உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 08

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்...

உங்கள் திட்டுகளை எல்லாம் வாங்க வந்துவிட்டேன்... இரண்டு வாரங்களாக நிறைய வேலைகள். காலேஜுக்கு லீவுன்னு துறத்தி விடவும், லேப்பை எடுத்துவிட்டேன். அடுத்த வாரம்தான் காலேஜ். அதுவரை இரண்டு அல்லது மூன்று அப்டேட்கள் தந்துவிடுகிறேன். அண்ட், யெஸ், நான் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக இருக்கிறேன். பொங்கல் வரை முடிந்தளவு குறுகிய இடைவெளியுடன் அப்டேட்கள் கொடுக்கிறேன். ஏனென்றால், பொங்கல் நெருங்கிவிட்டால் வீட்டில் வெள்ளையடிப்பது, தூய்மையாக்குவது என்று இருக்கும் வேலைகளை நான் செய்யாவிட்டாலும் அந்த நேரத்தில் குறுக்கும் நெடுக்கும் எதையாவது தூக்கிக்கொண்டு அலையாவிட்டால் சோறு தடை செய்யப்படுமாகையால் அதற்குள் ஃப்ளேஷ்பேக்கை முடித்துவிடுகிறேன்.


rana-and-sai-pallavi.jpg
அவ்விடத்திலிருந்து அவன் விடைபெறவும், அவன் அதுவரை பேசிக்கொண்டிருந்த அந்த உருவம், “உன்னால என் டார்லிங்-க்கு ஏதாவது துன்பம் வரும்னு தெரிஞ்சுது, நீ அவ்வளவுதான். நான் என்றும் அவளுக்கு இருக்கேன்னு நியாபகம் வைச்சுக்கோ!” என்று மிரட்டியது.

அதற்கு பதிலளிக்காமல் வெளியில் வந்து தன் காரினை இயக்கியவன் காதில், “நீ என்ன தான் செய்ய போறன்னு நானும் பார்க்குறேன்!” என்ற வரி காற்றில் பறந்து வர, அவன் கார் அந்த காம்பொண்டை தாண்டி சாலையில் கலந்திருந்தது.

அவ்வுருவம் அங்கே கேட்டதற்கு விடையாக விசிலடித்தவாறே சென்னையை நோக்கி விரைந்தான் புகழ்.

உன்னால தான் தூங்கலைன்னு சொல்லப்போறேன்

சோறு தண்ணி சேரலைன்னு சொல்லப்போறேன்

புதுசா புளுகாம ரொம்ப பெருசா வழியாம

அடி எப்போ நீ எனக்கு பொஞ்சாதியா

ஆகப்போகுறன்னு அப்பாவியா

நானே கேட்டு வரப்போறேன்

ஆனால் அவன் உள்ளம் கொண்டவள் அவன் உயிரையே கொன்று போகப்போகிறாள் என்பதை அவன் அறியவில்லை.

******

அன்று மகிழை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்போகிறார்கள். அவள் முழுவதும் குணமாகி வரும்வரை ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டிருந்தனர் அலுவலகத்தில். ஹாஸ்பிட்டலை விட்டு செல்வது சந்தோசமாக இருந்தாலும், அவனைக் காணாது எவ்வாறு இருப்பது என்று நினைத்து தவித்து நின்றாள் பேதை சில நேரம்.

ஆனால், அவன் மறுமுறை அவள் வாழ்வில் வந்ததில் இருந்து அவள் தனக்குள் போட்டுக்கொண்ட வேலிகளை அவள் மனமே தகர்த்தெறிய போராடிக்கொண்டிருந்தது. இதில் இருந்து தப்பிக்க அவனைப் பிரிந்திருக்கும் இச்சில நாட்களை பயன்படுத்தவேண்டும் என்று நினைத்தவள், அவனிடம் இருந்து முழுவதும் பிரிந்துவிட வேண்டும் என்றும் முடிவெடுத்துக்கொண்டாள். உடல்நிலையைக் காரணமென்று காட்டி ராஜினாமா செய்திட வேண்டும் என்று தீர்மானித்த பின்பே அவள் மனம் ஒரு நிலைக்கு வந்தது.

அவள் மனம் கவர்ந்த கள்வன் அத்தனை எளிதில் அவளை விடப்போவதில்லை என்பதை அப்பேதையும் அறியவில்லை.

*****

“மகிழ்! நம்மோடது எல்லாத்தையும் எடுத்து வைத்துட்டேன் இல்ல? எதுனா விட்டுப்போயிடுச்சாண்னு ஒரு முறை அறையை பாத்துருடி. இல்லைனா, அது மறந்துட்ட, இத மறந்துட்டன்னு என் தலையை உருட்டப்போறீங்க” என்று அவள் அன்னை கூற,

“எதுவும் இல்லம்மா” என்று மகிழ் அவள் அம்மாவைப் பார்த்து சொல்ல, அவளை விழியெடுக்காமல் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தான் புகழ்.

அவனை அப்போது அங்கே எதிர்பார்க்காதவளுக்கு உள்ளம் எல்லாம் பூச்சிதறல்.

“அடடே! வாங்க தம்பி!” என்று அவனை உபசரித்தார் அவள் தாயார்.

“எல்லாம் ரெடியா ஆண்டி?”

“எல்லாம் ரெடி தம்பி! இவ அப்பாவும் தம்பியும் பணம் கட்ட போயிருக்காங்க. அவங்க வந்ததும் கிளம்ப வேண்டியதுதான்” என்று அவர் சொல்ல, சில நொடிகளில் வந்துவிட்டனர் இருவரும். பின்பு அனைவரும் விடைபெற்று முன்னே செல்ல, அவர்களை பின்தொடர்ந்தான் புகழ்.

மூவரும் முன்னே சென்று கொண்டிருக்க, மகிழ் மெதுவே அவர்களை பின்தொடர்ந்தாள். இவன் எங்கே, எதற்கு இங்கே? என்ற கேள்வி அவளுக்கு முதலில் தோன்றியபோதும், காதல் அனைத்தையும் மழுங்கடித்துவிட்டது. புகழை கடைக்கண்ணால் பார்ப்பதும், அம்மாவை தொடர்வதும் என்று இருந்தவளை பார்த்துக்கொண்டே வந்தவன் லிஃப்டிற்கு காத்திருந்தவர்களுடன் சேர்ந்து நின்றுகொண்டான்.

லிஃப்ட் வர, அதில் அவர்களுடன் ஏறிக்கொண்டவன் மகிழின் தோள்களை உரசியவாறு நின்றுகொண்டான். அவன் செயலில் மகிழுக்கு என்னவோ போல் ஆயிற்று.

‘என்னதிது, இப்படி எல்லாம் செய்யறான்? தெரியாம செஞ்சிருப்பானோ!’ என்று அவள் எண்ண, ‘பக்கி, தெரிஞ்சே இடிச்சிருக்கு’ என்று அவளை திட்டவைத்தான் அவன், மேலும் நெருங்கி நின்று.

என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி

எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

நெஞ்சை தொட்டு பின்னிக்க்கொண்ட நங்கை ஊரும் என்னடி

எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

என்று மெல்லிய குரலில் அவளுக்கு கேட்குமாறு அவன் பாட, அவள் அருகில் நின்ற ஆதியோ, “ஸார்… உங்களுக்கு பாட வருமா சார்?” என்று ஆச்சரியமாக வினவினான்.

“ஸிச்சுவேஷனுக்கு ஏத்தமாதிரி பாட்டு போட ரொம்ப பிடிக்கும் ஆதி” என்றான் அவன்.

“ஆர்.ஜே. மாதிரின்னு சொல்லுங்க சார்” என்று அவன் கூற, மகிழுக்கு உடல் விரைத்தது. அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், “ஆமாம்” என்றுவிட்டு மேலும் பாடலானான்.

கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை

கட்டிவிட்டு கண்சிரிக்கும் சுந்தரியே

அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை

கட்டி அணை கட்டிவைத்த பைங்கிளியே

என்னில் நீயடி… உன்னில் நானடி…

என்னில் நீயடி… உன்னில் நானடி…

ஓ… பைங்கிளி

கடைசி வரிகளை அவன் பாடவும், அதில் இருந்த உணர்வை உணர்ந்தவளுக்கு மெல்லிய சிலிர்ப்பு அவள் உடலில் ஓடியது. அது யாருக்கு என்பதை நினைத்து வேதனைப்பட்டவள், ‘நினையாதே மனமே!’ என்று தனக்குள் உருபோட்டுக்கொண்டிருந்தாள்.

லிஃப்ட் தரைத்தளத்திற்கு வர, காரிகை அவனை கண்ணெடுத்தும் பார்க்காது அன்னையை பின்தொடர்ந்தாள். காயம்பட்ட மனதுக்கு மானம் இல்லை போலும். அதற்கு வெட்கம், வெங்காயம் எல்லாம் ஊட்டிவிட்டு மெல்ல வெளியேறினாள் புகழின் உள்ளம் கொண்டவள். அவள் அன்னையும் தந்தையும் அவர்களை விட்டு தள்ளி இருந்ததால் இவை எதுவும் இருவருக்கும் தெரியவில்லை.

அனைவரும் கார் பார்க்கிங்கிற்கு வர, ஆதி காரை எடுத்து நிறுத்தியதும் முதல் ஆளாக உள்ளே சென்று அமர்ந்துகொண்டாள் மகிழ்.

புகழிடம் அனைவரும் விடைபெற்று காரில் ஏற, ஆதி கிளப்ப, அதுவரை புகழை காணாது இருந்தவள் அவனை நோக்கி திரும்பினாள். அதற்காகவே காத்திருந்தவன் புன்சிரிப்போடு கண்ணடித்தான்.

சட்டென்று நிகழ்ந்த இந்த செயலால் விதிர்விதிர்த்து போனவள் அதன்பின் அவன் புறம் திரும்பவே இல்லை. இதனைக் கண்டு மேலும் சிரித்தவன் மகிழ்வுடனே தன் காரின் இருப்பிடத்தை நோக்கி நகர்ந்தான்.

எவ்வளவு தூரம் நடப்பாய் தனியே

ஏனிந்த மௌனம் என் கண்மணியே

உன் விரலோடு விரல் சேர்த்து

நான் வரவேண்டும் துணையே


நான் உனதானேன் என எப்படி சொல்வேன்

என் அன்பாலே உனை வெல்வேன் வெல்வேன்

******

“மட்டி! மடச்சி! அறிவிருக்காடி உனக்கு? ஒரு முறை சூடு பட்டது போதாதா? அவர் ஆல்ரெடி ஒரு பொண்ண லவ் பண்றாருன்னு தெரிஞ்சும் இப்படி அவரையே சுத்துற. அந்த மனுஷனுக்காச்சும் கூறு இருக்கா? முதல்ல என்னப்பாத்து ஏன் அப்படி செய்யனும்? அதுனால தான எனக்கு இப்போ என்னென்னவோ தோனுது?” என்று தன்னில் ஆரம்பித்து அவனில் தன் திட்டர்ச்சனையை நிறைவு செய்தாள் மகிழ்.

அனைத்தையும் நினைத்து அழுதவாறே உறங்கியவளின் கனவில் அவள் கடந்த காலம் விரிந்தது! காதலும் தான்!

*****

“அட என் வெள்ளரிக்கா! இந்த ஒரு வித்தைக்கே இப்படி விதிர்விதிர்த்து போனா எப்படி? இனி தான பார்க்கப்போற இந்த மாமனோட மகிமையை!” என்று தன் உயிரானவளை நினைத்தவன், அவளுடன் தனக்கு அறிமுகம் ஏற்பட்ட விதத்தை நினைக்கலானான்.

*****

“ஒரு வழியா நம்ம டார்லிங்-கை கண்டுபுடிச்சாச்சு. சீக்கிரமா அவளைப் பார்க்கனும். ஆனா, அதுக்குள்ள இந்த நெடுமரம் எதுவும் குழப்பாம இருக்கனுமே!” என்று நினைத்த அந்த உருவமும், அவர்கள் இருவருக்குமான உறவை எண்ணிப் பார்க்கத் துவங்கியது.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top