உன் கண்ணில் என் விம்பம் teaser 11

#19
ஹாய் கியூட்டிபாய்ஸ் அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி teaser:p:D

View attachment 4351

எந்த ஒரு முக்கியமான கோப்பையும் ரிஷி வீட்டில் வைக்க மாட்டான். நடந்ததோ அவனின் பி ஏ அம்ரிதா வேண்டுமென்றே அவன் மேல் மோதி அவனை முத்தமிட முயல அவளை அறைந்திருந்தான் ரிஷி. அதை இருவருமே எதிர் பார்க்கவில்லை. கடந்த மூன்று மாதமாக ரிஷி அவளை திரும்பியும் பாராதிருக்க, அவனிடம் நேரடியாக கேக்க முடியாமல் அவள் செய்த செயலால் ரிஷியின் அறிவு விழித்துக் கொண்டது.

அது அவன் யாழிசையின் மேல் முழுப் பத்தியமாக விழுந்து கிடப்பது. அவளை சந்தித்த பின் அவன் வேறு எந்த பெண்ணையும் நெருங்க யோசிக்கவே இல்ல. ஆசை அறுபது நாள் கணக்கு முடிந்து பத்து நாட்களுக்கும் மேலாக இன்னும் அவளை முதல் நாள் நெருங்குவது போலவே அவனுக்கு தோன்ற அது காதலால் என்று புரிந்து கொள்ளாதவனோ அந்த உணர்வை முற்றாக வெறுத்தான்.

எல்லாம் யாழிசையை மீண்டும் பார்த்ததால் தான். அவள் தான் தன்னை இவ்வாறு மாற்றி வைத்திருக்கின்றாள் என்று என்று வாய் விட்டே முணுமுணுத்தவன் கோபம் தலைக்கேற யாழிசை அணிவித்த நிச்சயதார்த்த மோதிரத்தை கழட்டி மேசை ட்ரோவரில் போட்டான்.

அம்ரிதா அழுதவாறே அவளுடைய இருக்கையில் அமர அவளை சமாதானப் படுத்தும் நோக்கமில்லாது வீட்டுக்கு கிளம்பி இருந்தான். வழியில் அவனை கண்டு பிரதீபன் கேக்க வீட்டில் ஒரு கோப்பை விட்டு விட்டு வந்ததாக கூறியவன் கிளம்பி வந்திருக்க, யாழிசையின் சிரிப்பு சத்தமும், தோற்றமும் அவனை அவளின் பால் இழுக்க பெருக்கெடுத்த காதலை கோபமான வார்த்தைகளாக மாற்றி அவள் மேல் வீசி அவளை காயப்படுத்தி விட்டு சென்றான்.


View attachment 4352


அவன் அவ்வாறு ஏன் நடந்து கொண்டான் என்று அவனுக்கே புரியவில்லை. அதற்காக அவன் வருந்தவும் இல்லை. "ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் எல்லாம் பொய்யா? ராட்சசி இப்படி என் நெஞ்சுக்குள்ள புகுந்து ஆட்டிப் படைக்கிறாளே!" எங்கே அவனால் யாழிசையை விட்டு விட முடியாமல் போகுமோ என்ற பயம் அவன் மனதில் ஏறிக் கொண்டது.

யாழிசையை காயப்படுத்தும் எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை. அவனை ஆட்கொண்டு ஆட்டிப் படைக்கும் அவளை, அவள் அழகை, அவளின் குழந்தை தனமான பேச்சை, அவளின் காதல் கசியும் விழிகளை முற்றாக வெறுத்தான். அதை சொல்லத் தெரியாமல் வார்த்தையில் அனல் நிரப்பி அவள் மீது கொட்டி, அவளின் மனதையும் உடம்பையும் ரணப்படுத்தி இருந்தான்.

வண்டியில் அமர்ந்து தலையை சாய்த்து "என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. கேவலம் ஒரு பெண்ணிடம் இந்த ரிஷி வரதன் அடிமையாவதா நெவெர். கண்டிப்பா நா இன்னொரு சரவணகுமாரனா இருக்க மாட்டேன்" தலையை உலுக்கியவன் வண்டியை ஆபீஸ் நோக்கி கிளப்பியிருந்தான்.

ENJOY :love::love::love::love::love:
Ada pavame, pavam namba yaazh
 
Advertisement

New Episodes