உனக்காகவே நான் - 30

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 30
Heroin.jpg

பின்,”அவன் இப்போது போகப் போவதில்லை,என்பதையும் அவன் திட்டத்தையும் யூகித்தேன்.காவலாளியிடம் ‘இப்போது வீட்டில் ஒரு சண்டை நடக்கும்.வீடே அதிரும்படியாக சத்தமாகத்தான் பேசப் போகிறேன்.அது அங்குத் தெருவிளக்கின் அடியில் இருக்கும் அந்த ரங்கனுக்குக் கேட்க வேண்டுமென்றே!.அவனுக்கு ஒரு நாடகம் நடத்தி பாடம் புகட்ட வேண்டியிருக்கிறது.அதனால் எதுவும் கேளாதது போல் இருந்து கொள்.நான் என் அறை சென்றதும்,வேலையாட்களிடமும் நடக்க இருப்பதைச் சொல்லிவிடு.அந்த சண்டையின் பின் நான் காரில் சென்றுவிடுவேன்.அப்போது அந்த ரங்கன் கண்டிப்பாக வருவான்.வந்தால் என் அறை வரை அவனை அனுமதி.மித்ராவே அவனைக் கோபம் கொண்டு அடித்தோ அல்லது மிரட்டியோ வெளியில் அனுப்பிவிடுவாள்.ஆனால் அவன் மித்ராவிடம் பேசுவதை அவன் அறியாமல் தெரிந்து கொண்டு பின் என்னிடம் சொல்ல வேண்டும்.ஒருவேளை அவன் மித்ராவிடம் ஏதும் அத்து மீறுவது போல் இருந்தால் அவனை அடித்து அவனை உதைத்து வெளியில் அனுப்பிவிடு,பிறகு நான் வந்து அவனுக்குச் செய்ய வேண்டியதைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி அதையே செய்ய வைத்தேன்.


காவலாளியும், ‘இதெல்லாம் ஏன் சார்.எதுக்கு?’என்று கேட்டான்.


அப்போது அவனிடம் என் திட்டத்தின் காரணத்தை விவரித்துவிட்டு உள்ளே வந்தேன்.ரங்கன் பார்த்த வண்ணம் இருக்கும் என் அறைக்கே உன்னை அழைத்தும் சென்றேன்.அதன் பிறகு நடந்தது உனக்கே தெரியும் மது.ரங்கன் பார்வைக்குத் தெரியும் இடத்தில் உன்னை நிறுத்தி கடும் சொற்களால் பேசினேன்.அதைக் கண்டு அவன் வெற்றி கெக்கலிப்பு செய்வதைக் காண்கையில் எனக்கு அடக்க முடியாத கோபம் வந்தது.இதனால் விழையப் போவது என் மித்ராவின் நன்மை என்று என்னை அமைதிப் படுத்திக் கொண்டேன்.அந்த ஜன்னலைவிட்டு நீ சிறிது விலகித் தோய்ந்து சரிந்த போது,உன் கண்ணில் தெரிந்த வலியை என்னால் பொறுக்க முடியவில்லை. ‘அச்சோ என் கண்மணியே!!.உன்னை இப்படிக் கலங்க வைக்கும் படி ஆகிவிட்டதெ!’என்று கலங்கித் தாங்க முடியாமல்தான் அன்று உன்னை அணைத்தேன்.அதுவும் ஜன்னலிலிருந்து விலகி இழுத்து அணைத்தேன்.எங்கு என் உணர்வுகளைக் கட்டுக்குள் அடக்க முடியாமல் திட்டத்தைப் பாலாக்கிவிடுவேனோ என்று உன்னைச் சட்டென்று விலக்கித் திரும்பியும் பாராமல் அன்று வெளியில் சென்றேன்.உண்மையைச் சொன்னால் எங்கு உன்னைப் பார்த்தால் உண்மையை உலரவிடுவேனோ என்ற அச்சம்.அதனாலே ஓடியே சென்றேன்.”என அவள் கைப்பற்றி அழுத்தி,புன்னகைத்தான் ரிஷி சொன்னான்.


பதிலாகப் புன்னகையை எதிர் பார்த்தவனுக்கு “ப்ச்..அப்போதே அந்த மறைவில் அணைத்த போதே என்னிடம் இதெல்லாம் பொய்யென்று சொல்லி இருக்கக் கூடாதா ரிஷி.நான் எவ்வளவு கலங்கிவிட்டேன் தெரியுமா?”என வருந்தும் குரலில் சொன்னாள் மித்ரா.
“என் அணைப்பில் உடனே இல்லை என்றாலும் பின் யோசித்து நீ கொஞ்சமேனும் யூகித்திருப்பாய் என்று நினைத்தேன் மது..”என்று கேட்டான் ரிஷி.


“ஆமாம் எங்கு யோசிப்பது.உங்களின் இறுகிய முகமே என் கண் முன் இருந்தது.இதற்கெல்லாம் காரணம் அந்த ரங்கன் மாமா தானே என்று அவர் மீதுதான் கோபமாக வந்தது.”என்றாள் மித்ரா.


“உனக்கு அப்போதே உண்மை தெரிந்தால் நீ ரங்கனிடம் ஒரு வேகத்துடன் உன் கோபத்தை வெளிப்படுவதிருக்க மாட்டாய்.ஆனால் உன் காய்ச்சல்.அந்த சம்பவத்தால் நீ உன்னை அப்படி வருத்திக் கொள்வாய் என்று நான் எண்ணவில்லை.தரையிலே உறங்கிவிட்டிருந்த உன்னை கைகளில் ஏந்தி காரில் படுக்க வைத்தேன்.ஊட்டி சென்றதும்,என் பரிசினை கொடுத்து,உன்னிடம் என் காதலைச் சொல்லத் துடித்துக் கொண்டிருந்தேன்.நடந்ததை விவரமாகச் சொல்லி,உன்னைச் சந்தோஷத்தில் ஆழ்த்த எண்ணிப் பல கனவுகள் கண்டு கொண்டிருந்த சமயத்தில் உன் காய்ச்சல் என்னை மிரட்டிவிட்டது.நீ அந்த சம்பவத்தை இவ்வளவு முக்கியமாய் நினைத்து மனதில் குழப்பிக் கொண்டிருப்பாய் என்று நான் துளியும் நினைக்கவில்லை.இப்போது தோன்றுகிறது.உன்னிடம் அன்றே உண்மையைச் சொல்லியிருக்க வேண்டுமென்று” என்று உண்மையான வலியுடன் சொன்னான்.


“ஓ..உண்மைதான் ரிஷி.அன்று எனக்குள் உண்மையான தைரியம் வந்ததுதான்.இனி ரங்கன் மாமா ,என்று என் முன்வந்தாலும் திருப்பி கொடுக்கும் வேகமும் தைரியமும் வந்துவிட்டது.உங்களை அன்று எப்படியெல்லாம் வேதனைக்குள்ளாக்கினான் என்றே அன்று எனக்கு அவன் மீது அவ்வளவு கோபம் “ என கண்களில் அனல் தெரிக்கச் சொன்னாள் மித்ரா.


“ஆஹா.என்ன என் மதுவிற்கு இவ்வளவு கோபம்..அதுவும் எனக்காக.. “ என காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு சிரித்தான் ரிஷி.


அவனது செய்கையில் மித்ராவும் வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்.


“அதன் பிறகு நடந்த மீதியும் திட்டப் படியே அமைந்தது.காவலாளி உடனே எனக்கு ஃபோன் செய்து உன் அறையில் ரங்கன் பேசிய அவன் எண்ணத்தைச் சொல்லிவிட்டார்.உன்னை வீட்டை விட்டு அனுப்ப வேண்டுமாமா?அதன்பின் என் போலீஸ் நண்பன் ஒருவன் சென்னையிலிருந்தான்.அவனிடம் விவரம் சொல்லி உதவிக்கு வீட்டுக்கு அழைத்து வந்தேன்.ரங்கன் வீட்டிலிருந்து கிளம்பும் முன்பே நாங்கள் வந்ததால்,ரங்கனிடம் என் நண்பனை அறிமுகப்படுத்தினேன்.என் நண்பனும் ரங்கன் இருக்கும் போதே, ‘ரிஷி,உனக்கு யாராவது தொந்தரவு தந்தாலோ,இல்லை மித்ராவிற்கு தீங்கு செய்ய கூடியவர்களாக தோன்றினாளோ சொல்.அவர்களைக் குண்டர் சட்டத்தில் உள்ளே வைத்துவிடுவோம்.எனக்கும் கேஸ் கிடைத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது ‘ என்று ஓர கண்ணால் ரங்கனைப் பார்த்து நெட்டி முறித்தான் என் நண்பன்.


அவ்வளவுதான்,உன் அத்தை மகன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியேவிட்டான்.அதை பார்த்து ரசிக்காமல் அம்மணி கும்பகர்ணியாய் தூங்கிக் கொண்டிருந்தீர்கள்” எனச் சொல்லிச் சத்தமிட்டுச் சிரித்தான் ரிஷி.


“போங்க ரிஷி.செய்வதெல்லாம் நீங்கச் செய்துவிட்டு என்னை கும்பகர்ணி என்றா சொல்கிறீர்கள்.”என கோபமாக முகம் திருப்பிக் கொண்டாள் மித்ரா.


“மது... நீ கோபம் கொள்ளும் போதும் அழகாய் இருக்கிறாய்“ என வேண்டுமென்றே திரும்பி நின்ற அவளது காதருகில் மிக மெதுவாக அழைத்தான் ரிஷி.


சூடான அவனது மூச்சுக்காற்று அவளது செவியின் மீது பட்டு அவள் உடல் சிலிர்த்தது.சிலிர்த்த வேகத்தில் மூச்சு விடச் சிரமப் பட்டு மித்ரா “ம்ம்..”என விலகச் சென்றாள்.அவளது கையை மெதுவாகப் பற்றி,அவனது கை வளைவுக்குள் அவளை நிறுத்தினான்.மீண்டும் மித்ரா அவன் முகம் பார்க்க முடியாமல்,தலை தாழ்த்தி,சூடான தன் கன்னத்தை மறைக்க முயன்றாள்.


“நாள் குறிக்கச் சொல்லலாமா..”என்றான் ரிஷி.


எந்த வித மனச் சஞ்சலமும் இல்லாமல் மித்ராவும் ,”ம்ம்” என தன் சம்மதத்தைத் தந்தாள்.
“சம்மதம் தந்தாகிவிட்டது.பிறகு..”என எதையோ எதிர் பார்ப்பது போல அவள் புரம் கன்னம் திருப்பி, “ஏதாவது..முன் சலுகை உண்டா?”என்றான் ரிஷி.


‘என்ன சலுகை?’புரியாமல் முகம் நிமிர்ந்த மித்ரா,ரிஷியின் தோற்றத்தில் அவன் எதிர்பார்ப்பு புரிய,முயன்று,எட்டி,அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.


கேட்டுவிட்ட போதும்,அவள் கொடுக்க முயல்வது கூட கடினம் என்று எண்ணிய ரிஷி,அவள் முத்தமிட்டதும்,உற்சாகத்தில் சத்தமிட்டு விசிலடித்தான்.மித்ரா மீண்டும் செங்கொழுந்தானாள்.


குரு சுமித்தாவின் திருமணத்திற்கு பின் ரிஷிக்கும் மித்ராவுக்கும் நாள் குறிக்கப்பட்டு இனிதே திருமணம் நடந்தது.இரு காதல் தம்பதியரும்,பெரிவர்களின் ஆசியுடன் நீண்ட நாள் மகிழ்வுடன் வாழ்ந்தனர்.




**********************************************************சுபம்*******************************************************


Author Note :

Hi Readers,

Thanks for reading this slow romance novel. I am happy to see the people reading it and posing comment.

This Novel is navie and makes us happy to smile whenever we read. I myself sometimes thought , my first attempt became like this.
I know I myself bosting . :p:p:p

But I felt proud of myself, once after I completed this story 6 years before.

Once again thanks every one for your support. See you guys soon with another different story.

Regards,
Yogi
 

banumathi jayaraman

Well-Known Member
ஒரு மென்மையான இளம் பெண்ணின்
காதல் கதையை ரொம்பவே அழகாக அருமையாக சொல்லியிருக்கீங்க, யோகேஸ்வரி டியர்
அடுத்து ஒரு அழகான நாவலுடன் உங்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top