உயிரின் துளி காயும் முன்பே - 19

Advertisement

Renju vinodh

Well-Known Member
வணக்கம் நட்புக்களே இதோ "உயிரின் துளி காயும் முன்பே" புதிய பதிவு :) :) :) :)

ஒரு சிறிய விளக்கம் கொடுக்க விரும்புகிறேன் தவறு செய்யும் சிலர் அதை நினைத்து வருந்துவதோடு முடிந்துவிடுகிறது அவர்களின் பிராயச்சித்தம், சிலர் அதை சரி செய்ய பார்க்கிறார்கள் இதில் வானதியின் கணவனோ மாமனாரோ அதை சரி செய்ய நினைக்கவில்லை பாரி நினைத்தாலும் வானதி அதற்க்கு ஒத்துழைக்கவில்லை.

வானதியை எங்கேயும் வில்லியாகவோ தவறாகவோ சித்தரிக்கவில்லை அவ விட்டுட்டுபோனவனை பழியும் வாங்காம விட்டுடும் போகாம விவாகரத்தும் குடுக்காம அவளே அவளை அழிச்சுக்குறா, மனசலவுல பாதிக்க படுறா சச்சி செஞ்ச தவறுக்கு பிராயச்சித்தமாத்தான் வீனா பாரி கல்யாணம் நடந்தது அவங்க பிரிஞ்சதுல பாரி தப்பு மட்டுமில்லயே வீணாவுக்கும் விருப்பமில்லை தப்பு செஞ்சவன் சந்தோஷமா வாழும்போது பாரிக்கு அவன் ஆசைப்படுற வாழ்க்கையை வாழ உரிமை இருக்கே, ஒருவேளை பாரியோட மனைவி அலக்நந்தாவா இல்லாம வேற பெண்ணா இருந்தாலும் அவளால வானதி கூட சேர்ந்து இருக்குறது கஷ்டம்தான் அப்போ நிறைய பிரச்சனைகள் வரலாம் இன்னைக்கு மாமனார் மாமியார் இருக்காங்க நாளைக்கு அவங்க இல்லாதப்போ இவ யாரை நம்பி அங்க இருக்கா இவளுக்குன்னு ஒரு லைப் வேண்டாமா தன் குடும்பம் பிள்ளைகள்ளனு வரும்போது எல்லாருமே சுயநலவாதிகள் தான் வானதிக்கு மகன் செஞ்சது துரோகம் தான் என்பதை அவங்களுக்ம் தெரியும் இருந்தாலும் அவளுக்காக தன் மகனையோ பேர பிள்ளைகளையே வேண்டாம்னு விட்டுட மாட்டாங்க நம்ம வாழ்க்கைல எவ்வளவோ அவமானங்களையும் துரோகங்களையும் கடந்து வரோம் அதை நமக்கு செஞ்ச எல்லாரும் நமக்கு திரும்ப நியாயம் செய்றாங்களா இல்லையே சிலர் மன்னிப்பை கூட கேக்காமல் அப்படியே போய்டுவாங்க இவங்களுக்கு இப்போ வானதியை விட மகன்கள் பேரக்குழந்தைகள் முக்கியமா படுறாங்க அவ்ளோதான்.....

உயிரின் துளி காயும் முன்பே 19 - Uyirin Thuli Kaayum Munbae 19
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
தரணி

Well-Known Member
சுமதி கேட்ட எல்லாம் கேள்வியும் சரி... அதே நேரம் சுமதி உங்க வீட்டுகாரர் கிட்டையும் நீங்க கேளுங்க... வானதிக்கு ஒரு வாழ்க்கை அமையும் போது மித்ரா கண்டிப்பா அண்ணி ஆகிடுவா பாரிக்கு...
 
உதயா

Well-Known Member
நான் இந்த கதை படிக்கிறதை எப்பவோ நிறுத்திட்டேன் கமெண்ட் மட்டும் பார்ப்பேன் .

ரியல் லைஃப்ல தான் சசி மித்ரா மாதிரி ஆட்களுக்கு தண்டனை இல்லை அட்லிஸ்ட் கதையிலாவது தண்டனை கிடைக்கட்டுமே.

அவனோட பெத்தவங்க ஏத்துக்கட்டும் ஆனால் பாரி நந்தா ஹீரோ ஹீரோயின் இவங்க ஏத்துக்காத மாதிரி காட்டி இருக்கலாம்.
கூடப்பிறந்தவங்களா இருந்தாலும் தப்பு செஞ்சா தண்டிக்கணும். ஒரு பொண்ணு கூட வாழ்ந்துட்டு ஈசியா விட்டுட்டு போயிட்டான் இவனை ஒதுக்கி வைக்கிறதுல என்ன இருக்கு.

எந்த கேரக்டர் எப்படி இருந்தாலும் ஹீரோ ஹீரோயின் கேரக்டர்ல வர்றவங்க நியாயமானவங்களா இருக்கணும். தன் குடும்பமா இருந்தாலும் தப்பு செஞ்சா தண்டிக்க தயங்காதவங்களா இருக்கணும்.ஆனால் இங்கு அவங்க தான் முதல் ஆளா சப்போர்ட் பண்றாங்க .

வானதி வேற கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும் பாரி நந்தா இரண்டு பேரும் சசி மித்ராவ ஒதுக்கி வச்சா நியாயமா இருக்கும்.

வானதி தான் யாரோ ஒருத்தி அவளுக்கு நடந்தது நந்தாவுக்கு உறுத்தாது. ஆனால் சாரதா அவளை பெத்தவங்க தானே அவங்களுக்கு நடந்தது கூடவா உறுத்தாது .
தன் அம்மாவ மானபங்கம் படுத்துன குடும்பத்துல எப்படி காதல் வரும். தன் அம்மா இந்த வீட்டு ஆட்களோடு எப்படி உறவாட முடியும்.

நம்ம பெத்தவங்களை மதிக்காதவங்க நம்ம சொந்தக்காரங்களா இருந்தாலும் அவங்களை ஒதுக்கி வச்சிடுவோம். ஆனால் இங்கே சாரதாவுக்கு நடந்த அவமானத்தை பத்தி நந்தாவுக்கு ஒன்னுமே இல்லை.

வானதிக்கு நடந்த துரோகத்துக்கும் நியாயம் செய்யல . சாரதாவுக்கு நடந்த அவமானத்துக்கும் நியாயம் செய்யல .

அண்ணன் தம்பி இரண்டு பேரும் அக்கா தங்கச்சிய கல்யாணம் செஞ்சு கொஞ்ச நாள் யூஸ் பண்ணிட்டு அவங்கள விட்டுட்டு காதல் என்கிற பெயரில் வேற இரண்டு பொண்ணுங்க கூட போயிட்டாங்க.

பாரி நந்தா உறவுக்கும் சசி மித்ரா உறவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
 
Mrs.Gnanasekar

Well-Known Member
சுமதி மா கேள்விக்கு சச்சி கண்டிப்பாக பதில் சொல்லனும், அது ஞாயம் தான். வானதி சச்சிதானந்தன் வாழ்க்கையில் வரும் முன்னாடியே அவனும் மித்ராவும் விரும்பும் விஷயம் வானதியை பெத்த அப்பா மாதவனுக்கு நல்லா தெரியும். அந்த காதலால் சாரதாம்மா குடிமுழுகி போனதும் தெரியும்.

ஒரு அப்பாவி நடுத்தர குடும்ப தலைவர் இல்லனா அந்த குடும்ப நிலைமை என்ன கதி ஆகும், அப்படி தான் ஆச்சு அலக்நந்தா அப்பாவோட மரணம். இதை தொடர்ந்து மகன் இறந்த துக்கத்தில் அவரோட அம்மாவும் இறந்தது இதெல்லாம் என்ன இது யாருக்கும் அநியாயம்னு ஏன் தெரியலை.

இதுவே சச்சி ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்திருந்து அவனுக்கு ஒரு காதல் கதை இருந்தது தெரிந்து இருந்தால் அவர் பொண்ண கட்டி கொடுத்திருப்பாரா? எல்லாம் சொத்துக்காக பெத்த பொண்ணு வாழ்க்கை கெட இவருக்கும் பாதி பங்கு இருக்கு. அப்போ ஏன் அவரை யாரும் எதிர் கேள்வி கேட்கலை.

சச்சி பண்ணினது கண்டிப்பாக தப்பு தான். அவன் தன் முன்னாள் காதலி ஏதோ ஒரு மூலையில் தனக்கான வாழ்க்கை வாழுந்துட்டு இருப்பானு நினைப்புல தான் வானதி கூட வாழ்க்கை அமைச்சுக்கறான்.

இடையில் சங்கமித்ராவ ஒரு மோசமான சூழலில் பார்க்கும் போது அவளின் இந்தநிலைக்குக் காரணமே தன் தந்தை தான்னு நினைச்சி அவரை பழி வாங்க மித்ராவை கல்யாணம் பண்ணிட்டான். அப்படி மித்ராவை கல்யாணம் பண்ணும் முன்னாடி வானதி கிட்ட உண்மைய எடுத்து சொல்லி விவாகரத்து பண்ணிட்டு மித்ராவ கல்யாணம் பண்ணி இருக்கலாம்.

வானதி வாழ்க்கை கெட அவளை பெத்த அப்பாவுக்கும் பங்கு இருக்கு
 
Anu Nandhu

Well-Known Member
இதுல எல்லாருமே தப்பு தான்... சச்சி, அவன் அப்பா, மித்ரா, வானதி அப்பா... ஏன் பாரி, நந்தா கூட... எப்டி நந்தா... உன் அம்மாவ உன் கண்ணு முன்னாடி தான அப்புடி பண்ணாங்க..எப்படி அவங்க வீட்டுக்கு உன்னால போ முடியும்... உன் அம்மா பத்தி யோசிக்கவே இல்ல... பாரி இப்போ இப்டி பேசுறான்.. இத ஏன் முன்ன பண்ணல... இதே நீ லவ் பண்ற பொண்ணு நந்தவா இல்லனா இந்த பிராப்ளம் சரி பண்ணி இருப்பியா??? ஏன் சுமதி கூட இப்போ இப்படி பேசுறத முன்ன பேசல... அவங்க புள்ளைய மட்டும் கேள்வி கேக்குறாங்க.. அவங்க புருஷன் பண்ணது எல்லாம் இப்போ தெரியும்ல... ஒரு பொண்ணுக்கு அவரு இப்படி பண்ணது ஒண்ணுமே இல்லையா.. ஒரு கேள்வி கூட கேக்கல... இப்போ அவங்க பொண்ணயே மகனுக்கு கேக்க போறாங்க.. கொஞ்சம் கூட உருத்தவே இல்ல அந்த மனுசனுக்கு... இப்ப கூட மகனுங்க தூரம் போ கூடாதுன்னு அமைதியா இருக்காரு... அதே குடும்பத்து பொண்ணு தானா சச்சி லவ் பண்ணான்.. அப்போ ok illa... Ipo silent ah irukanga...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top