உன் நிழல் நான் தாெட ep 22

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
உன் நிழல் நான் தாெட
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 22

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்

கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை

காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.


மீண்டும் ரத்னாவுக்கு நினைவு திரும்பிய பொழுது தான் அதே இடத்தில் தனியே இருப்பதை உணர்ந்தவளுக்கு என்ன நடந்தது என்பது நினைவு வரவில்லை.

தான் இருந்த இடத்தில் அறை கதவு வெளிப்புறமாக பூட்டி இருந்தது. அந்த அறையில் இருந்து வெளியே செல்வதற்கு வேறு வழிகள் எதுவும் இல்லை. அப்படியே வழி இருந்தாலும் இங்கிருந்து தப்பிச் செல்லும் எண்ணம் எதுவும் ரத்னாவுக்கு கிடையாது.

ரத்னா எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் என்பதை அவள் அறியவில்லை, தான் யாருக்கா காத்திருக்கிறோம் என்பது அவளுக்கு நன்கு தெரியும், இருந்தாலும் தான் யாரை எதிர்பார்த்து காத்திருக்கின்றாமாே அந்த நபர் வந்துவிடக்கூடாது என்று ஒவ்வொரு நொடியும் கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தாள்.

ஆனால் கடவுளோ நீ வேண்டும் இந்த வேண்டுதல் நிறைவேறாது என்பதுபோல என்று கூறிவிட்டார் பாேல. ரத்னா யாருக்காக காத்திருந்தாளோ அவரே ரத்னாவின் எதிரில் வந்து நின்றார்.

ரத்னா இருந்த அறையின் கதவை திறந்து கொண்டு ரூபவதி உள்ளே வந்தாள். உள்ளே வந்தவள் ரத்னா விழித்துவிட்டதை கண்டதும் கதவை தாளிட்டு திரும்பி,

"என்ன ரத்னா நம்ம பசங்க உன்ன நல்லா கவனிச்சு இருக்காங்க போல, உன்னைக் இதுக்குமேல கஷ்டபடுத்த இந்த அக்காவுக்கு விருப்பமில்லை. அதனால நீ என்ன பண்ற அடம் பிடிக்காமல் இந்த பத்திரத்தில் கையெழுத்து போடு. போட்டா உடனே உனக்கு நிச்சயமா விடுதலை கிடைக்கும்."

"நீ விடுதலைன்னு சொல்றது என்னுடைய மரணம்தான்னு புரியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை. ஒரு காலத்துல நீ சொல்றது எல்லாத்தையும் நம்பி உனக்காக ஏங்கினா ரத்னா என்று இன்னும் நீ என்ன நெனச்ச ஐ அம் சோ சாரி பார் இட்."

"நாட் பேட் என்ன பார்த்த உடனே நீயா அக்கா இப்படி பண்ணுனான்னு அதிர்ச்சி அவ, என் காலை பிடித்து கெஞ்சிவனு எதிர்பார்த்தேன், என்னுடைய எதிர்பார்ப்பை இப்படி பொய்யாக்கிட்டியே. இட்ஸ் ஓகே இந்த பத்திரத்தில் கையெழுத்து போடு."

"போட முடியாதுன்னு சொன்னா என்ன செய்ய முடியும் உன்னால, மிஞ்சி மிஞ்சி போனா ஜஸ்வந்த் காெலை பண்ண மாதிரி என்னையும் கொல்ல மட்டும் தான் உன்னால முடியும்.

அதுக்காக உன்னைப் பார்த்து பயப்பட்டு இதுல கையெழுத்து போடுவேன்னு எதிர்பார்க்காதே."

"ரத்னா நீ என்னைக்கும் உன்னை பத்தி அதிகமா யோசிக்க மாட்ட, அதனால உனக்கு உன்னுடைய மரணம் பயத்தை தராது. ஆனா உனக்கு வேண்டப்பட்ட ஒருத்தருடைய மரணம் நிச்சயமா பயத்தை தரும். அந்த பயத்துல நீ நிச்சயமா கண்டிப்பா கையெழுத்து போடுவ." ரூபா யாரைப்பற்றி கூறுகிறாள் என்பதை யோசித்த ரத்னா ஒருநிமிடம் அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருக்க

"எஸ் ரத்னா யுவர் கெஸ் இஸ் ரைட், நீ யார கெஸ் பண்ணி இருக்கிறியாே அவன தான் நானும் முடிவு பண்ணியிருக்கேன். இப்ப மட்டும் நீ இதுல கையெழுத்துப் போடலை உன்னுடைய பிரியத்துக்குரிய அஜீத் அத்தான் உயிரோட இருக்க மாட்டான்.

நீ ரொம்ப யோசிச்ச உன்னை தேடி இந்நேரம் ரோட்டில நாய் மாதிரி சுத்திக்கிட்டே இருக்கிறவன் நாய் மாதிரியே செத்துப் போய்விடுவான்." ரூபாவின் மிரட்டலுக்கு பயப்படாத ரத்னா

"வெல் ட்ரை, நான் பயந்துட்டேன் இப்ப நான் என்ன பண்ணனும் அக்கா ப்ளீஸ் அத்தான ஒன்னும் பண்ணிடாத, நான் இதுல கையெழுத்து போடுறேன் அப்படின்னு உன் காலை புடிச்சு கெஞ்சனும்னு நீ நினைக்கிறாயா,
நாட் அட் ஆல்.

நான் பயம் இல்லாம இங்க உன் கூட உட்கார்ந்து இருக்கும்போது உனக்கு தெரிய வேண்டாம் முன்னேற்பாடு இல்லாமல் நான் வந்து இங்கே இருக்க மாட்டேன்னு." ரத்னாவின் தெளிவான பேச்சைக் கண்டு ஒரு நிமிடம் உள்ளுக்குள் பதறிய ரூபா

"நீ என்ன சொல்ற"

"நீ ஜஸ்வந்த்தை கொலை பண்ணது எனக்கு முன்னமே தெரியும், என்னையும் கொலை பண்ண முயற்சி பண்ணதும் எனக்கு தெரியும்.

அப்படி இருக்கும்போது நீ என் வந்து என்ன கடத்தி கொலை பண்ற வரைக்கும் நான் சும்மா இருப்பேன் நினைச்சியா. இந்நேரம் நீ என்னை கடத்தி வச்சிருக்கிற விஷயம் என்னுடைய ஃப்ரெண்ட் மூலமா நம்ம வீட்டுல இருக்கிற எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்."


ரத்னாவின் பேச்சில் வாய்விட்டு சிரித்த ரூபா

"ரத்னா ரத்னா நான் கூட நீ ரொம்ப புத்திசாலியா மாறிட்டியாேன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். எங்க என்ன பத்தி எல்லார்கிட்டயும் சொல்லி இருப்பியாேன்னு ஒரு சின்ன சந்தேகம் எனக்கு வந்துடுச்சு.இங்க பாருங்க.." எனக் கூறிக் கொண்டே ரத்னாவின் அருகில் வந்து அவள் கழுத்தை பிடித்து நெறித்த ரூபா

"ஏய் நான் உனக்கு முன்னே இந்த உலகத்தை பார்த்தவடி அப்படி இருக்கும் பொழுது உன்ன விட அறிவு எனக்கு அதிகம். நீ என்னை பற்றி விசாரிக்க ஆரம்பித்தது எனக்கு நல்ல தெரிஞ்சிடச்சி.

உனக்கு சேவகம் பண்ணிக்கிட்டு இருந்த அந்த முத்து இதே இடத்தில் இன்னொரு ரூம்ல கிடக்கிறான். அவன போயி எல்லார்கிட்டயும் தகவல் கொடுத்து உன்ன வந்து காப்பாத்த போறான். சோ சேட் சோ சேட்.

உன்னைத் தேடிக் கொண்டிருக்கிற யாருக்கும் என் மேல சந்தேகம் வரப்போவது இல்லை. உன்னையும் உனக்கு அடிமை வேலை பார்த்த அந்த முத்துவையும் காென்னு புதைச்சுட்டு இரண்டு பேரும் ஓடி பாேயிட்டதா எல்லாரையும் நம்ப வைக்க ஆதாரம் கூட ரெடி பண்ணிடேன்." என்று ரூபா கூறிக் கொண்டிருக்கும் பொழுது

டமால் என்ற சத்தத்துடன் அந்த அறையின் கதவு கீழே விழுந்தது. பெண்கள் இருவரும் திரும்பிப் பார்க்க அங்கோ ரத்தமென சிவந்த விழிகளுடன் நின்றுகொண்டிருந்தது அஜீத் தங்கவேலு மற்றும் ஹர்ஷத்.

மூவரும் ஒரே நேரத்தில் அறைக்குள் வர தன் திட்டம் அனைத்தும் வீணாகிவிட்ட கோபத்தில் ரூபா தன் இடையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரத்னாவின் நெற்றியில் வைத்து

"மூணு பேர்ல யாராவது ஒருத்தர் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தாலும் ரத்னாவை உங்களால உயிரோட பார்க்க முடியாது."

ரூபா நின்றிருந்த நிலைமையே அவள் கூறியதை செய்வாள் என்று உணர்த்த மூவரும் அசையாது நின்றனர். நடக்கும் அனைத்தையும் பார்த்த பிறகும், தன் மனைவியை நம்ப தயாராக இருந்த ஹர்ஷத்,

"ரூபா நீ இப்படி பண்ணுவேன்னு நான் கொஞ்சம்கூட நினைக்கல, எப்பொழுதும் ரத்னா என்னுடைய முதல் பொண்ணு அப்படின்னு சொல்ற நீயா இப்போ ரத்னாவை கொலை பண்ண பார்க்கிற.

என்னுடைய தம்பி எப்பவும் உனக்கும் தம்பி அப்படின்னு சொல்லி அவனுக்காக எல்லா விஷயத்தையும் முன்ன நிக்கிற நீயா அவனை கொலை பண்ணுன.

இப்பவும் கூட என்னால இத நம்ப முடியல நான் பார்த்த எல்லா ஆதாரமும் பொய் அப்படின்னு ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லு நான் நிச்சயமா உன்ன தான் நம்புவேன்."

ஹர்ஷத் குரலில் இருந்த மன்றாடல் ரூபாவை அசைத்தாலும் அவளுக்குள் இருந்த வெறி அவளை தடுத்தது.

"சாரி ஹர்ஷத் இதுவரைக்கும் உங்ககிட்ட நான் நிறைய பொய் சொல்லிட்டேன். இப்பவும் உங்க கிட்ட பொய் சொல்ல எனக்கு மனசு வரல, நான்தான் அவனை கொலை பண்ணுனேன் அதுவும் உயிருக்கு போராடி துடித்துக்கொண்டிருந்த அவனுடைய கழுத்துல மிதித்து கொலை பண்ணுனேன்."

ரூபாவின் கண்களில் இருந்த கொலைவெறியை கண்ட தங்கவேலு

"எதுக்காக இப்படி பண்ணுன ரத்னா நம்ம தங்கச்சி, ஜஸ்வந்த் உன் ஹஸ்பண்ட் தம்பி. அப்படி இருக்கும் பொழுது கேவலம் இந்த சொத்துக்காக வா அவர்களை கொலை பண்ணுன."

"எனக்கு சந்தாேஷமா வாழ இந்த சொத்து முக்கியம் தான் அதுவும் ஒரு காரணம் நான் இவங்கள கொலை பண்ண நினைத்ததற்கு. ஆனா அதைவிட இன்னொரு முக்கியமான காரணம்...." எனக் கூறிக்கொண்டு ஒரு கையில் இருந்த துப்பாக்கியை ரத்னாவின் கழுத்தில் அழுத்தி, மற்றொரு கையால் ரத்னாவின் முடியைப் பிடித்து இழுத்து,

"எல்லாம் இவளால் மட்டும்தான் என்னுடைய சந்தோஷம் எல்லாமே போயிடுச்சு."

"நீ பண்ண தப்புக்கு எல்லாம் ரத்னாவை காரணம் சொல்லாதே."

"என்னடா ரத்னா ரத்னான்னு ஓவரா உருகுற, இவ ஒன்னும் உன் கூடப் பிறந்தவள் இல்ல. ஆனால் நீ கூட இவள உன் தலையில் தூக்கி வெச்சிக்கிட்டு ஆடுவ அப்படி இருக்கும் பொழுது என் பக்கம் உள்ள நியாயம் உனக்கு எங்கே புரிய போகுது.

எல்லோருடைய வாழ்க்கையிலும் சின்ன சின்ன சந்தோசங்கள் நிறைய இருக்கும், ஆனால் என்னுடைய வாழ்க்கையில் அப்படி ஒரு சந்தோஷமே இல்லாமல் அழித்தது இதோ இந்த ரத்தனா தான்.

அம்மா இல்லாத நமக்கு நம்ம அப்பா இன்னொரு அம்மாவா இருந்திருக்கணும், ஆனால் அவருக்கு இந்த ரத்னா தான் என்னை விடவும் ஒசத்தி. என்னைக்காவது இவகிட்ட காட்டுன பாசத்துடன் ஒரு பாதி அளவாவது என்கிட்ட காட்டி இருப்பாரா.

நான் என்னமாே இவள கவனி மட்டும் பிறந்தா அடிமை மாதிரி தானே அந்த வீட்ல எல்லாரும் என்னை நடத்துனீங்க." எப்பாெழுதும் பாேல தன் பெரியப்பாவை பற்றி பேசியதும் காேபம் காெண்ட ரத்னா

"அக்கா தேவையில்லாம பெரியப்பா பத்தி தப்பா பேசாத அவருக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்."
"என்னை ரொம்ப புடிச்சதனாலதான் உனக்கு என்ன ஆயாவை பாக்க வைச்சாரா,
ரத்னாவ நல்லா பாத்துக்கணும்,
ரத்னாவுக்கு சாப்பாடு கொடுக்கணும்,
ரத்னாவை தூங்க வைக்கணும்,
ரத்னாவை படிக்க வைக்கணும் இப்படி உனக்கு எல்லாம் செய்யுறதுக்கு மட்டும்தான் நான் இருக்கிறேனா." அக்காவின் குற்றச்சாட்டில் பாெறுமை இழந்த வேலு

"ரூபா எல்லார் வீட்டிலேயும் சின்ன குழந்தைகளை பெரியவங்க பார்க்கிறது நடக்கிறது தானே. அவ சின்ன பொண்ணு அவளை நம்ம பார்த்துக்க சாெல்லுறது ஒரு தப்பே கிடையாது.

உன்னால ரத்னா எவ்வளவு கஷ்டப்பட்ட தெரியுமா, ஆனால் அது எதுக்கும் உன்ன அவ குற்றம் சுமத்துனது இல்லை. உனக்காக பெரியப்பா கிட்ட பேசி இருக்காளே தவிர நீ தப்பு பண்ணியிருந்தாலும் அதை பத்தி ஒரு மூச்சு விட்டது கிடையாது."

தங்கவேலு பேச பேச கோபம் தலைக்கேறிய ரூபா ஆங்காரத்துடன்

"இவ என்ன பத்தி தப்பா பேசறது இல்லையா." என தங்கவேலுவிடம் கூறிவிட்டு ரத்னாவின் புறம் திரும்பி

"சொல்லுடி என்ன பத்தி நீ தப்பா பேசினது இல்லையா, என் சந்தோஷத்தை மொத்தமா அழித்தது நீதானே."

"அக்கா உண்மையிலேயே நான் உனக்கு நல்லது மட்டும்தான் பண்ணனும்னு நெனச்சேன்."

"எப்படி எது எனக்கு நல்லது, என் காதலை மொத்தமா குழிதோண்டி புதைத்து தான் உனக்கு நல்லது." காத் என்றதும் துணுக்குற்ற ஹர்ஷத்

"ரூபா அதுதான் நம்முடைய கல்யாணம் நல்லபடியா நடந்துச்சு, அப்புறம் அவளால நம்ம காதல் எப்படி அழிஞ்சு போயிருக்கும்." எனக் கூறியவனை பார்த்து ஏளனமாக சிரித்த ரூபா

"நம்மளுடைய காதலா சாரி மிஸ்டர் ஹர்ஷத் தேவராஜ் அது உங்களுடைய காதல். நான் எப்பவும் உங்கள காதலித்தது இல்லை எனக்கு தேவை உங்களுடைய பணம் அதுக்காக மட்டும்தான் உங்கள காதலிக்கிற மாதிரி நடிச்சேன். கல்யாணமும் பண்ணிக்கிட்டேன்.

நான் காதலிச்சது என்னுடைய குமார் மாமாவை. அதை இந்த ரத்னா என் அப்பா கிட்ட சொல்லி என்ன அடிவாங்க வச்சா, அதுமட்டுமா இவளால் தான் என்னுடைய குமார் மாமா என்ன விட்டு ரொம்ப தூரம் போயிட்டாரு."

குமார் என்பவன் ரத்னா தாய் பார்வதியின் உடன் பிறந்த தம்பி. பார்வதிக்கு எந்த அளவு நல்ல குணமாே அதற்கு எதிர்மறையாக குணம் நிறைந்தவன் குமார்.

பெரிய குடும்பத்தில் தன் அக்காவை திருமணம் செய்து வைத்ததன் மூலம் தன் வாழ்வில் பெரிய நிலையை அடையலாம் என கனவு கொண்டிருக்க, பார்வதியோ புகுந்த வீட்டில் உள்ளவர்களுக்கு விசுவாசம் உள்ளவளாக இருக்க, இதனால் குமார் வேறு ஒரு வழியை தேர்ந்தெடுத்தான். அந்த வழி தான் ரூபா.

ரூபாவின் மனதில் குடும்பத்தினரை பற்றி தவறான அபிப்பிராயங்களை விதைத்து அதன்மூலம் தான் மட்டுமே ரூபாவின் நலம் விரும்பி, மற்றவர்கள் அனைவரும் அவளிடம் உண்மையான அன்பு இல்லாதவர்கள் என நம்ப வைத்தான்.

பள்ளிக் காலத்திலேயே இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசுவதை எட்டு வயது ரத்னா எதர்ச்சையாக தன் பெரியப்பாவிடம் கூறிவிட, அதன் பின்பு தொடர்ந்து தன் மகளை கண்காணித்த முத்துவேல் ரூபாவை கண்டித்ததுடன் குமார் அதன்பின் ஊருக்குள் வர முடியாத வகையில் நன்கு கவனித்து அனுப்பினார்.

நடந்த அனைத்துக்கும் காரணம் ரத்னா என்பதை அறிந்துகொண்ட ரூபா அவள் மனதில் ரத்னா மீதான வன்மத்தை வளர்த்துக்கொண்டாள்.

அடுத்த வருடம் கல்லூரியில் சேர ரூபா முயற்சிக்கும் பொழுது வீட்டினர் ரத்னாவை காரணம்காட்டி மறுக்க, அது ரத்னாவின் மீதான வன்மத்தை வளர செய்தது.

கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம் ஹர்ஷத் ரூபாவின் புறத்தோற்றத்திலும் போலியான நடிப்பிலும் ஏமார்ந்து காதலிக்க ரூபா அதை கண்டுகொண்டதாக காட்டிக்கொள்ளவில்லை.

கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த
ரூபா மீண்டும் குமாரின் காதலை புதுப்பித்துக்கொள்ள இது எதுவும் முத்து வேலிற்கு தெரியாமல் போனது.

பிழைப்பதற்கு வழி இல்லாமல் தவித்த குமார் முதலில் ரூபாவை திருமணம் செய்துகொண்டு அவள் சொத்தை கைப்பற்ற வேண்டும் என நினைத்தான். ஆனால் அது நடக்காது என்பதை புரிந்து கொண்டு ரூபாவை ஹர்ஷத் காதலை ஏற்றுக்கொள்ள கூறினான். முதலில் ரூபா மறுத்தாலும் காதலை ஏற்றுக்கொண்டாள்.

ஹர்ஷத் ஒவ்வொரு முறையும் ரூபாவிற்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசளிக்க முதலில் மறுப்பது போல் நடித்தாலும் அவை அனைத்தையும் வாங்கிக் கொள்ள ஆரம்பித்தாள்.

ஹர்ஷத் ரூபா திருமணம் முடிந்த பின்பு ஹர்ஷத்தை தன்னிடமிருந்து பிரித்து வைக்க தான் தன் தங்கையின் நினைவில் வருந்துவதாக மொத்த குடும்பத்தையும் நம்ப வைத்தாள்.

ஒவ்வொரு முறையும் தனக்கு நகை வாங்கும் பொழுது தன் தங்கைக்கு என்று கூறியும், தன் தங்கை பாேன்று இருக்கும் பெண்களுக்கு உதவுவதாக கூறியும் பணத்தை எடுத்து குமாரிடம் கொடுக்க ஆரம்பித்தாள்.

மனைவியின் மீது அளவுகடந்த காதலை வைத்து இருந்த ஹர்ஷத் ரூபா தவறு எதுவும் தெரியாமல் போனது.

ஆனால் படிப்பு முடிந்து தொழிலை தன் கையில் எடுத்த ஜஸ்வந்த் ரூபா நிர்வாகத்தின் கீழ் உள்ள தொழிலில் பல்வேறு குளறுபடி இருப்பதையும், பணம் கையாடல் இருப்பதையும் அறிந்து அதற்காக ரூபாவிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தான்.

இருந்தும் ரூபாவின் மீது சந்தேகம் கொள்ளவில்லை. இந்நிலையிலேயே ஜஸ்வந்த் ரத்னா திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சூழ்நிலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரூபா அஜீத் குடும்பத்திலும் பல பிரச்சனைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்ய ஆரம்பித்தாள்.

இவை அனைத்தும் தெரிய வரும்பொழுது அனைவரும் ஜஸ்வந்த் குற்றம் சுமத்துவது, அதன்பின்பு ஜஸ்வந்த் தனது தவறை கண்டித் கண்டுபிடித்தாலும் யாரும் நம்பப் போவதில்லை என ஒரு திட்டம் வகுத்தாள்.

இந்நிலையில் ஸ்டெல்லாவிற்கு அஜீத் மீதியிருக்கும் விருப்பத்தை தெரிந்துகொண்ட ரூபா தன் திட்டத்திற்கு ஸ்டெல்லா பயன்படுத்த ஆரம்பித்தாள். அஜீத்தை அடைய வேண்டும் என்ற ஆசையில் ஸ்டெல்லாவும் ரூபாவின் திட்டத்திற்கு உதவ ஒப்புக் கொண்டாள்

ஆனால் இவர்கள் மூவரும் எதிர்பாராத ஒரு திருப்பம் அஜீத் ஜஸ்வந்த் சந்திப்பு. ரத்னா திருமணம் முடிந்து வந்த ரத்னாவின் மனதில் ஜஸ்வந்த் பற்றி தவறான அபிப்பிராயங்களை ரூபா விதைக்க ஆரம்பித்தாள்.

குமார் பிடியில் இருந்த ரூபா தன்னால் முடிந்தவரை ரத்னா அஜீத் ஜஸ்வந்த் வாழ்க்கையில் பிரச்சினைகளை உருவாக்க ஆரம்பித்தாள்.

திருமணம் முடிந்ததும் சிறிது காலம் தொழிலின் பிரச்சினைகளை மறந்து இருந்த ஜஸ்வந்த் மீண்டும் அதை பற்றி தீவிரமாக விசாரணை செய்ய குளறுபடி எங்கிருந்து ஆரம்பிக்கின்றது என்பதை தெளிவாக கண்டுகொண்டு கோபத்துடன் வீட்டிற்கு வந்தான்.

அனைத்தையும் வீட்டினரிடம் தெரியப்படுத்தாமல் யாருக்கும் தெரியாமல் ரூபாவை கண்காணிக்க ஆரம்பித்தான். அதில் தெரியவந்தது ரூபா மற்றும் குமார் காதல்.

தன் அண்ணனை இத்தனை வருடங்களாக ரூபா ஏமாற்றி இருப்பதை அறிந்துகொண்ட ஜஸ்வந்த் நேரடியாகவே அவளை எச்சரிக்கை செய்தான்.

ஜஸ்வந்த் ரத்னா வீட்டிலிருந்து கிளம்பிய அன்று ரூபா குமார் இருவரும் இணைந்து ஹர்ஷத் கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் கிடைக்க அங்கிருந்து உடனே ஜஸ்வந்த் ரத்னா உடன் புறப்பட்டான். வரும் வழியில் ரத்னா ஜஸ்வந்த் இருவரையும் கொலை செய்ய ரூபா குமார் இருவரும் திட்டமிட்டு இருக்க அதிர்ஷ்டவசமாக ரத்னா உயிர் பிழைத்தார்.

உயிருக்கு உயிராக காதலித்த தன் காதல் மனைவி மற்றொருவனை காதலித்தால் என்பதையும், அவனுடன் சேர்ந்து சதி செய்து தன் தம்பியை கொன்றால் என்பதையும் தாங்கிக்கொள்ள முடியாத ஹர்ஷத் மடங்கி அமர்ந்துவிட்ட அவனை தங்கவேலு தாங்கி பிடிக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் ரூபாவின் கையில் இருந்த துப்பாக்கியை அஜீத் தட்டிப் பறித்தான்.

தன் கையில் இருந்த துப்பாக்கி பறிக்கப்பட்டது நிலைதடுமாறி கீழே விழுந்தாலும் எழுந்து

"என்ன கொலை பண்ண போறியா அஜீத் உன்னால முடியாது, ஒருவேளை நீ என்ன காென்னாலும் எனக்கு பிரச்சனை இல்ல. நான் இதாே இவனை காதலிக்கிற மாதிரி நடித்திருந்தாலும் நீ ரத்னாவை உண்மையா காதலிச்ச, நான் செத்து நீ ஜெயிலுக்கு பாேயிட்ட இவளால காலம் முழுக்க உன்னாேட நிம்மதியா வாழ முடியாது. அது பாேதும் எனக்கு."

"நீ சொல்றது உண்மைதான் என்னால உன்னை மட்டும் இல்ல யாரையும் எப்பவும் கஷ்டப் படுத்த முடியாது. ஆனா உனக்கு தண்டனை கொடுக்க முடியும், எந்த காதலனுக்காக இவ்வளவையும் செய்தாயோ அவன் இப்போ உயிரோட இல்ல." எனக்கூற அடுத்த நொடி அவன் சட்டையை பிடித்த ரூபா

"என்ன சொல்ற என்னுடைய குமாரை என்ன பண்ண சொல்லு."


உன் நிழலை நான் தாெடர்வேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
செசிலி வியாகப்பன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top