உனக்காகவே நான் - 22

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம்- 22
Heroin.jpg

“சுமார் ஏழு வருடமிருக்கும்.அதுதான் முதல் முறை ரிஷியும் குருவும் பிரிந்து தனியாக படிக்கவென்று சென்றது.ரிஷி கான்பூர்லயும்,குரு கோழிகொட்-லயும்MBAசேர்ந்த தருணம்.ரிஷியுடன் இருந்தவரை குருவை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் எப்போதும் இருப்பது போல.ரிஷிக்கு விருப்பமில்லாத எதையும் குரு ஒரு நாளும் செய்ய மாட்டான்.பெண்கள் மீது ரிஷிக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்பதால் குருவும் பெண்களிடம் ஒதுங்கிய இருந்தான்.ஆனால் இருவரிடத்திலும் ஒரு வேறு பாடு.ரிஷி பெண்களிடம் நம்பிக்கையற்றவன் என்றாலும் அவர்களிடம் சகஜமாக பழகும் இயல்புடையவன்.ஆனால் குரு கொஞ்சம் தயக்கம் கொண்டுதான் பேசுவான்.”எனப் பேச்சை நிறுத்தினார்.




‘ஆமாம்.’என்பது போல் தலையசைத்தாள் மித்ரா.ரிஷி,குரு இருவரையும் அறிந்த மித்ரா இந்த வேறு பாட்டை உணர்ந்துதான் இருந்தாள்.


“என் இரு பிள்ளைகளும் ஆண் அழகர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.”எனச் சொல்லி பெருமை போல சிரித்தார் ஜீவானந்தம். “என்ன மித்ராமா?நான் சொல்வது சரிதானே” எனப் பேச்சினூடே கண் சிமிட்டி கேட்டார்.


“போங்க அங்கிள்.அதுதான் சொல்லிடீங்களே என்னிடம் வேறு சான்றிதழ் வேண்டுமா” என ரிஷியை மனதினுள் நினைத்து வெட்கத்துடன் சிணுங்கினாள் மித்ரா.


“அது சரி “ என ஒரு அவுட்டு சிரிப்பு சிரித்தார் ஜீவானந்தம்.பிறகு முகம் கருத்து , “அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்குமோ?என்று எனக்கு இன்று தோன்றுகிறது” என யோசனையுடன் நிறுத்தினார்.


அவரது வார்த்தைகளின் பொருள் புரியாமல், “என்ன அங்கிள்?”என்றாள் மித்ரா.


மித்ராவின் குரலில் மீண்டும் நிலைக்குவந்த ஜீவானந்தம் , “ சொல்கிறேன் மித்ராமா.அந்தக் கல்லூரியில் சேருவதற்கு முன் வரை,குரு வளர்ந்தும் ரிஷியின் கைபிடித்து நடந்து கொண்டிருந்த சின்னப்பிள்ளைதான்.பக்குவப் படாத அவனை ஒரு நாள் கோழிகொட்டில் பொது library –ல் சுமித்தா பார்த்திருக்கிறாள்.இவனும்தான்.பார்த்த முதல் பார்வையிலே காதல் கொண்டுவிட்டதாகதான் எங்களிடம் பெருமை பட்டுக் கொண்டான்.அப்போது அவள் ஏதோ இளங்கலை படிப்பில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாளாம்.அடிக்கடி பாடத்தில் சந்தேகம் கேட்பது என்று தொடர்ந்த அவர்களது நட்பு அப்போது காதலை சொல்லாமலே முடிந்திருக்கிறது.அதனோடு போயிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.”என நிறுத்தினார்.


“அதன் பிறகு என்னாச்சு அங்கிள்” எனக் கேட்ட மித்ராவினுள் கோழிகொட் என்றதும்,அதைத் தொடர்ந்து libraryஎன்றதும் ஏதோ பொறி தட்டினார் போல ஒரு நினைவு வந்தது.ஆனால் அதை வெளிக்காட்டாமல் அங்கிளை பேச விட்டாள் மித்ரா.


“ அதன் பிறகு ,இவன்MBAமுடிந்து இங்கு வந்துவிட சுமித்தா அவளது கல்லூரி படிப்பைத் தொடர என இயல்பாக முடிந்திருக்க வேண்டியது.ஆனால் இந்தக் காலத்து தொழில் நுட்பம் என்று,நீக்கூட அன்று சொன்னாயே, அதன் மூலம் ஒரு நாள் சுமித்தாவே குருவை தொடர்பு கொண்டிருக்கிறாள்.அவளது இளங்கலை முடிந்ததும் ‘தனக்கொரு வேலை வேண்டும்.’என குருவிடம் வந்து நிற்க இளகிய மனம் கொண்ட குரு,அவளுக்கு வர்மா இன்ஃபோ டெக்கிலே வேலையும் கொடுத்தான்.ரிஷிக்கு இது எதுவும் தெரியாது.ஒருproject விஷயமாகAustraliaபோயிருந்த போது இவை அனைத்தும் நடந்தது.அதன் பிறகு சொல்லாமல் விட்ட காதலை குருவும் சுமித்தாவும் தொடர்ந்திருக்கிறார்கள்.எனக்கும் இதை கண்டு கொள்ள முடியவில்லை.இந்தக் காலத்தில் ஆண் பெண் நட்பு இயல்பாகிவிட்ட நிலையில் சுமித்தாவை பற்றி அவன் பேசும் போது தவறாக எனக்கெதுவும் தோன்றவில்லை” எனத் தன்னிலை விளக்கமுடம் முடித்தார் ஜீவானந்தம்.


“ஓ...ரிஷிக்கு எப்போது இந்தக் காதல் பற்றித் தெரிந்தது அங்கிள்?”என்ற மித்ராவினுள் வேறொரு கேள்விபிறந்தது.கூடவே முன்பு உண்டான பொறி 25%சந்தேகமாக மாறியது.ஆனால் ஜீவா அங்கிள் முழுதும் சொல்லி முடிக்கும் வரை தன் சந்தேகத்தை வெளியிடுவது உசிதமல்ல என வாளாவிருந்தாள் மித்ரா.


“ம்ம்..சொல்கிறேன்.பிறகு ஒரு நாள் அவளை மேட்டுப் பாளையம் வீட்டுக்கு அழைத்து வந்தான்.அப்போதே எனக்குச் சந்தேகம் வந்தது.என்னதான் இருந்தபோதும் என் இரு பிள்ளைகளும் எந்தப் பெண்ணையும் வீட்டுக்கு அழைத்து வந்ததில்லை.சுமித்தாதான் முதலில் நம் வீட்டுக்கு வந்த அன்னிய பெண்.அன்று பார்க்கும் போது எனக்கு அந்தப் பெண்ணை நல்ல பெண் போலப் பிடித்தும் இருந்தது.அதிகம் தோண்டி துருவிக் கேட்கும் முன்னே குருவும் அவளை விரும்புவதை ஒத்துக் கொண்டான்.அதன் பிறகு அந்தப் பெண் அடிக்கடி வீட்டுக்கு வந்து போனாள்.மிகவும் பாசமாகவே பழகினாள்.என்னை அப்பா என்றே அழைத்தாள்.”என சில வினாடிகள் மௌனித்தவர்,


“என்னால் இப்போதும் நம்ப முடியவில்லை மித்ராமா.சுமித்தாவா இப்படிச் செய்தது.குருவே வாயைத் திறந்து சொல்லும் வரை அவளை என்னால் சந்தேகிக்க முடியவில்லை.அவன்Hospital – ல் இருந்த போது அவள் பட்டபாடு பொய் என்று என்னால் இன்றும் நம்ப முடியவில்லை.அவன் கண் திறக்க எடுத்துக் கொண்ட அந்த இரண்டு நாளும் ஒன்றும் சாப்பிடாமல் ‘குரு,குரு’ என அவன் ஜபம் பாடியவளா இப்படி?சே… எல்லாம் நடிப்பு… பணம் படுத்தும் பாடு. ‘அவர்களை முழுதும் நம்பாதீங்க அப்பா.அவர்களைப் பற்றி முழுதும் விசாரித்துவிட்டு சொல்கிறேன்.அவர்கள் மீது ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்’ என்று சொன்ன ரிஷியின் வார்த்தைகளை அலட்சியமாக விட்டதன் விளைவுதான்.குருHospital-ல் இருக்கும் போது ரிஷியும் மிகவும் துவண்டுவிட்டான்.அந்த வேதனை மறைய எங்களுக்கு முழுதாய்4மாதம் வரை ஆனது.ஆனால் இப்போதும் சில சமயங்களில் ‘ஏன் மாமா?என் சுமி இப்படிச் செய்தாள்’ என குரு கேட்பதுண்டு.அவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் எனக்கு மூச்சு திணறும்” என உண்மையான வேதனையுடன் அரற்றினார் ஜீவானந்தம்.


மித்ராவினாள் ஜீவானந்ததின் வலியை உணர முடிந்தது. ‘இருக்கும் வேதனைத் தர கூடிய விஷயங்களொலே,நம்பிக்கை துரோகம்தான் மிக மோசமானது.’என தன் அப்பா சொல்ல கேட்டிருக்கிறாள்.ஜீவானந்ததின் உணர்வை நேரில் காணும் போது அந்த வார்த்தைகளின் உண்மைப் பொருளை அனுபவிப்பது போல் உணர்ந்தாள். ‘ ஆனால் அங்கிள் ரிஷி எப்போது சுமித்தாவை பார்த்தான் என்பதைச் சொல்லவில்லையே!’.மித்ரா அங்கிளின் வார்த்தைகளுக்கு காத்திரந்தாள்.


பிறகு “நான் அவளை என் மருமகளாகவே எண்ணி இருந்த காலம் ரிஷி வீட்டுக்கு வந்தான்.வந்தவனிடம் உண்மையைச் சொல்லும் துணிவு குருவிற்கு இருக்கவில்லை.ரிஷி என்ன நினைக்கக் கூடுமோ என்ற அச்சம்.இருந்தும் குருவிடம் நம்பிக்கையான வார்த்தைகள் சொல்லி ரிஷியிடம் பேச அனுப்பினேன். Australia போன வேலை நல்லப்டியாக முடிந்த சந்தோஷத்தில் இருந்தான் ரிஷி.குரு பேசியதும் ‘என்னடா சொல்ற?உண்மையா?’என ஆச்சரியம் கொண்டு பிறகு விவரம் அறிந்து குருவிற்கு வாழ்த்துகள் சொன்னான் ரிஷி.ரிஷியின் இந்தப் பதிலில் குரு ஆனந்த கடலில் நீந்தினான்.ரிஷி சுமித்தாவை காண வேண்டும் எனச் சொல்ல சுமித்தாவையும் அவளது சித்தியையும் அவர்களது வீட்டில் ஒரு நாள் போய் பார்த்துவிட்டு வந்தோம்.”’என்றார் ஜீவானந்தம்.


சித்தி என்றதும் , “அங்கிள்...என்ன?சொன்னீங்க சித்தியா?அவளுக்குத் தாய் தந்தையர் இல்லையா?.சித்தி என்பது அவர் தந்தையின் இரண்டாவது மனைவியா?”எனக் கேட்டாள் மித்ரா.


“ஆமாம் மித்ராமா...”என்றவர் யோசனையாக “உனக்கு எப்படித் தெரியும்?”எனக் கேட்டார் ஜீவானந்தம்.


“யூகித்தேன் அங்கிள்..நீங்க மேலும் சொல்லுங்க” என்றாள் மித்ரா.மித்ராவினுள்80%சந்தேகம் தெளிந்ததாக உணர்ந்தாள்.


“ஓ...”என்றவர் தொடர்ந்தார் “ அவர்கள் அதிக பணம் படைத்தவர்கள் என்பதற்கில்லை.ஆனால் அவர்கள் வீட்டைப் பார்த்ததும் குருவிற்கு என்ன தோன்றியதோ! ‘நீங்க இருவர்தானே,!பேசாமல் எங்கள் வீட்டிலே தங்கிக் கொள்ளுங்களேன் ‘ எனக் கூறி பெட்டி படுக்கைகளுடன் அவர்களை மேட்டுப் பாளையம் வீட்டுக்கே அழைத்து வந்தான் குரு.அதுதான் குரு செய்த பெரிய தவறு அதனால் விளைந்த விளைவே!குருவின் இந்த நிலை.நானும் முதலில் நம் வீட்டில் அவர்களைத் தங்கவைக்க சம்மதிக்கவில்லை. ‘என்னடா இது?திருமணம் ஆன பிறகு அழைத்து வந்தால் பரவாயில்லை.இப்போது இப்படி அழைத்து வந்திருக்கிறாய்?’என கடிந்து கொண்டேன்.உடனே குருவின் முகம் வாடப் பொறுக்காமல் அமைதியாக விட்டுவிட்டேன்.காதலுக்குச் சம்மதம் சொன்ன ரிஷிக்கும் இதில் சம்மதமில்லை.ஆனால் குருவிற்காக நாங்கள் அமைதி காத்தோம்.அவனை வேதனைப் படுத்தி எதையும் செய்யும் சக்தி எங்களில் யாருக்குமில்லை.அதனால் ரிஷியும் அந்தப் பெண் மற்றும் அவளது சித்தி மீது ஒரு கூர் பார்வையைச் செலுத்திவிட்டு விட்டான்.என்னிடம் மட்டும் கொஞ்ச நாட்களுக்கு எச்சரிக்கையாக இருக்கச் சொன்னான்” என தங்கள் அன்றைய செயலுக்கு காரணம் சொன்னார் ஜீவானந்தம்.


இப்போது மித்ராவினாள் ஓரளவிற்கு யூகிக்க முடிகிறது.ஆனால் அங்கிளே சொல்லி முடிக்கக் காத்திருந்தாள் மித்ரா.


ஆனால் அப்போது “மாமா..”என்று சொல்லிய வண்ணம் குரு உள்ளே வந்தான்.அவனைப் பார்த்ததும் ஜீவானந்தம் கண்களால் மித்ராவிடம் ‘அப்பறமா பேசலாமா’ எனச் சொல்ல அந்தப் பேச்சு அத்தோடு நின்றது.


ஆனால் மித்ராவினுள் 100%சந்தேகம் தீர்ந்தவிட்டதே!.இதற்கு மேல் ஜீவானந்தம் சொல்ல தேவை இருக்கவும் போவதில்லை என்பது அவளுக்குத் தெரியும். ‘இனி பேச வேண்டியது வேறு ஆட்களிடம்’ என முடிவெடுத்தாள்.


ஒரு பெரு மூச்செடுத்தவளை கண்ட குரு, “ஏ தேவி...நீ என்ன இங்க இருக்க...ரிஷி உன்னைத் தேடி உன் அறைக்குப் போனான் பார்.உனக்காகவும் ஒரு சிலது வாங்கினோம் “ எனச் சின்ன பிள்ளையாய் சொல்ல,மித்ராவினுள்,அங்கிள் குருவைப் பற்றி சொன்னவை நினைவில் வந்து கண்கலங்க வைத்தது.அதை மறைத்து “ சரி அண்ணா..நான் போய் பார்க்கிறேன்.”எனக் கூறி ‘இதற்கு மேல் நின்றால் எங்கே எதையேனும் கேட்டு குரு அண்ணாவைச் சங்கட படுத்திவிடுவேனோ’ என அஞ்சி அங்கிளிடம் தலை அசைத்துவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றாள் மித்ரா.


அதன் பிறகு குரு,அங்கிளிடம் ஏதோ shoppingபோன கதையை மகிழ்வுடன் பேசிக் கொண்டிருக்க மித்ராவினுள்ளும் சந்தோஷமாக இருந்தது.அந்த அறையை விட்டு வெளியில் வேகமாக வந்தவள் தன் அறைக்குச் செல்ல தயக்கம் காட்டினாள்.


‘அங்கு இப்போது ரிஷி இருப்பானே?இவனை யார் தனியே தன் அறைக்கு வர சொன்னது.அப்பறமாக குருவுடம் வந்திருக்கலாமே.இந்த படபடக்கும் இதயத்துடன் எப்படிதான் உள்ளே செல்வதோ!’என அவனை உள்ளுக்குள் நிந்தித்தவளாக பூனை போல் சத்தமின்றி அவள் அறைக்குள் அடியெடுத்து வைத்தாள் மித்ரா.


இருந்தும் மித்ராவின் வருகையை உணர்ந்த ரிஷி,அவள் அறையில் நுழைந்ததும் வேகமாக அவள் கையை பற்றிச் சுற்றி இழுத்து அவளது கைகளை அவளது இடுப்பிற்குப் பின் வளைத்துப் பிடித்து ,அவன் கை வளைவிற்குள் அவளை நிறுத்தினான்.எதிர் பாராத இந்த இவனது செயலில் விக்கித்து,மிரட்சியாக அவனைப் பார்த்தாள் மித்ரா.அவனது மூச்சுக்காற்று அவள் மீது பட்டது.மித்ராவிற்கு பெரிய பெரிய மூச்சுகளாக எடுத்தது.சில வினாடிகள் வரை தன் நிலை அவளுக்குப் புரியவில்லை.அதன் பிறகு மெதுவாக நினைவு வந்தவள் தன்னிலை உணர்ந்தாள்.அவள் இன்னும் அவனது கை வளைவிற்குள் இருப்பதை உணர்ந்து,அவனை விலக்க எண்ணி அவன் கைகளுக்குள் இருந்த தன் கைகளை விடுவிக்க முயன்றாள்.அவள் கைகளை முன்னும் இழுக்க முடியாமல் ரிஷியின் கைகள் சற்று இறுக்கமாகவே பற்றியிருந்தது.இவள் படும் அவஸ்தையை உணராதவனாக,அவன் புன்னகைகளின் நடுவே கைகளை விடுவிக்கும் எண்ணமற்றவன் போல் அவள் முகத்தைப் பார்த்திருந்தான்.


அவன் கை வளைவிற்குள் இருப்பதில் மித்ராவிற்கு என்னமோ போல் இருந்தது. ‘இது என்ன இடும்பு பிடிபோல பிடித்துக் கொண்டு.?இவன் என்ன செய்யத்தான் நினைத்திருக்கிறான்?’என நினைத்து ரிஷியை முறைத்தாள் மித்ரா.


அவள் முறைப்பையும் ரசிப்பவன் போல கண் சிமிட்டி சிரித்தான்.விழிவிரித்து அவன் சைகையை பார்த்தவளுக்குக் கோபமாக வந்தது.பல நாள் உள்ளுக்குள் உறைந்திருந்த துடுக்குதனம் மீண்டவளாக.. “ என்னை விடுங்க...என்ன செய்றீங்க ரிஷி” எனத் தன்னை விடுவித்துக் கொள்ளும் முயற்சியை மேலும் தொடர்ந்தாள்.ஆனால் அவன் அசையவும் இல்லாமல் “விட வேண்டுமென்றால் ஒரு நிபந்தனை..”என அவள் காதருகே சொன்னான் ரிஷி.


அவன் குரலில் மெய் சிலிர்த்த மித்ரா, “எ...என்ன?”என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு,”என்ன செய்ய வேண்டும்” எனப் பழைய குரலிலே கேட்டாள் மித்ரா.


“ம்ம்...சொல்கிறேன்...நீ இனி...இ...இப்படி..தி...திக்கிப் பேச கூடாது.எது நினைக்கிறாயோ அதை என்னிடம் தயங்காமல் சொல்ல வேண்டும்” என அவளைப் போல திக்கி ஆரம்பித்து தன் கருத்தைச் சொன்னான்.


‘என்னமோ ஏதோ’ என சில வினாடிகள் அஞ்சிய மித்ராவினுள் பழையபடி மூச்சுவிட முடிந்தது.பிறகு “அதுதான் இல்லையா?...இனி இயல்பாகப் பேசுகிறேன் போதுமா?இப்போது என் கைகளை விடுகிறீர்களா?”என முடிந்த அளவு இயல்பாகப் பேசினாள்.


“ம்ம்...நம்புகிறேன்.நம்பிக்கையைப் பொய்யாக்க மாட்டாய் என நம்புகிறேன்” என அவளை விடுவித்தான்.


‘ஹப்பா’ என்று இருந்தது மித்ராவிற்கு. ‘இதை தள்ளி இருந்தும்தான் சொல்லிருக்கலாம்.’என நினைத்தாள் மித்ரா.


“சொல்லிருக்கலாம்தான்” எனக் கவலை போலச் சொன்னவன்,விழிகளையே பார்த்தாள் மித்ரா.


“அதெப்படி சொல்லாமலே கண்டு பிடிக்கீறீங்க” என்று சொல்லவிட்டு தன் நாக்கை கடித்துக் கொண்டாள் மித்ரா.அதுதான் ஜீவா அங்கிளே சொல்லியதுதானே.


“எல்லாம் அப்படிதான்..நான் தான் சொன்னேனே எனக்கு மந்திரமெல்லாம் தெரியுமென்று” என தன் சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொண்டான்.


“ஆமாம்..பெரிய மந்திரம் தான்” என தன் கோழிக்குண்டு கண்களை உருட்டி நாக்கை மடக்கிக் காட்டி அழகு பழித்தாள் மித்ரா.


அதற்கும் புன்னகையை மட்டுமே பதிலளித்துவிட்டு,அவனே தொடர்ந்து , “நீ ஜீன்ஸ் கூட போடுவனு குரு சொன்னான்.நான் அந்த ஆடையில் உன்னைப் பார்த்ததில்லையே.அதுதான் உனக்கும் ஒரு செட் வாங்கி வந்தேன்.”என லேசான பச்சை நிற காட்டன் குருத்தாவும்,நீல நிற ஜீன்ஸையும் அவளிடம் கொடுத்தான்.


அதை வாங்கிப் பார்த்தவள், “நன்றாக இருக்கிறது.தாங்க்ஸ்” என்றாள் மித்ரா.


“நாளை அணிந்து கொள்” எனச் சிரித்தான் ரிஷி. “ம்ம்...”எனப் புன்னகையுடன் சொன்னாள் மித்ரா.


“அப்பறம் மித்ரா,நான் வட பழனி கோவிலுக்கு வரவில்லை.நீங்க மட்டும் போய்விட்டு வாங்க..எனக்கொரு முக்கியமான வேலை இருக்கு” எனச் சொன்னான் ரிஷி.


“ஓ...சரி..”என்றதோடு,’முதல் முறை ரிஷி அவளுடன் வராததற்கு நிம்மதியுற்றாள் மித்ரா.


“உனக்கு கார் ஓட்டத் தெரியுமென்று குரு சொன்னான்.அதனால் அப்பா காரையே எடுத்துச் செல்லுங்கள்.பத்திரமாகப் போய்விட்டு வாங்க” என அக்கறையுடன் சொன்னான்.


“ம்ம் சரி...”என்றவளிடம், “சரி நான் இப்போதே கிளம்ப வேண்டும்..இரவு பார்க்கலாம்” என கை கடிகாரத்தைப் பார்த்த வண்ணம் வெளியில் கிளம்பிவிட்டான் ரிஷி.


அவன் போன பிறகு,மித்ரா அவளது தொலைப்பேசியை எடுத்தாள்,சில மாதங்களுக்கு முன் பதிவு செய்த அந்த எண்ணைத் தேடினாள்.ஒருவழியாகக் கண்டுபிடித்துவிட்டாள்.சில நிமிடங்களே அவர்களுடன் பேசினாள்.


பிறகு மாலை நேரம் நெருங்கிவிட “குருவிடம் வந்து கோவிலுக்கு கிளம்பலாமா அண்ணா?”என்றாள் மித்ரா.


அதன் பிறகு மித்ராவும் குருவும் வட பழனி கோவிலுக்குச் சென்று அந்த ஆறுமுகனை தரிசித்தனர்.பின்னர்,சில வினாடிகள் ஒரு இடத்தில் அமர்ந்தனர்.


இயல்பாக அளவளாவிக் கொண்டுதான் இருந்தனர்.ஆனால்,மித்ரா அடிக்கடி கோவிலின் வாயிலைப் பார்த்த வண்ணம் குருவிடம் பேசினாள்.இதைக் கவனித்த குரு “யாரையேனும் எதிர் பார்க்கிறாயா தேவி?”எனக் கேட்டே கேட்டுவிட்டான்.


அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே மித்ராவின் முகம் விகசிக்க,குரு திரும்பி அவள் நோக்கிய திசையை பார்த்தான்.அப்படியே விக்கித்து நின்றான்.


“இவளா?”என அவனது கோபக் குரல் மித்ராவை ஒரு சில வினாடிகள் அதிரத்தான் வைத்தது.எதிர்பார்த்தது என்றாலும் ‘பொது இடத்தில் குரு உணர்வுகளைக் கட்டு படுத்திக் கொள்வான்’ என எண்ணினாள்.ஆனால் அது பொய்த்தது.


இருந்தும் சமாளித்து “ஏன் அண்ணா?அவளை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? “ எனத் தெரியாதவள் போல் கேட்டு , “அவள் என் தோழி..பெயர் சுமித்தா” என அறிமுகம் போல முன்பே ஒத்துகையிட்ட நாடகத்தை அரங்கேற்றம் செய்ய ஆரம்பித்தாள் மித்ரா.


குருவின் முகத்தையே பார்த்த மித்ரா,அவனின் வேதனையை உணர்ந்தாள்.ஆனால் செய்வதறியாது தன் உணர்வுகளைக் காட்டாது அமைதி காத்தாள். ‘காயத்திற்கான கட்டை பிரிக்கும் போது ஏற்படும் வலியைப் பொறுத்தால்தானே பின் காயம் காய்ந்து அது குணமாக கூடும்.அந்த வலியைப் போல இதையும் குரு அண்ணா சகித்தே ஆக வேண்டும்’ என நினைத்தாள் மித்ரா.


அதற்குள் மித்ராவை கண்களால் தேடிக் கண்டுவிட்ட சுமித்தா,ஒரு சினேக புன்னகையுடன் அருகில் வர எத்தனித்தாள்.அப்போது அவள் அருகில் ஆறடிக்கு குறையாது நின்ற உருவம் முகம் பாராமலே தெரிந்தது போல் தோன்ற விழித்து நிமிர்த்தி அந்த உருவத்தைப் பார்த்தாள் சுமித்தா.விழி உயர்த்திய சுமித்தாவின் விழிகளும் கால்களும் அங்கு குருவை காணவும் செயலிழந்து நின்றது.அவனைக் கால்முதல் உச்சி வரை பார்த்த அவளது கண்கள் ‘சுகமா?’என குருவை பார்த்துக் கேட்டது.அவளையும் அறியாமல் சுமித்தாவின் கண்களில் கண்ணீர் குளம் ஏற்பட ஆரம்பித்தது. ‘இனி இங்கிருந்தாள் எங்கே அழுதுவிடுவோமோ’ என அஞ்சி கோவிலின் வாசலை நோக்கி நடந்தாள் சுமித்தா.


அவளையே கோபமுடன் பார்த்திருந்த குரு,சுமித்தாவின் இந்தச் செய்கையை சற்றும் எதிர் பார்க்கவில்லை போலும்.வியப்புடன் சுமித்தா சென்ற திசையை ஏறிட்டான்.குருவின் முகத்தில் சிறிது இளக்கம் தெரிவதை உணர்ந்த மித்ரா, “அண்ணா...இந்தக் கண்ணீரை பொயென்று சொல்ல போகிறீர்களா?”என மெதுவாகக் கேட்டாள் மித்ரா.


‘இல்லை’ எனத் தன்னையும் அறியாமல் தலையை ஆட்டிய குருவிற்கே சற்று வியப்பாக இருந்தது.அவன் இன்னும் சுமித்தாவை மறக்கவில்லை.முழுதும் வெறுக்கவும் முடியவில்லை.


“தேவி....உ...உனக்கு எப்படி இவளைத் தெரியும்..?”எனக் கேள்வியாய் திக்கிக் கேட்டான் குரு.


புன்னகைத்த மித்ரா., “ம்ம் தெரியும் அண்ணா...ஆறு மாதத்திற்கு முன்பே...நான் உங்க கம்பனியில் சேருவதற்கும் முன்பே.”என்றவள்,குரு இன்னும் எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருப்பதை உணர்ந்து தொடர்ந்து “அப்பா அம்மா 25திருமண நாள் அன்று ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு உணவும் உடையும் தானம் செய்யச் சென்றிருந்தோம்.எப்படி கோவையின் யாவரும் கேளிரோ அது போல இங்கும் ஒன்று.ஆனால் குழந்தைகளுக்கு மட்டும்தான் அந்த ஆசர்மம்.சேவை செய்யும் மனப்பான்மையுடன் அங்கேயே தங்கி பராமாறிக்கும் பொறுப்பில்தான் இவளைச் சந்தித்தோம்.அப்போது இதமாகப் பேசிய எங்களிடம் அன்பாக ஓட்டிக் கொண்டாள்.அவளுள் ஏதோ வேதனை இருப்பதை அம்மா உணர்ந்து அவளிடம் ‘என்ன விஷயமா..சொன்னாள்தானே வேதனைப் பாதியாக குறையும் ‘ என்று கேட்ட போது,கிடைத்த வடிகாலாய் எங்களிடம் அவளைப் பற்றின அனைத்தையும் சொல்லிவிட்டாள்.என்ன உங்க பெயரையும்,எந்த கம்பனி என்பதையும் மட்டுமே சொல்லவில்லை.”எனச் சொல்லி குருவைப் பார்த்தாள்.


“எல்லாமே வா...”என்றான் குரு நம்பாதவனாய்.


“ஆம்..எல்லாமே...நீங்க அவள்தான் சாப்பாட்டில் மாத்திரையைக் கலந்ததாய் நினைத்தது வரை” எனச் சொன்னாள் மித்ரா.


“நினைத்தது என்றால்.”எனக் கேள்வியாய் மித்ராவை பார்த்தான்.


“நினைத்தது தான்.நடந்தது அதுவல்லவே” என விடாமல் சொன்னார் மித்ரா.


“என்ன சொல்கிறாய் தேவி...அவள் இல்லாமல் வேறு யார்.?.......அவளிடம்தான் ரிஷி இவ்வாறு பேசியதாக..”எனக் கோபமாக இழுத்துவிட்டு, “இதை உன்னிடம் சொல்லலாமா?என்று தெரியவில்லையே” எனத் தயங்கி நிறுத்தினான் குரு.


குருவின் தயக்கம் உணர்ந்த மித்ரா, “ம்ம்...சும்மா சொல்லுங்க அண்ணா..எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று சொன்னேனே” என ஊக்கினாள்.


“அது...தேவி...ரிஷி சுமித்தாவிடம் ‘எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது.குருவை விட்டுவிட்டு வா.நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம்.சொத்து முழுதும் என் பெயரில்தான் இருக்கிறது.அவன் என் அத்தை மகன்தான்.இருந்த போதும் திருமணத்திற்குப் பின் அவன் என் கம்பனியில் உன்னைப் போல் சாதாரண வேலைதான் செய்ய முடியும்.இப்படி பணக்காரனாக வாழ முடியாது.’என அவளது உண்மை காதலை பரிசோதிக்கச் சொன்னான்.அதற்கு ‘சே உன்னைப் போய் உளமார சினேகிதனாக சகோதரனாக எண்ணினாரே குரு.எனக்கு உங்கள் பணம் எதுவும் வேண்டாம்.என் குருவின் அன்பு போதும்’ என அவனை அடிக்காத குறையாக சுமித்தா சொல்லிவிட்டு சென்றிருக்கிறாள்.ரிஷியும் சுமித்தாவின் மீது மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருக்கிறான்.சந்தோசமும் பட்டான்.ஆனால் அடுத்த நாளே என் உணவில் மாத்திரைகள் கலந்து கொண்ட உணவைத் தந்து ,என்னைக் கொன்றுவிட்டு ரிஷியுடன் சேர்த்து சொத்தையும் அடையத் திட்டமிட்டிருப்பாள் என்று நாங்க யாரும் எண்ணியும் பார்க்கவில்லை” என ஒருவழியாகச் சொல்லிவிட்டு கண்கலங்கினான்.


“ம்ம்..”என்ற மித்ரா சில வினாடிகள் மௌனிக்க, “ஆக, சுமித்தாதான் அந்த மாத்திரைகளைக் கலந்ததாக கண்டிப்பாக சொல்றீங்க.அப்படிதானே” என நேராகக் கேட்டாள்.


‘ஆம் ‘ என்பது போல் தலையாட்டினான் குரு.


“சரி அப்படியே இருக்கட்டும்.ஆனால் அண்ணா.சுமித்தா ஏன் இந்த ஆசிரமத்தில் அவளது அரும்ருந்த சித்தியையும் விட்டு வந்து இருக்கிறாள் என்று தெரியுமா?”என உரையாடலில் சேராதவிதமாக பேச்சை மாற்றினாள் மித்ரா.


கேள்வியாக குரு மித்ராவை பார்க்க “அது...அவளது காதலருக்கு இது போன்ற ஆசிரம பணி செய்வதென்றால் பிடிக்குமாம்.அதுவும் குழந்தைகள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்குமாம்.ஏதோ ஒருமுறை எந்த ஆசிரமத்தில் அவளையும் அவளது சித்தியையும் அழைத்துச் சென்ற போது ஏதோ பண திமிர் பிடித்தது போல அவள் சித்தி அங்கிருக்கிறவர்களிடம் பேசிவிட்டாராம்.அதனால் அவள் காதலர் மிகவும் வருந்தினாராம்.அதற்கு பிராட்ச்சித்தம் போலவும்,அந்தக் குழந்தைகளைப்பார்க்கும் போது,அவர் காதலரும் அவளிடம் இருந்து அவர்களுக்கு பணிபுரிவது போலவும் உணர்கிறாளாம்.அவர் அவளை வெறுத்தாலும்,இனி அவள் வாழ்வில் வேரொரு ஆணுக்கு இடமில்லையாம்.பாவமில்லை அண்ணா சுமித்தா” என யாரையோ பற்றி சொல்வது போல் அனைத்தையும் சொல்லி ஒன்றும் தெரியாத பிள்ளையாக இன்னொரு முறை தூரத்திலிருந்து கந்தனை தரிசிக்க எழுந்து சென்றாள் மித்ரா.குரு யோசிக்க இடமளிக்கும் விதமாகத் தனிமை தந்தாள்.


சில வினாடிகளில் மித்ராவின் வார்த்தைகளை நினைவில் அசை போட்ட குரு, ‘அப்படியென்றால்..சுமித்தாவின் மீது தப்பில்லைதானோ..சுமித்தாவின் அழகிற்கு எத்தனையோ பேர் பெண் கேட்டு வந்திருக்கலாம்.ஆனால் அவள் கன்னித்தவம் இருக்கக் காரணம் அவள் என் மீது வைத்திருக்கும் உண்மை அன்பு.இதோ இப்போதும் அவள் கண்களில் இருந்தது பொய் என்று யார் கூற முடியும்’ என யோசித்தவன், ‘ஆனால் அன்றைய செயலுக்கான விளக்கம்??............அதற்கான பதில் தேவியிடம்’ என எண்ணி அவள் சென்ற திக்கைப் பார்த்தான்.


அவள் அசட்டையாக மெதுவாக நடந்து வருவது பொறுக்காமல் எழுந்து அவளை நோக்கிச் சென்றான். “அப்படியென்றால் தேவி...யார் தான் உணவில் மருந்தைக் கலந்தது” என ரணமாய் இருக்கும் உள்ளத்திற்கு மருந்து அவளிடம்தான் இருக்கும் போல் அவனை வேதனைக் கண்ணில் தெரியப் பார்த்தான்.


குருவின் வேதனையை மேலும் சகிக்க முடியாமல், “அவளது சித்தி..”என்றாள் மித்ரா.


“என்ன...அவர்களா..?”எனக் கேட்டு அதிர்ந்தான். ‘சுமித்தாவின் சித்தி பற்றித் தெரியும்தான் கொஞ்சம் சொகுசாக வாழ ஆசைப் படுபவர்கள்தான்.ஆனால் அதற்காக ஒரு உயிரை கொல்லக் கூடுமா?’என விழித்தான். ‘ஏன் அன்பாக நேசித்த சுமியையே சந்தேகித்தோம்.இது ஏன் என் எண்ணத்தில் தோன்றவில்லை.’எனத் தன்னையே நொந்துக் கொண்டான்.


“ஆமாம் அண்ணா.அவர்கள்தான்.ரிஷி சுமித்தாவிடம் சொல்லியதை ஒட்டுக் கேட்ட அவளது சித்தி,சுமித்தாவிற்கும் தெரியாமல் இந்த வேலையை செய்திருக்கிறார்கள்.சொத்து கையை மீறிப் போய்விடுமோ?மீண்டும் பழைய வாழ்வே வந்துவிடுமோ என அஞ்சி,நீங்க இல்லையென்றால் தானாக சுமித்தா ரிஷியிடம் சேர்ந்துவிடுவாள்.அதனோடும் சொத்தும்தான்.அதன் பிறகு அவளது சித்திக்கும் பிரட்சனையில்லை என எண்ணிச் செய்த வேலை அது.இதை அறிந்ததும்தான் அவளது சித்தியை ஒதுக்கி இவள் இங்கு வந்து இருப்பது.வளர்த்த கடனுக்கு,மாதம்online –ல் பாடம் எடுத்து அந்த பணத்தை அவர்களுக்குச் செலவுக்கு அனுப்புவதாகச் சொன்னாள் சுமித்தா.


மித்ராவின் பதிலில் அனைத்தும் தெளிந்த குருவின் விழிகள் ஈரமாயின. “தேவி...நா..நான் அவளிடம் பேச வேண்டும்.இப்போதே!..என் சுமியிடம் பேச வேண்டும்” எனக் குரல் தழுதழுக்கச் சொன்னான் குரு.

 

banumathi jayaraman

Well-Known Member
சுமித்தாவிடம் ஏதும் தவறு இருக்காதுன்னு நேற்றே நான் நினைத்தேன்
குருவைக் கொல்ல மாத்திரை கலந்தது அவளின் சித்திக்காரியின் வேலைதானா?
ஆனால் இதில் ரிஷியிடமும் தவறு இருக்கு
சுமித்தாவின் சித்தி அறியாமல் அவளிடம்
ரிஷி பேசியிருந்தால் குருவுக்கு இப்படி
ஒரு கஷ்டம் வந்திருக்காதே
முதல் கதையே அருமையாக எழுதியிருக்கீங்க
நல்வாழ்த்துக்கள், யோகேஸ்வரி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top