உன் கண்ணில் என்னை கண்டேன் epi 8

Advertisement

Karthikpriya

Active Member
உன் கண்ணில் என்னை கண்டேன்
8
காலை வர்ணாவின் அப்பா வெங்கட் எப்பொழுதும் போல் வர்ணாவை எழுப்புகிறார்.
வெங்கட், “பாப்பா எழுந்துக்கோ. சாப்பாடு செய்து டேபிள் மேல் வைத்திருக்கேன் பாரு.சீக்கிரம் ரெடி ஆகி வந்து சாப்பிடு. அப்பாக்கு இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு அப்பா கிளம்பறேன். பாத்து பத்திரமா ஸ்கூல் போ பாய்.” என வேக வேகமாக கூறிக்கொண்டே கிளம்புகிறார்.
வர்ணா தன்னை தூய்மை செய்து வருவதற்குள் பிரேம் எழுந்து குளித்து பள்ளிக்கு தயாராகி சாப்பிட்டுக்கொண்டே டிவி பார்க்கிறான். அவன் தட்டில் இருந்த உணவை பார்த்து வர்ணா, “இன்னைக்கும் தோசை தேங்காய் சட்னி தானா? எனக்கு வேண்டாம்.” என்று புலம்பிக்கொண்டே குளிக்க சென்றாள். இதை கேட்ட பிரேம் அவளின் தோசையையும் அவனே போட்டு சாப்பிட ஆரம்பித்தான். ஏதோ கேட்க திரும்பிய வர்ணா இவன் செய்வதை பார்த்து “எப்பிடிடா நீ தினமும் இதையே சாப்பிடற?” என்று பாவமாக கேட்கிறாள்.
பிரேம், “பாவம் டி அப்பா, காலைலயே எழுந்து நமக்காக வேகமா சமைச்சு கிளம்பி வேலைக்கு போகணும். நீயும் சரி நானும் சரி ஒரு உதவியும் செய்வதில்லை. அத அப்பா எதிர்பாக்கறதும் இல்லல. அடலீஸ்ட் நம்ம அவர குறை சொல்லாம, இருப்பதை வேஸ்ட் பண்ணாம சாப்பிடலாமே. அதான்.” என பொறுப்பாக கூறுகிறான். அப்பாவை தொந்தரவு பண்ணக்கூடாதுனு சின்ன குழந்தையில் இருந்து அம்மா வரும்போதெல்லாம் கூறுவதால் அவன் மனதில் அது ஆழமாக பதிந்து விட்டது. வர்ணாவிற்கு எதுவும் பதியவில்லை போல இப்போதும் விளையாட்டாக இருக்கிறாள்.
பிரேம், “அம்மா நாளைக்கு வந்துடுவாங்க நீ வேணுன்றத சாப்பிடலாம் கவலை படாத. இந்தா என்னோட பாக்கெட் மணி போய் கேன்டீன்ல சாப்பிடு” என்று கூறி தன் பாக்கெட் மணியை அவளிடம் கொடுத்துவிட்டு பாக் எடுத்துக்கொண்டு பள்ளி செல்கிறான். வெளியில் வந்தவன் சித்தார்த்தை பார்த்து நிற்கிறான்.
சித்தார்த், “சாப்டியா டா? வர்ணா எங்கே?” என கேட்டவாறே சைக்கிள் ஸ்டாண்டை தள்ளுகிறான்.
பிரேம், “சாப்பிட்டேன் அண்ணா. அவ கிளம்பிட்டு இருக்கா. அவ தான் சாப்பிடல. இன்னைக்கு அவளுக்கு பிடிக்காத தேங்காய் சட்னி அதான்” என போகிற போக்கில் சொல்லிவிட்டு கிளம்புகிறான்.
சித்தார்த் திரும்பவும் சைக்கிளை ஸ்டாண்டில் போட்டுவிட்டு உள்ளே செல்கிறான். வெளியில் வந்தவன் ஒரு கவரை வர்ணாவின் சைக்கிள் கேரியரில் வைத்துவிட்டு பள்ளி செல்கிறான்.
பள்ளிக்கு தயாராகி வெளியில் வந்த வர்ணா கேரியரில் இருந்த கவரை பிரித்து பார்க்கிறாள். உள்ளே இருந்த முட்டை சப்பாத்தி ரோலை(egg chapathi roll) பார்த்து, “சோ ஸ்வீட் சமத்து செல்லம் சித்து” என கொஞ்சி கொண்டே திரும்பவும் உள்ளே சென்று வேக வேகமாக சாப்பிடுகிறாள்.
சிறிது நேரத்தில் பூர்ணிமா வீட்டை சுத்தம் செய்ய தன்னிடம் இருந்த ஸ்பேர் கீயின் உதவியுடன் உள்ளே நுழைந்தவர் வர்ணா வேகமாக உண்பதை பார்த்து முதலில் பயந்து அலறுகிறார் பின் சுதாரித்து “ஏன் பாப்பா இவ்ளோ வேகமா சாப்பிடற? அடைந்துகொள்ள போகுது கொஞ்சம் மெதுவா சாப்பிடு. இன்னும் ஸ்கூல் போகலையா நீ ?” என கேட்கிறார்.
வர்ணா, “இதோ அக்கா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு அதான். பாய்” என கூறி கொண்டே சைக்கிள் எடுத்து வேகமாக கிளம்புகிறாள்
எப்படியோ சார் வருவதற்குள் வேகமாக வந்தவள் தன் பெஞ்சில் அமர்ந்து தன் டெஸ்க் ட்ராவெரை திறக்கிறாள். அதில் ஒரு புது மேக்கப் சேட்டும் ஒரு பெரிய பிளாஸ்டிக் செம்பருத்தி பூவும் சரோஜா தேவி போட்டோ ஒன்னும் இருக்கு. நாளைக்கு சனிக்கிழமை கலர் டிரஸ் தான் அதனால இந்த மேக்கப்ல வந்துடு. இது தான் பெட்ல தோத்துப் போனதுக்கு தண்டனை.” என்று எழுதி ஒரு லெட்டரும் வைத்திருந்தான் சித்தார்த். இதை பார்த்த வர்ணா கொலவெறியில் அவனை முறைக்கிறாள். ஆனால் அவளை திரும்பியும் பார்க்காமல் பாடத்தை கவனிக்கிறான் சித்தார்த்.
Screenshot_20201021-143602_01.png
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திக்பிரியா டியர்

ஹா ஹா ஹா
தோசை சாப்பிடலைன்னு வர்ணாவுக்கு முட்டை சப்பாத்தி ரோல் தர்றே
மேக்கப் செட் தர்றே
எந்த மாதிரி மேக்கப்ல வரணும்ன்னு சொல்லுறே
இதெல்லாம் பார்த்தால் பனிஷ்மென்ட் மாதிரி தெரியலையே சித்தார்த் தம்பி
 
Last edited:

Karthikpriya

Active Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திக்பிரியா டியர்

ஹா ஹா ஹா
தோசை சாப்பிடலைன்னு வர்ணாவுக்கு முட்டை சப்பாத்தி ரோல் தர்றே
மேக்கப் செட் தர்றே
எந்த மாதிரி மேக்கப்ல வரணும்ன்னு சொல்லுறே
இதெல்லாம் பார்த்தால் பனிஷ்மென்ட் மாதிரி தெரியலையே சித்தார்த் தம்பி
Kandupidichiteengala
Thank you ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top