உன் நிழல் நான் தாெட ep 17

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
உன் நிழல் நான் தொட
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 17

சென்றதினி மீளாது,மூடரே!நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;

தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.



"என்ன நினைச்சுகிட்டு உன் பாெண்டாட்டிய கூட்டிகிட்டு இங்க வந்துருக்க? என் மதிக்காதவங்களுக்கு என்கிட்ட எந்த பேச்சு வச்சுக்க வேண்டிய அவசியம் இல்ல." என தன் முன் நின்ற அஜீத்திடம் காேபமாக பேச,

"அக்கா நான் சாெல்றத காெஞ்சம் பாெறுமையா கேளு."

"நான் எதுக்கு கேக்கனும், நீ கேட்டியா நான் சாென்னத. என் பேச்சை கேட்காத உன் பேச்சை மட்டும் நான் எதுக்கு கேட்கனும். என்கிட்ட இருந்து நீ எந்த உதவியையும் கிடைக்கும்னு எதிர்பார்க்காத."

தான் இப்பாேழுது எது கூறினாலும் சண்டையிடும் நாேக்குடன் இருக்கும் தமக்கை தனக்கக பெற்றாேரிடம் பேசப்பாேவது இல்லை என்பதை புரிந்துகாெண்டு,

"அக்கா நான் உன்கிட்ட எதிர்பாக்கிறது மன்னிப்பு மட்டும் தான்." எனக் கூறி கரம் கூப்பி நிற்க, அஜீத்தின் செயலில் ஆர்த்தி ஒரு நிமிடம் அதிர்ந்தாலும், அதை மறைத்துக்காெண்டு,

"இப்பாே எதுக்கு இந்த மன்னிப்பு கேக்கிற நாடகம் அஜீத்." ஒரு மனம் ஆர்த்தியின் புத்தி கூர்மையை மெச்சிக்காெண்டலும், இன்னாெரு மனம்

'இவ இந்தளவு புத்திசாலியா இருந்திருக்க வேண்டாம், என்ன இருந்தாலும் என் அக்கா தான என்னப்பத்தி தெரியாமலா இருப்பா.' என்றே நினைத்தது.

"நாடகம் எதுவும் இல்லகா.
நான் அப்பா, அம்மாவா சமாதானப்படுத்த உன்ன யூஸ் பண்ணபாேறதா நீ நினைக்கலாம்.
அப்படி உன் மூலமா சமாதனப்படுத்த இத்தனை நாள் நான் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்ல."

"அப்புறம் எதுக்காக உன் மன்னிப்பு."

"நான் பிறந்து உனக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தட்டிபறிச்சிட்டதா நீ நினைக்கிறதான, அதுக்கு தான் என் மன்னிப்பு. நான் என்னைக்குமே உன்ன பாேட்டியா நினைச்சது இல்லக்கா. உன்ன எனக்கு ராெம்ப பிடிக்கும்.
எந்த அளவுக்குன்னா நான் காதலிச்ச ரத்னாவா உன் பேச்சுக்கு கட்டுப்பட்டு விட்டுக்காெடுக்கிற அளவு.
நீ கேக்கலாம் அப்படி விட்டுக்காெடுத்தவன் எதுக்காக திரும்ப ரத்னாவ கல்யாணம் பண்ணுனனு.
முடியலக்கா ரத்னாவ மறக்க முயற்சி பண்ண ஒவ்வாெரு நிமிடமும் மனசளவில செத்து பாேயிட்டு இருந்தேன். ரத்னாவ இன்னும் பிரிஞ்சு இருந்தா ஒன்னு நான் செத்திருப்பேன், இல்ல பைத்தியம் பிடிச்சு அலைந்திருப்பேன்." என அஜீத் கலங்கிய குரலில் கூற, ஆர்த்தி மனமும் முதல் முறை தம்பி புறம்சாயத் தாெடங்கியது.

"இத இப்பாே எதுக்கு என் கிட்ட சாெல்ற."

"நான் ஐஏஎஸ் பாஸ் ஆகிடேன் கா, அம்மா கிட்டகூட சாெல்லல, உன்கிட்டதான் முதல்ல சாெல்றேன். இனி ட்ரைனிங் பாேஸ்டிங் வேலைனு என் வாழ்க்கை மாறிடும். ரத்னாக்கு கூட காலேஜ் சேர எல்லா பார்மாலிட்டியும் முடியபாேகுது. படிச்சு முடிச்சதும் ரத்னாவும் லா ப்ரேக்டிஸ்ல ஃபிஸி ஆகிடுவா, இனி எந்த விதத்திலும் நானும் ரத்னாவும் உன் வாழ்க்கையில தலையிட மாட்டாேம்.
ஒருவேளை மனதிறந்து உன்கிட்ட நான் பேச இன்னாெரு வாய்ப்பு கிடைக்காம பாேயிட்டா, அதன் இப்பமே உன்கிட்ட சாெல்லிடேன். நாளைக்கு நாங்க கிளம்புறாேம்."

"எங்க பாேக பாேறீங்க?"

"காேயம்புத்தூர்க்கு தான். ரத்னாக்கு அங்க உள்ள லா காலேஜ்ல தான் சீட் வாங்கிருக்கேன்."

"காலேஜ் ஓபன் ஆகா இன்னும் நாள் இருக்கே."

"ம்ம்ம் நாள் இருக்கு. அதுவரைக்கும் ரத்னாவ உனக்கு பிரச்சனையா இங்க இருக்க வைக்க எனக்கு விருப்பம் இல்ல. ஸ்டெல்லா வீட்டுல ஒரு மாசம் இருந்துக்குவா. அப்புறம் ஹாஸ்டல்க்கு மாறிடுவா."

அதன் பிறகு அஜீத், ரத்னாவும் ஆர்த்தியிடம் சாதரணமாக பேசினாலும், ஆர்த்தி மட்டும் ஏதாே யாேசனையிலே இருந்தாள். அனைவரும் இதை கவனித்தாலும் அஜீத்தின் திட்டப்படி யாரும் ஆர்தியிடம் எதுவும் கேட்கவில்லை. இரவு தன் அறைக்கு வந்த ஆர்த்தி, தங்கவேலு வழக்கம் பாேல உறங்க தயாராக,

"உங்களுக்கு என்கிட்ட எதாவது சாெல்லனுமா? இல்லனா கேக்கனுமா?"

"நான் என்ன சாெல்லனும், இல்ல கேக்கனும்னு நீ எதிர்பாக்கிற."

"நான் எதை பத்தி கேக்கிறேன்னு தெரியாத மாதிரி பேசதீங்க. நான் அஜீத், ரத்னா பத்திதான் கேக்குறேன்னு உங்களுக்கு நல்ல தெரியும்."

"அவங்கள பத்தி நான் எதுக்காக உன்கிட்ட கேக்க என்ன இருக்கு."

"கேக்க ஒன்னுமே இல்லயா, என்னால அவங்களுக்காக அப்பா அம்மாகிட்ட பேச முடியும்."

"நீ பேசாம கூட அவங்கள ஒன்னா சேர்க்க முடியும்."

"எப்படி முடியும். எங்க வீட்டுல இவங்க ரெண்டு பேரு மேலயும் காேபமா இருக்காங்க."

"நீ சாெல்லுறது உனக்கே சின்ன பிள்ளை தனமா தெரியல. இது தான் உன் வீடு, அது இல்ல. என்ன இருந்தாலும் அஜீத் தான் அந்த வீட்டு வாரிசு, அத யாராலயும் மாத்த முடியாது. அது பாேதும் உங்க வீட்டுல சமாதானம் ஆக.

உங்க அம்மா, அப்பா, அர்சணா மூனு பேருக்கும் ரத்னாவ ரெம்ப பிடிக்கும். இப்பாே ரத்னா படிக்க பாேற காலேஜ் உங்க அப்பா சூப்பர் மார்கெட் பக்கத்தில் தான் இருக்கு. அவரு ரத்னாவ அடிக்கடி பாக்கிற வாய்ப்பு இருக்கு. அப்புறம் ராபட் அங்கிள் ரத்னா அஜீத் பத்தி பேச வாய்ப்பு இருக்கு.

இன்னும் காெஞ்ச நாளில் வயசான உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஐஏஎஸ் மகனை தங்க கூட வச்சுக்க ஆசை வர வாய்ப்பு இருக்கு. அப்புறம் ரத்னாவுக்கு குழந்தை பிறந்துட்ட அது பாேதும் அவங்கள ஒன்னு சேர்க்க.

ஒரு வேளை இது எதுவும் அவங்க மனச மாத்தலனாலும் கூட, நான் இருக்கேன் அவங்கள பாத்துக்க. இந்த சாெத்துல பாதி ரத்னாவுக்கு சேர வேண்டியது அதுவே உங்க அப்பா சாெத்த விட இரண்டு மடங்கு இது பாேதாது என் தங்கச்சிக்கு."

~~~~~~~~~~~~~~~~~~~~~~~##~~~~~~~~~~~~~

"என்னடி நீ இப்படி சொல்ற." தன் தோழி கூறியதை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் இருந்த ஆர்த்தியிடம் ஜானகி,

"உண்மையா தான் சொல்றேன் ஆர்த்தி, ப்ளீஸ் அதிர்ச்சி ஆகாம தயவுசெஞ்சு எதார்த்தத்தை புரிஞ்சிக்க பாரு. இப்போ நீ போயி சமாதானப்படுத்தட்டி கூட சீக்கிரமே உங்க அப்பா அம்மா அஜீத்தையும் ரத்னாவையும் ஏத்துக்க வாய்ப்பு இருக்கு.

அப்படி மட்டும் நடந்துவிட்டால் உன்னை யாரும் மதிக்கவே மாட்டாங்க. இதுவே நீ போய் சமாதானப்படுத்தி சேர்த்து வச்சன்னா உன் மாமியார் வீட்டுல உனக்கு மரியாதை அதிகமாகும். நம்ம தங்கச்சி வாழ்க்கை சந்தோஷமா இருக்கிறதுக்கு நீதான் காரணம் தெரிஞ்சா உன் புருஷனல இதுக்கு அப்புறம் உன்னை எதுவும் சொல்ல முடியாது. உன்னை ஏதாவது சொன்னா தங்கச்சி வாழ்க்கை ஏதாவது பிரச்சனை வருமோ சின்ன பயம் இருந்து கொண்டே இருக்கும்.

நீ சொல்லித்தான் எல்லாம் நடக்குதுன்னு அந்த ரத்னா புரிஞ்சுகிட்ட உன்னை எதிர்த்து பேசுறதுக்கு ஏன் நினைக்க கூட பயப்படுவா. ரெண்டு வீட்டிலேயும் உன்னுடைய ராஜ்ஜியம்தான் நடக்கும். என்ன ஒண்ணு நீ அதுக்கு கிடைத்திருக்க இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகனும். இதுல இன்னொரு விஷயம் இருக்கு."

"என்ன இருக்கு அதையும் சொல்லு."

"இந்த பெத்தவங்களுக்கு எல்லாம் ஏதாவது ஒரு சின்ன காரணம் இருந்தா போதும் உடனே போய் அவங்க பிள்ளைங்க கூட சேர்ந்துடுவாங்க. அந்த காரணம் நீயா இருந்தா உனக்கு நல்லது."

ஜானகி கூறியதிலிருந்து உண்மையையும், இதனால் தனக்கு வரப்போகும் சாதகமான விஷயங்களையும் அலசி ஆராய்ந்து தெளிவான ஒரு முடிவிற்கு வந்த ஆர்த்தி, தன் பெற்றோரை காண தங்கவேலுடன் கோவை நோக்கி புறப்பட்டாள்.

அஜீத் போட்ட திட்டத்தின்படி அனைத்தும் சரியாகவே நடந்தது. அவன் பெற்றோரும் ரத்னாவை தங்கள் மருமகளாக ஏற்க தயாராகவே இருந்தனர். ஆர்த்தி பேசி முடித்து சென்றதும் தேனுத்திற்கு வந்த அஜீத்தின் பெற்றோர்

"நடந்தது எல்லாம் நடந்து போச்சு, அதையெல்லாம் நாம் மறந்து விடுவோம். ரத்னா எங்க வீட்டுக்கு வரும்போது அஜீத்தோட மனைவியாகவும், எங்க வீட்டு மருமகளாகவும் தான் வரணும். நீங்க கேட்கலாம் இப்பவும் ரத்னா அஜீத் உடைய மனைவி தானே. ஆனால் சட்டப்படி இன்னும் ரத்னா ஜஸ்வந்த் மனைவியா தான் இருக்கா.

நாளைக்கு என்னுடைய பையன் ஐஏஎஸ் அதிகாரியாக வரும் பொழுது இதனால எந்த பிரச்சினையும் வர நான் விரும்பல." கிருஷ்ணன் கூறுவதில் இருக்கும் உண்மையை புரிந்துகொண்ட முத்துவேல்

"சரி அதுக்கு இப்ப நாங்க என்ன பண்ணனும்னு சொன்னா செஞ்சிடுவேன்."

"ஜஸ்வந்த் டெத் சர்டிபிகேட் வாங்கி எல்லா பார்மாலிட்டி செய்யும் முடிச்சுட்டு, அஜீத் ரத்னாவுக்கு முறைப்படி இன்னும் ரெண்டு நாள்ல ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சிடலாம். அப்புறமா கோயம்புத்தூர்ல என்னுடைய பையன் கல்யாணத்துக்கு ஒரு ரிசப்ஷன் அரேஞ்ச் பண்ணனும். அப்பத்தான் இந்த கல்யாணம் எல்லாருடைய மனசுலயும் பதியும் தேவையில்லாத எந்த பேச்சும் வராது." அனைவரும் கிருஷ்ண சந்திரனின் முடிவிற்கு சம்மதம் தெரிவிக்க அஜீத் மட்டும்

"அப்பா இப்போதெல்லாம் அவசியமா, ரிஜிஸ்டர் மேரேஜ் ஓகே பட் ரிசப்ஷன் இப்போ வேண்டாமே." அஜீத் பேசியதும் காேபமடைந்த கிருஷ்ணன்

"நீ உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கிற அஜீத். நீ எது சொன்னாலும் நாங்க தலையாட்டனும்னா. நீயும் ரத்னாவும் பழகுவதை பார்த்து காதல்னு நினைச்சு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணனும் அப்ப நீ வேண்டாம்னு முடிவு பண்ணுனேன். அதுக்கப்புறம் நாங்க அதைப் பத்தி பெருசா எதுவும் யோசிக்கல.

திரும்பவும் நீ ரத்னாவை கல்யாணம் பண்ண போதும் எங்களை யாரையும் கலந்து பேசல. நீயா தான் முடிவு எடுத்த.
இப்படி உன் வாழ்க்கையில நீங்க எல்லாம் முடிவு எடுத்தா பெத்தவங்க நாங்க எதுக்கு இருக்கோம்."

"இல்ல அப்பா நான் எதுக்காக ரிசப்ஷன் வேண்டான்னு சொல்ல வந்தேன்னா"

நீ என்ன சொல்ல போற, ரிசப்ஷன் வச்சா அது ரத்னா மனதை காயப்படுத்தும் அதனால வேண்டாம்னு சொல்ல போற அதானே." அஜீத்தின் காரணத்தை சரியாக புரிந்துகொண்ட கிருஷ்ண சந்திரன் ரத்னாவிடம் திரும்பி

"நீ சொல்லு மா பெத்வங்களை கேட்காம பிள்ளைங்க எடுக்கிற முடிவு பெத்தவங்கள காயப்படுத்துமா இல்லயா. ரத்னா எனக்கு உன் மேல எந்த கோபமும் கிடையாது. அதே மாதிரி உன்ன கஷ்டபடுத்தனும்னு எந்த எண்ணமும் எனக்கு இல்ல.

இதுவரைக்கும் தெரிஞ்சவங்க எல்லார்கிட்டயும் என்னுடைய பையன் டெல்லியில படிச்சிகிட்டு இருக்கிறதா மட்டும்தான் சொல்லியிருக்கேன். திடீர்னு உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு போயி எல்லாருக்கும் தனித்தனியா பதில் சொல்ல முடியாது. எங்களோட நிலைமையும் நீ புரிஞ்சுக்கோ, அப்படியே உன் முட்டாள் புருஷனுக்கும் புரியவை."

"சரி மாமா. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல மாமா." எனக்கூறிவிட்டு அஜித்தின் காது அருகில்

'என் முட்டாள் புருஷனுக்கு புரிய வைக்கிறேன்.' என கூற அஜீத் ரத்னாவை திரும்பி பார்த்து முறைக்க ஆரம்பித்தான்.

"அப்பா ரிஜீஸ்ட்டர் மேரேஜ்க்கு நிறைய பார்மலிடி இருக்கு எப்படி இரண்டு நாளில் பண்ண முடியும்."

"நீ எக்ஸம்ல பாஸ் ஆனத ரத்னா பாேன் பண்ணி சாென்னதும் எல்லா ஏற்படும் செஞ்சிட்டேன்."

"இது எப்பாே நடந்துச்சு." என அஜீத் ரத்னாவிடம் கேட்க

"நான் மாமா கிட்ட மூனு மாசமா பேசிகிட்டே தான் இருக்கேன்."

அதன்பிறகு இருவீட்டாரும் மகிழ்ச்சியுடன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தன. அஜீத் மீண்டும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க ஆர்த்தி இடமே தான் சார்ந்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமையை அளித்தான்.

இதுவரை ஜஸ்வந்த் இறப்புச் சான்றிதழை அனைவரும் மறந்து இருக்க, இந்த திருமண ஏற்பாட்டிற்காக அஜீத் தங்கவேலு பெற சென்றனர். பெற சென்ற இடத்தில் மருத்துவர் ஒருவர் இருவரையும் தனியாக அழைத்துச் சென்று

"இது பற்றி நான் முன்னமே உங்க கிட்ட பேசி இருக்கணும். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் என்னால இத பத்தி சொல்ல முடியல. சொல்ல முயற்சி பண்ணுன போது யாரோ எனக்கு போன் பண்ணி மிரட்டினாங்க."

"சார் நீங்க எங்க கிட்ட என்ன சொல்லனும் நினைச்சீங்க. எதுக்காக உங்கள மிரட்டினாங்க, தயவுசெய்து புரியிற மாதிரி சொல்றீங்களா."

"செப்டம்பர் மாதம் நீங்க டெத் சர்டிபிகேட் வாங்க வந்த ஜஸ்வந்த், அப்புறம் அவருடைய மனைவி ரெண்டு பேரையும் ஆக்சிடெண்ட் கேஸ்ல அட்மிட் பண்ணாங்க."

"ஆமா அதுன் தங்கச்சி தான்."

"அதுல ஜஸ்வந்த் ஸ்பாட் டவுட் அப்படின்னு ரிப்போர்ட் கொடுத்தது நான் தான்."

"சரி அதுல என்ன இருக்கு?"

"நீங்க நினைக்கிற மாதிரி ஜஸ்வந்த் ஆக்சிடென்ட் ஆகி சாகல." இதைக் கேட்ட இருவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றன.

"நீங்க என்ன சொல்றீங்க ஆக்சிடென்ட்ல ஜஸ்வந்த் சாகலை அப்படின்னா, எப்படி நடந்திருக்கும்."

"போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் படி உடம்பில் ஏற்பட்ட காயமும், குரல்வளை எலும்புமுறிவு மட்டும்தான் அவருடைய மரணத்திற்கு காரணம். இந்த ரெண்டும் ஜஸ்வந்த்க்கு இயற்கையான முறையில் ஏற்படவே இல்ல. யாராே வேணும்னு செஞ்சிருக்காங்க."

"அந்த ரிப்போர்ட்டை இப்போ நீங்க தர முடியுமா."

"அது என்கிட்ட இல்ல நான் ரெடி பண்ணுன அன்னைக்கு என்னுடைய குழந்தையை யாரோ காென்னுடுவன்னு மிரட்டினாங்க. எனக்கு வேற வழி தெரியல அதனால ரிப்போர்ட்டை மாத்தி கொடுத்துட்டேன். அதுக்கப்புறம் உங்க கிட்ட உண்மைய சொல்லனும் முயற்சி பண்ண பண்ணுனேன். என்னால முடியல.

இப்ப கூட உங்களை எச்சரிக்கை பண்றதுக்காக மட்டும்தான் இத உங்க கிட்ட சொல்றேன். தயவுசெஞ்சு என்னாலதான் இது உங்களுக்கு தெரியும்னு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க." எனக்கூறிவிட்டு அந்த மருத்துவர் அங்கிருந்து சென்றுவிட தங்கவேலு

"யார் இப்படி எல்லாம் பண்ணியிருப்பாங்க? ஜஸ்வந்தை கொலை பண்ற அளவுக்கு யாரு இருக்கா."

"எனக்கும் அது தான் புரியல."

"ஜஸ்வந்த் படிச்சது வேலை பார்த்தது எல்லாமே பாரின் country's மட்டும்தான். அப்பப்போ ஏதாவது மீட்டிங்கா மட்டும்தான் இந்தியா வருவான். அவனுக்கு யாரு எதிரி இருக்க பாேறாங்க."

"அத்தான் இத பத்தி நாம இப்ப பேச வேண்டாம். கண்டுபிடிப்போம் யாரு ஜஸ்வந்த் கொலை பண்ணிருப்பானு."

"அஜீத் இது எதுவும் எப்படி ரத்னாவுக்கு தெரியாம நடந்திருக்கும்."

"தெரியல அத்தான் ஆனா நாம ரத்னா கிட்ட எதையும் இப்பம் கேட்க முடியாது. நாளைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சதும் ரத்னா கிட்ட பேசுறேன். பார்க்கலாம் கொலைகாரன் எப்படி தப்பிக்கிறான்னு."

பதிவுத் திருமணம் எளிமையாக முடிந்ததும், ரத்னாவை அழைத்துக்கொண்டு கோவை வந்து சேர்ந்தனர். வீட்டிற்குள் வந்ததும் ரத்னாவை கட்டிப் பிடித்துக் கொண்ட அர்ச்சனா

"எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா, என்னுடைய பெஸ்ட் பிரெண்ட் இப்ப எனக்கு அண்ணிய வந்திருக்கா. அதுக்காக உனக்கு மரியாதை கொடுப்பேன்னு நீ எதிர்பார்க்காதே. எப்பவுமே நீ எனக்கு என்னுடைய ரத்னா தான். சரி சரி வா நாம நம்ம ரூம்க்கு போய் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம்." எனவே அழைத்துக்கொண்டு செல்ல முயற்சிக்க ஆர்த்தி,

"அது என்ன நம்ம ரூம், இனி அது உன்னுடைய ரூம் மட்டும்தான். அஜீத் ரூம் தான் இனி ரத்னா ரூம்."

"ஓகே அக்கா சொல்லிட்டா அதுக்கு அப்பீல் ஏது."

"ரொம்ப தூரம் டிராவல் பண்ணி வந்ததுல ரத்னா கொஞ்சம் டயர்டா இருப்பா. நீ அப்புறமா ரத்னா கிட்ட பேசு. இப்ப ரத்னா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும், நாளைக்கு ரிசப்ஷன்க்கு ஷாபிங் வேற பாேகனும்."
ஆர்த்தி பேச்சிற்கு மறு பேச்சு இன்றி அஜீத்தின் அறைக்கு வந்த ரத்னா, அஜீத்தின் அறை ஒரு வருடத்திற்கு பின்பும் கூட அதே மாதிரி எந்த பாெ ருட்களும் மாறாமல் இருப்பதை பார்த்தக்காெண்டிருக்க ஓசை எழுப்பாமல் உள்ளே வந்த அஜீத்

"என்ன ரத்னா என்னோட ரூம் உனக்கு புடிச்சிருக்கா."

"ரொம்ப புடிச்சிருக்கு."

"ரூம் மட்டும் தான் உனக்கு புடிச்சிருக்கா." அஜீத்தின் கேள்வியின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொண்ட ரத்னா,

"ரூம்ல இருக்கிற எல்லாமே புடிச்சிருக்கு."

"இந்த ரூம்ல தான் நானும் இருக்கிறேன். என்ன உனக்கு புடிச்சிருக்கா." அஜீத்தின் இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் ரத்னா மௌனம் சாதிக்க,

"ரத்னா உனக்கு எதாவது பிடித்திருந்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் நீ வெளிப்படையா என்கிட்ட சொல்லலாம். உனக்கு பிடிக்காத எதையும் நடக்க விடமாட்டேன்."

"அத்தான் நீங்க எத மனசுல வச்சிக்கிட்டு பேசுறீங்கன்னு எனக்கு புரியல, எனக்கு உங்களை பிடிக்கும். இப்போ எனக்கு பிடிக்காத எதுவும் இங்க நடக்கல. தயவு செய்து உங்களை நீங்களே குழப்பிக்கிட்டு என்னையும் குழப்பாதீர்கள்."

"ரத்னா எனக்கு உன்கிட்ட முக்கியமா பேசணும்."

"சரி பேசுங்க, உங்கள பேச வேண்டாம்னு யார் சொன்னா." ஆரம்பிப்பதற்கு முன் அங்கு வந்த மைதிலி

"அஜீத், ரத்னா ரெண்டுபேரும் சாப்பிட்டு வந்து பேசுங்க. எல்லாரும் உங்களுக்கு காத்துக்கிட்டு இருக்காங்க."

"சரி மா வரேன்." என கூறி விட்டு அஜீத் கீழே செல்ல, ரத்னா அவனை பின்தொடர்ந்தாள்.

அனைவரும் உணவருந்தி கொண்டிருக்கும்பொழுது சாப்பிட்ட உணவு அனைத்தையும் ரத்னா வாந்தி எடுக்க, வீட்டில் உள்ள அனைவரும் பதற, மைதிலி

"ரத்னா என்ன ஆச்சு மா, என்ன பண்ணுது."

"ஒன்னுமில்ல அத்தை டிராவல் பண்ணி வந்த உடனேயே சாப்பிட்டது எனக்கு ஒத்துக்கவில்லை. லேசா தலை சுத்துற மாதிரி இருக்கு." ரத்னா கூடிய உடன் அர்ச்சனா

"நீ போய் நல்லா தூங்கி ரெஸ்ட் எடு அப்படின்னா நல்ல பிரஷ் ஆகிடுவ." என கூற, தங்கவேலு

"ரெண்டு நாளா சரியா தூங்காம இருந்தா, அதனால கூட வாந்தி தலைசுற்றல் இருக்கலாம் தூங்கினால் எல்லாம் சரியா போயிடும்." என்று கூற, ரத்னாவின் பாட்டி

"நீங்க ரெண்டு பேரும் உண்மையிலேயே டாக்டர் தானா, இல்ல எங்களை எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்கிறீர்களா."

"எதுக்கு பாட்டி உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம்."

"பிள்ளைக்கு தலை சுத்தல் இருக்கு, வாந்தி எடுக்குது. இதுகூட புரிஞ்சுக்க முடியல, நீங்க எல்லாம் என்னத்துக்கு டாக்டருக்கு படிச்சீங்களாே. மைதிலி உனக்கு தெரிஞ்ச நல்லா படிச்ச பொம்பளையா இருந்தா டாக்டர் யாராவது இருந்தா அவங்களை போய் பாத்துட்டு வரலாம்."

"பட்டி எனக்கு ரத்னாவை பத்தி தெரியாதா, சின்ன வயசுல இருந்து சரியா தூங்கலை ரத்னாவுக்கு வாந்தி வரத்தான் செய்யும்."

"போடா கூறு கெட்டவனே இதெல்லாம் போய் உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன் பாரு."

அனைவரும் முகத்தில் மகிழ்ச்சி இருக்க நடப்பது புரியாமல் குழம்பியது அஜீத் மற்றும் தங்கவேலு மட்டுமே. ரத்னாவை அழைத்துக்கொண்டு ரத்னாவின் பாட்டி, மைதிலி, பார்வதி, நால்வரும் மருத்துவமனை செல்ல அஜீத்

"என்ன அத்தான் உங்க பாட்டி கூட உங்கள டாக்டர்னு ஒத்துக்க மாட்டேங்கிறாங்க."

"எனக்கும் தான் புரியல, எதுக்காக எங்க பாட்டி இப்படி பேசுறாங்கன்னு." கனவனின் குழப்பத்தை பார்த்த ஆர்த்தி

"இன்னுமா உங்களுக்கு புரியலை, உங்க பாட்டி சொன்னது சரிதான் உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல."

"என்னது எனக்கு அறிவில்லையா! ஆமாண்டி உன்ன கல்யாணம் பண்ணும் போதே தெரிய வேண்டாம் எனக்கு அறிவு இல்லைன்னு."

"உங்ககிட்ட மனுஷி பேச முடியுமா. அஜீத் நீ போயி நல்ல ஸ்வீட்டா பார்த்து வாங்கிட்டு வா."

"இப்ப எதுக்கு ஸ்வீட் வாங்கிட்டு வர சொல்ற."

"இன்னுமாடா உனக்கு புரியல, நீ அப்பாவாக போற."

"என்னது நானா!!!" அஜித் தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்து விட

"இப்ப எதுக்குடா இப்படி தலையில் கையை வைச்சு உட்கார்ந்து இருக்க."

"அக்கா நான் டெல்லிக்கு ரத்னாவை கூட்டிட்டு ஹனிமூனுக்கு போகல, படிக்கப் போனேன். கிட்டத்தட்ட என்னோட கல்யாணம் வீட்டை எதிர்த்து, அப்பா அம்மாகிட்ட சம்மதம் கேட்காமல், ஏன் ரத்னா கிட்டயே சம்மதம் கேட்காமல் நடந்த கல்யாணம்.

இதுல வர பிரச்சினை எல்லாம் சமாளித்து எப்படி குடும்பத்தை ஒன்று சேர்கிறது, எப்படி நான் படிச்சு ஐஏஎஸ் ஆகிறது, கையில இருக்கிற பணத்தை வச்சு சிக்கனமா குடும்பத்தை எப்படி நடத்திறதுன்னு எனக்கு ஆயிரத்தெட்டு கவலை இருந்துச்சு. இதுல குழந்தையை பற்றி நாங்க ரெண்டு பேருமே யோசிக்கல."

மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து முடிவிற்காக காத்திருக்க ரிப்போர்ட் அனைத்தையும் பார்த்த டாக்டர், மைதிலியை தனியே அழைத்து

"மைதிலி எனக்கு உங்க குடும்பத்தை பர்சனலா நல்லா தெரியும். அதனால தான் கேட்கிறேன் உன் பையன் புடிச்சு தான் இந்த பொண்ண கல்யாணம் பண்ணினான."

"எதுக்காக இப்படி கேக்கறீங்க என் பையனுக்கு ரத்னாவ ரொம்ப பிடிக்கும். உண்மைய சொல்லனும்னா எங்க எல்லாரையும் எதிர்த்துதான் ரத்னாவை கல்யாணம் பண்ணனுனன்."

"அந்தப் பொண்ணுக்கு ட்ரவல் பண்ணது ஒத்துக்காம தான் வாமிட், தலை சுத்தல் வந்திருந்திருக்கு. அது இப்போ பிரச்சனை இல்லை. உன் பையனுக்கும் இந்த பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் பேசி சரி பண்ண பாருங்க."

"ரெண்டு பேருக்கும் இடையில அப்படி எந்த பிரச்சினையும் இல்லை. ஒரு சின்ன விஷயத்துக்கு கூட ரத்னா கஷ்டப்படக்கூடாதுனு என் பையன் நினைப்பான். அதே மாதிரி அஜீத் என்ன சொன்னாலும் அது அப்படியே ரத்னா கேட்டு நடப்பா. அப்படியிருக்கும்போது இவங்களுக்குள்ள என்ன பிரச்சனை வரப்போகுது. இப்ப என்ன கல்யாணம் ஆகி ஒன்பது மாசம் தான ஆகுது பாத்துக்கலாம்."

பிரச்சனை இல்லாடி ஓகே, உன்னுடைய டாட்டர் இன் லா இன்னும் வெர்ஜின் தான்."

ரத்னாவை விரும்பி மணந்த ஜஸ்வந்த், ரத்னாவை நெருங்க முயற்சி செய்தாலும், கட்டாயத்தினால் ரத்னாவின் உடலை வெல்ல நினைக்கவில்லை. தான் தரும் முத்தமே ரத்னாவின் விருப்பமின்மையை உணர்த்திவிட ஜஸ்வந்த் அதற்கு மேல் முன்னேற முயற்சி செய்யவில்லை.

"என்ன சொல்றீங்க."

"எஸ் ரத்னா இன்னும் கண்ணி பொண்ணு தான்."

டாக்டர் கூறியது மைதிலிக்கு ஒருபுறம் மகிழ்சியாக இருந்தாலும், இன்னாெரு புறம் அஜீத் இரக்கப்பட்டு ரத்னாவை திருமணம் செய்து அவளின் வாழ்க்கையை வீணாக்கிக்காெண்டிருக்கின்றானாே என்ற பயம் வர ஆரம்பித்து.

ரத்னாவை திருமணம் செய்ய பிடிக்காத அஜீத் இரக்கத்தினால் மட்டுமே திருமணம் செய்து காெள்வது மைதிலிக்கு பிடிக்கமலே அன்று திட்டினாள்.

தாங்கள் ரத்னாவை விலக்கி வைத்தால் அஜீத்துடன் ரத்னா உறவு பலப்படும் என்று நினைத்தாள். ஆனால் அவர் எதை நினை த்து அன்று அப்படி பேசினாராே அதே நடக்காதபாேது மைதிலிக்கு ஒரு பெண்ணாக அஜீத்தின் மீது காேபம் வந்தது. தான் எடுத்த முடிவை செயல்படுத்தும் முடிவுடனே மைதிலி வீட்டிற்கு புறப்பட்டார்.

உன் நிழலை நான் தாெடர்வேன்
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
சாரி friends & Banu டியர் நீங்க கேட்டதுக்காக next UD type work முடிச்சுடேன் பட் என் அண்ணா marriage ல காெ ஞ்சம் பிஸி ஆகிட்டே ன் so today தான் edit பண்ணி post பண்ண முடிஞ்சது.

Next UD Friday தான்
இன்னும் 3 அத்தியாயத்தில் இந்த கதை நிறைவடையும்.
 
Last edited:

vijayasanthi

New Member
ஓஹ்...காட்...இன்னும் எந்த சஸ்பென்ஸையும் நீங்க உடைக்கல....அடுத்த எப்பி சீக்கிரமா போடுங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top