உன்னாலே... நான் பெண்ணானேனே - final

varshakavin

Well-Known Member
#1
அத்தியாயம் 14

கணவனின் தோளில் சாய்ந்து கடற்கரையில் அமர்ந்து காலைப் பார்த்துக் கொண்டேப் பேசிக் கொண்டிருந்தாள் தமிழினி.அவளது விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்து விளையாடிக் கொண்டிருந்தவன் ,

"அம்மு உனக்கு ஞாபகமிருக்கா , நீ ஒரு தடவை ஊருக்கு வந்தப்போ நாமெல்லாம் இங்க வந்திருந்தோம். அப்ப நீ கடல்ல கால் நனைச்சு விளையாடிட்டு இருந்த … அப்ப நான் உன்னையவே தான் பார்த்துட்டு இருந்தேன். பார்க்க கூடாதுனு நினைச்சாலும் முடியல. அதாவது நான் உன்ன நல்லா சைட் அடிச்சிருக்கேன்.... ஆனா அது ஒரு வகையான ஈர்ப்பு … அந்த ஈர்ப்புக்கு பேர் காதல்னு இப்பதான் தெரியுது."

"அத்தான்.... எங்க பாட்டி அக்காவுக்கு கல்யாணம் ஆன புதுசுல , லீவுக்கு அக்கா வீட்டுக்குப் போகாத அங்க வயசு பையன் இருக்கிறான்னு சொல்வாங்க … அதுக்காகவே நீங்க ஊர்ல இல்லாதப்ப வருவேன்... வந்தாலும் உங்க கண்லப்படக் கூடாதுனு நினைச்சு உங்களையே தேடுவேன்... இப்ப புரியுது பார்க்க கூடாது , நினைக்க கூடாதுனு நினைச்சு உங்களையே நினைச்சிட்டு இருந்துருக்கேன்… " எனப் புன்னகைத்தாள்.

"மொத்தத்துல ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் தேடியிருக்கோம்...." என அவள் நெற்றி முட்டியவனிடம்,

"அத்தான் அன்னைக்கு நீங்க ஜெர்மனி கிளம்பும்போது போன் பண்ணது அவ்வளவு சந்தோஷமா இருந்தது … ஆனா உண்மையச் சொன்னா நீங்க பாட்டிக்கிட்ட சொல்லிருவிங்களோ … சொன்னா கடமைக்கு என்னைய கூட்டிட்டுப் போய்டுவீங்கனு பயந்து தான் பொய் சொன்னேன் , பாட்டி எனக்கு ஃபோன் பண்ணும் போதெல்லாம் ஆசை வரும் தான் பாட்டிக்கூடப் போக … ஆனா என்னவோ ஒன்னு தடுத்துட்டே இருந்துச்சு .ஆனா இப்ப அது என்னனு நல்லா தெரிஞ்சுக்கிட்டேன் …."

"அது என்ன சுகரு ...."

"சொல்ல மாட்டேன் எவரெஸ்டு ...."

"சொல்லுடா அம்மு ....." என அவள் கன்னத்தில் முத்தமிட ….

திரும்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் , " நான் மகளா , தங்கச்சியா …. நம்ம பிள்ளைக்குத் தாயா எல்லாமா இருந்துருக்கேன் … ஆனா என்னையும் மனசாலயும் உடலலாலயும் … பெண்ணா உணர வச்சது நீங்கதான் …. இல்லனா தாய்ங்கிற பட்டம் மட்டும் போதும்னு இருந்தேன் ….

எல்லாரும் சொல்றாங்களே திருமணமான பெண் தாய்மை அடைஞ்சா தான் உடலளவுல முழுப் பெண்ணாகிறாள்னு........" அவன் கைகளுக்குள் கைகோர்த்துக் கொண்டவள்,

"என்னைப் பொறுத்தவரைக்கும் இல்லனு தான் சொல்வேன் .... உடலளவுல ஒரு பெண்ணுக்கான அத்தனையும் உணர்ச்சிகளும் , வலிகளும் எனக்கு இருந்ததுதான் .... நம்ம பிள்ளைய வயித்துல வச்சுருக்கும் போது … அவரோட ஒவ்வொரு வளர்ச்சியையும் யாருகிட்டயாவது சொல்லணும் போல இருக்கும் … அதுல முன்ன நின்னது நீங்கதான் .... ஆனா ஏன் ஆண்கள் இல்லனா பெண்களால தனியா சமாளிக்க முடியாதா அப்படினும் ஒரு எண்ணம் வந்து உங்க நினைப்ப தள்ளி வச்சுரும்.

ஆனா அது ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கை ..... கடவுள் ஆணையும் பெண்ணையும் படைச்சது இப்படி தனியா இருக்கிறதுக்கா....

பிரசவத்தப்போ உங்களத் தேடுனேன் பாருங்க… அப்பதான் புரிஞ்சது … நீங்க என் வலிய வாங்கப் போறது இல்ல தான்.... ஆனா நீங்க என் பக்கத்துல இருக்கிறீங்க அப்படிங்கறேதே எனக்கு எவ்வளவு நம்பிக்கை தந்துச்சுத் தெரியுமா..... "இப்போது விஜயின் நெஞ்சில் சாய்ந்து அவனைக் கட்டிக் கொண்டவள் ,

" என் உடல் உங்கள சேரவே இல்ல … ஆனா என் மனம் உங்கள சேரப் போய் தான அந்த நம்பிக்கையும் , நீங்க வந்துட்டீங்க அப்படிங்கிற நிம்மதியும் சந்தோஷமும் …." என்றவளின் முகம் நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டவன் ,

"எனக்கும் அப்படித்தான் அம்மு … உன்னைய அப்படிப் பார்த்ததும் என் மனசுல வந்த வலி எனக்குத் தான் தெரியும். ஆனா கோபம்ங்கிற மூகமூடி அதை மறைச்சிடுச்சு … முதல்ல நீ நல்லாருக்கனு டாக்டர் சொன்னப்பதான் எனக்கும் நிம்மதியே வந்துச்சு …. சாரிடா நிறைய உன்னையக் காயப்படுத்திட்டேன்ல ....." என்றவாறு அவளை நெஞ்சோடு அணைத்துக் கொள்ள ,

"இப்ப கேட்டா உலகத்துலயே ரொம்ப சந்தோஷமா நான் தான்னு சொல்வேன். நான்னு இல்லைங்க எந்தப் பெண்ணுமே கணவனோட மனசாலயும் உடலாலயும் ஒன்றி வாழும் போது தான் பெண் முழுசா பெண்ணாகிறாள்னு சொல்வேன் …" சிறிது நேரம் மெளனம் .... அந்த மெளனம் இருவருக்குமே ஒரு நிறைவைக் கொடுத்தது எனலாம்.

"உண்மைலயே நம்ம இழப்பு எவ்வளவு பெரிசு அத்தான்.... ஆனா அதையும் … அந்த கொடுமையான நாட்களையும் உங்க அன்பும் அக்கறையும் காதலும் மறக்க வச்சுருக்குனா பாருங்களேன் …நீங்க நீங்க மட்டுமே என் நினைவில இருக்கப் போய் தான….. எனக்கு என் பிள்ளை மட்டும் போதும்னு நினைச்சது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்….

நீங்க என் மனசுக்குள்ள வந்ததும் வாழ்க்கை ரொம்ப அழகானதுனு தோணுது , எங்கிட்ட கோபமா பேசினாலும் அதுல உங்க அன்பும் அக்கறையும் தான் வெளிபட்டுட்டே இருந்ததுனு புரிஞ்சுக்கிட்டேன் .அதுவும் இப்ப எல்லாரும் நம்ம விட்டு போன நாள ஒவ்வொரு நொடியும் மறக்காம யோசிச்சு யோசிச்சு அழுதுட்டு இருந்தவளை , அந்த நாளையே மறக்க வச்சு மனசு பூராவும் உங்க நினைவுகள மட்டும் தங்க வச்சுட்டீங்க ….. " என முகம் சிவக்க ,

சிவந்த கன்னத்தில் அவன் இதழ் பதிக்க பதிலுக்கு மறுபடியும் அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் ,

"ஒரு பொண்ணுக்கு இதைவிட சிறந்த கணவன் கிடைக்காதுங்கிறது என் எண்ணம் …. நீங்க கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சுருக்கணும். ஐ லவ் யூ அத்தான்."

"நான் கூடத்தான் இந்த வாயாடிக் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் " என்றவன் பட்டென்று அவன் குவித்த இதழ்களில் முத்தமிட ,

"ஷ் எவரெஸ்ட் இந்த வாய் உன்ன என்னடா செய்யுது , சும்மா இப்படி பிடிக்கிற …."

" இந்த வாய் என்னை என்னன்னவோ செய்யப் போய் தான் இப்படிப் பிடிக்கிறேன். நிஜம் தான் … உன்னையப் பார்த்த நாள்லருந்தே உன் மேல ஏதோ ஒன்னு இருக்கப் போய் தான் நீ கேட்டத எனக்கு செய்ய முடிஞ்சிருக்கு ,

அண்ணன் கல்யாணத்துல என் பிரண்ட்ஸ் உன்னை சைட் அடிக்கிறதப் பார்த்து …. என்னடா இவனுங்க இப்படிப் பார்க்கிறானுங்களேங்கிற எண்ணம் தான் …. ஆனா நீ வந்து , என்னைய மட்டும் அத்..... தான்னு கூப்பிட்டு கிக் ஏத்திட்டு … அவனுங்கள அண்ணன் சொன்னதுல காண்டாகி என் முதுக பேத்துட்டானுங்க… "பலமாக சிரித்தவனை ஆசை தீரப் பார்க்க ,

அவள் கழுத்தில் கைப்போட்டு முகம் அருகே வந்தவன் .., "அப்புறம் நான் ஊருக்கு வரும் போது எல்லாம் உன்னைய நீ பார்க்காதப்ப பார்த்துட்டுத்தான் இருந்தேன்.... நீ அன்னைக்கு பிள்ளை வேணும் பிள்ளை வேணும் சொன்னப்ப … உன்கிட்ட கோபமா தான் பேசுறேன் … எனக்கிருந்த ஸ்ட்ரெஸ்ல உடல் மனசு எல்லாம் இறுதிப் போய் தான் இருக்கு …. ஆனாலும் மனசுக்குள்ள … என்னடா இவ இப்படிக் கேட்கிறா ….பேசாம கட்டிலுக்கு தூக்கிட்டு போயிருவமானு தான் தோணிச்சு...." என்று சிரிக்க ,

இப்போது அவன் மண்டையில் நறுக்கென குட்டியவள் ,

" தோணுமே நல்லா தோணுமே … அப்படியே மண்டைய பிளந்துருக்க மாட்டேன் …"

அதற்குள் வீட்டிலிருந்து மகன் தேடுவதாக ஃபோன் வர கடற்கரைக்கு வந்தவர்கள் மன நிறைவோடு வீடு திரும்பினர் .

அடுத்தடுத்து வந்த நாட்கள் சொர்க்கம் என்றால் இது தானோ என்று எண்ணும்படியாகத் தான் விஜய் தமிழினியின் வாழ்க்கைச் சென்றது. அவன் சொன்னது போலவே மகனின் ஒரு வயது முடியவும் அவளை அழைத்துக் கொண்டு அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டான் .அவள் அப்பாவின் தொழிற்சாலைகள் அனைத்தும் விரிவாக்கம் செய்யப்பட்டு … இப்போது அவர்களது தயாரிப்புகள் உலகளவில் சந்தைப்படுத்தப்பட்டது.

அன்று அலுவலகம் சென்று விட்டு திரும்பியவள் குளித்து விட்டு வெளியே வர , அப்படியே தூக்கிக் கொண்டவன் ,

"சுகரு….பையனுக்கு ரெண்டு வயசு முடியப் போகுது …" என்று கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டே சொல்ல ,

"ம்… ஆமா எவரெஸ்ட் …. நானே கேட்க்கணும்னு நினைச்சேன்...."

"என்னது .... "

"ம் … உங்களப் போலவே சேட்டைக்கார பையனப் பெத்தாச்சு … எங்க அக்கா போல அழகா க்யூட்டா பொண்ணு பெத்துக்கலாம்னு உங்க கிட்ட பிள்ளை வேணும்… பிள்ளை வேணும்னு கேட்க நினைச்சேன் …நீங்க யோசிச்சு சொல்லுங்க...." எனக் குறும்புடன் அவனைப் பார்த்து சொல்ல ,

"ஓ தாராளமா தரலாமே …. ஆனா அன்னைக்குப் போலவெல்லாம் யோசிக்க மாட்டேன் …."

"உங்கள யார் யோசிக்கச் சொன்னா …." என்றவள் , குறும்புப் பேச்சைக் கைவிட்டு , இப்போது அவன் விழிகளோடு தன் விழிகளை கலந்துக் கொண்டே ,

" அத்தான் பொண்ணு பெத்துக்க ஆசையா இருக்கு " என வெட்கத்தோடு நெஞ்சில் முகம் புதைத்தவளை ஆசையோடு பார்த்தவன் ,

அப்படியே அவளை கட்டிலுக்குத் தூக்கிச் சென்றவன் ,

"அன்னைக்கு யோசிச்சேன் ….இன்னைக்கு ஒன்லி செயல் மட்டும் தான்… ஆனா எனக்கு உன்னைப் போலவும் துறு துறுனும் ஒரு பொண்ணு வேணுமே..... "

"இருந்தாலும் நீங்க இப்படி பண்ணக் கூடாது…." என சீரியசாகப் பேச "

"சுகரு….நான் இன்னும் ஒன்னுமே பண்ண ஆரம்பிக்கலயே … "எனக் கண் சிமிட்டியவன் காதைப் பிடித்தவள் ,

"நான் சொன்னது உங்களுக்கு கூட்டு சேர்க்கிறத….என்னைப் போல மகள் வேணும்னா .....அவனாவது சாணில குளிக்காம தப்பிச்சுருவான்னு நினைச்சேன் ....."

"ஐய்யயோ நீ அதை விட மாட்டியா … என் பொண்ணு அப்படிலாம் பண்ணமாட்டா… அப்பா அனுபவிச்சது அவளுக்குத் தெரியும்…" என்றவனைப் பார்த்து சிரித்தவள்,

"ஓ … அப்படிங்களா … இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்து .. ப்பா .. ரா ரா பாடுங்கனு கேட்கப் போறார் … வாங்க போய் தூங்கலாம்" என உறங்கும் மகனைக் கண்களால் காட்ட ,


"தூங்குறதா …. நான் முதல்ல என் மகள கூட்டிட்டு வர்ற வேலையப் பார்க்கணுமே.. "என அவள் காதில் கிசுகிசுத்தவாறு , மனதிற்கினிய தன் மனையாள் கேட்டதைக் கொடுக்க ஆரம்பித்தான் … மகிழ்வாக ,இனிதாக, நிறைவாக .....

சில மாதங்களுக்குப் பிறகு ,


"எய்யா விசய் ….இந்தா உன்மவளப் பிடி , நான் போய் சின்ன வள்ளிய குளிப்பாட்டிட்டு வாறேன் …."

"கிழவி … பாப்பாவ பிடி இவங்கம்மா வந்து என்னைய சாத்துறதுக்கா , பையன குளிக்க வைக்கச் சொன்னா …நைட்டெல்லாம் தூங்கல தெரியுமா …."

"இரு அவ வந்து பால் கொடுப்பா , நான் வந்துருறேன்…"

"எவரெஸ்ட்டூ ..... இன்னுமா பிள்ளைய குளிக்க வைக்கல …." என்றவள் மகளை வாங்கிக் கொண்டு பசியமர்த்த ,மகனை ஒரு இடத்தில் பிடித்து வைத்து குளிக்க வைப்பதற்குள் ஒரு வழியாகிய விஜய்யைக் கண்ட தமிழினிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

அதற்குள் இன்னொரு மகளைத் தூக்கி வந்த பாட்டியிடம் அவளையும் வாங்கி பசியமர்த்திய தமிழ் தன் மூன்று மாத இரட்டை பெண் குழந்தைகளின் படுக்கையை தயார் செய்து படுக்க வைத்து விட்டு வந்தவள், கணவனிடம் இருந்து மகனை வாங்கிக் கொண்டு பத்மாவிடம் கொடுத்து பார்த்துக் கொள்ளச் சொல்லி வந்தவள் , கணவனைப் பார்க்க , கட்டிலில் குறுக்காக குப்புறப்படுத்து உறங்கிக் கொண்டிருந்தவன் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொள்ள , அந்த சுகத்தில் அவளது இடையோடு கைப் போட்டுக் கொண்டவன் தலையைக்கோதி ,

"அப்போ இவ்வளவுதான் உங்க திறமையா … பையன ஒரு இடத்துல பிடிச்சு நிக்க வச்சு குளிக்க வைக்கத் தெரியல …." என்றுப் புன்னகைக்க ,

எழுந்து அவளை கட்டிலில் சரித்தவன் வழக்கம் போல் தாடையைப் பிடித்து குவித்துக் கொண்டே ,

"ஐயா திறமைக்கு என்னக் குறைச்சல் , என் இரட்டை பொண்ணுங்களப் பார்த்தாலே தெரியல உனக்கு … அன்னைக்கு மட்டும் யோசிக்காம கட்டிலுக்கு தூக்கிட்டு போயிருந்தேன்னு வச்சுக்கோ … என் பையன் பிறந்துருக்க மாட்டான் … பையனுக பிறந்துருப்பாங்க ஆமா … "

"அடடா … இவர் யோசிச்சுட்டாலும் … "

"இந்த வாய் இருக்கே வாய் .." என்று மனைவியின் வாயைக் குவித்தவன் அடுத்து என்ன செய்வான் என்பது தெரியுமாதலால் …. நாமும் அவர்களுக்கு தனிமைக் கொடுத்து விட்டு விலகிக் கொள்வோம் …

நன்றி வணக்கம்.

 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement