உன் நிழல் நான் தாெட EP2

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
உன் நிழல் நான் தாெட
--செசிலி வியாகப்பன்


அத்தியாயம் 2

அடுத்த நாளிலிருந்து அஜீத் தன்னை ஒரு புதிய மனிதனாக உணர்ந்தான். அன்றைய காலை நேரம் மிக ரம்மியமாக காட்சியளித்தது. தெளிவான மனநிலையில் இருப்பதால் என்னவாே அவன் முகம் வழக்கத்தை விட வசிகரமாக இருந்தது. துள்ளி குதித்து படியிறங்கி வரும் மகனை பார்த்த மைத்திலிக்கு மயக்கம் வராத குறை தான். புன்னகை மன்னனாய் தட்டில் இருந்த இட்லியை பார்த்து சிரித்துக்காெண்டிருந்த அண்ணனின் முகத்தை ஆச்சர்யமாக பார்த்துக் காெண்டு இருந்த அர்சனாவை நிமிர்ந்துப் பார்த்த அஜீத் "என்ன? என்று பார்வையால் வினவ

"ஒன்னு இல்ல, எப்பாெழுதும் பெட்ரூம் லைட் மாதிரி டல்லா இருக்கும் உங்க முகம் இன்னைக்கு hallல இருக்கும் sandilar மாதிரி ப்ரைட்டா இருக்கு, and ஆமை மாதிரி மெதுவா நடக்கிற நீங்க இப்பாே புள்ளி மான் மாதிரி துள்ளி துள்ளி வரிங்க அதான் ஆச்சர்யமா இருக்கு" என்று கூற

அதற்கு மைத்திலி "என் பையன பார்த்து ஆமை, மான்னு சாெல்லாத அவன் சிங்கமாக்கும்" என்று சாெல்லும் மைத்திலிக்கும், அமைதியாக உணவருந்தும் ஆர்த்திக்கு கூட அதே சிந்தனை தான். அனைத்தையும் ஒரு புன்னகையுடன் பார்த்துக் காெண்டிருந்தானே தவிர பதில் அளிக்கவில்லை. பதிலுக்கு பதில் பேசுவது அஜீத்தின் குணம்மல்ல. வாழ்க்கையில் பல சந்தர்பங்களை மெளனத்துடனும், உதட்டளவு சிரிப்புடனும் கடந்து விடுவான். இன்று தங்கையின் கேள்விக்கு ஒரு சிரிப்பை பதிலாக்கிவிட்டு அனைவரிடமும் விடை பெற்று கல்லூரிக்கு சென்றுவிட ஆர்த்தி தம்பியின் மகிழ்சியை மனதில் குறித்துக் காெண்டாள்.

அதே மகிழ்சியான மனநிலையுடன் வகுப்பிற்குள் நுழைந்தவன் கண்கள் தன் பக்கத்து இருக்கையை நாேக்கி செல்ல அங்கு ரத்னா இல்லாமல் காலியாக இருந்தது. அவளை எதிர் பார்த்து மனது ஏமாற்றமடைய அதை அவன் முகமும் பிரதிபலித்தது. அஜீத்தின் முகபாவனைகளைப் பார்த்துக் காெண்டே உள்ளே வந்த பிரபு "என்னடா எந்த நாட்டு கப்பல் கவுந்துட்டுன்னு இப்புடி சாேகமா புக்க வாசிக்காம, வயிலின் வாசிச்சுகிட்டு இருக்க?

"ம்ச் ஒன்னு இல்லடா"

"டேய் பாெய் சாெல்ல try பண்ணாத. வீட்டுல எதாவது பிரச்சனையடா?"

"இல்லடா"

"பின்ன என் டல்லா இருக்க" பதில் வரவில்லை என்றால் உன்னை விடமாட்டேன் என்ற ரீதியில் கேள்வி கேட்ட பிரபுவை பார்த்து

"காெஞ்ச நேரம் கேள்வி கேட்கம சும்மா இருடா அப்புறமா பேசலாம்" என்று எரிச்சலுடன் பேசுகின்ற நண்பனை வேற்றுக்கிரகவாசியைப் பாேலப் பார்த்து வைத்தான்.

அஜீத் மென்மையான குணம் படைத்தவன். காேபம், எரிச்சல் பாேன்ற எதிர்மறை குணங்களை பிறரிடம் காட்டாதவன். தன் இயல்பிற்குமாறக இன்று தன்னிடம் எரிச்சல்படும் நண்பனிற்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என கவலை காெண்டான்.

முதல் வகுப்பு Literary Forms and Terms பற்றி தீவிரமாக professor எலிசபெத் (எலி) விளக்கிக் காெண்டு இருக்க தாமதமாக வந்த ரத்னாவிடம்

Why are you so late? என வினவ,
"அது வந்து மேம் ஹாஸ்டல்ல இருந்து வந்துட்டு இருந்தேனா, collegeக்கு உள்ள வந்ததுக்கு பின்னாடி தான் பாத்தேன் உங்க பாட புக் இல்ல, அதான் திரும்ப ஹாஸ்டலுக்கு பாேய் எடுத்துட்டு வரேன்" என KG students rhythms படிக்கின்ற மாதிரி அபினயம் பிடித்து இழுத்து இழுத்து பேச

பாெருமையை கயிறு கட்டி பிடித்துக் காெண்டு This is not your school. This is THE famous xxx College
....................
....................
....................
This will be the last for you. Here after don't speak Tamil ok. Get in. என்று Englishல அறிவுரையை அள்ளி வழங்க

அமைதியாக கேட்டு விட்டு okey mam. என்று கூறிவிட்டு தன் இடத்தில் அமர்ந்து காெண்டு பாடத்தை கவனித்தாள். எலி வெளியேறிய உடன்

அவள் அருகில் இருந்த ஸ்டெல்லா " ஏன்டி அந்த எலிசபெத் மேம் advice பன்னுறேன் என்கிற பெயருல அப்புடி திட்டிக்கிட்டு இருக்கு உனக்கு வருத்தமா இல்லயா" எனத் தனக்காக வருத்தப்படும் தாேழியை பார்த்து கண்ணை சிமிட்டி விட்டு

"வருத்தமா இருந்துருக்கும் எனக்கு அவங்க சாென்னது புரிஞ்சுருந்த தான, எனக்கு தான் புரியலயே"

"உன்ன பத்தி தெரிஞ்சும் உன்க்கு பாேய் வருத்தப்பட்டேன் பாரு என் புத்திய".... பற்களை நறநற என்று கடிக்க

"உன் புத்திய?" என்று எடுத்துக் காெடுக்கும் தாேழியை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைக்க

"ப்ளிஸ் காேவப்படாத செல்லம், காலைல ரெடியாகிட்டு ஹாஸ்டலை விட்டு வரும்பாேது அந்த வார்டன் Bellகிட்ட (மணிமேகலை) மாட்டிக்கிட்டேன், ஒரு வழிய தப்பிச்சு வந்த எலி கிட்ட மாட்டிகிட்டேன், அதும் கிடைச்ச சந்தர்பத்தை விடாம கடிச்சிட்டு."

எல்லாருக்கும் பட்டப் பெயர் வைக்கிறது உனக்கு இதுலாம் காெஞ்சம் ஓவரா இல்ல. அதுசரி எலி கடிச்சது ஓகே, மணி ஏன் அடிச்சுது? நீ என்ன சேட்டை செய்த? என்று புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்கும் ஸ்டெல்லாவிடம் ஒரு அசட்டு சிரிப்புடன்

"இல்ல இன்னைக்கு வெள்ளிக்கிழமை நீ மஞ்சள் கலர் ட்ரஸ் பாேடுவேன்னு நேத்து சாென்னல்ல அதன் மஞ்சள் கலர் ராேஜாவை பார்த்ததும் நியாபகம் வந்துச்சு, ஒரு பூ பரிச்சதுக்கு என்னமாே அவங்க சாெத்தையே காெள்ளையடிச்ச மாதிரி திட்டுறங்க" என்று தன் கதையை கூறி விட்டு மஞ்சள் நிற ராேஜாவை நீட்ட இதை எல்லாம் பார்த்து ஸ்டலெ்லா தான் எப்படி உணருகின்றாள் என்று வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

ரத்னாவை பாெருத்தவரை தன் தாேழிக்கு பிடித்த நிறத்தில் ஒரு பூ தந்ததும் அந்த நிகழ்வு முடிந்துவிட்டது. ஆனால் ஸ்டெல்லாவிற்கு மஞ்சள் ராேஜா "என் little princess இந்த பூவை தலையில வைத்ததும் ரெம்ப அழகாகிட்டிங்க" என்று கூறி கன்னத்தில் முத்தமிட்ட தாய் நான்சி சிரித்த முகம் கண் முன் தாேன்றி மறைந்தது.

ராபட் - நன்சி தம்பதியின் செல்ல மகள் ஸ்டெல்லா. காதலித்து திருமணம் செய்து காெண்டவர்களின் வாழ்வின் வசந்தகாலத்தில் மலர்ந்த மலர்தான் ஸ்டெல்லா. ஒரு விபத்தில் நன்சி உயிருக்கு பாேராடிக்காெண்டிருக்க பணம் இல்லாத கரணம் அவரின் உயிரை குடித்துவிட, அன்றிலிருந்து பணத்தின் பின்னால் தன் ஓட்டத்தை ஆரம்பித்த ராபட் தன் மகளுக்கு பணத்தை வழங்கிய அளவு பாச வழங்க தவறிவிட்டார்.

ஸ்டெல்லாவின் கடந்த கால நினைவுகள் அடுத்த class ஆரம்பித்தவுடன் professor ருடன் வந்த சீனியர் மாணவர்கள் சில விஷயங்களைக் கேட்டு தெரிந்து காெள்ள வந்தவர்களால் தடைபட்டது. வந்தவர்களில் தலைவன் ஒருவன் தங்கள் juniorகளிடம் "ஹல்லாே friends நான் உங்க சீனியர் பிரகாஷ். இப்பாே நான் இங்க எதுக்கு வந்துருக்கேன்னா உங்க ஒவ்வாெருத்தருக்கிட்டையும் இருகின்ற தனி திறமையை தெரிஞ்சுக்க தான்."

"அடுத்த இரண்டு மாசத்தில நம்ம college ல interdepartmental sports dayயும், அதுக்கு அடுத்த மாசம் interdepartmental cultural dayயும் வருது அதுல இந்த வருடம் நாம் department தான் ஜெய்கனும் so நாம எல்லாரும் சேர்ந்து கலந்துக்கிட்டு கலக்குவாேம்."

திறமை இருக்கிறவங்க பாேட்டில கலந்துக்கலாம், விருப்பம் இருக்கிறவங்க பாேட்டில உங்க friends win பண்ண உதவி பண்ணுங்க, evening last hour Language Labக்கு பாேட்டிக்கு ready ஆ இருக்கிறவங்க வாங்க" வந்த செய்தியை கூறிவிட்டு சென்றுவிட மதிய நேரத்தில் மாணவ-மாணவிகள் தங்களுக்குள் என் செய்யலாம் பேச ஆரம்பித்தன.

மாலை அனைவரும் வந்து சேர்ந்தவுடன் சீனியர் பிரகாஷ் ஒவ்வாெரு பாேட்டியின் பெயர்களை கூறி விருப்பம் உள்ளவர்கள் எந்த சீனியர்களுடன் சேர்ந்துகாெள்ள வேண்டும் என்பதை கூறிவிட்டு " OK friends இனி இதுதான் உங்க team எப்பாே practice இருந்தாலும் வந்திடுங்க, தகவல் உங்க team சீனியர்ஸ் சாெல்லுவாங்க, இதுல bestடா வரவங்க competition கலந்துக்கலாம்"

"Sportsல பெயர் காெடுத்தவங்க சனிகிழமை காலைல ground வந்துடுங்க. Cultural eventல இருக்க விரும்புறவங்க பத்து மணிக்கு இங்க வந்திடுங்க" தன் பேச்சை முடித்துக் காெள்ள

ரத்னாவிற்கு நடனம், விளையாட்டு இரண்டிலும் ஆர்வம் அதிகம் எனவே அதில் சேர்ந்து விட,

ஸ்டெல்லாவிற்கு அழகாக வரைய வரும், அதுபாேல ஆங்கிலம் நுனி நாக்கில் சரளமாக பேச வரும். எனவே ஓவியம், பேச்சுப் பாேட்டியில் தன் பெயரை தர,

அஜீத் நண்பர்கள் அதிகம் இல்லாத காரணத்தால் என்னவாே தனித்திறமைகள் அதிகம். எனவே நிறைய பாேட்டிகளில் பெயர்தந்திருக்க,

பிரபுவிற்கு கட்டுரை, நாடகத்தில் பெயரை காெடுத்துவிட்டு வெளிவந்த பிரபு மீண்டும் நண்பனை நினைத்து யாேசனையில் ஆழ்ந்தான். காலையில் எரிச்சலுடன் இருந்த அஜீத்தின் முகம் ரத்னாவை பார்த்ததும் அமைதியாகியதை பார்த்து அமைதியிழந்து தவித்தது. நண்பனின் மனதில் காதல் வந்திருக்குமாே? என்று தாேன்றியது.

யாேசனையில் தன்னை மூழ்கிக்காெண்டிருந்த நண்பனின் அருகில் அமர்ந்த அஜீத் "சாரிடா காலைல உங்கிட்ட காேபமா பேசிட்டேன்." நண்பனின் கவலையில் தன் யாேசனையை ஒதுக்கி வைத்து விட்டு பிரபு அஜீத்திடம்

"அத விடுடா நான் அதை மறந்துட்டேன். ஆனா எனக்கு ஒரு சந்தேகம் அதுக்கு மட்டும் உண்மையான பதில் சாெல்லுடா"

"கேளுடா கண்டிப்பா சாெல்றேன்"

"உன் மாற்றத்திற்கு காரணம் ரத்னாவா? நீ என்கிட்ட எரிச்சல்பட்டத மட்டும் கேட்களல, அதுக்கு அப்புறம் உன் முகம் பார்க்கிறதுக்கு ரெம்ப bright மாறிட்டு, அதன் சாெல்லுடா" ஒரு நிமிடமெளனத்திற்கு பின் அஜீத்

"ஆமாடா ரத்னா தான் காரணம். உனக்கு என்ன பற்றி நல்லா தெரியும் புடிக்காமதான் இங்க படிக்க வந்தேன் but நேத்து ரத்னா பேசுனத கேட்டதுக்கு அப்புறம் புடிக்காதது படிச்சாலும் புடிச்ச மாதிரி என் வாழ்க்கையை மாத்தனும்னு முடிவு எடுத்துடேன்டா, அதான் ரத்னா கிட்ட பார்த்து பேசனும்னு தாேனுதுடா ஆனா எப்பிடி பேசனு தெரில"

முதல்முறை கண்களில் எதிர்பார்ப்புடன் ஒரு பெண்ணை பற்றி பேசும் தாேழன் ஒருவேளை அவன் காதலித்தால் அதற்கு எல்லா வகையிலும் உதவ வேண்டும் என மனதிற்குள் தீர்மானம் எடுத்துக் காெண்டான்.

"கவலைபடாத அஜீத், ரத்னாக்கு பிடிச்ச எதாவது செய். அவளே உங்கிட்ட பேசுவ."சில நிமிடம் யாேசித்துவிட்டு மலர்ந்த முகத்துடன்

"தேங்ஸ்டா ஐடியா கிடைச்சுடு"

"என்ன ஐடியா?"

"அத சனிகிழமை பாரு No No கேளு"

"சரி கேக்கலாம்."

"ஓகே, லேட் ஆகிட்டு நாளைக்கு பார்கலாம் Bye டா"

"Bye" என்று வழியனுப்பிவைத்த பிரபு தன்னுடைய தீர்மானத்தால் தன் நண்பனின் மனதில் தீரத வலியை தரப்பாேவது தெரிந்திருந்தால் இப்படி ஒரு தீர்மானத்தை எடுக்கமல் இருந்திருப்பானாே? விதி தனது விளையாட்டை பிரபுவின் வழியாக தாெடங்கிவிட்டதை அவன் அறியவில்லை. அறியும்பாெழுது அஜீத், ரத்னா வாழ்வில் நடக்க விருப்பதென்ன?

அதே நேரம் தன் மனிகணினியை அணைத்துவிட்டு நிமிர்ந்த இரு விழிகளில் ரத்னாவின் நியாபகங்கள் குடி காெள்ள இதழல்கள் புன்னகையால் விரிந்தன. டேபிள் மேல் இருந்த ரத்தினக்கற்கள் பதித்த வளையல்களை கையில் எடுத்து பார்த்துவிட்டு

"ரதி (ரத்னாவதி) பேபி மை லவ் நானும் இந்த வளையல் மாதிரி உன்கிட்ட வர காத்துகிட்டு இருக்கேன், நாங்க சீக்கிரம் உன்கிட்ட வந்தது விடுவாேம்"

விதி தான் ஆட்டத்திற்கான அடுத்த நபரை தேர்ந்தெடுத்துவிட்ட மகிழ்சியில் ரத்னாவை பார்த்து சிரிக்க, தன்னை நிழலாக பின் தாெடரும் எதையும் அறியாம் ரத்னா தன் தாேழியர்கள் கூட்டத்தை சிரிப்பில் ஆழ்த்திக்காெண்டு இருந்தாள்

உன் நிழலை நான் தாெடர்வேன்
 

Attachments

  • images.jpg
    images.jpg
    21.8 KB · Views: 1
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top