உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 18

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

கதையோட அடுத்த பதிவு இதோ! இன்னும் 5 அல்லது 6 எபிஸ் மட்டுமே வரும்...

உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 18

rana-and-sai-pallavi.jpg

தயக்கத்தோடு அந்த வீட்டின் முன் நின்றுகொண்டிருந்தாள் மகிழ். உள்ளே அன்று நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்காக சிலர் இருப்பது தெரிந்தது. இருந்தும் உள்ளே செல்ல ஒரு தயக்கம் எழ, அப்படியே ஓடிவிட்டால் என்ன? என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது அவளுக்குள்.

அதனை செயல்படுத்த அவள் தன் கால்களுக்கு கட்டளையிட, ‘நான் அவனை பார்க்காமல் வரமாட்டேன்!’ என்று சண்டித்தனம் செய்த மனதோடு சேர்ந்துகொண்டு அதுவும் எங்கும் வராமல் வேறூன்றி நின்றுவிட்டது.

அப்போது, வீட்டில் இருந்து தோட்டத்திற்கு வந்த ப்ரார்த்தனா (சின்னு) அவளை பார்த்தவுடன் யாரென்று கண்டுகொண்டாள்.

மகிழை நோக்கி விரைந்தவள், “வாங்க மகிழ், எப்படி இருக்கீங்க? இப்போ பரவாயில்லையா?” என்று விசாரித்தவள் அவள் கைபிடித்து உள்ளழைத்து சென்றாள்.

இதுவரை இருவரையும் அவள் இணைந்து பார்க்கும் சந்தர்ப்பங்கள் பெரியதாக அமையவில்லை. இன்றோ, புகழ் தன் வீட்டை புதுப்பித்து அதற்கு காலையில் பால் காய்ச்சிவிட்டு மாலை தொழில்முறை நண்பர்கள் அனைவரையும் அழைத்து ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். எப்படியும் இன்று ப்ரார்த்தனாவும் இங்கே இருப்பாள் என்று யோசனையோடே வந்திருந்தாள் மகிழ். அவளை ஏமாற்றாமல் ப்ரார்த்தனாவும் அங்கே தான் இருந்தாள், வின்டர் ஹாலிடே என்பதால்.

கீர்த்தி மாலை ஆறு மணிக்கு நடக்கும் நிகழ்ச்சிக்கு காலையிலேயே மகிழ் வந்தாகவேண்டும் என்று கூறிவிட, அவளிடம் மறுத்துப்பேசி முடியாததால், மாலை நான்கு மணி போல வந்து சேர்ந்திருந்தாள் மகிழ்.

வீட்டை சுற்றிப்பார்க்க கீர்த்தி அழைக்க, அவளுடன் வந்தவள் ஹாலிலேயே நின்றுவிட்டாள். அவள் பார்த்துப்பார்த்து வரைந்த ஓவியம் உயிர் பெற்று அவள் கண் முன் நின்றது.

மரத்தாலான சிறு பலகைகளை இருப்பக்கமும் அதன் நீளத்தைப் பொருத்து சிறியதில் இருந்து பெரியதாக சிறு இடைவெளி விட்டு மாட்டியிருக்க, அதில் கோகுலக்கண்ணனும் அவன் மனம் கொண்ட கோதையும் இருந்தனர். ஒவ்வொரு பலகையிலும் சிறு பகுதி மட்டுமே இருக்க, அதனை சேர்த்தால் ஓவியம் முழுமையடையுமாறு இருக்கும். அந்த ஓவியத்தின் நடுப்பலகை உயரம் அதிகமாகவும், அதன் அடுத்தடுத்த பலகைகள் குறைவாகவும் இருக்குமாறு, ஓரத்திலிருந்து பார்த்தால் சிறு படிக்கட்டுகளாக தெரியுமாறு அமைத்திருந்தனர். வலப்பக்கமிருந்து பார்த்தால் அந்த பகுதியில் ராதையும், இடப்புறமிருந்து பார்த்தால் கிருஷ்ணரும் தெரியுமாறும் வரைந்திருந்தனர்.

அதனை விட்டு அவள் விழி அகலவே இல்லை. அவள் கண் முன்னே ராதையும் கண்ணனுமாக சிரித்துக்கொண்டிருந்தது புகழும் அவளும் தான்.

எத்தனை முறை வரைந்தாலும் அவர்கள் இருவர் முகத்தைத் தான் வரைய முடிந்தது அவளுக்கு. புகழ் கேட்கும்போதெல்லாம் நேரம் கேட்டு அவள் வேறு முகங்களை வரைய நினைத்தாலும் அவை எதுவுமே அவளை திருப்திப்படுத்தவில்லை. கோபமுற்று அவன் அவளை கடிய, அதில், அவள் வரைந்த அனைத்தையும் அவனிடம் தந்திருந்தாள். அதில் ஒன்றே அவன் இங்கே உபயோகித்திருந்தது.

தரைத் தளத்தை மட்டும் அவள் பார்க்க, மேலே அழைத்துச் செல்ல நினைத்த கீர்த்தியின் கைபற்றி மீண்டும் ஹாலுக்கே அழைத்து வந்துவிட்டாள். அதன்பின்னர் மூவரும் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்திலேயே கீர்த்தியின் அக்காவும் வந்துவிட, கலகலப்பு ஆரம்பித்தது.

என்னதான் தன் மனதிற்கு கடிவாளமிட்டிருந்தாலும் அங்கே இருப்பதையும் ப்ரார்த்தனாவுடன் பேசிக்கொண்டிருப்பதையும் அவள் மனம் ஒரு ஓரம் திகிலடைந்து பார்த்திருப்பதை அவள் உணர்ந்தே இருந்தாள்.

இங்கே இப்படியிருக்க, மாடியில் இருந்து இறங்கிய புகழ் ஒரு நொடி தடுமாறியே போனான், அவன் அமர்ந்திருந்த மகிழைக் கண்டு. மரகதப் பச்சை வண்ண மென்பட்டுடுத்தி, கண்ணுக்கு மையிட்டு, ஒரு சிறு பொட்டும் அதன் மேலே குங்குமமும் வைத்திருந்த அந்த மெல்லிய ஒப்பனையிலேயே அவன் மனம் தாளம் தப்பித் துடித்ததென்றால், அவள் வைத்திருந்த இருவாச்சியின் மனம் எட்டு பத்தடி தாண்டி நின்றிருப்பவனை சாய்த்தே விட்டது.

அவளை பார்த்தவாரே அவன் நின்றிருக்க, ஏதோ தோன்ற அவனை ஏறிட்டாள் மகிழ். இருவர் கண்களும் உரசிக்கொள்ள, அவை மேலும் என்ன பேசியிருக்குமோ, விலக்கிக்கொண்டாள் அவள் கண்களை.

அதுவரை நூற்றியிருபதில் ஓடிக்கொண்டிருந்த அவள் இதயத்துடிப்பு இருநூறைத் தாண்டியது. அதனால் ஏற்பட்ட பதட்டம் அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, அதனை மறைக்க முயற்சித்தவளை இடையிட்டது கீர்த்தியின் குரல்.

“என்னடி ஆச்சு?”

“ஆ… அது… வேர்வை… ரொம்ப வேர்க்குது… நான் கொஞ்சம் காத்தாட நின்னுட்டு வரேண்டி” என்றவள் யார் பதிலையும் எதிர்பார்க்காமல் தப்பித்தோம் பிழைத்தோம் என தோட்டத்தின் பக்கம் ஓடினாள்.

********

சிறிது நேரம் தோட்டத்தில் நின்று தன்னை சமன்படுத்தியவள், உள்ளே செல்ல திரும்பும்போது, அவளை இழுத்தது ஒரு கரம். யாரென்று பார்த்தவள் அதிர்ந்துதான் போனாள். அதிலிருந்து வெளிவந்து அவள் தன் கையை விடுவிக்க போராட, அதற்குள் அவளை வீட்டின் வெளியே இருந்த மறைவான பகுதிக்கு அழைத்து வந்திருந்தான் புகழ்.

அங்கே வந்து சேர்ந்ததும் அவன் பிடி இளக, அதனை பயன்படுத்தி தன் கையை விலக்கிக்கொண்டவள், “என்ன செய்யறீங்க? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்று கேட்க,

“அப்போ யாரும் பார்க்கலைன்னா பரவாயில்லையா?” என்று கேட்டான், யாருமறியாமல் அவளை ஆள்நடமாட்டமில்லா இடத்திற்கு தள்ளிக்கொண்டு வந்த கள்வன்.

“சோ… உங்களோட….” என்றவளுக்கு அங்கே நிற்கவேண்டாம் என்னும் எண்ணம் தோன்ற, “நான் போறேன்” என்று வாசல் பக்கம் செல்லத் திரும்பினாள்.

அவளை பிடித்து அருகிலிருந்த சுவற்றில் சாய்த்தவன், ‘என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?’ என்னும் விதமாய் புருவம் உயர்த்தினான்.

அவன் நெருக்கம் தன் மனதை மயக்க, அவள் தனக்குள் போட்ட தளைகள் எல்லாம் தாண்டி வந்துவிடுவானோ என்று சிறு பயம் எட்டிப்பார்த்தது அவளுக்கு. அது அவள் கண்களில் அப்பட்டமாகத் தெரிய, அதனை பயம் என்றவரையில் புரிந்துகொண்டாலும், அவளை விட்டு விலகாமலே நின்றிருந்தான் அவன்.

“ஹே… என்னை கொஞ்சம் பாரு” என்றவன் அவள் முகம் நிமிர்த்த, அவன் விழி பார்த்தவள், மெல்ல உரைத்தாள், “ச…சார்…” என்று திக்கித் தினறி,

அதற்கு “தமிழ்!” என்றான் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து.

“சார்?” என்று அவள் கேள்வியாக நோக்க, “தமிழ்” என திருத்தியவாறே அவளை நெருங்கினான்.

அதில் பின்னடைந்தவள், மேலும் “சார்” என்றாள். விட்டால் சுவருக்குள் புதையுண்டு போகும் நிலையில் இருந்தாள் அவள்.

“தமிழ்!!!” என்றவன் அவளது இருபுறமும் தன் கைகளைக் கொண்டு செல்ல, விக்கித்து நின்றவளது மூளை அவனை தள்ளிவிட்டு செல்லச் சொல்ல, மனமோ அவனில் லயித்து நின்றது.

“நகருங்க… நான் வெளிய போகனும்” என்று அவளுக்கே கேட்காத குரலில் சொன்னாள் மகிழ்.

“போகலாம்… முதலில் சொல்லு”

“எ… என்ன?” என தவித்தபடி கேட்டவாறு தன்னை நோக்கியவளின் விழியசைவில் வீழ்ந்துதான் போனான் அந்த காளை.

“தமிழ்… ஒரு வாட்டி கூப்பிடு… அப்புறம் போகலாம்…” என்று அவன் கூற,

“நீங்க என் பாஸ்… சார்ன்னு தான் கூப்பிட முடியும்…” என்று அவள் தன் தயக்கம் மறைத்த குரலில் உரைக்க,

“நான் உனக்கு பாஸ் மட்டும் தானா?” என ஆழ்ந்த குரலில் கேட்டவனை பார்க்க முடியாமல் குனிந்தவளை அவளை பார்க்க வைப்பதற்காக அழைத்தான்.

“ஹனி…”

அதில் சரேலென்று அவனை நோக்கியவள், அவளை யாரென்று கண்டுபிடித்து விட்டானா? என்ற கேள்விக்கான பதிலை அவன் முகத்தில் தேடினாள்.

அந்தோ பரிதாபம்! அதற்கான விடை இல்லை அவனிடத்தில். அதில் அவள் முகம் சோர்வுற, அதனை தன் கையில் ஏந்தினான்.

அதில் திகைத்து நின்றவள் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, அவள் காதினோரம் குனிந்தவன் மெலிதாக பாடினான்.

தொடுவானம் சிவந்து போகும்

தொலைதூரம் குறைந்து போகும்

கரைகின்ற நொடிகளில்

நான் நெருங்கி வந்தேனே!

இனி உன்னை பிரிய மாட்டேன்

துளி தூரம் நகர மாட்டேன்

முகம் பார்க்கத் தவிக்கிறேன்

என் இனிய பூங்காற்றே!!!

அவன் குரல், பல வருடங்களாய் அவளை இம்சித்த அதே குரல், காதல் குழைய அவள் செவி வழி இதயம் நுழைய, அதற்கு முன் ஓவர்டேக் செய்து அவள் இதயத்தின் கதவை தட்டின அவன் காதுமடலோரம் வைத்த முத்தமும், அதைத் தொடர்ந்த ‘ஐ லவ் யூ ஹனி’யும்.

அதிர்ந்தவள் பட்டென்று கண் திறந்து பார்த்தபோது கண்டதெல்லாம் காதல் வழிய நின்றிருந்த புகழைத்தான்.

அவன் கண்களில் சிக்குண்டு சிறைபட அவள் இதயம் துள்ள, அதை மறைக்க தன் முகத்தைத் திருப்பியவள் கண்டது, அவ்விடத்தில் இருந்து கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு செல்லும் ப்ரார்த்தனாவைத் தான்.

அதுவரை இருந்த இளக்கம் மறைய, அவன் மார்பில் கைவைத்து அவனை விலக்கியவள் நேர் பார்வை கொண்டு அவனை சுட்டெரித்தாள்.

“என்ன சார் இதெல்லாம்?” என்றவள் கோபமாக வினவ,

“இன்னும் என்னை ஏமாத்தலாம்னு நினைக்காத ஹனி! நீ யாருன்னு எனக்கு நல்லா தெரியும்!”

‘அதுதான் நீ பாடுன பாட்டுலயே தெரிஞ்சாச்சே!’ என்று நினைத்துக்கொண்டவள், அதனை வெளிகாட்டாமல், “வாட் டு யூ மீன்?” என்று புருவம் உயர்த்திக் கேட்டாள்.

“வாட் டு யூ மீன் பை வாட் டு யூ மீன்?” என கேட்டான் அவன்.

“நீ தான் அனிகான்னு கண்டுபுடிச்சுட்டேன்” என்றவன் முகம் காணாமல் தன் தடுமாற்றத்தை மறைத்து,

“யாரது? உங்களுக்கு மறந்துட்டா சொல்றேன், நான் அகமகிழ்தினி” என்றாள்.

“நீ அகமகிழ்தினியா இருக்கலாம். ஆனால், என் அனிகாவும் நீ தான்”

அவனது ‘என் அனிகா’ என்றதில் கோபமுற்றவள், தன் பொறுமை எல்லாம் பறக்க, “உங்க அனிகா எல்லாம் இங்க ஒன்னும் இல்ல” என்றவள், ‘பார்த்து வெச்சுருக்கவ பின்னால சுத்தாம வேற பொண்ணு பின்னால சுத்தி எல்லார் மனசையும் கஷ்டப்படுத்துவது’ என முனுமுனுக்க, அது அவனுக்கு தெளிவாக கேட்டும் விட்டது.

“என்ன சொன்ன நீ?” என்று சிறு உறுமலோடு கேட்டான்.

“உங்களுக்கு பார்த்து வெச்சுருக்க பொண்ணுகிட்ட போய் இந்த கதை எல்லாம் சொல்லுங்க, ரொம்ப சந்தோஷப்படுவா” என்றவள், அவனை விட்டு செல்ல, அவள் போக விடாமல் தடுத்தவன்,

“அடடா… என்ன ஒரு நம்பிக்கை என் மேல… புல்லரிச்சுருச்சு… இதனால தான் இவ்வளவு நாளா நீ என்னை தேடி வரவே இல்லையா? சே! நான் தான் மடையன் மாதிரி…” என்று கோபத்தோடு தன் தலையில் அடித்துக்கொண்டவன், “அப்படியே உன் வாயாலயே அது யாருன்னும் சொல்லிரு. காது குளிர கேட்டுக்கறேன்” என்று அவன் சொல்ல, “உங்க சின்னு தான், வேற யாரு?” என்றவள் வேறு என்ன சொல்லியிருப்பாளோ, “ஏய்…!” என்ற புகழின் கர்ஜனை அவள் வாயை அடைத்திருந்தது.

“ஏன், அவளை உங்களுக்கு பிடிக்காதோ? அன்னைக்கு அவளைப்பற்றி உங்க ஃப்ரெண்ட்கிட்ட அவ்வளவு புகழ்ந்தீங்க. அவளை மனசுல வெச்சுட்டு தானே என்னை சொல்லக்கூடாத வார்த்தையெல்லாம் சொன்னீங்க?” என்று அவளும் கோபமாக கேட்க,

புருவம் சுருங்க, “நீ என்ன சொல்ற?” என்று கேட்டான் அவன்.

அதில் தன்னை சுதாரித்தவள், அவன் கடைசி கேள்வியை விட்டுவிட்டு, முன்பு பேசியதற்கு பதிலளித்தாள்.

“ஓஓஓ… என் வாயால வேற கேட்கனுமோ? கேட்டுக்கோங்க… உங்ககூட பேசின அனிகா நான் தான். ஆனா அது ஒரு ஈர்ப்பு மட்டுமே! நான் உங்கள காதலிக்கல. காதலிக்கவும் மாட்டேன்” என்றவள் அவனை பார்க்காமல் வீட்டினுள் நடந்தாள்.

‘ஐ அம் சாரி தமிழ். என்னால உங்க காதல ஏத்துக்க முடியாது, அதற்கு நான் தகுதியானவள் இல்ல. நீங்க ப்ரார்த்தனாவோட சேர்வது தான் சரி’ என்று நினைத்தவள் தன் கண்களில் இருந்து விழுந்த கண்ணீரை யாருமறியாமல் சுண்டினாள்.

அதன்பின் எதிலுமே மனம் ஒன்றவில்லை மூவருக்கும். அங்கிருந்து எப்போது செல்லலாம் என்று மகிழ் இருக்க, அவளை புகழ் பார்வையாலேயே எரிக்க, ப்ரார்த்தனாவோ, தன் உலகமே இடிந்தாற் போன்றதொரு மனநிலையில் இருந்தாள். மொத்தத்தில் அவர்களைத் தவிர மற்ற அனைவருக்குமே அன்றைய நாள் நன்றாகவே சென்றது.
 
Last edited:

laksh14

Well-Known Member

nyc epiiii... epadi sogama poguday sis
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top