உன்னாலே... நான் பெண்ணானேனே 12

varshakavin

Well-Known Member
#1
அத்தியாயம் 12

கணவன் அருகில் சென்று , "அத்தான் எழுந்திரிங்க … " என்பதற்குள்ளாக அவளை இழுத்து படுக்கையில் விட்டவன் , இரவில் தேடிய தேடலை மறுபடியும் ஆரம்பிக்க , " அத்தான்…. பாட்… "உதடு கொண்டு பேச முடியாமல் செய்தவன் …. இருளில் அவளுக்கு கற்றுத் தந்த வித்தைகளை , பகலில் கற்றுக் கொடுக்க …. கண்களை மூடிக் கொண்டவள் தேடல் முடிவுற்று அவன் நெஞ்சில் சாய்ந்த போது தான் கண்கள் திறந்தாள் .

"போங்கத்தான் இப்ப மறுபடியும் குளிக்க வச்சுட்டீங்க …. தலை ஈரமா இருந்தா பாட்டி என்னனு கேட்பாங்க...."

"ஹேய் கிழவி அதுல எல்லாம் உஷாரு … கண்டு பிடிச்சிருக்கும் இந்நேரம் உன்னையக் காணேம்னதும்… அதுனால கண்டுக்காத ....."

"அப்படிங்கிறீங்க …."

"அப்படித்தான்கிறேன்…."

"சரி சரி விடுங்க …." ,

"இரு கொஞ்ச நேரம் …. புதுசா கிடைச்சத பட்டுனு விட முடியாதுடா.... இரு … "

"என்னது திரும்பவுமா…. "

" நான் சும்மா கூட இருக்கத்தான் சொன்னேன் …. ஆனா நீ திரும்பவுமா கேட்டுட்ட …. சோ… என்றவன் மறுபடியும் அவளை கைகளுக்குள் கொண்டு வர ,

"அச்சோஅத்தான் …பாட்டி ஏதோ பூஜைக்கு நேரமாச்சு சொன்னாங்க மறந்தே போய்ட்டேன் …" என்றதும் பட்டென அவளை விட்டு எழுந்தவன் , அவள் முகம் பார்க்க , அவளது புன்னகை முகம் கண்டு நெற்றியில் முத்தமிட்டவன் , எழுந்து குளியலறையில் புகுந்துக் கொண்டான் .

வெளியே வரவும் அவள் உள்ளே செல்ல , அவள் வெளியே வரும் போது அவன் அங்கு இல்லை. இப்பொழுது ஒரு புடவையை எடுத்துக் கட்டிக் கொண்டவள் , கண்ணாடியில் தன் முகம் பார்க்கவே நாணம் கொண்டு தன்னை அலங்கரித்து படியிலிருந்து இறங்கி வந்தவள் , ஹாலில் வேட்டியும் துண்டும் மட்டும் அணிந்து மகனையும் மடியில் வைத்து ஐயர் மந்திரங்கள் சொல்ல அக்னியில் ஏதோப் போட்டுக் கொண்டிருந்த விஜயைக் கண்டவளுக்கு … அழுகை முட்டிக்கொண்டு வந்தது , அப்படியே படியின் இறக்கத்தில் நின்றவளை , கைப் பிடித்து அழைத்து வந்த பாட்டி ,

"தாயி வா.... வந்து உக்காரு …" என்று விஜய் அருகில் அவளை அமர வைக்க , பொம்மைப் போல் அங்கு வரிசையாக அடுக்கப்பட்டிருந்த போட்டோக்களைப் பார்த்துக் கொண்டே அமர்ந்தாள்.

புரோகிதர் தன் வேலையை முடித்துக் கொண்டுச் சென்று விட … தமிழினி இருந்த இடத்தை விட்டு அசையாது போட்டோக்களையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் நிலையை உணர்ந்துக் கொண்ட பாட்டி குழந்தையை அவள் மடியில் வைத்து விட்டு ,

"நான் குத்துக் கல்லாட்டம் இருக்க … இப்படி பட்ட சோகம் எந்த தாய்க்கும் வரக்கூடாது மா…" போட்டோவைப் பார்த்தவர் ,

"ஐயா பாலு , வீரா உங்க பேரனப் பாருங்க , எம்மா மேகலா உன் பேரனப் பார்த்தியா …. ஐயா ராசா ஆனந்த் உன் புள்ளையப் பார்க்கமலயே போய்டியே யா ….. யாழினிமா … புள்ளவேணும்… புள்ளவேணும்னு தவமிருந்தியே … பாரு உன் புள்ளைய … " என்று கத்தி அழுதப் பாட்டியை தோளோடு அணைத்துக் கொண்ட விஜய் , மனைவியைப் பார்க்க ,

பிள்ளையை நெஞ்சில் இறுக்கிக் கொண்டு இறுகிப் போய் அமர்ந்திருந்தவள் அருகில் வந்தான் . கணவனைக் கண்டவள், அவன் நெஞ்சில் சாய்ந்து , "தேங்க்ஸ் அத்தான் …. தேங்க்ஸ் ....." கண்களில் கண்ணீர் ஆறாக பெருக சொன்னவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.

அவள் ஏன் நன்றிச் சொல்கிறாள் என்பது அவன் மட்டுமே அறிந்ததல்லவோ.....


அன்று யாழினியின் வளைகாப்பு தினத்தன்று இவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்று இறங்கவும் விஜயின் மொபைலுக்கு வந்த அழைப்பில் அதிர்ந்தவன் , அவளையும் கைப் பிடித்தழைத்துக் கொண்டு வேகமாகச் சென்றான். என்ன என்றுக் கேட்டவளிடம், கண்கள் சிவக்கப் 'பேசாத ' என்று அவன் கத்திய கத்தலில் அவள் வாய் தானாக மூடிக் கொண்டது .


அவனது கண்களின் சிவப்பிலும் கத்தலிலும் அரண்டவள் வாய் திறக்காது சென்ற இடத்தைப் பார்த்தவள் அதன் பின் பேச்சை மறந்தாள் என்பது தான் நிஜம்.

அங்கு செங்கல்பட்டு மருத்துவமனையில் பிணவறையைக் கைகாட்ட அப்படியே மயங்கி விழுந்தாள் தமிழினி … பின்னர் அவள் படுக்கையிலிருந்து விழிக்கவும் , அவளை கைப் பிடித்து அழைத்துச் சென்ற விஜய் , மூளை மரத்து உணர்வு மரத்து நடைபிணமாக அவன் அழைத்துச் சென்ற இடத்திற்குச் செல்ல , அது அவசர சிகிச்சைப் பிரிவு.

உணர்வு வரப் பெற்றவள்அங்கு யார் எனப் பார்க்க அது அவள் அக்கா . அப்போதும் தமிழினியால் அழ முடியவில்லை .வயிறு ஒட்டிப் போய் முகம் கைகளில் எல்லாம் இயந்திரங்கள் மாட்டப்பட்டு கிடந்தாள் … பாட்டியும் அருகிலிருக்க , தங்கையைக் கண்டதும் அருகில் அழைத்தவள் , விஜயையும் அருகில் அழைக்க , கண்கள் சிவக்க நின்றவன் யாழினி அருகில் சென்றான்.

விஜயின் கை மேல் தமிழினிக் கையை வைத்து , " பார்த்துக்கோங்க….இனி எல்லாம் அவளுக்கு நீங்கதான் " எனக் கண்ணீர் வடித்தவள் , தன் ஒட்டிக் கிடந்த வயிற்றைப் பார்த்தவள் ,

" நீ… நீ … நீ தான் கிருஷ்ணா குடும்பத்துக்கு வாரிசு தரணும் ....." அது தான் அவள் பேசியக் கடைசி பேச்சு , அதற்கு மேல் பேசவில்லை.

பாட்டி தமிழைப் பிடித்துக் கதற ,அழக்கூட முடியாது திராணியற்று இருந்தவளைக் கைப் பிடித்து விஜய் அழைத்து வர … அங்கு வரிசையாக இருந்த அவள் சொந்தங்களைக் கண்டு மறுபடியும் மயக்கத்திற்குச் சென்று விட்டாள்.

நடந்தது என்னவென்றால் ,யாழினியை அழைத்துக் கொண்டு செங்கல்பட்டு அருகே செல்கையில் , வீராவுக்கு மறுபடியும் மாரடைப்பு வர , கார் ஓட்டுநர்செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்க அழைத்துச் செல்வதாக கூறவும் மருத்துவமனை நோக்கிக் காரைச் செலுத்தினார் .

தன் கைப்பேசியில் அழுகுரலில் யாழினி கணவனுக்கு அழைத்து விவரம் பகிர, நிறைமாத மனைவியின் கதறலைக் கேட்ட , ஆனந்த் கார் ஓட்ட அவனது அப்பா அம்மாவும் உடன் வந்தனர்.

அதற்குள் ஓட்டுனர் வீராவின் மரணச் செய்தியை அறிந்து ஆனந்துக்குப் பகிர , ஆனந்த் கவனம் தவறி அவனது கார் விபத்துக்குள்ளாகியது.

மருத்துவமனை வாயிலில் தன் குடும்பத்தினருக்காக காத்திருத்த யாழினிக்கும் பிரசவ வலி எடுக்க ஆரம்பித்தது. ஆனால் அவர்களையும் அந்த மருத்துவமனை அழைத்து வர , அதுவும் தன் குடும்பத்தின் உயிரற்ற உடல்களைப் பார்த்த யாழினியும் மயக்கத்தில் முன்புறமாக கீழே விழ , மொத்தக் குடும்பமும் இப்போது இல்லாமல் போயிருந்தனர்.

கிட்டத்தட்ட ஒரு மாதமாக உணர்வின்றி இருந்த தமிழினியை வள்ளிப் பாட்டித் தேற்றி அவளை அங்கேயே இருக்கச் சொல்ல ….மெல்ல தன் நிலையை உணர்ந்தவள் கேரளாவில் தனக்கு காத்துக் கொண்டிருக்கும் வேலைக்குச் செல்வதாக சொல்லிச் சென்று விட்டாள். வேலைக்குச் சென்றால் இயல்புக்கு வருவாள் என அவளை பாட்டியும் அனுப்பி வைத்தார்.

விஜயும் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லாது ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தான். ஜெர்மனியில் அவனுக்கான வேலை இருக்க …பாட்டியிடம் தான் அதை முடித்துவிட்டு இங்கு வருவதாகச் சொல்லி அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டான்.

அன்று அவன் அலுவலகத்தில் இருக்கையில் தமிழினி அவளைப் பார்க்க வந்திருப்பதாகக் கூறவும் , "இவ எப்ப சென்னை வந்தா …" என்று யோசித்துக் கொண்டே அமர்ந்திருக்க , உள்ளே வந்தாள்.

அப்போதுதான் அவளைக் கவனித்தவன் அதிர்ந்து தான் போனான். சீமந்தத்தன்று அவன் அவளைப் பார்த்த போது "என்ன இப்படி அழகா இருக்கா" என்று நினைத்திருந்தான். இன்று கன்னம் ஒட்டி , தூக்கம் என்பதை மறந்தவள் போல் கண்களுக்கு அடியில் கருவளையத்தோடு உடல் மெலிந்து இருந்தவளை அளவிட்டுக் கொண்டிருக்க ,

"நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்க "

" அப்படினா … என்ன என்ன முடிவு ...."

"அக்கா உங்களதான் என்னையப் பார்த்துக்க சொல்லியிருக்காங்க …. நீங்க என்னைப் பார்த்துக்குவிங்களா..." அவள் மெல்லக் கேட்க , அன்றைய நாளில் நடந்தவை எதுவும் அவனுக்கு அவ்வளவாக ஞாபகமில்லை. உறவுகள் அத்தனையும் ஒரே நேரத்தில் பறிகொடுப்பது என்பது மிகப் பெரிய வேதனை … பாட்டிதான் அவனைத் தேற்றி இவ்வளவு தூரம் கொண்டு வந்தது. இப்போது தமிழினி இப்படிக் கேட்கவும் , வந்த கோபத்தில்

"இப்ப என்ன வேணும் உனக்கு.. நானே பல டென்ஷன் ல இருக்கேன்... நீ வேற … " என மேசையைக் முஷ்டியால் குத்தி தலையை இருக்கையில் சாய்த்துக் கொண்டவன் யாழினி சொன்னதை ஞாபகத்திற்கு கொண்டு வந்தான்.

"ம் …எனக்குத் தெரியும் … அது தான் உங்களுக்கு கஷ்டம் தர நானும் விரும்பல.... நீ … நீ …நீங்க என்னைப் பார்த்துக்க வேண்டாம் … நானே என்னைப் பார்த்துக்குவேன் …. நீங்க ஜெர்மனி போறதா கேள்விப் பட்டேன் …"

"சொல்ல வந்தத ஒழுங்கா சொல்லு ….இப்ப என்ன சொல்ல வர்ற .. உன்னையும் கையோட கூட்டிட்டுப் போகச் சொல்றியா..." அவனுக்குத் தெரியவில்லை தனக்காவது பாட்டி இருக்கிறார்கள். அவளுக்கு நெருங்கிய உறவுகள் யாரும் இல்லை என்பதை ...

அவன் எரிச்சலில் கோபமாகப் பேசினாலும் , அமைதியாகவேக் கேட்டுக் கொண்டு , தயங்கி தயங்கி ,

"இல்ல … எனக்கு எங்க அக்கா ஆசைய நிறைவேத்தனும் …."

"ச்சீ என்னப் பொண்ணு டி நீ…. எல்லாரும் நம்மள விட்டுப் போய் ஒரு மாசம் கூட சரியா ஆகல …. அதுக்குள்ள இப்படிச் சொல்ற , "

அவனது "ச்சீ" என்ற வார்த்தையில் கூசிப் போனவள் .. உடல் நடுங்க … திணறலாக ,

" எப்...எப்படிச் சொல்றேன் …."

"அண்ணியோட ஆசை உன் மூலமா எங்க வீட்டு வாரிசு வேணும்ங்றது… அப்ப உடனே கல்யாணம் பண்ணி என் கூட குடும்பம் நடத்துனு தான சொல்ல வாற……"

அதற்கு மேல் தாங்க இயலாது , முகம் சிவக்க , மூக்கு விடைக்க , ஆத்திரமாக அவன் முன்னிருந்த அந்த டேபிளில் இருந்தவற்றை எல்லாம் கீழே தள்ளியவள் , அவனருகே நெருங்கி ,

"நான் அப்படிச் சொன்னேனா …. ச்சீ நீயல்லாம் ஒரு மனுஷனா … எனக்கு வேற வழியில்ல … உன்கிட்ட மட்டும் தான் கேட்க்க முடியுது.."

"ஏய் லூசு நீ சொன்னதுக்கு அப்ப என்ன அர்த்தம் …."

"நீ …தான்டா லூசு ….எங்க அக்கா ஆசைய நிறைவேத்த உன்னைக் கல்யாணம் பண்ணனும்னு அவசியமில்ல , உன் கூட குடும்பம் நடத்தணும்னும் அவசியமில்ல …."

"என்னடி உளர்ற…."

"ம் உளற தான் செய்றேன் …." என்றவள் டேபிளைச் சுற்றி அவன் அருகே வந்தவள் ,

பட்டென்று கீழே அமர்ந்து அவன் கால்களைப் பிடித்து ,

"வி….விஜய் அத்தான் … அக்கா சொன்னதுக்காக என்னையப் பார்த்துக்க வேண்டாம் …ஏன் என்னைக் கல்யாணம் பண்ண வேண்டாம் ….என் கூட … ப… படு…" என்று ஏங்கி அழுதவள் ,

"நீங்க யாரையும் கல்யாணம் பண்ணுங்க குடும்பம் நடத்துங்க …. ஆனா உங்க குழந்தைய என் வயித்துல சுமக்க மட்டும் விடுங்க … ப்ளீஸ் நான் உங்களையோ … உங்க பணத்துக்கோ எப்பவும் உரிமைக் கேட்டு வர மாட்டேன்.….எனக்கு யாருமில்ல அத்தான்.... சில சமயம் நானும் செத்துரலாமானு தான் இருக்கு … ஆனா .... ஆனா எங்க வீட்ல … அதுவும் எங்க அக்கா என்னைய கோழையா வளர்க்கல… எதுனாலும் சமாளிக்கணும்னு தான் வளர்த்தாங்க…" என்றவள்,

அவன் காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ,

"அக்காவுக்குத் தெரியும் எனக்கு எல்லாமே அவங்கதான்னு … நான் தப்பா எந்த முடிவும் எடுத்துரக் கூடாதுனுதான் .. உங்களப் பார்த்துக்க சொன்னாங்க … ஏன்னா அவங்க என்ன சொன்னாலும் நான் செய்வேன்னு தெரிஞ்சுதான் அப்படி ஒரு சத்தியம் கேட்டுருக்கா …."

"நிஜமா நான் கல்யாணமெல்லாம் பண்ணாம ஒரு குழந்தைய சிங்கிள் மதர்னு காட்டி தத்து எடுத்துக்கலாம் … அதுக்கு நாளாகலாம் … ஆனா அக்கா சொன்னத செய்யலயேங்கிற குற்ற உணர்ச்சி எனக்கு இருந்துட்டே இருக்கும்.அதுதான் வேற வழி யோசிச்சேன் ….இப்ப இந்த விஷயத்துல யார் என்ன சமாதானம் சொன்னாலும் என் காதுல விழாது… அது நீங்களா இருந்தாலும் தான் .... இப்படிதான்னு முடிவு பண்ணிட்டேன் .. இனி உங்க கையில தான் இருக்கு ....."

எழுந்துக் கண்ணீரைத் துடைத்து விட்டு டேபிள் மீது ஒரு கார்டை வைத்து , இதுக்கு மேல உங்க விருப்பம் , சாயந்திரம் ஆறு மணிக்கு இங்க காத்துட்டு இருப்பேன் …நீங்க வரலனா …..நைட் திருவனந்தபுரம் ட்ரெய்ன் எனக்கு…." என்றவள் அறையை விட்டு வெளியேறி விட்டாள்.

அவள் பேசியதைக் கேட்டு கலங்கித்தான் போனான் விஜய் , அப்படியே நின்றிருந்தவன் , அவள் வைத்து விட்டுச் சென்றக் கார்டை கைகள் நடுங்கப் பார்த்தான்.

அந்தக் கார்டை எடுத்துப் பார்த்தவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை , அந்த சுழலும் நாற்காலியில் தொப்பென அமர்ந்து இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டான்.
 
varshakavin

Well-Known Member
#5
V r missing the flow f the story. Because f long gap. Will u consider this.
மன்னியுங்கள் சிஸ்.தம்பி தனியாக அமெரிக்காவில் சிக்கிக் கொண்டான். அந்த டென்ஷன்ல தர முடியாம போயிருச்சு. இனி சரியாக தந்து விடுவேன்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes