீனு சட்டுபுட்டுனு ஜூசை கொண்டு வாப்பா இருட்டுறதுக்குள்ள குடிச்சிட்டு கிளம்பலாம்" வரளிநாயகி கத்தி சொன்னது சீனுவின் காதில் விழுந்தால் தானே!



சற்றுநேரம் கழித்து ஒரு தட்டில் இரண்டு குவளையை வைத்தவாறு ஒருவன் கவி, வரளிநாயகி அமர்ந்திருக்கும் இடத்துக்கு வர கவி எழுந்து குவளைகளை கையில் எடுத்து ஒன்றை வரளிநாயகிக்கு கொடுத்தவள் மறறொன்றை அருந்தியவாறே அமர முற்பட





மறைத்து வைத்திருந்த கத்தியை அவன் எடுக்கவும் வரளிநாயகி "டேய் யார் டா நீ..." என்று சொல்வதுதான் கவியின் காதில் விழுந்தது அவள் அவன் புறம் திரும்பும் போது நீளமான கத்தியை கவியின் வயிற்றில் குத்தியவன் மீண்டும் கைப்பற்ற வரளிநாயகி கத்திய கத்தில் அனனைவரும் இப்பபக்கம் பார்த்து ஓடி வரவும் ஓட்டமெடுத்தான்.



சொருகிய கத்தியை உருவியதும் இரத்தம் குபீரென பாய வயிற்றில் இருக்கும் குழந்தை என்ன ஆனதோ என அதிர்ச்சியடைந்த கவி "என் குழந்தை என் குழந்தை" என்றவாறே மடங்கி சரிய வரளிநாயகி கூப்பாடு போடவே ஆரம்பித்தார்.



ஆதியும், கார்த்திக்கும் கவியிடம் வந்தவர்கள் ஆதி கவியை கட்டிக்கொண்டு அழ, கண்களில் கண்ணீர் வழிய நின்ற கார்த்திக் பல சாலைவிபத்தை பார்த்து கற்றுக் கொண்ட அனுபவத்தில் உடனடியாக செயலில் இறங்கினான்.



ஆதியின் நலன் விரும்பிகளும் உதவிக்கு வரவே கவியின் இரத்தப்போக்கை நிறுத்த முயற்சி செய்தவன், அம்பியூலன்சுக்கும் அழைத்திருந்தான். ஆம்பியூலன்ஸ் வர எப்படியும் ஐந்து அல்லது, பத்து நிமிடங்கள் ஆகும் என்பதால் கவியையும் சீனுவையும் வண்டியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் பாதி வழியில் ஆம்பியூலன்ஸ்சுக்கு மாற்றிக்கொள்ளலாம் என்று உடனடி முடிவெடுத்தவன் கவியை தாங்கள் வந்த வண்டியில் ஏற்றியவன் ஆதியை உலுக்கி வண்டியை எடுக்க சொல்ல வண்டி ஓட்டும் நிலைமையில் ஆதி இல்லை.



அங்கிருந்த ஒருவர் நிலைமையை புரிந்துக் கொண்டு வண்டியை எடுக்க கவியை மடியில் கிடத்திய ஆதி பின்னாடி அமர்ந்துக்கொள்ள வரளிநாயகி முன்னாடி அமர வண்டி மருத்துவமனையை நோக்கி வேகமெடுக்க, சுயநினைவில்லாமல் இருந்த சீனுவை ஆருவோடு ஏற்றிக்கொண்டு அவர்கள் வந்த வண்டியில் மருத்துவமனைக்கு பறந்தான் கார்த்திக்.

images (6).jpg

ஆதியை கண்ட நொடியில் இருந்து திக்கித்திக் பேச முயன்றால் கவி "ஐ லவ் யு ஆதி நம்ம குழந்தை ஆதி... நான் செத்துடுவேனா?.. ஐ லவ் யு ஆதி. நம்ம பாபா"





"பேசாத கவி, பேசாத அமைதியா இரு. உனக்கு ஒன்னும் ஆகாது" கண்களில் நீர் வழிய நின்றான் ஆதி.

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top