உன்மேல் காதல் தானா என்னுயிரே 16.2

Advertisement

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: சொன்ன மாதிரியே அடுத்த பார்ட்டோட வந்துட்டேன்...:giggle::giggle::giggle: போன எபியோட ரெண்டாவது பார்ட்ங்கிறதால கொஞ்சம் சின்னதா தான் இருக்கும்... (அதுவே 1000 வார்த்தைகள் வந்துடுச்சுன்னு இங்க பதிவு பண்ணிக்குறேன்...;););)) படிச்சுட்டு எப்பவும் போல உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க பிரெண்ட்ஸ்...:love::love::love:
eiUUKZN49464.jpg

காதல் 16.2

ரஞ்சுவை விடுதியில் விட்டுவிட்டு, லோகேஷை நேரிலும் பார்த்து திட்டிவிட்டு வீட்டிற்கு வந்திருந்தான் சஞ்சய். அவனின் வரவை ஆவலாக (!!!) எதிர்பார்த்துக் காத்திருந்தான் சஞ்சீவ்.

நீள்சாய்விருக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறு, இரு கைகளையும் இருபுறமும் நீட்டி, தலையை பின்னால் சாய்த்து அமர்ந்திருந்த சஞ்சீவ் சஞ்சயை நோக்கி, “என்ன தூங்க வச்சுட்டு, நீ மட்டும் தனியா எங்க போய் சுத்திட்டு வர ப்ரோ..?” என்றான்.

“ஆமா, நீ சின்ன பாப்பா, உன்ன ஏமாத்தி தூங்க வச்சுட்டு வெளிய போறேன்…” என்று கேலி பேசினான் தமையன்.

இருவரும் இப்படி பேசி எத்தனையோ வருடங்கள் ஆகியிருக்க, இருவருக்குமே அந்த நாட்கள் மனக்கண்ணில் வந்து போயின. இந்த ‘ஃபிளாஷ்பேக்’ துணுக்குகளால் தம்பி கேட்ட கேள்வியை இருவருமே மறந்து விட்டனர்.

சரியாக அப்போது கோகுலும் உள்ளே வந்தான். “ஷப்பா, என்ன அலைச்சல்… சஞ்சு, நீ வெட்டியா தான இருக்க… ஓடி போய் எனக்கு ஒரு ஜூஸ் எடுத்துட்டு வா பாப்போம்…” என்று சஞ்சீவின் அருகில் அமர்ந்து விட்டான்.

வந்தவனிற்கு, வாயில் எதிர்புறம் அமர்ந்த சஞ்சீவே கண்களுக்குத் தெரிந்தான். பக்கவாட்டில் அமர்ந்திருந்த சஞ்சயை அவன் கவனிக்கவே இல்லை.

தான் பேசியதற்கு சஞ்சீவிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக, மூடிய கண்களைத் திறந்து பார்க்க, சஞ்சீவோ அவனை முறைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன இப்படி மொறைச்சுட்டு இருக்க… இதெல்லாம் நான் யாருக்காக பண்றேன்… எல்லாம் உன் அண்ணாக்காக தான் தம்பி… போ போய் ஜில்லுன்னு ஒரு ஜூஸ்… ஹுஹும் நைட்க்கு அது வேணாம்… கூலிங் பீர் இருந்தா கொண்டு வா…” என்றான் கால்களை ஆட்டிக் கொண்டே…

இப்போது வரையிலும் சஞ்சீவைப் பார்த்தே பேசிக் கொண்டிருந்ததால், எதிரில் அமர்ந்து அவனையே கூர்மையாக பார்த்திருந்த சஞ்சயை கவனிக்கவில்லை.

“பீர் மட்டும் போதுமா, இல்ல இந்த சைட் டிஷ்…” என்று பல்லைக் கடித்துக் கொண்டே சஞ்சீவ் இழுக்க, “அட அட… இதுவல்லவோ நட்பு… நீ என்ன பண்றனா, வெந்தும் வேகாம இருக்க ஹாஃப்-பாயில் ஒன்னு, நல்லா பெப்பர் தூக்கலா போட்ட ஆம்லெட் ஒன்னு… ஹும் இப்போதைக்கு இது போதும்… போ போ சீக்கிரம் கொண்டு வா… இன்னும் என்ன வாய பாத்துட்டு இருக்க…” என்று விரட்டினான்.

“அப்படியே எந்த சஞ்சு கொண்டு வரணும்னு சொல்லிட்டா நல்லா இருக்கும்…” என்று இம்முறை எதிர்புறமிருந்து கேள்வி வர, பார்வையை அந்த புறம் திருப்பியவன் அதிர்ந்து போய் சரியாக அமர்ந்தான்.

‘அய்யயோ இவரு இங்க தான் இருக்காரா… இது தெரியாம, கொஞ்சம் ஓவரா வேற போயிட்டோமே…’ என்று மனதிற்குள் புலம்பியவனாக, வெளியில் இளித்து வைத்தான்.

“அட பாஸ், நீங்களும் இங்க தான் இருக்கீங்களா… அப்பறம் இதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம், சும்மா காமெடிக்கு பாஸ்… நீங்க ரெண்டு பேரும் அத சீரியஸ்னு நம்பிட்டீங்க போல...” என்று ஏதோ உளறி வைத்தான்.

சஞ்ஜயோ அதை பெரிதுப்படுத்தாமல், “போன காரியம் என்னாச்சு..?”என்று வினவினான்.

‘உஷ்… நல்ல வேள இன்னைக்கு தப்பிச்சேன்…’ என்றுக்கு நினைத்தவனிற்கு தெரியவில்லை, இன்று அவனிடத்தில் ஏற்கனவே ஒருவன் திட்டு வாங்கியிருக்கிறான் என்று…

“பாஸ், அந்த ராஜசேகர் இங்க வந்ததுக்கான ப்ரூஃப் கிடைச்சுருக்கு… இங்க மெயின் ஏரியால இருக்க பத்துக்கும் மேற்பட்ட ஹோட்டல்ல அவரு தங்கியிருக்காருன்னு ஒவ்வொரு ஹோட்டல்ல இருக்க சிசிடிவில பாத்து கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டோம்…” என்று கூற ஆரம்பித்தான் கோகுல்.

“பத்து ஹோட்டலயா…” என்று சஞ்சீவ் வினவ, “ஆமா சஞ்சு, ஆனா எந்த ஹோட்டலயும் ரெண்டு நாளுக்கு மேல தங்குனது இல்ல… அதே மாதிரி, அந்தந்த ஹோட்டல்ல தங்குன நாள் எல்லாம் கணக்கு பண்ணி பாத்தா, நடுவுல சில நாள் அந்த மனுஷன் எங்க போனாருன்னு தெரியல… அது தான் ரொம்ப குழப்பமா இருக்கு… இதே மாதிரி மத்த ஹோட்டல்ஸ்ல தேடுறதா, இல்ல வேற பக்கமா தேடுறதான்னு ஒன்னும் புரியல…” என்று சோர்வாக கூறினான் கோகுல்.

அவன் சோர்வே வேலைப் பளுவை கூற, இம்முறை அவன் கேட்காமலேயே அவனிற்கான பானத்தை எடுத்து வரச் சென்றான் சஞ்சீவ்.

சஞ்சயோ ராஜசேகரைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தவன், “அந்த ஹோட்டல் ரூம்ஸ் எல்லாம் ஆன்லைன் மூலமா புக் பண்ணதா கோகுல்..?” என்று வினவினான்.

“எல்லாமே ஆன்லைன் மூலமா தான் புக் பண்ணிருக்காரு பாஸ்… ஆனா, புக் பண்ணி மேக்ஸிமம் அரை மணி நேரத்துலேயே ஹோட்டலுக்கு வந்துருக்காரு…” என்றான் கோகுல்.

“ஹ்ம்ம் ஸ்மார்ட் மூவ்… ஒரே இடத்துல இருந்தா, சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவோம்னு இப்படி இடத்த மாத்திக்கிட்டே இருக்காங்க… அண்ட் அந்த ஹோட்டல் புக் பண்ணது கூட அவரா இருக்காது…பி நாளைக்கு ரெண்டு டீம்மா சர்ச் பண்ண ஆரம்பிங்க… ஒரு டீம் இங்க இருக்க மத்த ஹோட்டல்ஸ்ல போய் விசாரிங்க… இன்னொரு டீம் வேற எங்கயாவது அவரு மூவ் ஆகிருக்க சான்ஸ் இருக்கான்னு பாருங்க…” என்று அடுத்தடுத்த திட்டங்களை தீட்டினான்.

இவர்கள் பேசுவதைக் கன்னத்தில் கைவைத்து கவனித்துக் கொண்டிருந்த சஞ்சீவைப் பார்த்த சஞ்சய், “சஞ்சு, டையர்ட்டா இருந்தா தூங்க போ…” என்க அவனை முறைத்த சஞ்சீவ், “ப்ரோ உனக்கே இது நியாயமா படுதா… இங்க வந்ததுலயிருந்து தூங்கி எழுந்து சாப்பிட்டுன்னு ரிப்பீட் மோட்ல பண்ணிட்டு இருக்கேன்… மறுபடியும் தூங்க சொல்ற… இன்னைக்கு ஒரு நாள் இப்படி அடைஞ்சு கிடந்ததே கஷ்டமா இருக்கு… ப்ளீஸ் ஜெய், ஹோட்டல் கணக்குகள எல்லாம் இங்க வர வச்சாவது பாத்துக்குறேன்…” என்றான்.

சில பல நிமிட சமாதானங்களுக்கும் உடன்படிக்கைகளுக்கும் இடையே சஞ்சீவ் வீட்டிலிருந்து ‘ஓய்வாக’ பணியை மேற்பார்வையிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

*****

“ஹே ரஞ்சு, எங்க போயிருந்த..? எதுக்கு இவ்ளோ நேரமாச்சு… நாங்க பயந்தே போயிட்டோம் தெரியுமா..?” என்று ரஞ்சு விடுதியினுள்ளே நுழைந்ததுமே படபடவென்று பேச ஆரம்பித்தாள் சஞ்சு.

ரஞ்சுவிற்கு அவர்களிடம் மறைத்துவிட்டு சென்றதோடு, அவர்களை பதட்டப்படுத்திவிட்ட குற்றவுணர்வும் சேர்ந்து கொண்டது. நுழைந்தது முதல் அவளின் முகத்தை மட்டுமே பார்த்து ஒன்றும் பேசாமல் இருந்த தர்ஷு சஞ்சுவிடம், “அவளே இப்போ தான வந்துருக்கா… முதல ரூமுக்கு கூட்டிட்டு போவோம் சஞ்சு…” என்றாள்.

அதைக் கேட்டதும் ரஞ்சுவின் முகம் மேலும் கூம்பிப் போனது. அவளை அறைக்கு அழைத்துச் சென்று, சாப்பிட வைத்த பின்னரே மீண்டும் விசாரணையைத் துவங்கினர்.

“கைட் கூப்பிட்டாங்க, போயிட்டு வந்தேன்னு பொய் சொல்லாம, இப்போயாச்சும் எங்க போன, அதுவும் எங்ககிட்ட மறைச்சுட்டு போறளவுக்கு அப்படி என்ன சீக்ரெட்னு சொல்றியா…” என்று தர்ஷு வினவ, தலை குனிந்து கொண்டாள் ரஞ்சு.

தர்ஷு பேசியதில் அதிர்ந்த சஞ்சு, ரஞ்சுவின் செய்கையைப் பார்த்து உண்மை என்னவென்று அறிந்து கொண்டவளும் ரஞ்சுவின் பதிலுக்காக காத்திருந்தாள்.

ஒரு பெருமூச்சுடன் நடந்தவை அனைத்தையும் சொல்லி முடித்தாள், தனக்கு நேரவிருந்த விபத்தைப் பற்றி மட்டும் மறைத்துவிட்டாள். அதைப் பற்றித் தான் அவளிற்கே ஒன்றும் தெரியாதே… அடுத்த நாள் சஞ்சயைப் பார்க்கும்போது இதைப் பற்றி வினவ வேண்டும் என்று மனதிற்குள் குறித்துக் கொண்டாள்.

“இத எதுக்கு எங்ககிட்ட மறைச்ச ரஞ்சு..? அவங்கள தேடிப் போறேன்னு சொன்னா, நாங்க மறுத்துடுவோமா என்ன..?” என்று ஆதங்கத்துடன் சஞ்சு வினவ, “ச்சே இத உங்ககிட்ட மறைக்கணும்னு இல்ல சஞ்சு… இன்ஃபேக்ட் எனக்கே நான் செய்யுறது சரியான்னு தெரியல…” என்று கூறினாள் ரஞ்சு.

“சஞ்சய் கேட்டத தான் நானும் கேக்குறேன் ரஞ்சு… அவங்கள கண்டுபிடிச்சு என்ன செய்யப்போற…? அதுவும் உன்ன வேணாம்னு தூக்கிப் போட்டவங்கள தேடி போறேன்னு சொல்ற… ஹ்ம்ம்… இத நான் எப்படி எடுத்துக்கன்னு தெரியல ரஞ்சு…” என்று அவள் செய்யவிருந்த காரியம் தனக்கு பிடிக்கவில்லை என்பதை தன் பேச்சிலேயே காட்டினாள் தர்ஷு.

“தர்ஷு, நான் பழச எதையும் கிளற போகல… என்ன வேணாம்னு முடிவு பண்ணவங்க எனக்கும் வேணாம்… எனக்குன்னு சொல்லிக்க நீங்க எல்லாரும் இருக்குறப்போ, அவங்க எதுக்கு… ஆனாலும், எனக்கு ஒரே ஒரு கேள்வி அவங்கள பாத்து கேக்கணும்… என்னோட பிறப்பு தெரிஞ்சதுலயிருந்தே என் மனச போட்டு வருத்துற விஷயம்… அதுக்கு மட்டும் பதில் கெடைச்சா போதும்… ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்…” என்றாள் ரஞ்சு.

சற்று நேரம் அமைதியாக இருக்க, “அப்போ நாளைக்கு நீ அந்த சஞ்சய் கூட போகப்போற… அப்படி தான…” என்று வினவினாள் தர்ஷு.

அவளைப் பாவமாக பார்த்த ரஞ்சு, “ப்ளீஸ்…” என்று வாயசைக்க, “சரி போயிட்டு வா… பட் இது தான் லாஸ்ட் திரும்பவும் இப்படி லூசு மாதிரி பண்ணமாட்டேன்னு எங்களுக்கு ப்ராமிஸ் பண்ணனும்…” என்றாள் தர்ஷு.

ரஞ்சுவும் சரியென்று தலையசைத்தாள். ஏனோ தர்ஷுவிற்கு அங்கு செல்ல விருப்பமில்லை. இல்லையென்றால், ரஞ்சுவுடன் அவளும் கிளம்பியிருப்பாள். தர்ஷு போகாததால், சஞ்சுவும் செல்லவில்லை.

“சரி சரி ரொம்ப சூடா இருக்கீங்க… வாங்க வெளிய போய் ஜில்லுன்னு ஒரு ஐஸ்-க்ரீம் சாப்பிட்டுட்டு வரலாம்…” என்றாள் சஞ்சு அவளின் காரியத்தில் கண்ணாக…

“நாங்க எல்லாம் ஜில்லுன்னு தான் இருக்கோம்… உனக்கு வேணும்னா உங்க அம்மா கிட்ட கேளேன்… அவங்க பேசுறதுலேயே கூலாகிடுவ…” என்று கிண்டலாகக் கூறினாள் தர்ஷு.

“ஹ்ம்ம் என்ன என் ஹிட்லர் மம்மி கிட்ட மாட்டிவிடலைன்னா உனக்கு தூக்கம் வராதே… வா ரஞ்சு நாம பாதாம் மில்க் பண்ணி குடிக்கலாம்…” என்று ரஞ்சுவை இழுத்துக் கொண்டு சென்றாள்.

“அதுக்கு எதுக்கு மேடம் அவளையும் இழுத்துட்டு போற..?” – தர்ஷு.

“ஹான் நானே மம்மி’ஸ் லிட்டில் பிரின்சஸ்ல… எனக்கு எப்படி பாதாம் பால் பண்ண தெரியும்…” என்று உதட்டைப் பிதுக்கினாள் சஞ்சு.

“எப்போ பாத்தாலும் இத சொல்லிடு… உன்ன எல்லாம் வருங்காலத்துல உன் ஹஸ்பண்ட் எப்படி மேய்க்க போறாரோ..?” என்று ரஞ்சு கூற, “ஹ்ம்ம் இதுக்கு தான் நல்லா சமைக்க தெரிஞ்சவனா பாத்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்…” என்று தோளைக் குலுக்கினாள் சஞ்சு.

“அந்த சமைக்க தெரிஞ்ச பையனுக்கு இப்போவே என் ஆழ்ந்த அனுதாபங்கள தெரிவிச்சுக்குறேன்…” என்று ரஞ்சுவும் தர்ஷுவும் சிரித்துக் கொண்டனர்.

“இன்னும் கண்ணுலயே படாத (!!!) என் வருங்காலம் இருக்கட்டும், அது என்ன ஹீரோயின்னுக்கு ஒரு கஷ்டம்னா உடனே ஹீரோ சார் என்ட்ரி குடுத்துடுறாரு…” என்று ரஞ்சுவை கண்ணைக்காட்டி சஞ்சு கேலி பேசினாள்.

சஞ்சுவின் கேள்வியில், மனதிற்குள் உற்சாகம் ஏற்பட்டாலும், அதை வெளியில் சொல்லாமல், “அதெல்லாம் ஒண்ணுமில்ல சஞ்சு… நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத…” என்றுவிட்டு அங்கிருந்து நழுவிவிட்டாள்.

தர்ஷு இவையனைத்தையும் பார்த்தாலும் எதுவும் சொல்லவில்லை. முன்னே சஞ்சீவின் நடவடிக்கைகளில் அவளிற்கு ஏற்பட்ட குழப்பமே தீராத பட்சத்தில் இப்போது அவனை விட வேகமாக (!!!) செயல்படும் சஞ்சயின் நடவடிக்கைகள் இன்னும் குழப்பத்தையே தந்தன. இவற்றை இன்றே ரஞ்சுவிடம் வெளிப்படுத்தி அவளையும் குழப்ப வேண்டாம் என்று நினைத்தாள்.

*****

அடுத்த நாள் அனைவருக்கும் பரபரப்பாக விடிந்தது. பலரின் வாழ்க்கையை மாற்றக் கூடிய நாளாக மாறப்போகிறது எண்டர்ஜ் அப்போது அவர்களுக்கு தெரியாமல் போக, எப்போதும் போல ஒரு நாளாகவே அன்றைய தினத்தை ஆரம்பித்திருந்தனர்.

சஞ்சய் மற்றும் ரஞ்சுவின், அவளின் பிறப்பைக் பற்றி அறிந்து கொள்வதற்கான பயணம், ராஜசேகரைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக கோகுல் மேற்கொள்ளும் பயணம், சஞ்ஜீவின் மனதைக் கலைக்க ஷ்ரேயா மேற்கொள்ளும் பயணம்… இவற்றில் எந்தெந்த பயணங்கள் தங்களின் இலக்கை சரியாக அடைந்து வெற்றியடையும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…

தொடரும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top