உனக்காகவே நான் - 9

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
#1
அத்தியாயம்- 9
Heroin.jpg

ஆச்சரியமாக அவனை ஏறிட்டுப்பார்த்த மித்ரா, ‘அவன் தான் .ரிஷி..இவன் திடீர் என்று எங்கு வந்தான்’ என எண்ணி ‘ஓ...இன்று சனிக்கிழமை அல்லவா!!விடுமுறை சமயங்களில் ஊட்டி வருவான் என அங்கிள் சொன்னாரே.அதுதான் வந்திருக்கிறான்’ என எரிச்சலுற்றாள் மித்ரா.


“என்ன?பதிலே இல்ல?இன்னும் தலைவலி இருக்கிறதோ!!.இன்று கூட எங்காவது பயணம் செய்துவிட்டு வந்தாயோ!”என ஏளனம் மறையாமல் கேட்டான் ரிஷி.


உடனே மறைந்திருந்த துடுக்குத்தனம் மீண்டவளாக மித்ரா , “ நான் எங்கும் பயணம் செய்யவில்லை.எனக்குத் தலைவலியும் இல்லை.அது இருக்கட்டும் என் பொன்னான மேனி வலிப்பதில்,ஐயனுக்கு என்ன அவ்வளவு அக்கறை” என நக்கலாகப் பதிலளித்துவிட்டு தன் இடைக்கும் கீழாக வளர்ந்திருந்த கூந்தலை பின் தூக்கிப் போட்டுவிட்டு மீண்டும் மெதுவாகப் படிகளில் இறங்கினாள் மித்ரா.


சில வினாடிகள் அசைந்தாடிய கூந்தலை இமைக்க மறந்து பார்த்த ரிஷி,மீண்டும் நினைவு வந்தவனாக “எனக்கொன்றும் உன் மீது அக்கறையில்லை.இப்படி வழியை அடைத்துக் கொண்டு மெதுவாகப் படிகளில் நடந்தால் நீ கீழ்தரையை அடையவே 30நிமிடமாவது ஆகும் போல் இருக்கிறது.உன் பின்னால் வரும் நான் எப்போது கீழ் இறங்கிச் சாப்பிட்டுவிட்டு வேணுவைப் பார்க்கப் போவது சொல்” என்று பேசிக்கொண்டே வந்து அவளது தோளை தன் இருக்கரங்களால் பற்றி ஓரமாக நகர்த்திய வண்ணம் முன்னே நகர முயற்சிதான்.


சற்றும் எதிர்பார்க்காத அவனது திடீர் தொடுகையில் மெய் சிலிர்க்க சட்டென விலகி,அவன் கையையும் விலக்கிவிட்டால் மித்ரா.அவளது கன்னங்கள் சூடேறுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.கண்கள் இறுக நிமிரமுடியாமல் குனிந்தவிதமாக சன்னமான குரலில் , “நீங்க போங்க” என பெருந்தன்மை போல் வழிவிட்டாள் மித்ரா.


அவளின் இந்தச் செய்கையை ரிஷியும் எதிர் பார்த்தானில்லை. ‘இயல்பு போல் அவன் நடந்ததிற்கு,இப்படி நடுங்குவானேன்’ என வியந்து அவளை சில வினாடிகள் கேள்வியாய் நோக்கினான்.அவள் இப்போதைக்கு நிமிரப்போவதில்லை என்று உணர்ந்து இரண்டு இரண்டு படிகளாக தாவிய வண்ணம் , “உன்னைவிட ஆமை கூட வேகமாக நடக்கும் என்று நினைக்கிறேன்” என்று உல்லாசமாகச் சிரித்தான்.


உடனே வீம்பு கோபம் வந்தவளாக, “என்னையா ஆமைனு சொன்னீங்க?!நான் எவ்வளவு வேகமாக நடப்பேன் தெரியுமா?”என இரண்டு எட்டு வேகமாக எடுத்து வைத்தவள்,வலிதாங்காமல் கால் இடறி “ஆ..”எனக் கத்திய வண்ணம் கீழே சரிந்தாள் மித்ரா.


சட்டெனக் கேட்ட அவளது அலரலில் திரும்பி அவளைப் பார்த்த ரிஷி ,இரண்டு எட்டில் இறங்கிய படிகளை கடந்து,கீழே விழப் போன மித்ராவை பற்றி தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.


கீழே விழப் போகிறோம் என நினைத்த மித்ரா பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.ஏதோ பற்றுதல் கிடைத்தது என குழந்தை போல் ரிஷியின் கழுத்தில் தன் கைகளை மாலையாக்கி பிடித்துக் கொண்டு கண்கள் திறக்க நினைத்து இமைகளைப் பிரிக்க முயன்ற விதமாகப் பயத்தில் மயக்கமடைந்தாள்.


அவளையே பார்த்திருந்து கொண்டு புன்னகை மலர மெதுவாக அவளை தன் இருக் கைகளில் ஏந்திய வண்ணம் தரைக்கு வந்து,அவளை இறக்கிவிட எத்தனித்தான் ரிஷி.
ஆனால் அவள் கண்களை மட்டும் மூடி இருக்கிறாள் என்றெண்ணிய ரிஷி,அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவே, “ மரகதம்மா...மரகதம்மா..”என்று அழைத்த வண்ணம் அவளை கைகளிலே ஏந்தி வந்து வீட்டின் sofa – ல் மெதுவாக படுக்க வைத்தான் ரிஷி.


“என்னாச்சு தம்பி.என்னாச்சு?! “ என்று பதட்டமாக ஓடி வந்த மரகதம் முகம் வெளிரி படுத்திருந்த மித்ராவைப் பார்த்து ரிஷியின் பதிலுக்கும் பொறுத்திராமல்,கலக்கத்துடன் உள்ளே ஓடிச்சென்று தண்ணீர் கொண்டு வந்தார்.


“இந்தா தம்பி இந்த தண்ணீரை முகத்தில் தெளித்து எழுப்பிவிடு.அதிர்ந்து பயந்திருப்பாள் போலிருக்கு.நான் இது வந்துடுரன்” என அவசரமாக உள்ளே சென்றார் மரகதம்.


அதற்குள் ‘தன்னால்தான் இவளுக்கு இப்படி ஆனதோ’ என வருந்தி அவளது தலையை தன் மடியில் வைத்துக் கொண்டு தானும் அந்த sofa –ல் அமர்ந்த வண்ணம் முகத்தில் மெதுவாக தண்ணீர் தெளித்து “மித்ரா..மித்ரா...”என அவள் கன்னத்தை தட்டி அழைத்தான்.


‘கீழே விழுந்துவிட்டோம்.தனக்கு எதுவோ ஆகிவிட்டது.யாரோ எங்கோ தன் பெயரை அழைப்பதுப்’ போல் உணர்ந்த மித்ரா கணத்த தன் இமை களைப் பிரிக்க முடியாமல் பிரித்துப் பார்த்தாள்.


தான் எங்கு இருக்கிறோம் என சில வினாடிகள் புரியாமல் மலுங்க விழித்த மித்ரா ,தான் ரிஷியின் மடியில் இருப்பது உணர்ந்து சட்டென எழ முயன்றாள்.பலமிழந்த தன் மூளையினால் மீண்டும் அவன் மடியிலே சறுக்கி விழுந்தாள் மித்ரா.


“ஹே...பொறுமை பொறுமை.ஈஸி ஈஸி.எதுக்கு இப்படி பதட்டம் உனக்கு.நான் இருக்கேன்ல.ம்ம்..மெதுவா எழுந்து உட்கார்” என அவள் கைப்பற்றி அவளை அமரச் செய்தான் ரிஷி.


“உன்கைகள் இவ்வளவு சில்லிட்டு இருக்கே!ரொம்பவும் பயந்துவிட்டாயா?.”என அக்கறையாக அவளது கையை சூடு வர தேய்துவிட்டான் ரிஷி.


மொழிப் புரியாத குழந்தை போல எதுவும் பேசாமல் அவன் செய்கையையே பார்த்திருந்தாள் மித்ரா.அதற்குள் சூடான coffee –யுடன் வந்த மரகதம் “ இந்தா மித்தி.இதைக் குடி. “ அவளிடம் தம்பளரை நீட்டுவிட்டு, “என்ன தம்பி என்ன ஆச்சு?ஏதாவது பயமுறுத்திடீங்களா.ரொம்பவும் பயந்து தெரியிராளே” என வாஞ்சையாக மித்ராவின் தலையை வருடிவிட்டார்.


“இல்ல மரகதம்மா.நான் விளையாட்டாய் படிகளில் ஏன் இப்படி மெதுவாக நடக்கிறாய். ? எனக் கேட்டேன்.உடனே வீம்புக் கொண்டு வேகமாக நடக்க முயன்று கீழே விழப் போனாள்.நல்ல வேளை நான் உடனே பிடித்துவிட்டேன்.அப்போது கீழே விழுந்துவிட்டோம் என நினைத்துப் பயந்து மயங்கிவிட்டாள் என நினைக்கிறேன்” என விளக்கம் கொடுத்தான் ரிஷி.


“அதுவும் அப்படியா?.நல்ல தம்பி நீ..அவளே இப்போதுதான் கால் காயம் குணமாகி கொஞ்சம் நன்றாக நடக்கிறாள்.அவளிடம் என்ன உங்களுக்கு வம்பு.நீயாவது கால் காயம் என்று சொல்வதற்கென்ன மித்தி” எனச் செல்லமாக இருவரையும் கண்டித்தார் மரகதம்.


இவற்றை கேட்டுக் கொண்டே,சிறிது பயம் தெளிந்தவளாகவும் பேச்சை மாற்றும்விதமாகவும் “ஆன்டி.இது மிகவும் இனிக்குது.எனக்கு போதும்” என இரண்டு வாயில்coffeeதம்பளரை மரகதத்திடம் நீட்டினாள் மித்ரா.


“அந்தப் பேச்சே இல்லை.அதிர்ச்சிக்கு அதிக சர்க்கரைப் போட்ட காபி மிகவும் நல்லது.ஒரு சொட்டுவிடாம குடித்துவிட்டு இரண்டு பேரும் சாப்பிட வாங்க” எனச் சொல்லிவிட்டு மரகதம் உணவினை எடுத்து வைக்கச் சமையலறைக்கு சென்றார்.


இன்னமும் ரிஷியின் அருகிலே அமர்ந்திருந்த மித்ராவிற்கு என்னமோ போல் இருந்தது. Coffee கொடுத்த தெம்பில் சிறிது நகர்ந்து அமர்ந்தாள்.இதை கவனியாததுப் போல் கவனித்த ரிஷி ,உள்ளுக்குள் புன்னகைத்தவிதமாக “டைனிங்க டேபிள் வரை வந்துவிடுவாயா.இல்லை இங்கும் நான்தான் தூக்கிச் செல்ல வேண்டுமா?”என குறும்புச் சிரிப்புடன் கேட்டான் ரிஷி.


“அதெல்லாம் வேண்டாம்.நானே வருவேன்.காயமெல்லாம் குணமாகிவிட்டது.முட்டியில் என்பதால் படிகளில் மட்டும் சிறிது சிரமமாகத்தான் இருக்கு.”என தன் வலி முகத்தில் தெரியcoffee -யை குடித்தவண்ணம் சின்ன பிள்ளை போல கூறினாள் மித்ரா.


“ஓ...ஆமாம் எப்போ ?எப்படி?காயம் ஏற்பட்டது.மேட்டுப் பாளையத்தில் நன்றாக இருந்ததுப் போல்தானே இருந்தாய்” எனக் கேள்வியாய் அவளைப் பார்த்தான் ரிஷி.


“அது...அது..வந்து...”எனத் தடுமாறும் போதே பார்வதிப் பாட்டி உதவிக்கு வந்தார்.


“என்னடா ரிஷி.வந்ததும் அவளிடம் என்ன குறுக்கு விசாரணை.”என்றுவிட்டு,அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண் குளிரப் பார்த்து கொண்டே, ’எல்லாம் நல்லப்படியாக நடக்கணும் பெருமாளே’ என மனதினுள் வேண்டினார் பார்வதிப் பாட்டி.


“ஒன்றுமில்லை பாட்டி.எப்படி காலில் அடியென்று கேட்டேன்.அதுதான் வேறொன்றுமில்லை.”என எழுந்து பாட்டியின் அருகில் சென்றான் ரிஷி.


“எப்படியோ ஆச்சு.வந்ததுக்கு இப்போ மிகவும் நன்றாக இருக்காள்.விடு அந்தப் பேச்சை. “ சிறிது நிறுத்தி “ரிஷி...பாலய்யாவின் மகன் வேணு போன திங்கள்கிழமை வந்திருந்தான்.உன்னை இன்றோ இல்லை நாளையோ அவன் வீட்டுக்கு வரச் சொன்னான்.போய்ட்டு வந்துடு” என்றார் பார்வதி.


“ஆமாம் பாட்டி .வேணு எனக்கும் ஃபோன் செய்திருந்தான்.போகனும்.ஆனால் மித்ரா எங்க நல்லா இருக்கிறாள்.இப்போது வேகமாக நடந்து காட்டுகிறேன் என்று கீழே விழப் போனாள்” எனக் கூறினான் ரிஷி. ‘அதற்குக் காரணமே நீதான்.என்னைக் குற்றம் போல் சொல்வதைப் பார்’ என ரிஷியை முறைத்தாள் மித்ரா


“என்னது...என்னாச்சு மித்ரா.கீழே விழுந்திட்டியா?”எனக் கலக்கமாக அவளருகில் அமர்ந்து பாசமாக அவள் கேசத்தை ஒதுக்குவது போல கேட்டார் பார்வதி.


“ஒன்றுமில்லை..பாட்டி..”என்று சொல்ல வாயெடுத்தவளை. “அவளுக்கெல்லாம் ஒன்றும் ஆகியிருக்காது பாட்டி.நான்தான் பத்திரமாக அவளைப் பிடித்துவிட்டேனே.எனக்கு எதாவது ஆனதா?என்றுதான் கேட்க வேண்டும்.பத்திரமாகப் பிடித்து இங்குக் கொண்டு வந்து விட்டது நான் தானே” எனச் சோம்பல் முறித்தான் ரிஷி.


“ஆமாம் பாட்டி எனக்கு எதுவுமில்லை.நன்றாகத்தான் இருக்கிறேன்.உங்கள் அருமை பேரனுக்குத்தான் ஏதாவது ஆகியிருக்கும் போல் இருக்கு.டாக்டரை வர சொல்லிங்கள்” எனச் சொல்லிய வண்ணம் ரிஷியை ஓர கண்ணால் முறைத்தவிட்டு, “வாங்க பாட்டி நாம சாப்பிட போகலாம்” என்றுவிட்டு எழுந்துவிட்டாள் மித்ரா.


அவளது நக்கலான பேச்சில் ரிஷிக்குக் கோபம் வருவதற்குப் பதிலாக புன்னகையே வந்தது.


“ஆமாம் பாட்டி .நானும் கிளம்ப வேண்டும்.வாங்க சாப்பிட போகலாம்” என தன் கை கடிகாரத்தைப் பார்த்த வண்ணம் முன் நடந்தான்.


“நல்ல பிள்ளைகள்” எனச் செல்லமாக கடிந்துவிட்டு பார்வதி உடன் நடந்தார்.


காலை உணவு முடிந்ததும் ,ரிஷி வேணுவைப் பார்க்க சென்றுவிட்டான்.மாலை வரை வழக்கம் போல் மித்ராவிற்கு பாட்டியுடனும் மரகதமுடனும் இனிதாகப் பொழுது கழிந்தது.


ஆனால் அடிக்கடி மித்ராவிற்கு ரிஷியின் நினைவு வந்தது.ஒரு புரியாத பரவசமுடன் சிட்டுக்குருவிப் போல மாலைவரை வீட்டினுள்ளே வலம் வந்தாள் மித்ரா.இருந்தும் முயன்று அவன் நினைவுகளைத் தவிர்த்தாள்.


மரகதத்திடம் இனிப்பு வகைகளைப் பற்றி இலகுவாகப் பார்வதியும் மித்ராவும் பேசிக் கொண்டிருக்கும் போது ,”ஆன்டி எனக்குப் பால்கோவா ரொம்பப் பிடிக்கும்” என்றாள் மித்ரா.


“அட..ரிஷிக்கும்தான் மித்தி. !” ஆச்சரியப் பட்டவிதமாக. “ சரி...நாளைக்கு நம் வீட்டிலே செய்திடுவோம்” என மரகதம் கூறியது மித்ராவின் காதில் விழவே இல்லை.மீண்டும் ரிஷியின் நினைவுகள் வந்து அவளை பற்றிக் கொண்டது மித்ராவிற்கு.


தன்னைப் பாட்டியும் ஆன்டியும் கவனிக்கிறார்கள் என்பதும் மறந்து காலையில் நடந்தவற்றை அவள் மனம் நினைக்கத் தொடங்கியது.


‘அவன் ஏன் அப்படிப் பேச வேண்டும்.எனக்கும் தான் ஏன் இப்படி கோபம் வந்து வேகமாக நடக்க நினைச்சு !அப்பப்பா!!நல்ல வேளை எதுவும் ஆகவில்லை.இவன் அருகிலிருக்கும் போது மட்டும் இதயத் துடிப்பு அதிகமானது போல் தெரியுதே!மூச்சுவிடக் கூட முடியாமலிருக்கும் போல் அல்லவா இருக்கு.!ஆனால் மந்துக்கு இதமாக இருக்கு’ எனப் பலவாறு நினைத்த வண்ணம் உள்ளன் நூலில் ரோஜா பூ போட்டுக் கொண்டிருந்தாள்.


மித்ரா தவறாக நூல் நுழைப்பதைப் பார்த்த பார்வதி “என்ன மித்ரா?ஏதோ போல் இருக்க?என்னாச்சு?தலைவலிக்குதா?”என ஆதரவாகத் தலையை தொட்டுப் பார்த்தார்.


பாட்டியின் தொடுகையில் நினைவு வந்தவளாக, “அ...அது..என்ன பாட்டி” எனப் புரியாமல் விழித்தாள் மித்ரா.


மரகதமும் பார்வதியும் ஒருவரை ஒருவர் பார்த்து காரண புன்னகைக் கொண்டு ,”சோர்ந்து தெரியிரியே ,தூங்கரியா?என்றேன்” என்றார் பார்வதி.


“அதெல்லாம் ஒன்றுமில்லை பாட்டி.நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என்றாள்.அவள் நன்றாக இருப்பதாகவே அவள் நினைத்திருந்தாள் மித்ரா.


“அப்படியா?அப்பறம் ஏன் தவறாக நூல் நுழைக்கிறாய்?”என்று அவள் கையிலிருந்த உள்ளன் நூலை வாங்கிய வண்ணம் “ இங்கே கொடு.நான் சரி செய் செய்கிறேன்.”என அவள் தவற்றை சரி செய்தார் பார்வதி.


“அச்சச்சோ தவறு செய்துவிட்டேனா?”என தன் முன்தலையில் தட்டிக் கொண்டாள்.அதனோடு ‘பாட்டி கண்டு கொண்டார்களே’ என்று அவள் முகமும் வெட்கத்தினால் சிவந்தது.


முக சிவப்பை மறைக்க அவள் போராட முடியாமல் “பாட்டி நான் கொஞ்ச நேரம் தோட்டத்திலிருந்துவிட்டு உலாவிவிட்டு வரட்டுமா?”எனக் கேட்ட வண்ணம் எழுந்தாள் மித்ரா.


“சரிமா.”என்றார் பார்வதி.


பார்வதியின் வார்த்தைகள் கேட்ட மறுவினாடி சிட்டென மறைந்தாள் மித்ரா.


தோட்டத்தில் மொட்டு போல இருந்த ரோஜா பூவின் அருகில் குனிந்து வண்ணம் மனதின் துள்ளல் அடங்க மறுத்து அதனுடன் சின்ன பிள்ளை போல “நீ இவ்வளவு அழகாய் தெரிகிறாயே!.இப்பொழுதே உன்னைத் தொட்டு பார்க்க மனம் இப்படித் துடிக்கிறதே.!நீ மலர்ந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்!”என அப்பொழுதுதான் அரும்பிய சிவப்பு நிற ரோஜா மொட்டைத் தடவிய வண்ணம் ரகசியம் போல புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் மித்ரா.


“ஆமாம் எனக்கும் அதையே சொல்ல வேண்டும் போல் இருந்தது.மித்ரா” என சொல்லிக் கொண்டே மித்ராவின் அருகில் வந்து நின்றான் ரிஷி.


எதிர் பாராமல் அவனைப் பார்த்த மித்ராவின் நெஞ்சம் படபடவென அடிக்கத் தொடங்கியது.நிமிர்ந்து அவனை நேரப் பார்க்க நினைத்து,முடியாமல் தவித்தாள்.அவன் கண்கள் மலரை மறந்தும் பார்க்கவில்லை என்பதும்,தன்னையே அவனது விழிகள் இமைக்காமல் பார்த்தவிதமாக இருக்கின்றன என்பதும் அவள் பார்க்காமலே உணர முடிந்தது.அவன் அருகில் வர வர அவள் நெஞ்சம் மேலும் வேகமாக அடிக்கத் தொடங்கியது.


“என்ன இங்கு நின்று கொண்டு பூவிடம் கதைப் பேசிக் கொண்டிருக்கிறாய்.நான் உன்னை வீடெல்லாம் தேடிவிட்டு வந்து கொண்டிருக்கிறேன்” எனச் சோகம் போலக் கேட்டான் ரிஷி.


“நா...நா..சும்மா கொஞ்ச நேரம்...”என இழுத்தவள் பேச்சுவரமால் திக்கிப் பேசினாள் மித்ரா.


“போச்சுடா...”என உரக்க ரிஷி சொன்னான்.


சொல்லிக் கொண்டிருந்த பேச்சு தடைப்பட்டு “என்ன?என்னாச்சு” என பதறிய வண்ணம் நிமிர்ந்து ரிஷியைப் பார்த்தாள் மித்ரா.


“ஒன்றுமில்லை திரும்பவும் உனக்குத் திக்கு வாய் வந்துவிட்டதே!பாட்டி வேறு உன்னை அழைத்துவரச் சொன்னார்களா?நீ என்று உன் பதிலை சொல்லி நான் என்று உன்னிடம் பேசுவது” என மிகவும் கவலைப்பட்டு சொன்னான் ரிஷி.


“நான் திக்குவாயெல்லாம் இல்லை” என வெடுக்கெனச் சொல்லிவிட்டு., “ சும்மா தோட்டத்தில் உலாவ வந்தேன்.இப்போது நான் பாட்டியை பார்க்கப் போகிறேன்” எனக் கோபம் போலச் சொல்லிவிட்டு உள் நோக்கி நடந்தாள் மித்ரா.


“ம்ம்...சரி சரி...”என உல்லாசமாகச் சிரித்தவண்ணம் அவள் பின்னால் நடந்தான் ரிஷி.


உள்ளே பாலய்யாவும் அவரது மகன் வேணுவும் மகள் சுரேகாவும் அமர்ந்திருந்தனர்.

 
Advertisement

Sponsored