உயிரே வந்துவிடு-1

Advertisement

Vallisubramanya

Writers Team
Tamil Novel Writer
மணிமாறன் கல்லூரி வளாகத்தின் உள்ளே தன் பளபளக்கும் டூவீலரை கொண்டு சென்று நிறுத்தினான் உதியஞ்சேரலாதன்.

அது வரை தலையை அழுத்திய ஹெல்மெட்டை கழற்றி பைக்கில் இருந்த கண்ணாடியில் கலைந்த முடியை கைகளால் சரி செய்தான் அவன்.
எத்தனை சரி செய்தாலும் அவனைப் போலவே அடங்க மறுத்தது அவனின் தலை முடி.

உதியனும் அப்படித்தான்.பிறந்து வளர்ந்த இந்த இருபத்தியெட்டு ஆண்டுகளில் அவன் யாருக்கும் அடங்கியதில்லை.தான் நினைத்ததை சாதிக்காமல் விடமாட்டான்.

ஐந்து வயதிலே பெற்றோரை இழந்த அவனுக்கு சித்தப்பா சேகரும் அவரின் மகள் சித்ராவுமே எல்லாமாக இருந்தனர்.குடும்பம் நண்பர்கள் என்றால் உயிரையும் விடுவான். சிறுவதிலிருந்தே சரித்திர ஆர்வ மிகுதியால் அதையே படித்து பட்டம் பெற்று இன்று அந்த கல்லூரியில் மூன்று ஆண்டுகளாக விரிவுரையாளராகப் பணியாற்றுகிறான்.

அன்று சரித்திர பிரிவின் விரிவுரையாளர் அறைக்கு சென்று அமர்ந்தான்.அன்று காலை அவனுக்கு முதல் வகுப்பு இல்லை.அதனால் அன்று எடுக்க வேண்டிய பாடங்களைப் பார்த்து குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனின் முதுகு பகுதியில் சொட்டென ஒரு கரம் விழுந்தது.

"என்னடா சேர வேந்தா! இந்த பிரியட் உனக்கு ஃப்ரீ தானே?அப்புறம் எதுக்கு புத்தகத்தை கட்டிக்கிட்டு அழுவுற... அப்படியே கேன்டீன் பக்கம் போயிட்டு வரலாம் வா!"என அவனை அழைத்தான் அவனின் ஆருயிர் நண்பன் விஸ்வா.

"ஏன்டா ஃப்ரீயா இருந்தா கேன்டீனுக்கு தான் போகனுமா? இன்னிக்கு எடுக்க வேண்டிய பாடத்துக்கு நோட்ஸ் எடுக்கனும்...நா வரலை...நீ வேண்ணா போ"

"ஆமா பெரிய நோட்ஸு... அசோகர் மரத்தை நட்டார் கொளத்தை வெட்டினார்ன்னு இதத் தானேடா சொல்லிக் கொடுக்க போறோம்...இதுக்கு பெரிசா நோட்ஸு வேற"என்றான் விஸ்வா அலுப்பாக.

அவனை முறைத்த உதியன்

"டேய் சரித்திரத்த பத்தி இனிமே அசால்ட்டா பேசினே மவனே உன்ன கிழிச்சு தோரணம் கட்டிடுவேன்... நமக்கு முன்ன இருந்தவங்களோட வாழ்வில் காணப்படும் உயர்ச்சியும் வீழ்ச்சியும், ஆக்கமும் கேடும், நிறையும் குறையும் நமக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும்...நம்ப வாழ்க்கைய சரியான பாதையில கொண்டு போக வழி காட்டும்....தெரிஞ்சுதா?"

உதியனுக்கு இருக்கும் சரித்திர ஆர்வத்தைப் பற்றித் தெரிந்தும் அவனிடம் வாயைக் கொடுத்த தன் தவறை எண்ணி மானசீகமாக தன் தலையில் குட்டிக் கொண்ட விஸ்வா அவனிடம் சரணாகதி அடைய தயார் ஆனான்.

"சரிடா சரிடா ஏதோ வாய் தவறி உளறிட்டேன்...இனிமே அப்படி சொல்ல மாட்டேன்"என வெற்றிகரமாக பின் வாங்கினான் அவன்.

அதற்கு ஏதோ சொல்ல வாயெடுத்த உதியன் டிபார்ட்மெண்டின் தலைமை பேராசிரியர் வித்யாவதி அந்த அறையில் நுழையவும் அதை நிறுத்தி எழுந்து நின்றான்.அவனைப் போல அந்த அறையில் இருந்த மற்றவரும் எழுந்து நின்றனர்.

ஆனால் அவரின் பின்னால் வந்து நின்றவளை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

அன்று கண்ட அழகு குறையாமல் மேலும் மெருகேறி தந்த பதுமையென இருந்தாள் அவள்.முன்பு பயமும் தயக்கமுமாக ஏறிட்ட விழிகளில் இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் ஒளிர்ந்தது.

இவனை அங்கே கண்டு அவளும் அதிர்ந்து போனாள் என்பது அவளின் பளிங்கு முகத்திலேயே தெரிந்தது.

அவர்கள் இருவரும் தன்னிலை அடைய கஷ்டப்பட்ட போது பேராசிரியர் வித்யாவதி,

"மை டியர் கொலீக்ஸ்...இவங்க இளந்தினி...நம்ம டிபார்ட்மெண்டுக்கு புது வரவு...நீங்க எல்லாரும் இவங்களுக்கு ஹெல்பா இருப்பீங்கன்னு நம்பறேன்..."என்றபடி அவள் புறம் திரும்பி,

"இளந்தினி! இனிமே நீங்க நம்பள சேர்ந்தவங்க....சோ... ஃபீல் ஃபிரி...நாளைலேந்து உங்க கிளாஸை ஸ்டார்ட் பண்ணிடுங்க...இப்ப நீங்க உங்க ரூமுக்கு போலாம்.."

என்றவாறு அவர் அங்கிருந்து அகலவும் அங்கிருந்தவரைப் பார்த்து மெல்லியதாக புன்னத்தவள் அவர்களோடு இரண்டொரு வார்த்தை பேசி அங்கே நிற்பதற்கே பயந்தவள் போல் வேகமாக தன் க்வார்டர்ஸை நோக்கி வேகமாக சென்றாள்.

அதுவரை அவளையே தீர்க்கமாக பார்த்திருந்த அவன்,

'இளந்தினியா!மூணு வருஷத்துக்கு அப்புறம் இப்படி இங்கே!எப்படி!'

என திகைத்து நின்றிருந்தான் உதியஞ்சேரலாதன் இளந்தினியின் கணவன்.
 

Joher

Well-Known Member
Tks வள்ளி......

வரலாறு பேராசிரியர்......
வரலாற்று பேர்கள்.......

Husband and wife ஒரே dept.....
ஆனால் பயந்து ஓடிட்டாளே இளந்தினி....

Nice & ரொம்ப குட்டி எபி......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top