உன் நிழல் நான் தாெட ep 21 (2)

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#1
ஸ்டெ ல்லா முகத்தை ஒருமுறை பார்த்திருந்தாலும் ராபட் அஜீத்திற்கு உதவும் முயற்சியை கை விட்டிருப்பார்.

விதி வலியதாே!


"சரி இப்போ ரூபா ரத்னாவை எங்க கடத்தி வைத்திருக்கிறான்னு அவர்கிட்டயே கேட்டா என்ன."

"இல்ல அங்கிள் நடந்ததை நான் சாென்ன, இப்ப நான் சொல்றத யாரும் நம்ப மாட்டாங்க. அப்படியே நம்பினாலும் நாம போறதுக்கு முன்னே அந்த ரூபா ரத்னாவை ஏதாவது பண்ணிடுவா. நான் ரத்னாவை நெருங்க முயற்சி பண்றது அந்த ரூபாக்கு தெரியக்கூடாது."

"ஓகே லீவ் இட் எனக்கு தாெழில் சம்ந்தமா அண்டர் கிரவுண்ட் இருக்காங்க, அவங்க மூலமா இதை யார் பண்ணி இருக்கான்னு முதல்ல கண்டுபிடிக்கலாம். கண்டுபிடிச்சிட்ட நாம சுலபமாக ரத்னாவை நெருங்கி விடலாம்."

_________________________________________________________________________


"அத்தான் இப்ப நமக்கு இருக்கிற ஒரே பிரச்சினை ரூபா ரத்னாவை எங்க வைத்திருக்கிறாங்கிறது தான், கண்டிப்பா அவகிட்ட கேட்டா சொல்ல போறது இல்ல. ஆனால் நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் அது ரத்னாவுக்கு தான் ஆபத்து."

"ரூபா ரத்னாவை கடத்தி வைத்திருக்கிறது உண்மை என்றால் அவ எங்க வச்சிருப்பான்னு எனக்கு தெரியும்."

"உங்களுக்கு தெரியுமா."

"நாலு வருஷத்துக்கு முன்னாடி ஜஸ்வந்த் இங்க ரத்னா பெயரில் ஒரு வீடு வாங்கினான். அது கொஞ்சம் ஆள் நடமாட்டம் இல்லாத ஏரியா தான். அங்க அவங்க இருக்க வாய்ப்பு அதிக இருக்கு." தங்கவேலு ஹர்ஷத் இருவரும் அந்த வீட்டை அடைய,

அதேநேரம் அஜீத், பிரபு, ராபர்ட் என மூவரும் அங்கு வந்து சேர்ந்தனர். ஐவரும் உள்ளே வந்து சேர்ந்த நேரம் அவர்கள் கண்டது வாசலின் அருகில் ரத்தவெள்ளத்தில் கிடந்த ஒருவனையும், அவன் அருகில் நின்ற ஜஸ்வந்த் ஆன்மாவை மட்டுமே. அனைவரையும் பார்த்து ஜஸ்வந்த் ஆன்மா

"என்னுடைய மரணத்துக்கு நானே பலி வாங்கிட்டேன். இவனோட மரணம் நிச்சயமா இவனுக்கும், இவனாேட இருந்த இன்னொருதற்கான தண்டனையாகவும் இருக்கும். எனக்கூறிவிட்டு அஜீத் அருகில் வந்து

"உன்னை மட்டும் நம்பி நான் இங்கே இருந்து போறேன், இனி உங்க வாழ்க்கையில குறுக்கிட மாட்டேன். என்னுடைய பேபிய பத்திரமா பாத்துக்கோ."

ஜஸ்வந்த் ஆன்மா அங்கிருந்து மறைந்தது சில வினாடிகள் உணர்வற்று நின்ற அனைவரும் இறந்த நபரின் அருகில் சென்று பார்க்க, தங்கவேலு

"இது குமார் மாமா. இவர் எப்படி நீங்க இங்கே."

உன் நிழலை நான் தொடர்வேன்
 
Advertisement

Sponsored