உன் நிழல் நான் தாெட ep 14

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
உன் நிழல் நான் தொட
-- செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 14

கடுமை யுடைய தடீ!எந்த நேரமும்

காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும்-எண்ணும்போது நான்
அங்கு வருதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை-கட்டுங் காவலும்
கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசி யவள்-எதற் காகவோ
நாணிக் குலைந்திடுவாள்.

கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே
ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை
ஆயிரங் கோடி முறை
நாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே
பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம்

பண்ணிய தில்லை யடி!

முட்டை ஓட்டில் இருந்து வெளிவந்த குஞ்சுப் பறவை சிறிது காலம் தன் தாய் பறவையின் இறக்கை அரவணைப்பில் பாதுகாப்பாக இருக்கும். எப்பொழுது குஞ்சு பறவையால் தனித்து இருக்க முடியும் என தாய்ப்பறவை உணருகின்றதோ அப்பொழுதே தன் பாதுகாப்பை விலகிவிடும். குஞ்சு பறவையும் இந்த உலகத்தில் போராடி வாழ பழகிக் கொள்ளும்.

ஆனால் ரத்னாவை பொருத்தவரை எப்பொழுதும் முட்டை ஓட்டையை விட்டு வெளிவராத குஞ்சு பறவையின் நிலைதான். வீட்டில் கடைசி பிள்ளை என்றாலே எல்லா வீட்டிலும் இருக்கும் அதிகபடியான கவனிப்பு ரத்னாவின் விசயத்திலும் இருக்கவே செய்தது அதுவும் நல்ல விஷயங்களை கூறினாள் அப்படியே ஏற்று நடக்கும் ரத்னாவை அனைவரும் உள்ளங்கையில் தாங்கினர் என்றே கூறவேண்டும்.

பாரபட்சமின்றி அனைவரிடமும் ஒரே மாதிரியாக பழகும் ரத்னாவை ஊர் பெரியவர்கள் முதல் பண்ணையில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்கள் வரை ஒரு இளவரசியை நடத்துவது போலவே நடத்தினர். அதனால்தான் என்னவோ ரத்னாவை பொருத்தவரை உலகம் என்பது நல்லவர்களால் மட்டுமே ஆனது என்ற மாய தோற்றம் மனதில் தங்கிவிட்டது.

உலகத்தில் எப்பொழுதும் நல்லவர்கள் மட்டும் இருப்பதில்லை, தீயவர்களும் இருப்பார்கள். நாம் பிறரின் வாழ்வில் குறுக்கிடாமல் இருந்தாலும், நமக்கு எதிராக இருப்பவர்களும் உள்ளனர் என்பதை அறியாமலே இருந்துவிட்டாள்.

வீட்டாரின் அரவணைப்பில் இருந்து கல்லூரி படிப்பிற்காக கோவை வந்தபிறகும் அஜீத், பிரபு, ஸ்டெல்லாவின் நட்பு என்ற பாதுகாப்பு வளையம் உலகத்தைப் பற்றி ரத்னாவை அறியவிடாமல் தடுக்கும் கோட்டை சுவராக இருந்தது என்பதே உண்மை.

ரத்னாவின் மனதில் காதல் என்ற எண்ணம் துளியும் இருந்தது இல்லை. ஆனால் தன் திருமணத்தில் அஜீத்தின் பெயரும் இடம்பெற அதில் ரத்னாவின் விருப்பமும் இருக்கவே செய்தது. தன்னைத் தாங்கும் குடும்பமும், தனது தேவையை அறிந்து செயல்படும் நண்பனே கணவனாக வருவதை ஏற்றுக்கொள்ள ரத்னாவின் மனதும் தயாராகவே இருந்தது.

ஆனால் இவை அனைத்தும் ரத்னாவின் கண்களில் ஸ்டெல்லாவும் அஜீத்தும் இணை இருந்த போட்டோவை பார்க்கும் வரையிலேயே. போட்டோவை பார்த்த அடுத்த நொடியிலேயே தன் தோழியின் காதலன் தன் கணவனாக மாற்ற நினைப்பது நட்புக்கு செய்யும் துரோகமாக நினைத்தாள்.

அஜீத்திற்காக மனதில் தாேன்றிய உணர்வும், இருவரின் நட்பும் மனதுக்குள் மௌனமாக ஒரு போராட்டத்தை நடத்திக்காெண்டிருந்தது. இது ஒருபுறமிருக்க அஜீத் ரத்னாவிடம் ஜஸ்வந்தை திருமணம் செய்து கொள்ளுமாறு கூற அந்த பேச்சு ரத்னாவிற்கு ஏற்புடையதாக இல்லை.

அஜித் மீது தனக்கு தோன்றிய உணர்வு சரியா தவறா என்ற குழப்பத்திலேயே தவித்த ரத்னா, தெளிவான ஒரு முடிவுக்கு வந்த பின்னே அஜித்தை போனில் அழைத்தாள். அழைப்பை ஏற்றதும் பெற்றோர் தன் பேச்சை கேட்கவில்லை என்ற கோபமும், ரத்னாவை மறுக்கும் தன் நிலையை எண்ணி மனதில் எழும் வலியால் அஜீத் காரணத்தை கூறாமலேயே கோபமாக பேச, அப்பொழுதும் தவறு முழுவதும் தன் மீதே என நினைத்துக்கொண்டாள்.

மறுநாள் திருமணப் பேச்சை தானே நிறுத்துவது என ரத்னா நினைத்திருக்க, நடந்த அனைத்தும் ஜஸ்வந்துடன் தன் திருமணம் என்னும் நிலைக்கு தன்னை நிறுத்துவது மூச்சு முட்டுவதுதாக உணர்ந்தாள்.

ஜஸ்வந்த் உடனான திருமணத்தை வாழ்க்கையையும் தன் மனதிலும் மூளையிலும் பதிய வைத்துக் கொள்ள தன்னால் ஆன் முயற்சி செய்தாள். இருந்தாலும் தன் மனதில் அஜீத் மீது தனக்கு ஏற்பட்ட சலனத்தை ஜஸ்வந்திடம் மறைக்க கூடாது, மறைத்தால் அது தவறு என நினைத்தாள். எனவே முதலிரவு அன்று அனைத்தையும் மறைக்காமல் ஜஸ்வந்த்திடம் கூற, பொறுமையாக கேட்ட ஜஸ்வந்த்

"ரதி I think we need sometime to understand each other. Then we will start our life." என கூறிவிட, அனைத்தும் நன்றாக தான் சென்றதாக ரத்னா நினைத்துக் கொண்டிருந்தாள்.

அதன் பிறகு வந்த நாட்களில் சிறு விஷயத்திலும் ஜஸ்வந்த் தன்னிடம் விருப்பம் கேட்டு நடப்பதை போன்று தோன்றினாலும் ஏதோ ஒரு ஒட்டாத தன்மை இருப்பதுபோலவே உணர்ந்தாள். இருவரும் அனைவரின் முன்பு சகஜமாக இருந்தாலும் அதில் இருந்த விலகல் தன்மை வீட்டினர் கருத்திலும் பட, இருவரையும் முடிந்தவரை தனிமையில் தங்களுக்கான நேரத்தை செலவிட செய்ய நினைத்தனர்.

இதனிடையில் ரத்னாவும் லா காலேஜில் சேர்ந்து விட நாட்களும் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. ஒருநாள் தேவராஜிடம் பேசிக்காணெ்டிருக்கும் பாேது பேச்சின் நடுவே ரத்னா அஜீத்தை பற்றியும், தங்கள் நட்பு பற்றியும் பேசிக்கொண்டே திரும்பிய ரத்னா பார்த்தது ஜஸ்வந்தின் கோபம் முகத்தையே.

அடுத்து வந்த நாட்களில் ஜஸ்வந்த் உடலளவில் ரத்னாவை நெருங்க ஏனோ அதை ரத்னாவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனதளவில் இல்லாத உறவு உடலளவில் எற்படுவதை விரும்பவும் இல்லை.

ஆடி மாதத்தில் ரத்னா வீட்டிலிருந்து அழைப்பு வந்ததும் எதில் இருந்து விடுபடும் உணர்வே ரத்னாவின் மனதில் தோன்றியது. மீண்டும் தேனுத்திலிருந்து இருந்து சென்னை புறப்படும் நாள் வீட்டில் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க தங்கமுத்து ரத்னாவிடம்

"காலேஜ் எப்படி போகுதுங்க பாப்பா."

"ஏதோ போகுது, என்ன இருந்தாலும் கோயம்புத்தூர் காலேஜ் மாதிரி வராது."

"ஏன் இப்படி சொல்றீங்க கோயம்புத்தூர் காலேஜ் விட சென்னை காலேஜ்ல அப்படி என்ன குறை இருக்க போகுது."

"கோயம்புத்தூர் காலேஜ்ல என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் இருந்தாங்க. அங்க இருக்கும்பொழுது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு, ஆனால் சென்னை காலேஜ்ல என் பிரண்ட்ஸ் யாருமே இல்லையே."

"இப்பதான் அங்க சேர்ந்து இருக்கீங்க, இன்னும் கொஞ்ச நாள் போனா இந்த காலேஜ்லயும் உங்களுக்கு நிறைய பிரண்ட்ஸ் கிடைப்பாங்க."

"எத்தனை ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாலும் அவங்க யாருமே அஜீத்தை அத்தான் மாதிரி வரமுடியுமா. அவங்கதான் எனக்கு எப்பொழுது close." என கூறிக்காெண்டிருக்கும் பாேது அங்கு வந்து அமர்ந்த ஜஸ்வந்த்

"உனக்கு உங்க அஜீத்தை அத்தான அவ்வளவு பிடிக்குமா." எனக்கேட்க என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ரத்னா யோசித்துக் கொண்டிருக்க, ஆர்த்தி

"ரத்னாவுக்கு அஜீத் ரொம்ப பிடிக்கும், கோயம்புத்தூர்ல இருக்கறவரைக்கும் அஜீத் இல்லாம எங்கேயும் போகமாட்டா. அவளுக்கு சின்னதா ஒரு தேவை இருந்தாலும் அதை அஜீத் அத்தான்தான் செஞ்சு கொடுக்கணும். எப்படித்தான் இவ்வளவு நாளா அஜீத் இல்லாமல் இருக்கானு தெரியல." எனக்கூற

போன் அழைப்பதாக அறைக்குள் சென்ற ஜஸ்வந்த் அதன்பின்பு வெளியில் வராமல் இருக்க, ரத்னா உணவருந்த ஜஸ்வந்தை அழைக்க

"ரத்னா நாம இப்பவுமே ஊருக்கு போகணும், சீக்கிரம் எல்லாத்தையும் எடுத்து வை."

"நாளைக்கு காலையில தானே போக போறோம்ன்னு சொன்னிங்க, இப்போ உடனே கிளம்பு சொன்னா எப்படி?"

"நான் சொன்னதும் மறு பேச்சு இல்லாமல் கேட்டு பழகு அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது."

"நான் அஜீத் அத்தான் பத்தி பேசினதால நீங்க கோபமா இருக்கீங்களா, இனி நான் அஜீத்த பத்தி பேசமாட்டேன்."

"அஜீத் அஜீத் அஜீத் அவன விட்டா நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல வேறு எதுவும் இல்லாம போயிடுமா. இன்னொரு தடவை அவன வைச்சு இதே மாதிரி நீ பேசினேன் நான் சும்மா இருக்க மாட்டேன்." என கோபமாக பேச

"நீங்க என்னையும் அஜீத் அத்தனையும் சந்தேகபடுகிறீர்களா." எனக்கு கேட்ட அடுத்த நொடி ரத்னாவின் குரல்வளையை பிடித்து நெறித்தபடி

"ஏய் உன் மரமண்டைக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா இன்னொரு தடவை அவன பத்தி பேசினா கொன்னுடுவேன்."

மூச்சுவிட சிரமப்படும் ரத்னாவின் மேலிருந்து கையை எடுத்த ஜஸ்வந்த்

"என்ன மிருகமா மாத்தாத." என கூறிய ஜஸ்வந்த் முன் ரத்னா மூச்சுவிட சிரமபட்டபடி

"நம்ம கல்யாணத்துக்கு முன்ன நான் தப்பு பண்ணா, தப்பான முடிவு எடுத்தா, சேர்ந்து சரி பண்ணலாம்னு சென்னீங்க. ஆனா காெடுத்த வார்த்தையை காப்பாத்துறது ரெம்ப கஷ்டம் இல்லையா. இப்பாே கூடநான் என்ன தப்பு பண்ணேனு நீங்க சாென்ன நான் என்ன மாத்திக்க முயற்சி பன்றேன்."

அதன் பிறகு மறுபேச்சின்றி அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டு இருவரும் ரத்னா வீட்டினர் எவ்வளவு மறுத்தும் இரவை சென்னையை நோக்கி இருவரும் பயணப்பட்டனர்.

காரில் ஏறிய சிறிது நேரத்திலேயே களைப்பாேடு பிறந்த வீட்டாரை தெரிந்த பிரிந்த சோகமும், ஜஸ்வந்தின் நடவடிக்கையால் ஏற்பட்ட மனச்சோர்வும் ரத்னாவின் இமைகளில் பாரத்தை தர ரத்னா உறக்கத்திற்கு சென்றாள்.

ஏதோ ஒரு உள்ளுணர்வில் விழித்துப் பார்த்த ரத்னா கண்டது கோபத்தில் சிவந்த விழிகளையே,

"என்ன ஆச்சு" என்று ரத்னா கேட்ட அடுத்த நொடி ஜஸ்வந்த் ரத்னாவை காரிலிருந்து வெளியே தள்ளி விட்டிருந்தான்.

உணர்விழந்து இருந்த ரத்னா மீண்டும் சுய உணர்வடைந்தது அஜீத்தை பார்த்த பின்னே. ஜஸ்வந்தின் மனைவியாக வாழ்ந்த தான் அஜீத்திற்கு எற்றவள் அல்ல என்ற எண்ணமே ரத்னாவை அஜீத்திடமிருந்து விலக தூண்டியது.

அஜீத்திடமிருந்து விலக நினைத்து ரத்னா செய்த செயலே ஐஸ்வந்த் பற்றிய நினைவலையை கண் முன் காட்சிப்படுத்த அஜீத்தை விலகும் முயற்சியை கைவிட்டது மட்டுமின்றி, அஜீத்துடன் நெருங்கவும் செய்தாள்.

தனிமை ஜஸ்வந்த் நினைவால் பயமுறுத்த, அஜீத்தின் அருகாமை பாதுகாப்பு உணர்வுடன் நிம்மதி தருவதாகவே ரத்னாவிற்கு இருந்தது. பழைய நினைவுகளில் சிக்கித்தவித்த ரத்னாவை ரோஜாவின் குரலை இவ்வுலகிற்கு மீட்டு வந்தது.

"ரத்னா உங்க போன் அடிக்குது மா." ரத்னா செல்போனை வாங்கி பார்க்க அதில் ரூபாவின் பெயரைப் பார்த்ததும் அழைப்பை ஏற்று தன் காதில் வைக்க

"ரத்னா எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன் கா."

"நல்லா இருக்கிகேனு உன்னோட வாய் மட்டும் தான் சொல்லுது, ஆனா உன்னோட குரல் நீ ஏதோ குழப்பத்தில் இருக்கிறனு காட்டிக் கொடுக்கு."

"அப்படிலாம் ஒன்னும் இல்ல அக்கா."

"ரத்னா அஜீத் எதுவும் உன்னை கஷ்டப்படுத்தல தானே."

"அக்கா தயவுசெஞ்சு அஜீத் அத்தான் பத்தி தப்பா எதுவும் நினைக்காத, உங்க எல்லாரை விடவும் அஜீத் அத்தான் என்ன நல்லா பாத்துக்கிறாங்க."

"அப்புறம் எதுக்கு உன்னுடைய குரல் டல்லா இருக்கு."

"நான் வேற ஒரு விஷயத்தை பத்தி யோசிச்சுக்கிட்டு இருந்தேன்."

"ஜஸ்வந்த் பத்தியா..."

"அக்கா அது வந்து........."

"ரத்னா நான் சொல்றது சுலபமாக சொல்லிவிடலாம், ஆனால் உன்னால ஏற்றுக்கொள்ளக்கூடியது கஷ்டம்தான். ஆனால் நீ ஏத்துக்கிட்டதான் ஆகனும். ஜஸ்வந்த் இப்போ உன்னோட வாழ்க்கையில இல்ல, அவனால உனக்கு எந்த ஆபத்தும் வரப் போறது இல்ல. நீ அன்னைக்கு என்கிட்ட சொன்னதை மறந்து விடு, அஜீத் மட்டும் தான் இப்போ உன்னுடைய வாழ்க்கை புரிஞ்சுக்கோ, எந்த குழப்பத்தையும் மனசில் வெச்சுகாத."

"நீ சொல்றது எனக்கு புரியுது கா, இருந்தாலும் எனக்கு ஜஸ்வந்த் ஞாபகம் வரும்போதெல்லாம் பயமாயிருக்கு
"ரத்னா நீ பேசாம அஜீத் கிட்ட ஜஸ்வந்த் கூட உன்னோட வாழ்க்கை எப்படி இருந்விடு."

"இல்ல கா என்னால சொல்ல முடியாது, ஏற்கனவே அஜீத் அத்தான் ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி குற்றவுணர்வில் இருக்காங்க. இப்போ நான் ஜஸ்வந்த் பத்தி உங்ககிட்ட சொன்னதை அத்தான் கிட்டயும் சொன்னேனா அவங்க ரொம்ப கவலைப் படுவாங்க."

"சரி எல்லாத்தையும் விடு அஜீத்தை உனக்கு பிடிக்கும் தானே."

"ரொம்ப பிடிக்கும் கா."

"அப்படின்னா பழையபடி பேசு பழகு. முடிச்ச நீ அஜீத் மனைவியா நடந்தக்கு பாரு. எல்லாம் நல்லபடி மாறும்."

அதன் பிறகு ரத்னா தன்னை முடிந்த அளவு மகிழ்சியாக மாற்றிக்காெண்டாள். ரத்னாவின் மகிழ்ச்சியான முகமே அஜீத்திற்கு முழு பலத்தை தர தன்னை தேர்வுக்கு முழுமையாக தயாரித்து கொண்டான்.

தன் தாய் தந்தை தன் மீது கோபமாக இருந்தாலும் விரைவில் அவர்களை சமாதானப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையும், ரத்னா உடன் தன்னுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்ப்பும் தங்களுக்கு வர இருக்கும் ஆபத்தை அறியவிடாமல் அஜீத்தை தேர்வுக்கு தயாராக செய்தது.

அஜீத்திற்கு நிச்சயம் தான் நேர்முக தேர்விலும் வெற்றி பெறுவாேம் உறுதி இருந்தது. அதன் பிறகு அடுத்த பிரச்னையாக ரத்னாவை எங்கு விட்டு செல்வது என்பதே.

103 வார பயிற்சி முடியும் வரை ரத்னாவை தனியே உறவுகள் நண்பர்கள் இல்ல டெல்லியில் இருப்பது பாதுகாப்பல்ல. அதே சமயம் தங்கள் இருவர் வீட்டிலும் ரத்னாவை விட அஜீத்திற்கு மனமில்லை. வாய்ப்பு கிடைத்தால் ஆர்த்தி வார்த்தையால் ரத்னாவை காயப்படுத்தி விடுவாள். இப்பாேது உள்ள சூழ்நிலையில் மைதிலியும் அதையே செய்வார்.

ஜஸ்வந்த் தங்கள் வாழ்க்கையை விட்டு சென்று எட்டு மாதங்கள் ஆன பிறகும் ரத்னாவிற்கு ரூபாவின் வீட்டை பற்றி பேச்சு பயத்தையே காெடுத்தது. தேவராஜ் தங்களுடன் ரத்னா இருக்கட்டும் என கேட்டும் ரத்னாவின் பயத்தால் அஜீத் சம்மதம் தெரிவிக்கவில்லை. இறுதியில் ரத்னா பிடிவாதமாக

"அத்தான் ப்ளீஸ் நான் காேயம்புத்தூர்கே பாேறேன்."

"நாம பாேய் நின்ன வா மகனே வா மருமகளேனு வரவேற்பாங்கனு நினைச்சியா, கழுத்த பிடிச்சு வெளிய தள்ளிடுவாங்க."

"எனக்கு அதுலாம் தெரியாது, நீங்க கைய பிடிப்பிங்களாே இல்ல கால்ல விழுவீங்களாே என்ன மைதிலி அத்தை கூட விட்டுட்டு பாேங்க. இல்ல நான் தனியா இருந்துகிடுவேன்."

"ரத்னா அடம்பிடிக்காத, அம்மா அப்பா என் மேல ரெம்ப காேபமா இருக்காங்க. அங்க இப்பாே பாேக முடியாது. என் கையில இன்னும் 1,42,000 தான் இருக்கு. நீ திருநெல்வேலி லா காலேஜ்ல சேர்ந்து படி, உங்க வீட்டு ஆளுங்க அடிக்கடி உன்ன வந்து பாத்துக்கலாம்."

"நான் படிக்கிறேன் பட் காேவை ல இருந்து படிக்கிறேன். நான் முன் இருந்த ரத்னா இல்ல திட்டுனா வருத்தபட, நான் சமாளிச்சுக்குவேன்."

"முடிவு பண்ணிட இனி நான் சாென்ன கேட்கவா பாேற." என கூறி சிரிக்க, ரத்னாவும் சேர்ந்து சிரிக்க ராேஜாவும் இணைந்து காெண்டார்.

தங்களை நிழலாக தொடரும் ஆபத்தை அறிந்திருந்தால்........?

விதியின் ஆட்டத்தை யாரறிவார்.........

உன் நிழலை நான் தொடர்வேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top