உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 24

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ, கதையின் அடுத்த பகுதி. இன்னும் ஒரே ஒரு எபி மட்டுமே இருக்கு. அதனை மாலை அல்லது இரவு அளித்துவிடுகிறேன்... சென்ற பகுதிக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி...

உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 24

rana-and-sai-pallavi.jpg


சோபாவில் மகிழ் அமர்ந்திருக்க, அவளெதிரே க்ளாஸை கட்டடித்து அம்மாவிடம் மாட்டிய பிள்ளை போல் கைகட்டி நின்றிருந்தான் ஆதி. அவனருகில் தலை குனிந்து நின்றிருந்தாள் ப்ரார்த்தனா. (பணிவுன்னு எல்லாம் நினைச்சுக்காதீங்க… ஆதி அப்படி நிக்கறத பாத்து சிரிப்பு வருதாம். அத மறைக்க தான் இப்படி)

“சொல்லு… எப்போல இருந்து இது…” என்று இருவரையும் சுட்டிக் காட்டியவள், “நடந்துட்டு இருக்கு?” என கேட்டாள் மகிழ்.

“அது வந்து அக்கா…” என ஆரம்பித்தவன், அவள் சுட்டெரிக்கும் பார்வையில், “இப்போ கொஞ்ச நாளாத் தான். அன்னைக்கு நாம ஷாப்பிங் போனோமே, அப்போ முதலில் பார்த்தேன். அடுத்து, என் ஃப்ரெண்டோட வெளிய போயிருந்தப்போ இவளும் அவ ஃப்ரெண்டோட வந்திருந்தா. Met through common friends. அப்புறம், நம்பர் மாத்திக்கிட்டோம்” என்றவன், ப்ரார்த்தனாவின் ‘என்னது?’ என்ற குரலில் எச்சில் விழுங்கிக்கொண்டு, “நம்பர் வாங்கி பேசினேன். அதுக்கப்புறம் தான்…” என்று அவன் இழுக்க, அவனையே பார்த்திருந்தாள் மகிழ்.

“காதல் தப்பில்லைதான். ஆனால், இப்போ…” என்று யோசனையுடன் நிறுத்தினாள் மகிழ்.

“நான் அடுத்த வருடம் படிப்ப முடிச்சுருவேன்க்கா. அதற்கடுத்து ஃபாரின் யூனிவர்சிட்டிஸ்ல எம்.எஸ். ட்ரை பண்ணலாம்னு இருக்கேன். இவளுக்கு இன்னும் மூன்று வருடம் இருக்கு. நான் படிச்சு முடிச்சுட்டு வரவும், இவளுக்கு முடியவும் கரெக்டா இருக்கும். அதன்பிறகு இங்கேயே ஒரு வேலையை தேடி, கொஞ்ச வருடம் இருவரும் வேலை பார்த்ததும்தான் எதுவா இருந்தாலும்னு நான் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேங்க்கா” என்று அவன் முந்திரிக்கொட்டையாக தங்கள் திட்டத்தை உரைக்க, கடுப்பான ப்ரார்த்தனா அவன் தலையில் கொட்டு வைத்தாள் என்றால், மகிழின் மனம் சிறிது தெளிவடைந்திருந்தது. தன்னைப் போல அல்லாமல், தம்பி தெளிவாக இருக்கிறானே!

இருந்தாலும், சில பல அறிவுரைகளை கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

“ஏண்டா… நான் உங்கிட்ட நம்பர் கொடுத்தேன்?” என்று மகிழ் சென்றதை அறிந்து ப்ரார்த்தனா ஆதியை முறைக்க,

“அதா சொல்லிட்டேனே, நான் தான் வாங்கினேன்னு…” என்றான் ஆதி.

“நெஜமா சொல்லு, வாங்கினியா? என் ஃப்ரெண்ட் கிட்ட கெஞ்சு கெஞ்சுன்னு நீ கெஞ்சுன கதைய எல்லாம் அன்னைக்கு நைட்டே எனக்கு போன் போட்டு சொல்லிட்டா. சரி, நல்ல பையனா தெரியறானேன்னு தான் தர சொன்னேன்” என்று அவள் கூற,

“அடிப்பாவி… நீயே தரசொல்லிட்டு தான் யாருன்னு தெரியலைன்னு என்னை அலையவிட்டியா?” என்று அவன் வாயைப் பிளக்க, அவன் தாடையில் கை வைத்து, “மவுத் க்ளோஸ்…” என்று வாயை மூடியவள்,

“ஈஸியா கெடச்சா எதுவும் கெடைக்காது மச்சான்…” என்றாள்.

“எல்லாம் என் தலைவிதி… உன்கிட்ட வந்து மாட்டனும்னு இருக்கு…” என்று அவன் தலையில் அடித்துக்கொள்ள, “நோ யூஸ்… வசமா சிக்கிட்ட. கெடச்ச சிக்கன கொழம்பு வெக்காம விடப்படாது…” என்றாள் ப்ரார்த்தனா.

இருவரும் கைப்பேசியின் வாயிலாக பேசிக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் தன் காதலைப் பகர்ந்திருந்தான் ஆதி. ஆனால், ப்ரார்த்தனா உடனே அதனை ஏற்கவில்லை. எறும்பு ஊற கல்லும் தேயும் என்பதற்கேற்ப அவளும் காதலில் விழுந்தாள். ஆதியை படுத்தியதற்கு நேரில் பார்த்து காதலை கூற அவள் வந்தபோது தான் மகிழ் அவளை காப்பாற்ற சென்று தான் விபத்தில் மாட்டிக்கொண்டது. புகழ் சொல்லாமலே ஆதி அன்று மருத்துவமனைக்கு வந்த காரணமும் ப்ரார்த்தனாதான்.

*******

மகிழ் தன்னை ஏற்றுக்கொண்டதும், உடனே புகழ் அவசரப்படுத்தவில்லை. அவளுக்கு சிறிது காலம் தேவைப்படும் என்பதை உணர்ந்தே இருந்தான். எனவே, இருவரது வீட்டிலும் பேசி ஆறு மாதங்கள் கழித்து திருமணத்தை வைத்துக்கொள்ள கேட்டு, இடைபட்ட காலத்தில் இருவரும் நிறைய காதலித்தனர். இதில் அவள் தன்னை பக்குவப்படுத்திக்கொள்ளவும் முடிந்தது.

கோவையில் தான் திருமணம் வைக்கவேண்டும் என்று புகழ் கட்டளை பிறப்பித்துவிட, அவனை சமாதானப்படுத்த முயன்று தோற்றவர்களோ, சரியென்றுவிட்டனர். இதோ, இப்போது இருவருக்கும் சங்கீத் நடந்துகொண்டிருக்கிறது.

கீர்த்தியை தான் கையிலேயே பிடிக்கமுடியவில்லை. ஒரு புறம் புகழ், மறுபுறம் மகிழ் என இருவருக்குமாக சேர்ந்து ஓடிக்கொண்டிருந்தாள். ஆனால், பெரும்பான்மையான நேரம் அவள் மகிழின் புறமே நிற்க, தன் தோழியை பாசமுடன் கட்டிக்கொண்டாள் அவள்.

காலையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டிருக்க, அதனால் சிறிது கோபத்துடனேயே விழாவில் கலந்துகொண்டாள் மகிழ்.

சிலர் ஆடிமுடித்தும் மேடையில் அடுத்து யாரும் தோன்றவே இல்லை. ஆனால், அடுத்த பாட்டிற்கு இசை மட்டும் ஆரம்பித்துவிட, மேடையோ இருட்டாக.

திடீரென்று மகிழின் பின்னிருந்து விசில் சத்தம் கேட்க, யாரென்று திரும்பிப்பார்த்தால் அங்கிருந்து ஒருவர் எழுந்து வந்தார்.

அப்போது சரியாக மேடையின் கீழே வெளிச்சம் பரவ, அங்கே புகழ் ஆட ஆரம்பித்திருந்தான்.

வெய்டிங் ஃபோர் த புன்னகை, சிரிடி
காணவில்லை ஹார்ட் பீட், திருடி

அடடா நான் கவிஞன்
உன்னை பார்த்து கெட்டுப் போன கவிஞன்

ஹானஸ்ட்-ஆ நான் பேசவா ?
இல்லை இது போதுமா ?

ஓ மை டார்லிங், நாங்க கமிங்
புது புது கணக்கெல்லாம் பென்டிங், ஓ

கோரஸ்-ஆ நான் கேக்கவா ?
எஸ்-ஆ எஸ்-ஆ ? நோ-ஆ எஸ்-ஆ ?

அழகியே
மேரி மீ, மேரி மீ

அழகியே
ஃப்லிர்ட் வித் மீ, கெட் ஹை வித் மீ

அழகியே
கோவம் வந்தா, கூச்சம் வந்தா

டோன்ட் வொர்ரி
அழகியே, ஹே அழகியே

அழகியே
மேரி மீ, மேரி மீ

அழகியே
ஃப்லிர்ட் வித் மீ, கெட் ஹை வித் மீ

அழகியே
காதல் வந்தா, மேட்டர் வந்தா

கால் அடி
அழகியே, ஹே அழகியே, ஹே

புகழ் நடுவில் ஆட, அவனை சுற்றி இன்னும் பலர் ஆட, மகிழ் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தாள். ஆடியவாறே அவளருகில் வந்தவன், அவளையும் தன்னுடன் சேர்த்து ஆடவைத்தவாறு மீதி வரிகளை பாடத்துவங்கினான்.

யாரும் கேட்கா எது ஒன்றை
எது ஒன்றை நான் கேட்டேன் உன்னை ?

அதைத் தந்தால் நன்றி
பிடிவாதம் இன்றி

நீ தந்தால் நன்றி
துளி துளிரே

துளி காலம் கேட்டேன்
துளி காதல் கேட்டேன்

துளி காமம் கேட்டேன்
மறு உயிரே

மறுக்காதே நீ
மறக்காதே நீ

எந்தன் அழகியே நீ
நிநி நிநி நிநி நிநி
நிநி நிநி நிநி நிநி

அழகியே
மேரி மீ, மேரி மீ

அழகியே
ஃப்லிர்ட் வித் மீ, கெட் ஹை வித் மீ

அழகியே
கோவம் வந்தா, கூச்சம் வந்தா

டோன்ட் வொர்ரி
அழகியே, ஹே அழகியே

அழகியே
மேரி மீ, மேரி மீ

அழகியே
ஃப்லிர்ட் வித் மீ, கெட் ஹை வித் மீ

அழகியே
காதல் வந்தா, மேட்டர் வந்தா

கால் அடி
அழகியே, ஹே அழகியே, ஹே

என்று பாடல் முடிய, மகிழின் முன் மண்டியிட்டவன், அவளிடம் ஒரு பொக்கேவை நீட்டி, ஐ லவ் யூ என்றுரைக்க, பெண்ணவளின் முகம் வெட்கம் பூசிக்கொண்டது. அத்தோடு அந்த சிறு பூசலும் முடிவுக்கு வந்தது.

******

அன்றைய கொண்டாட்டத்தின் பின் அனைவரும் உறங்கச் செல்ல, மெல்ல நடுஇரவில் ஒரு உருவம் வெளியேறி சுற்றுச்சுவரை அடைந்தது. பின், சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, தன் காலனியை மறுபுறம் வீசிவிட்டு தானும் சுவரைத் தாண்டி குதித்து அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் மேல் சாய்ந்துகொண்டிருந்தவனின் அருகில் சென்றது.

தன் தலையை மூடியிருந்த துப்பட்டாவை விளக்கியவள், “இந்த நேரத்திற்கு எதுக்கு வர சொன்னீங்க தமிழ்? யாராவது பார்த்தா என்ன ஆகிறது?” என்று கேட்டாள்.

“பார்த்தாங்கன்னா சமாளிச்சுக்கலாம். இப்போ வா… ஒரு இடத்துக்கு போயிட்டு வரலாம்” என்று அவன் அழைக்க, வரமறுத்தவளை ஒரு வழியாக இழுத்துச் சென்றான் அவன்.

பைக் கோவை ரோட்டில் சீறிப்பாய, “ஹே! எங்க போறோம்?” என்று கேட்டாள் அவள்.

“ஜஸ்ட் டூ ஹவர்ஸ் ரைட். பிறகு வீட்டில் விட்டறேன்” என்றவனை முறைத்தவளுக்கு அவனுடன் பைக்கில் ஏறியது தவறோ என்று தோன்றியது.

“இப்போ மணி என்ன தெரியுமா? பதினொன்னரை. நாம போறதுக்குள்ள ரெண்டு மணியாகிடும். அதுக்குள்ள எழுந்துடுவாங்க தமிழ். ப்ளீஸ்… என்னை வீட்டில் விடுங்க” என்று அவள் சொல்லும்போதே வண்டி அவிநாசி ரோட்டில் பறந்துகொண்டிருந்தது.

“ஷூ… நான் என் காதலியை கூட்டிட்டு போய்ட்டு இருக்கேன்… இந்த எஞ்சாய்மெண்ட் நாளைக்கு கிடைக்காது. சோ, இப்போவே அமைதியா அனுபவிச்சுக்கோ” என்றவன் அவளுடன் அந்த

அவன் செல்லும் வழியை பார்த்தவள், “கோவைல தான் வைக்கனும்னு சொல்லிட்டு இப்போ நடு இரவுல பொள்ளாச்சிக்கு கடத்திட்டு போறியே…” என சலித்துக்கொண்டாள். அதைக் கேட்டு புன்னகைத்தவன், வண்டியை அந்த ரவுண்டானாவில் இருந்து திருப்ப, சில நிமிடங்களில் “வாவ்…” என்று விழிகளை விரித்தாள்.

என்றோ புகழிடம் பேசும்போது சொல்லியிருந்தான், அவன் காதலியை நடுஇரவில் இந்த வழியாக பைக்கில் அழைத்துவர வேண்டும், மிகவும் அழகாக இருக்கும் என்று. அப்போது அவனிடம் மறைமுகமாக ‘என்னை அழைத்து செல்வாயா?’ என்று கூட கேட்டிருந்தாள் அவள். இப்போது அதை நினைவில் வைத்து இங்கே அழைத்து வந்திருக்கிறான்.

ரோட்டில் பைக்கை நிறுத்தியவுடன் எதிரே தெரிந்த குளத்தையும், அதன் மறுபுறம் தெரிந்த வெளிச்சம் தண்ணீரில் பிரதிபலிப்பதையும் கண்டு மெய்மறந்து நின்றவள், குளிரில் தன்னிச்சையாக துப்பட்டாவை எடுத்து சுற்றிக்கொண்டாள்.

அவள் குளிரில் நடுங்குவதைக் கண்டவன், தன் ஜெர்க்கினை அவளுக்கு அணிவித்துவிட, அவன் மணத்தை ஆழ்ந்து அனுபவித்தவாறே அவன் தோள் சாய்ந்தாள்.

சிறிது நேரம் கழித்து அவர்கள் பைக் அதே வழியில் பாலத்தின் எல்லைவரை சென்று ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு அமைதியாக மண்டபத்தை தஞ்சமடைந்தது.

******

மணநாள் அழகாய் விடிய, மணமகனும் மணமகளும் தங்கள் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை தொடங்க ஆயத்தமாகி வந்தனர்.

இருவரையும் மணையில் அமரவைத்து சடங்குகள் செய்ய, தன் இதயத்தில் குடியிருப்பவளை மங்கலநாண் பூட்டி வாழ்விலும் இணைத்துக்கொண்டான் புகழ்.

கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

இப்பிறவியில் இன்னொரு பெண்ணை
சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம்
மனம் சாயா பிரியம் காப்பேன்
செல்ல கொலுசின் சிணுங்கல்
அறிந்து சேவை செய்வேன்
நெற்றிப் பொட்டில் முத்தம் பதித்து
நித்தம் எழுவேன்
கைப்பொருள் யாவும் கரைந்தாலும்
கணக்கு கேளேன்
ஒவ்வொரு வாதம் முடியும் போதும்
உன்னிடம் தோற்பேன்
கண்ணே கனியே
உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

அர்த்த ஜாம திருடன் போல அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதிலும்
எந்தன் காதல் தீரேன்
மாத மலர்ச்சி மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ விழுந்தால்
தாய் மடியாவேன்
சுவாசம் போல அருகில் இருந்து
சுகப்பட வைப்பேன்


உந்தன் உறவை எந்தன் உறவாய்
நெஞ்சில் சுமப்பேன்
உன் கனவுகள் நிஜமாக
என்னையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என் உயிர் தருவேன்

காதல் கணவா உந்தன்,
கரம் விடமாட்டேன்.
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே!

தாய் வழி வந்த எங்கள்
தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே!

ஒரு குழந்தை போலே,
ஒரு வைரம் போலே,
தூய்மையான என்
சத்தியம் புனிதமானது!

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top