உன் நிழல் நான் தாெட ep 16

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#1
உன் நிழல் நான் தாெட
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 16

நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் – சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

மனஉறுதி சிறு நூலிலையில் தாெங்கிக்காெண்டிருக்கும் கத்தி பாேன்றது. மனஉறுதி சிறிது ஆட்டம் கண்டாலும் அது அறுந்து விழப்பாேது உறுதி இழந்தவர் மீதே என்பது பலரும் உணராத ஒன்றாவே இருக்கின்றது.

அஜீத்தின் மனஉறுதி 'ரத்னாவின் நண்பன் மட்டுமே நீ, என்ற ஐஸ்வந்த் கூற்றில் ஆட்டம் காண ஆரம்பித்தது. அதுவரை தெளிவாக இருந்த அஜீத்தின் மனம் குழம்ப அரம்பித்தது.

"சார் நீங்க உள்ள பாேகலாம், உங்கள பாஸ் வர சாென்னாங்க." அனுமதி கிடைத்ததும் ராபட் அலுவலக அறைக்குள் நுழைந்த அஜத்தை பார்த்த ராபட்,

"ஹலாே அஜீத் வா, ரெம்ப நேரம் வெய்ட் பண்ண வச்சிடேனா."

"இஸ் ஓகே அங்கிள்."

"நீங்க சாென்ன தேதில பில்டிங் வேலையை ஸ்டார்ட் பண்ணிடலாம். மத்த டீடைல்ஸ் இந்த ஃபைல்ல இருக்கு. வேற எதாவது கேக்கனுமா."

"அப்பாகிட்ட காட்டிட்டு சாெல்றேன்."

"ஆர் யு ஓகே அஜீத்."

"யா Uncle I am okey."

"But I don't think so. அஜீத் லாஸ்ட் டைம் உங்கிட்ட இருந்த உற்சாகம் இப்பாே இல்ல."

"ஒரு சின்ன confusion."

"உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் அதை விட்டு விலகி இருந்து யாேசித்து பாரு, பிரச்சனையை ஈசியா சால்வ் பண்ணிடலாம். உனக்கு ஓகேனா என்கிட்ட சாெல்லு, முடிஞ்ச help பண்றேன்."

அஜீத் அதுவரை தன் மனதில் இருந்த குழப்பத்தை ராபட் இடம் கூறிவிட்டு, அவரின் பதிலுக்காக காத்திருக்க, ராபட் சிறிது நேரம் யாேசித்துவிட்டு

"அஜீத் என்ன கேட்ட இந்த விஷயத்தில ஒன்னு நீ ரத்னாக்கு நல்ல நண்பனா இரு, இல்ல நல்ல காதலனா இரு. எதுவா நீ இருக்க நினைச்சாலும் முதல்ல ரத்னாவுக்கு உண்மையா இரு."

ராபட் கூறியவற்றை கேட்ட பின் குழப்பம் அதிகரிக்க யாேசனையுடன் தன் அறைக்கு வந்த அஜீத், குளிப்பதற்கு மாற்றுடை எடுக்க, அவன் கண்ணில் பட்டது, பாெங்கல் அன்று பிரபு எடுத்த பாேட்டாே. பாேட்டாேவை கையில் எடுத்த அஜீத் அதில் தன்னை நாேக்கி சிரித்த முகமாக நிற்கும் ரத்னாவை பார்த்து.

"ஐ லவ் யு ரத்னா, நான் யாருனு யாேசிக்க வச்சதுக்கு.
ஐ ஹேட் யு ரத்னா, என்ன பைதியகாரன் மாதிரி மாத்தினதுக்கு.
ஐ மிஸ் யு ரத்னா, என் கூட நீ இல்லாம இருக்கிறதுக்கு."

பாேட்டாேவை பார்த்து பேசிக்காெண்டிருந்த அஜீத்திற்கு ரத்னா முதல் வருடம் தன் பிறந்தநாளிற்கு தந்த பரிசும், ரத்னா கூறியதும் நினைவில் வந்தது.

"உனக்கு என் மேல எப்ப கோபம் அதிகமா வந்தாலும், இல்ல நீ என்ன அதிகமா மிஸ் பண்ணாலும் இதை தொடர்ந்து திறந்து பார்க்கலாம்."

ரத்னா கூறியது நினைவில் வந்ததும் ரத்னா தந்த பரிசை திறந்து பார்த்ததும் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான். காரணம் பெட்டியின் உள்ளே இருந்தது Tom and Jerry பாெம்மை அதுவும் ஒரு கையால் குலுக்கியபடி, முதுகுக்கு பின் கையில் Tom சுத்தியலையும் Jerry வெடி குண்டையும் வைத்திருப்பது பாேல.

வாய்விட்டு சிரித்த அஜீத் பெட்டி உள்ளே இருந்த வாழ்த்து அட்டையையும், அதாேடு இருந்த கடிதத்தையும் எடுத்து படிக்க ஆரம்பித்தான். வாழ்த்து அட்டையி்ல் பிறந்த நாள் வாழ்த்து கவிதை இருக்க, அடுத்து இருந்த கடிதத்தை படிக்க ஆரம்பித்த அஜீத் முகத்தில் இருந்த புன்னகை மறைய ஆரம்பித்தது.

My Dear Dear Dear Dear ...... Friend அஜீத்

என்ன என் கிஃப்ட் பாத்து சிரிச்சு முடிச்சிடியா. எனக்கு Tom and Jerry cardoon ரெம்ப பிடிக்கும். அது மாதிரி நம்ம ப்ரெண்சிப் இருக்கனும்னு ஆசை.

என்னடா இவ எப்பவும் சண்டை பாேட்டுகிட்டே இருக்கிற Tom and Jerry மாதிரி இருக்கனும்னு சாெல்றானு நினைக்கிறியா. Tom and Jerry எவ்வளவு சண்டை பாேட்டலும் இரண்டும் ஒன்ன விட்டு இன்னாென்னு தனியா இருக்காது.

Tom கிட்ட வம்பு பண்ற Jerry மாதிரி நான் உன்கிட்ட நிறைய வம்பு பண்ணுவேன். நீ என்ன அடிக்கனும்னு நினைச்சலும் உன்னல முடியாது, உன்னல என்ன திட்ட கூட முடியாது. Because எனக்கு உன்ன எவ்வளவு பிடிக்குமாே அத விட அதிகமா உனக்கு என்ன பிடிக்கும்.

நீ எனக்காக அன்னைக்கு பாட்டி பாடின தான, அதான் நான் இந்த லட்டர்ல உனக்காக ஒரு கவிதை இல்ல இல்ல. நம்ம நட்புக்காக ஒரு கவிதை எழுதிருக்கேன்.

தாேள் சாய்ந்து நடக்கும் பாெழுதும்...
தாெட்டு பேசி சிரிக்கும் பாெழுதும்...
தாெலைதூரம் நான் இருவரும் பயணிக்கும் பாெழுதும்...
தாெடக்கத்தில் நாம் பேசத் தயங்கிய பாெழுதும்...
சலனப்படாத நம் அழகிய நட்புமலர்,


நான் பூப்பெய்திய பூவை என்றால்,
நீ என் காவல் முள் என்றறியாத மூடர் சாெல்லால் வாடி விடாது நண்பனே.
வா தாேழா கை காேர்த்து நடப்பாேம்

நட்பிற்கும் ஓர் காவியம் படைப்பாேம்.

( Originally written by வே. பத்மா பாண்டியன் )

என் கவிதை ஓகே வா.
நீ எப்பாேவும் என் ப்ரெண்டா இருக்கனும்.
என்ன அறியாம நான் உன்ன காேவப்படித்தினாலும், கஷ்டப்படுத்தினாலும், என்ன விட்டு பாேயிடாத.
நீ என்னைக்கும் என் கூடவே இருக்கனும்,
நல்ல நண்பனா.
இருப்பியா?


ஒரு வேளை நீ தப்பு பண்ணி நாம பிரிஞ்ச கூட, என்ன நீ மிஸ் பண்ற மாதிரி ஃபில் பண்ண, என்ன பாக்க வந்திடு.
I miss you Rathnaனு மட்டும் சாெல்லு எனக்கு அது மட்டும் பாேதும்.


இப்படிக்கு,
கடிதம் வாசிக்கும் Tomமிற்காக

கடவுள் படைத்த Jerry.

அஜீத் ரத்னாவின் கடிதத்தை எத்தனை முறை படித்து இருப்பான் என்று அவனே அறியவில்லை. ஆனால் ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் தான் ரத்னாவின் நட்பிற்கு உண்மையானவனாக இல்லை என்ற எண்ணமே வலுப்பெற்றது.

அதன்பின்பு தன் கல்லூரி சீனியர் ஒருவரின் உதவியுடன் ஜஸ்வந்த் பற்றிய அனைத்து தகவலையும் சேகரித்தான். கிடைத்த தகவலின் படி ஜஸ்வந்த்திற்கு எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லை என்பதை அறிந்து கொண்ட பின்பு ரத்னாவிடம் ஜஸ்வந்த் ஐ திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினான்.

ஆனால் ரத்னா அதைப்பற்றி வீட்டில் பேசாமல் இருக்க அஜீத்தின் குடும்பமும், ரத்னாவின் குடும்பமும் இருவருக்கும் நிச்சயம் செய்வது என்று பேசி முடித்தனர்.

மீண்டும் ஜஸ்வந்த் சந்தித்தபோது சமூகமாகவே அனைத்தையும் கூறி விட்டு விடைபெற, அஜீத்தின் மனது மட்டும் ஒருநிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டே இருந்தது. அந்த எரிச்சலுடன் அதனால் ஏற்பட்ட கோபத்துடன் வீட்டிற்குள் நுழைந்த அஜீத்திற்காக காத்திருந்தது ரத்னா உடனான நிச்சயம் பற்றிய செய்தியே.

இப்படி ஒரு செய்தியை பத்து நாட்களுக்கு முன்பு தன் தாய் கூறியிருந்தால் நிச்சயம் மகிழ்ந்து இருப்பான். ஆனால் இப்பொழுது ரத்னாவின் கடிதத்தை படித்து, அதன் பின்பு ரத்னாவிடம் ஜஸ்வந்தை திருமணம் செய்ய கூறிவிட்டு, நாளை ரத்னாவின் வீட்டிற்கு நிச்சயம் செய்யப்போவது மகிழ்ச்சிக்கு பதில் கோபத்தையே வரவழைத்தது. அந்த கோபத்தில் ரத்னாவை போனில் அழைத்து திட்டினான்.

அதன் பிறகு நடந்த அனைத்து செயல்களும் அஜீத்தின் கையை மீறிய செயலாகவே இருந்தது. இனிதான் செய்வதற்கு எதுவுமில்லை என்று உணர்ந்த அஜீத் பார்வையாளன் ஆகவே தன்னை மாற்றிக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தான்.

எவ்வளவுதான் நான் இனி ரத்னா ஜஸ்வந்த்திற்கு சொந்தமானவள் தன் மனதிற்கு புரிய வைக்க நினைத்தாலும், காதல் கொண்ட மனம் அதை ஏற்கவே மறுத்தது.

தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டிருந்த அஜீத்தால், ரத்னா இன்னொருவனின் மனைவி ஆனதை பார்க்க முடியவில்லை.

அதுவரை தான்னையும் தன் காதலையும் பிறர் அறியாமல் அடக்கிக்காெண்டிருந்த அஜீத் மணக்காேலத்தில் இருந்த ரத்னாவை பார்த்து, வாய் விட்டு கதற துடித்த இதயத்தை அடக்கிக்காெண்டு வெளியேறினான். விருந்து முடிந்து ரத்னா மாலை வீட்டிற்குள் அடியடுத்து வைக்க, அஜீத் விமானத்தில் டெல்லி நாேக்கி பயணித்துக்காெண்டிருந்தான்.

மீண்டும் ரத்னாவை சந்தித்த சூழ்நிலையை இன்று நினைத்தாலும் அஜீத்தின் மனம் சமாதானமடைய மறுத்தது. ரத்னா என்ன கூறினாலும், நினைத்தாலும் இனி ரத்னாவை எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்லை என்ற முடிவுடன் ரத்னாவை திருமணம் செய்து டெல்லிக்கு அழைத்து வந்தான்.

கடந்த கால நினைவுகளை யோசித்துக்கொண்டிருந்த அஜீத்தை தொளை தொட்டு அசைத்த ரத்னா,

"என்னாச்சு அஜீத் அத்தான். எந்தக் கோட்டையைப் பிடிக்க இவ்வளவு தீவிரமா யோசிச்சு கிட்டு இருக்கீங்க."


"கோட்டையை பிடிக்க நான் யோசிக்கல, கோயம்புத்தூர்ல இருக்கற என்னோட கோட்டைக்குள்ளே இந்த மஹாராணிய எப்படி கொண்டு போகிறதுனு யோசித்துக்கொண்டு இருக்கிறேன்."

"யோசிங்க யோசிங்க சீக்கிரமா யோசிச்சி ஒரு முடிவு சொல்லுங்க."

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அதேநேரம் மற்றொரு அரூபம் ஒன்று ரத்னாவை, தன் கடந்த கால வாழ்வை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

தனிமை ஒரு மனிதனை யோசிக்க வைக்கும். அதுவும் தனக்கு பிடித்த, பிடிக்காத மனிதர்களை பற்றி அதிகம் யோசிக்க வைக்கும். ஜஸ்வந்தையும் யோசிக்க வைத்தது.

யார் எப்படி இருந்தாலும் ரத்னாவின் மனதில் எந்தவித எண்ணமும் தப்பு எண்ணமும் ஒரு பொழுதும் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்பதை மட்டும் தன் மனதிற்குள் அழுத்தமாக பதிய வைத்துக் கொண்டான்.

ரத்னா எப்பொழுதும் தனக்கு பிரியமானவர்களின் பேச்சை கேட்பாள் என்பதை ஜஸ்வந்த் அறிந்திருந்தான். எனவேதான் தன் காதலுக்கு ரூபா மற்றும் தங்கவேலு உதவியை எதிர்பார்த்தான்.

ஆனால் இப்பொழுது அவர்களை விட அஜீத் கூறினால் ரத்னா தன்னை ஏற்றுக் கொள்வாள் என்ற எண்ணமே வலுப்பெற்றது. இப்பொழுது இருக்கும் ஜஸ்வந்த்திற்கு அஜீத் மீது எந்த பொறாமையும் இல்லை. ஜஸ்வந்த் ரத்னாவின் காதலை பெற தன் இயற்கை குணமான பிடிவாதம், ஈகோ அனைத்தையும் விட்டு இறங்கிச் சென்றே அஜீத்திடம் பேசினான்.

ஜஸ்வந்த் அறியாத ஒன்று தனக்கு எதிராக தன்னை காரணமாக வைத்து நடைபெறும் சதித்திட்டம்.

தெரிந்திருந்தால் ரத்னாவை விட்டு விலகி இருந்திருப்பான். தன்னுடைய காதல் திருமணத்தில் முடிய போகின்றது என்ற சந்தோஷமே புது உற்சாகத்தை தர தன்னை சுற்றி நடக்கும் சாதிகளைப் பற்றி உணர்ந்துகொள்ள அறிந்து கொள்ளாமல் விட்டு விட்டான்.

ரத்னா தனக்கு அஜீத்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்ததாக கூற, ஜஸ்வந்திற்கு அது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை. நம் கூடவே இருந்த ஒரு பொருளின் மீது இயற்கையாகவே ஏற்படும் ஒரு ஈர்ப்பு என்று நினைத்தான்.

தன் காதலை முழுமையாக ரத்னா உணர்ந்து கொள்ளும் பொழுது, அஜீத்தின் மீதான ஈர்ப்பு மறைந்துவிடும் என்று நினைத்தான்.

திருமணம் முடிந்த சில வாரங்களுக்குப் பின்பு தன்னைச் சுற்றி நடக்கும் சதிகளை அறிந்துகொண்ட ஜஸ்வந்த் வீட்டிற்குள் கோபமாக நுழைய அந்த முகத்தையே ரத்னா கண்டாள்.

அஜீத் பற்றி ஜஸ்வந்திடம் கூறியிருக்க கூடாதாே என்று நினைத்துக்காெண்டிருந்த ரத்னா, தான் அஜீத்தை பற்றி பேசியதற்காகவே ஜஸ்வந்த் கோபமாக இருப்பதாக நினைத்துக் கொண்டாள் அதன் பிறகும் அவன் முன்பும், வீட்டரிடமும் அஜீத் பற்றி பேசுவதை தவிர்த்தாள்.

தனக்கு எதிராக நடக்கும் சதியால் மனமுடைந்த ஜஸ்வந்த் ரத்னா தன் அருகிலேயே இருக்க வேண்டும் என நினைத்தான். தன் மனதில் நினைத்ததை ரத்னாவிடம் கூறியிருக்கலாம், கூறாமலேயே ரத்னாவிடம் நெருக்கம் காட்ட அது ரத்னாவிற்கு ஜஸ்வந்த் மீது இருந்த பயத்தை அதிகரிக்கவே செய்தது.

ஆடி மாதம் முடிந்து வீடு திரும்பும் நாள், மீண்டும் அஜீத் பற்றி பேச்சு வர ரத்னா ஜஸ்வந்த் நினைத்து பயம் கொண்டாள். ஆனால் ஜஸ்வந்த் நிச்சயம் அவ்வாறு நினைக்கவில்லை.

ரத்னாவின் அறைக்குள் வந்த ஜஸ்வந்திற்க்கு அழைப்பு வர அதில் கூறி செய்தியை கேட்டு கோபத்தில் சிவந்த விழிகளுடன் நின்ற ஜஸ்வந்தை பார்த்த ரத்னா, தன்னை புரிய வைத்துவிடும் நோக்கத்தில், ஜஸ்வந்திடம் பேச,

ஜஸ்வந்திற்க்கு ரத்னா தன் காதலையும், தான் அவள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும், புரிந்து கொள்ளாது பேசுவது மிகுந்த வேதனையை கொடுத்தது. அதனால் ஏற்பட்ட கோபத்திலே ரத்னாவின் கழுத்தை தன் கைகளால் நெறித்தான். ரத்னா அறையை விட்டு வெளியேறும் பொழுது

"நம்ம கல்யாணத்துக்கு முன்ன நான் தப்பு பண்ண, தப்பான முடிவு எடுத்தா, சேர்ந்து சரி பண்ணலாம்னு சென்னீங்க. ஆனா காெடுத்த வார்த்தையை காப்பாத்துறது ரெம்ப கஷ்டம் இல்லையா. இப்பாே கூட நான் என்ன தப்பு பண்ணேனு நீங்க சாென்ன நான் என்ன மாத்திக்க முயற்சி பன்றேன்." கூறிவிட்டு செல்ல, ஜஸ்வந்த் ரத்னாவின் மீது காேபம் காெண்ட தன் முட்டாள் தனத்திற்காக தன்னையே நாெந்து காெண்டான்.சென்னையை நோக்கி இருவரும் காரில் பயணிக்கும் பொழுது எப்படியாவது தன்னை பற்றி ரத்தினத்திற்கு புரிய வைத்துவிட வேண்டும் என்று ஜஸ்வந்த் நிலைத்திருந்தான். ஆனால் ரத்னாவோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவள் உறக்கத்தை பார்த்த ஜஸ்வந்த்

"என்ன மன்னிச்சிடு ரதி பேபி, நான் உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் இல்ல, இனி உன்னை நான் கஷ்டப்படுத்த மாட்டேன். உன்னை நான் இனி பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்." என மனதிற்குள் பேசிக் கொண்டு வர,

ஜஸ்வந்த் தாமதமாகவே தங்களை பின்தொடர்ந்து வரும் லாரி ஒன்றை கவனித்தான். எவ்வளவு வேகமாக என்றாலும், வழிவிட்டாலும் அது தங்களையே தொடர்ந்து வருவதை உணர்ந்த ஜஸ்வந்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்பொழுது ஜஸ்வந்திற்குக்கு ஒரு அழைப்பு வர

"என்ன ஜஸ்வந்த் புது பொண்டாட்டி கூட ரொம்ப ஜாலியா சென்னையை நோக்கி வந்துகிட்டு இருக்கிற போல."

"உனக்கு இப்போ என்ன வேணும்." காேபம் நிறைந்த குரலில் கேட்க

"உனக்கா...! என்னஜஸ்வந்த் ரொம்ப மரியாதை தேய்ற மாதிரி இருக்கு."


"உனக்கெல்லாம் என்ன மரியாதை. நீ மட்டும் என் கையில கிடைச்சா."

"அச்சச்சோ நீ நினைப்பது எல்லாம் நடந்திடுமா. நீங்க சென்னைக்கு வரதுக்கு முன்னாடி அந்த கடவுளை பார்க்க போக போறீங்க. நீ தனியா போனா உனக்கு இத்தனை வருஷம் பாசத்த காட்டுன எனக்கு கஷ்டமா இருக்காதா. அதான் உன் கூடவே உனக்கு துணைக்கு உன்னுடைய காதல் மனைவியையும் அனுப்பி வைக்கிறேன்."

அழைப்பு துண்டிக்கப்பட்ட உடன் அருகிலிருந்த ரத்னாவை பார்க்க அவளோ நன்கு தூங்கிக் கொண்டிருந்தாள்.

பின் தாெடரும் லாரி இடிப்பது பாேல் அருகில் வர, இனி தப்பிக்க முடியாது என்பதை அறிந்த ஜஸ்வந்த், என்ன செய்வது என்று ஒரு நிமிடம் யோசித்து, ரத்னாவின் சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு அவளை வெளியே தள்ளி இருந்தான்.

மறுநொடி தன்னுடைய சீட்பெல்டையும் கழட்டிவிட்டு வெளியில் குதிக்க கூரிய கல் ஒன்று ஜஸ்வந்த் நெற்றியை பதம் பார்த்தது. மயக்க நிலைக்கு ஜஸ்வந்த் சென்று காெண்டிருந்தானே தவிர உடலில் பெரிதாக காயங்கள் எதுவும் இல்லை.

தள்ளாடியபடி எழுந்துநின்ற ஜஸ்வந்த் ரத்னாவை தன் பார்வையால் தேடினான். ரத்னாவை கண்டு அருகில் சென்று பார்க்க, ரத்னாவாே உடலில் காயங்கலுடன் முனங்கி காெண்டிருந்தாள்.

அதற்குள் தூரத்தில் சில உருவம் வர ரத்னாவை சாலைக்கு அருகில் கிடத்திவிட்டு எதிர்புறம் ஓட ஆரம்பித்தான். அவன் விரட்டி பிடித்து

"என் கிட்ட இருந்து தப்பிக்க முடியும் நினைச்சியா. உன்ன அவ்வளவு சுலபமா விட்டுட்டு போக முடியுமா. இருந்தாலும் நான் உன்னோட பாசத்துக்குரிய....."

"இதுக்கு மேல எதுவும் பேசாத. பாசம்னா உனக்கு என்னனு தெரியுமா."

"நீ சொல்றது சரிதான். எனக்கு பாசம்னா என்னன்னு தெரியாது. ஆனால் பணத்தின் மதிப்பு நல்லா தெரியும்."

"உனக்கு பணம்தானே வேணும். என்னோட சொத்து முழுக்க உனக்கு எழுதி கொடுக்கிறேன். தயவுசெஞ்சு ரத்னாவ ஒன்னும் பண்ணாதே. என்னோட உயிரைக்கூட எடுத்துக்கோ."

"இந்த டீலிங் நல்லாத்தான் இருக்கு. பட் நெருப்பையும் பகையையும் எப்பவும் மிச்சம் வைக்கக் கூடாது. மிச்சம் வச்சா அது நம்மை அழித்து விடுவோம்." என கூறிவிட்டு

"என்னடா பாத்துகிட்டு இருக்கீங்க, அவனை போட்டுத் தள்ளுங்க." பக்கத்தில் இருந்த அடியார்களைப் பார்த்து கூற அந்த மூவரும் கட்டையால் ஜஸ்வந்தை சரமாரியாக தாக்க ஆரம்பித்தனர்.

மயக்க நிலைக்கு சென்று காெண்டிருந்த ஜஸ்வந்தால் தன்னை தாக்குபவர்களை தடுக்க முடியவில்லை. உயிர் பிரியும் நேரம் தன் எதிரே நின்றவரிடம்,

"என் மேல கொஞ்சம் கூட உங்களுக்கு பாசம் இல்லையா."

"என்ன ஜஸ்வந்த் இப்படிக்கு கேட்டுட்ட. உன் மேல எனக்கு எவ்வளவு பாசம் இருந்தா உன்ன ரத்னா கூட சேர்த்து வைத்திருப்பேன். இப்ப கூட சீக்கிரமே ரத்னாவ உன் கூட அனுப்பி வைக்கிறேன்." எனக்கூறிவிட்டு

ஜஸ்வந்த் கழுத்தை தன் காலால் மிதித்து அவன் உயிர் போகும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு, சுற்றியிருந்த அடியார்களின் புறம் திரும்பி

"போங்கடா இந்த ஜஸ்வந்தை தூக்கி மரத்தில மாேதி நிக்கின்ற கார்ல போட்டுவிட்டு, அந்த ரத்னா எங்க விழுந்து கிடக்கனு போய் பாருங்க."

ஜஸ்வந்தை காரில் போட்டு விட்டு ரத்னாவை தேட, அதற்குள் சிலர் நடமாட்டம் தெரிய ரத்னாவை விட்டுச் சென்றனர். கடந்த காலத்தை நினைத்து பார்த்த அந்த அரூபம்

"நீங்க வேணா என் மேல பாசம் இல்லாமல் இருக்கலாம். ஆனா நான் உங்க மேல வச்ச பாசம் உண்மையானது. அதே மாதிரி ரத்னா மேல வச்சு காதலும் உண்மையானது.
என்ன கொலை பண்ணத என்னால மன்னிக்க முடியும். ஆனால் ரத்னாவுக்கு உங்களால ஏதாவது ஆபத்து வந்தா என்னால மன்னிக்க முடியாது.
நான் எப்பவும் நிழலா ரத்னாவை தொடர்ந்து கொண்டே தான் இருப்பேன்."

ஜஸ்வந்தை காெலை செய்தது யார்?

எதற்காக ரத்னாவை தாெடர்கின்றன?

ரத்னா தன்னை தாெடர்ந்து வரும் அபத்திலிருந்து தப்புவாளா?


உன் நிழலை நான் தொடர்வேன்
 
Last edited:
#5
அடப்பாவி ஹர்ஷத்
பணம் சொத்துக்காக கூடப் பிறந்த தம்பியையே கொன்னுட்டானே
இது ரூபாவுக்கு தெரியுமா?
அவள் வேறு ஜஸ்வந்த்தை தப்பாக நினைக்கிறாளே?
இல்லை ரூபாவும் இதிலே கூட்டுக் களவாணியா?
இந்த கொலை விஷயம் தெரியாமல் ரத்னா வேற இங்கேயேதான் படிப்பேன்னு வர்றாள்
ஆனால் அரூபமாக இருந்து ஜஸ்வந்த் ரத்னாவை சேஃப் செஞ்சுடுவான்
ஒருவேளை ஜஸ்வந்த்தை ஹர்ஷத் கொலை செய்தது ரத்னாவுக்கும் தெரியுமோ?
 
Last edited:

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#8
அடப்பாவி ஹர்ஷத்
பணம் சொத்துக்காக கூடப் பிறந்த தம்பியையே கொன்னுட்டானே
இது ரூபாவுக்கு தெரியுமா?
அவள் வேறு ஜஸ்வந்த்தை தப்பாக நினைக்கிறாளே?
இல்லை ரூபாவும் இதிலே கூட்டுக் களவாணியா?
இந்த கொலை விஷயம் தெரியாமல் ரத்னா வேற இங்கேயேதான் படிப்பேன்னு வர்றாள்
ஆனால் அரூபமாக இருந்து ஜஸ்வந்த் ரத்னாவை சேஃப் செஞ்சுடுவான்
ஒருவேளை ஜஸ்வந்த்தை ஹர்ஷத் கொலை செய்தது ரத்னாவுக்கும் தெரியுமோ?
யாரு மர்டர் பண்ணாங்கனு நான் இன்னும் கன்ஃபாம் பண்ணல டியர்