உன் கண்ணில் என் விம்பம் teaser 14

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் நீங்க தரும் ஆதரவால்தான் அடுத்த அத்தியாயத்தோட டீஸர் கொண்டு வந்துட்டேன்.:love::love:

still writing இன்னும் complete பண்ணல. நாளைக்கு தர ட்ரை பண்ணுறேன்.

93 ல உண்மையாகவே! பெருவெள்ளமும், மண்சரிவு ஏற்பட்டு நிறைய பேர் இறந்துட்டாங்க. அந்த சம்பவத்தை மையமா வைச்சி தான் யாழிசையா எங்க ஊர் பொண்ணாக்கிட்டேன். {கதை உருவாக்கத்தை சொல்லிட்டேன்}:):)

images (36).jpg

அன்று இளவேந்தன் தான் ஒரு அனாதையென்று சொன்ன போது சீதாவின் கையை பிடித்து தலையில் வைத்துக் கொண்ட யாழிசை



"என் மீது ஆணையாக சொல்லுங்க அத்த நான் இந்த வீட்டு பொண்ணா? இல்ல அனாதையா?"



கண்கள் கலங்கியவாறே சீதாவின் முகம் அழுகையை தத்தெடுக்க தனவேந்தன் தாயையும், யாழிசையையும் மாறி மாறி சமாதானப் படுத்த யாழிசை அவன் சொல்வதை கிஞ்சத்துக்கும் கணக்கில் எடுக்காது பிடிவாதமாக சீதாவை ஏறிட்டு



"இப்போ நீங்க உண்மைய சொல்லலைனா நா சாகுற வரைக்கும் உங்க கூட பேச மாட்டேன்" உறுதியான அவளின் குரலும், பார்வையும் சீதாவை அசைக்க யாழிசையின் கையை பிடித்துக் கொண்டு அறைக்குள் சென்று கதவை தாளிட்டவள் அலுமாரியை திறந்து ஒரு சிறு பெட்டியை கையில் எடுத்தாள்.



யாழிசையை கட்டிலில் அமர்த்தி அந்த சிறு பெட்டியை கையில் கொடுக்க யாழிசை திறந்து பார்க்கும் போதே சீதா யாழிசை அவர்களிடம் எவ்வாறு வந்து சேர்ந்தாள் என்பதை சொல்ல ஆரம்பித்தாள்.

images (9).jpg

"93 ல பெரிய வெள்ளமும், மண்சரிவு ஏற்பட்டிருச்சு மண்ணுக்கடியில் சிக்கி இருக்குறவங்களையும், இறந்தவர்களையும் வெளியே எடுக்க, எங்க ஊர்ல இருந்து ஆண் பெண் என்று எல்லாரும் போனோம்.



அங்க போக வெள்ளத்தை தாண்டி போக வேண்டி இருந்ததால தோணில போகும் போது ஒரு குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டது. சுற்றி முற்றி பூரா வெள்ளம். குழந்தை எங்க னு தேடும் பொழுது ஒரு மரக்கிளைல சிக்கிய மரப்பெட்டியை நா உங்கப்பாவுக்கு காட்டினேன்.



ராஜும் ஒரு கணம் யோசிக்காம வெள்ளத்துல குதிச்சி மரப்பெட்டியை தள்ளிக் கொண்டு வந்தான். தோணில இருந்தவாறே நா உன்ன என் கைகளுள ஏந்தினேன். தேவதை மாதிரி இருந்த. நா தூக்கினதும் அழுகையை நிறுத்திட்டு என் முகம் பார்த்து சிரிக்க ஆரம்பிச்ச. அப்போவே முடிவு பண்ணேன். நீ தான் என் பொண்ணுன்னு.

images (8).jpg

உன்ன தூக்கிட்டு நானும் ராஜும் வீட்டுக்கு வந்தோம். மங்கா வேற உன்ன கண்டு சந்தோஷத்துல அழுதே விட்டா. அவளுக்கு கல்யாணமாகி மூணு வருஷமா குழந்தையில்ல. கடவுள் தந்த என் பொண்ணுன்னு சொல்லி உன்ன கட்டிக்கிட்டு முத்தமிட ஆரம்பிச்சா.



அப்போ நீ என் பெண்ணில்லையா என்ற ஏக்கம் எனக்குள் வந்து மனசு அடிக்க ஆரம்பிச்சது.



"மங்கா நான் தான் குழந்தையை கண்டு பிடிச்சேன். அவ எனக்குத்தான் சொந்தம்" சீதா கறாராக சொல்ல



"மங்கா, அக்கா யார் குழந்தைனே! தெரியல பெத்தவங்க குழந்தையை காணாம பரிதவிச்சு கிட்டு இருப்பாங்க, நீங்க ரெண்டு பேரும் ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடி கிட்டு" யோகராஜ் அதட்டலாக சொல்ல



"ஏன் டா ஊரு முழுக்க வெள்ளம். மண்சரிவுல வேற நிறைய பேர் இறந்துட்டாங்க, குழந்தையாவது தப்பித் பொழைக்கட்டும் னு தானே! மரப்பெட்டில பத்திரமா வச்சி வெள்ளத்துல அனுப்பி இருக்காங்க" சீதா சொல்ல



"சரி ஒரு வாரம் பத்து நாள் பாப்போம் யாரும் தேடி வரலைனா நாமளே! வச்சிப்போம்" யோகராஜ் இறங்கி வர மங்கம்மா கணவனுக்கு கட்டுப்பட்டு தலையசைத்தாலும்,



"யாரும் குழந்தையை தேடி வரவே! கூடாது" சீதா உடனடியாக கடவுளுக்கு பிராத்தனை செய்து. நேர்ச்சையும் வைக்க, மோகனசுந்தரம் கயல்விழியை எங்குதேடியும் கிடைக்காமல் போனது, கடவுளும் அதை ஏற்றுக் கொண்டார் போலும்.



சீதாவும், மங்கம்மாவும் குழந்தையை மாறி மாறி கவனிக்க இருவரிடமும் ஒட்டிக் கொண்ட கயல்விழிக்கு யாழிசை வார் குழலி என்று பெயரிட யார் அம்மா என்ற கேள்வி எழுந்தது.



மங்கம்மா அழுது கரைய சற்று மனம் இளகிய சீதா யாழிசையை இளாவுக்கு மணமுடித்து கொடுத்து காலம் பூரா வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு அன்றே இளா, யாழ் திருமணமும் பேசப்பட்டது.


:love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top