உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 02

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள். சென்ற பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட் இட்ட அனைவருக்கும் நன்றி. தனித்தனியே முடிந்த அளவுக்கு விரைவில் ரிப்ளை செய்கிறேன். இதோ, அடுத்த பதிவு. இது கொஞ்சம் சிறிய பதிவு தான்.rana-and-sai-pallavi.jpg


அந்த BMW கார் அவினாசி சாலையில் அதிவேகத்தில் பறந்துகொண்டிருந்தது, புகழேந்தியின் கைகளில். அதற்கு மாறாக அவன் கண்களில் ஒரு ரசிப்பு. காரில் உள்ள ரேடியோவை ஓடவிட்டு கேட்டுக்கொண்டிருந்தான். அவன் விழிகளில் சிறு வலியும் இருந்ததோ?

புகழேந்தி தமிழ்வேந்தன், வேந்தன் க்ரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸின் ஒரே ஆண் வாரிசு. அவன் தந்தை பாரிவேந்தன் சிறிய அளவிலாக ஆரம்பித்தது தற்பொழுது பெரியதாக வளர்ந்து நிற்கிறது. அதனை நிர்வாகிக்கும் பொறுப்பை தந்தை சில வருடங்களுக்கு முன்பு தன்னிடம் ஒப்படைத்திருக்க, தந்தை சேர்த்து வைத்ததை பல மடங்காக பெருக்கிக் கொண்டிருக்கிறான் புதல்வன். தற்சமயம் அவன் கண்கள் வேறு துறைகள் மீதும் பதிய, அவற்றிலும் தன் கால்தடத்தை பதிக்க அடிகளை எடுத்து வைத்துவிட்டான் புகழ்.

புகழின் தாய் ராதை, கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்பவர். மூத்த பெண் கீர்த்தனாவை மதுரையில் கட்டிகொடுத்திருக்க, அவளுக்கு ஒரு மகள். இரண்டாவதே, புகழ். இருவருக்கும் கடைக்குட்டி, கீர்த்தி, எஞ்சீனியரிங் முடித்து இரண்டு வருடமாகிறது. அடுத்த வீட்டிற்கு செல்லாமல் அம்மாவுடனே இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் செல்ல மகள். கீர்த்தியும் வான்மதியும் சேர்ந்து இருக்கும் நேரங்களில் அந்த இடம் அதகளம் ஆகிவிடும்.

******

திருப்பூர்

டாலர் சிட்டி என்று பெருமையுடன் அழைக்கப்படும் நகரம்; தன் பெருமையை தக்க வைத்துக்கொள்ள போராடும் நகரம். அங்கே மிகவும் பிரபலமானது வேந்தர் க்ரூப்ஸினோடதுதான். இங்கேதான் அந்த மாபெரும் தொழில் சாம்ராஜியத்தின் அஸ்திவாரம் இடப்பட்டது என்பதால் அவர்களின் இந்த நிறுவனத்தை இன்றுவரை பராமரித்து வருகின்றனர் தந்தையும் மகனும். இல்லையெனில், ‘டாட், நான் படித்த ஆர்க்கிடெக்டருக்கு இப்படி என்னை துணிவிக்க சொல்றீங்களே!’ என்று கலாய்த்திருப்பான். இந்த நிறுவனம், தந்தையோடு சேர்ந்து, ஒரு எமோஷனல் கனெக்ட் என்றால் மிகையாகாது.

ஆம்! புகழ் படித்ததோ ஆர்க்கிடெக்சர். அவனை டெக்ஸ்டைல் படிக்க சொல்லி எவ்வளவோ அவன் தந்தை சொல்லியும், இதுதான் என்னோட பேஷன் என்று படித்துவிட்டிருந்தான். அதற்குபின்னர், எம்பிஏ படிக்க போகிறேன் என்று வந்து நின்றவனை எதுவுமே யாரும் சொல்லவில்லை. அவன் படித்து வந்ததும் தானே அனைத்து பொறுப்புகளையும் மகனிடம் அளித்துவிட்டார் பாரிவேந்தன்.

தற்போது, தாங்கள் தயாரிக்கும் துணிகளை வெளிநாடுகளுக்கும் இறக்குமதி செய்ய, அனைத்திலும் வெற்றி என்ற அளவில் இருந்தாலும் மனதில் ஏதோ ஓர் வெறுமை தோன்றும் புகழுக்கு. அத்தகைய சமயங்களில் அவன் முன் யாரேனும் வந்தால் அவ்வளவுதான். புலி பாய்ந்துவிடும்.

தன் கேபினில் அமர்ந்திருந்த புகழிடம் அனுமதி வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தார் சதாசிவம், புகழின் காரியதரிசி. அவர் தந்தை காலத்திலிருந்தே இங்கு வேலை பார்ப்பதால் அங்கிள் என்றே அழைப்பான் புகழ்.

“தம்பி! நீங்க சொன்ன வேலை முடிஞ்சுது தம்பி. முதலில் நாம கேட்ட விலைக்கு படிஞ்சு வரல. பிறகு, என்ன நினைச்சாங்களோ, ஒத்துக்கிட்டாங்க” என்று அவர் கூற,

“குட் அங்கிள்!” என்றவன், தன் வேலைகளைத் தொடர, அவரோ அங்கிருந்து நகரவில்லை.

அதனைக் கண்டவன், “என்ன அங்கிள்? ஏதாவது கேட்கனுமா?” என்று கேட்க,

“இது அவசியமா தம்பி? இருக்குற தொழிலையே பார்க்க முடியல. இதுல புதுசா ஒன்னு?” என்று கேட்க,

அவரை கூர்ந்து பார்த்தவன், “மிக மிக அவசியம்” என்று உரைக்க, அவன் விழிகளில் இருந்த தீவிரத்தைக் கண்டவர் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்.

அவர் சென்றதையே பார்த்தபடி அமர்ந்திருந்தவனுக்கு பழைய நியாபகங்கள் வந்து அலைமோத, தன் இருக்கையில் பின்னால் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். சில நொடிகள் கலந்திருக்க, அவன் போன் ரிங்கிட்டது.

சலிப்போடு யாரென்று எடுத்துப் பார்க்க, அதில் ஒளிர்ந்த பெயரைக் கண்டவனுக்கு இதுவரை இருந்த மனநிலை மாற, “ஹே டார்லிங்…” என்று பேச ஆரம்பித்துவிட்டான்.

மறுமுனையில் இருந்தவருடன் சிறிது நேரம் உரையாடி போனை வைத்தவன் புது உற்சாகத்தோடு அலுவல்களைப் பார்க்கலானான். அவன் மனமோ, “இன்னும் இரண்டு நாட்களில் வந்திடுவேன்னு சொல்லிருக்கா. வந்ததும் அங்கே போகலாம், இங்கே போகலாம்னு என்னை ஒரு வழி பண்ணிடுவா! எந்த வேலை இருக்குன்னு சொன்னாலும் நான் முக்கியமா இல்லை வேலை முக்கியமான்னே கேட்பா. புகழ்! இருக்குற எல்லாத்தையும் இரண்டு நாளுக்குள்ள முடிச்சிடு! இல்லைன்னா அந்த செல்ல ராட்சசிகிட்ட நீ ஒரு மாசத்திற்கு வாங்கிக் கட்டனும்” என்று கூற, மடமடவென்று வேலைகளை செய்தான் புகழ்.

******

சென்னை

ரெனைசன்ஸ் ஆர்க்கிடெக்டர் அண்ட் இன்டீரியர் டிசைனிங் என்ற அந்த நிறுவனத்தினுள் சென்றுகொண்டிருந்தாள் மகிழ். சைன் இன் பார்மேலிட்டிஸ் எல்லாம் முடித்துவிட்டு அவள் இருக்கைக்கு வர,

“ஹாய்! ஊருக்கு போய்ட்டு வந்தாச்சா?” என்றவாறு வந்தமர்ந்தான் ராகுல்.

“ம்ம்ம்…” என்று சிரிப்புடனே சொன்னவள், தன் சிஸ்டத்தை ஆன் செய்து அதில் தற்போது செய்துகொண்டிருக்கும் ப்ராஜெக்டுக்கான ஃபைல்ஸ்களை பார்க்கலானாள்.

“ம்ம்ம்… நீங்க எல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு இங்க இருந்து போய்ட்டு வந்துடறீங்க. பட், நான் அப்படியா? இந்த ஆந்திரா எல்லையில் இருந்து கேரளா எல்லையை அடைவதற்குள்ளேயே பாதி எனர்ஜி போயிடுது. ஆனா, உங்க யாருக்குமே அந்த கவலையே இல்லையே” என்று தன் போக்கில் பேசிக்கொண்டிருந்தவன் பேச்சு தானாக நின்றது அவன்முன் நீட்டப்பட்ட அசோகா அல்வாவின் வாசனையில்.

வாயெல்லாம் பல்லாக அவன் மகிழைப் பார்க்க, “ம்ம்ம்… இதுக்கு தான இவ்ளோ லெந்தியான டையலாக்?” என்று அவனிடம் அளித்தாள்.

“ஹீஹீஹீ… நீ என்னை மறக்க மாட்டேன்னு எனக்கு தெரியும் மகிழ். ஆனால், உன் பக்கத்தில் இருப்பாள் பாரு, இந்த சந்தியா, அவ லாஸ்ட் டைம் ஊருக்கு போனப்போ வாங்கிட்டு வந்ததை எனக்கு கொடுக்காமயே சாப்பிட்டுட்டாள். அவகூட எல்லாம் சேராத என்ன?” என்றுவிட்டு கையோடு அந்த டிஃபன் பாக்ஸையும் எடுத்துக்கொண்டு சென்றான்.

இந்த நிறுவனத்தில் அனைவரிடமும் பேசி சிரித்து சில நிமிடங்களில் அனைத்து விடயங்களையும் கரந்துவிடுபவன் ராகுல். ஆனால், அவன் மனம் ஒரு பெட்டகம் போல். எது தேவை என்று நினைப்பானோ, அதனைத் தவிர அவனிடம் இருந்து வேறு எதையும் வாங்க முடியாது. அவனுக்கு சொந்த ஊர் கன்னியாகுமரியாகையால் சேர்ந்தாற்போல் விடுமுறை கிடைத்தால் மட்டுமே அவன் ஊருக்கு செல்வது. மற்ற நேரங்களில் சென்னை தான் அவன் கோட்டை. என்றுமே வீட்டிற்கு சென்றால் அவனுக்கென்று எதாவது எடுத்து வருவாள் மகிழ். அதுவும் அவள் அம்மா செய்த அசோகா அல்வா என்றால் ராகுலுக்கு அவ்வளவு பிடித்தம். யாருக்கும் தராமல் சாப்பிடுவான். இன்றும் அதேபோல் ஒரு பாக்சை தூக்கியவாறு நகர்ந்தவனைக் கண்டு புன்னகைத்தவள், தன் ப்ளானிங்கை நோக்கி கண்களை திருப்பினாள்.

அதேநேரம், அவள் இன்டர்காம் ஒலிக்க, அதில் வந்த கட்டளைப்படி தன் மேலதிகாரியின் அறையினுள் மகிழ்ச்சியுடன் நுழைந்தவளுக்கு, அதை விட்டு சில நிமிடங்கள் கழித்து வெளிவந்தபோது அந்த மகிழ்ச்சி தூரப்போயிருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து

சாலையில் வேலை முடித்து நடந்து வந்து கொண்டிருந்தாள் மகிழ். அவள் கம்பெனியின் அருகிலேயே பஸ் ஸ்டாப் இருந்தும், அதனை விடுத்து சிறிது தூரம் நடந்து தான் பஸ் ஏறுவாள். அவளது டைம்ஷெட்யூலான வாழ்க்கையில் இந்த நேரம் மட்டும்தான் அவள் தனக்கென்று ஒதுக்குவது. ஏனோ, தன்னை வேகமாக கடந்து போகும் வாகனங்களை பார்த்தவாறு மெதுவே செல்வது அவளுக்கு பிடித்தமான ஒன்று.

அன்றும் அதேபோல அவள் நடந்துகொண்டிருக்க, ஏதோ கூட்டமாக இருக்கவும் தூரத்தே இருந்து கண்டவளுக்கு ஆக்சிடென்ட் என்று புரிய, யாருக்கு என்ன ஆயிற்றோ என்று பதறியபடி உள்ளே நுழைந்தவளுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக அவள் உயிர் மனித உருவம் கொண்டு ரத்தவெள்ளத்தில் காரில் பாதியும் சாலையில் மீதியுமாகக் கிடந்தது.அடுத்த பதிவை முடிந்தவரை நாளையே அளிக்க முயல்கிறேன்... பிகாஸ், நாளைக்கு எனக்கு லீவு...:D:D
 

banumathi jayaraman

Well-Known Member
எப்படி எந்த விதத்தில் மகிழுக்கு
ராகுல் ஹெல்ப் பண்ணப் போறான்?

அகமகிழ்தினி தன்னை லவ் பண்ணுறாள்ன்னு புகழேந்திக்கு தெரியாதா?
இல்லை தெரிந்தும் இவன் அவளை
avoid பண்ணுறானா?
திருப்பூரில் இருந்தவன் எதுக்கு
புகழ் சென்னை வந்தான்?
எப்படி ஆக்சிடெண்டு ஆச்சு?
ஒருவேளை புகழேந்தி அந்த போன் காதலியை ரிசீவ் பண்ண வந்தானா?

ஹா ஹா ஹா
நாளைக்கு லீவு
So, கண்டிப்பாக அப்டேட் அதுவும் பெரிரிரிரிரிய்ய்ய்யய அப்டேட்டா கொடுக்கணும்
டீலா நோ டீலா, லேகா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top