உனக்காகவே நான் - 21

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் – 21


‘இது என்ன பார்வை’ என்ற கடுப்பு வந்தது மித்ராவிற்கு.


அதன்பிறகு “ம்ம்.சரி வா தேவி....இப்போது சாப்பிட போகலாம்.”என அவளை அழைத்தான் குரு.


அதற்குப் பதிலளிக்கும் விதமாக “நீ...நீங்க போங்க அண்ணா...நான்5நிமித்தில் வருகிறேன்” என்றாள். ‘அழுது கலங்கியிருந்த முகத்தையேனும் கழுவிக்கொண்டு வரலாமே!’என எண்ணினாள் மித்ரா.


அவளது பதிலில் , “சரி சரி..சீக்கிரம் வா தேவி” என்று குரு நிற்காமல், “வாடா...ரிஷி...”என ரிஷியின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு நடந்தான் குரு.இப்போதும் ரிஷி எதுவும் பேசவில்லை.மித்ராவின் மீதான அந்த யோசனைப்பார்வை மட்டுமே ரிஷியிடமிருந்து கடைசியாகவும் அவளுக்குக் கிடைத்தது.


அவர்கள் சென்ற பிறகும் மித்ராவினுள் ரிஷி ‘ஏன் அப்படிப் பார்த்தான்.’என்ற கேள்வியே ஓடியது. ‘ஒருவேளை நான் அழுததைப் பார்த்திருப்பானோ!’எனச் சந்தேகம் கொண்டு மேலே யோசிக்க முடியாமல் அவன் நினைவை ஒதுக்கி,டவலை தோளில் கிடத்தி ,முகம் கழுவ என்று குளியலறைக்கு போனாள் மித்ரா.முகம் கழுவிய பிறகு ஒரு புதுவித தெம்பினை உணர்ந்தாள்.ரிஷி தன்னை விரும்புதை அங்கிளின் வார்த்தைகளாலும் அவன் நடந்து கொண்ட விதத்தாலும் உணர்ந்ததாலோ,என்னமோ யானை பலம் கொண்டது போன்ற உணர்வு ஏற்பட்டது அவளுக்குள்.


அவள் குளியல் அறையிலிருந்து வெளியில் வருவதற்குள் அவளுக்காகவே காத்திருப்பது போல் ரிஷி அவளது அறையில் வந்துவிட்டிருந்தான்.அவனைக் கண்டதும் புன்னகைக்கவும் முடியாமல் ‘இவன் ஏன் இப்போது இங்கே வந்தான்.சாப்பிடப் போவதாக தானே குரு அண்ணா சொன்னார்’ என்று எண்ணியும் அவளது கன்னம் காரணமின்றி சிவந்தது.கதகதத்த கன்னத்தைத் தடவினாள் மித்ரா.


‘இது என்னடா?கோவையில் முதல் முறை பார்த்த போது உண்டான உணர்வே இப்போதும் ஏற்படுகிறது.ஒருவேளை அவன் தன்னை நேசிப்பதை உணர்ந்ததால் வந்த வெட்க உணர்வா!!?இவனுடன் நான் எப்போதுதான் இயல்பாகப் பேசுவது.’என அவள் மனம் சளித்துக்கொண்டது. ‘திருமணத்திற்குப் பிறகு’ என எள்ளி நகையாடியது அவளது புத்தி.


‘ஒரு சில நாட்களாக இயல்பாகப் பேச ஆரம்பித்ததானே.பின் ஏன் இன்று இப்படித் தவிக்கிறேன்.ஒருவேளை அவன் மனம் அறிந்ததால் உண்டான வெட்கமா?தன் கணவராக ஆகப் போகும் ஆண்மகனின் முன் எல்லாப் பெண்களுக்கும் இது போன்ற உணர்வுதான் ஏற்படுமோ!!?’எனப் பலவாறு எண்ணினாள் மித்ரா. ‘ஆனால்,அவன் எதுவும் பேசினால்,திக்காமல் பேச வேண்டும்.இல்லையென்றால் அதற்கும் அவனிடம் விளக்கம் தர நேரிடுமே’ எனத் தவிப்புடன் எண்ணினாள்.


அவள் முகத்தையே பார்த்திருந்த ரிஷியின் முகம் ,யோசனையிலிருந்து புன்னகைக்கு மாறியது.அவள் எண்ணங்களை அவள் முகம் கொண்டு படித்தவன் போல,அவள் தன்னை காணும் போது மட்டும் கொள்ளும் கன்ன சிவப்பை ரசித்தான்.எதுவும் பேசாமல் உதட்டில் புன்னகையுடனும் கண்களில் குறும்புடனும் அவள் நிமிர்ந்து பார்ப்பதற்காக அங்கிருந்த கதவில் சாய்ந்து கைகளை கட்டிக் கொண்டு கால் மீது கால் சாய்த்து நின்றிருந்தான் ரிஷி.


குனிந்த தலை நிமிராமல் இருந்த மித்ரா,அவன் எதாவது பேசக் கூடுமென்று காதுகளைத் தயார் நிலையில் வைத்திருந்தாள்.ஆனால் அவன் பேசினால்தானே!. ‘ஒருவேளை அவன் வரவே இல்லையோ.!!தன் பிரமையோ!!’என எண்ணி மெதுவாகக் குனிந்த தலையை நிமிர்த்தி அவன் இருந்த திக்கை பார்த்தாள் மித்ரா.


‘இது பிரமை ஏதுமில்லை.அதோ அவன் அங்கேயேதான் இருக்கிறான்.!!!அச்சோ அதே புன்னகை!!’எனச் சட்டென தலை குனிந்தாள் மித்ரா.அவள் கன்னங்கள் மேலும் செம்மையுற்றது.


சில வினாடிகள் அவன் குரலுக்காக பொறுத்துப்பார்த்தவள் அது கேட்காததும் மீண்டும் சிரமம்பட்டு நிம்ர்ந்து பார்த்தாள்.அவன் அவளை இன்னமும் இமைக்கவும் மறந்து கண்களில் குறும்புடன் பார்த்திருந்தான்.விக்கித்து அவளும் அவனை விழி விரித்து நோக்கினாள். ‘ இவ்வளவு நேரம் தன்னையேவா பார்த்திருந்தான்!வந்ததன் காரணமும் சொல்லாமல் ,பேசும் எண்ணமே இல்லாதவன் போல இது என்ன மிகவும் வசதியாக சாய்ந்து கொண்டு?’என தன் வியப்பின் நடுவே எண்ணிப் பொய் கோபம் கொண்டாள் மித்ரா.


‘ஒருவேளை5நிமிடத்தில் சாப்பிட வருவதாகச் சொல்லிவிட்டு அதற்குமேல் எடுத்துக் கொண்டேனோ!சாப்பிடத் தாமதமானதால் கூப்பிட வந்திருப்பானோ!’என தன்னுள்ளே கேள்வியும் பதிலுமாக பேசிக்கொண்டாள் மித்ரா.


“கொஞ்சம் என்னிடமும்தான் பேசலாமே!”என இதற்கு மேலும் அவள் பேச போவதில்லை என்பதை உணர்ந்து கவலை தொனிக்கக் கேட்டான் ரிஷி.


அவன் சொன்னதன் பொருள் புரியாமல், “என்ன?..”எனக் கேட்டாள்.


“இல்லை...உன்னுள்ளே பல கேள்விகள் ஓடும் போல தெரிகிறது.அதனால்தான் சொன்னேன்.என்னிடம் கேட்டால் நானும் பதில் சொல்லித் தெளிய வைக்க கூடுமில்லையா?அதுதான் கேட்டேன்” என அவள் யோசனையை உணர்ந்தவனாகக் கேட்டான் ரிஷி.


அவன் தன்னை அறிந்ததை உணர்ந்து , ‘எப்படிதான் என்னைக் கண்டுபிடிக்கிறானோ!.?’எனப் பெருமையும் பொய் கோபமும் கொண்ட மித்ரா, “இல்லை...இப்போதுதானே பார்த்துவிட்டு போனீங்க.அதற்குள் என்ன விஷயமாக இருக்குமோ!?என்று எண்ணிக் கொண்டிருந்தேன்” எனத் தன்னிலை விளக்கமாகச் சொன்னாள் மித்ரா.


“ம்ம்...”என்றவன் சில வினாடிகள் எதுவும் பேசவில்லை.மீண்டும்தொடர்ந்து, “இப்போது பரவாயில்லையா?”என அக்கறையுடன் கேட்டான் ரிஷி.கேட்டவன் மெதுவாக அவள் அருகில் நடந்து வந்தான்.


அவன் அவள் அருகில் வருவதைப் பார்த்த மித்ராவின் இதயம் தந்தியடிக்க ஆரம்பித்தது.பெரிய பெரிய மூச்செடுத்தாள் மித்ரா. ‘அங்கிருந்தே பேசலாமே!’எனத் தவித்தாள்.திக்காமல் பேச எண்ணி உறுதிக் கொண்ட மனம் இப்போது ஒத்துழைக்க மறுத்தது.அதே சமயம் அவன் எதை பேசுகிறான் என்பதும் புரியவில்லை.


“எ...என்ன?ப...பரவாயில்லையா?எனக்கு பு...ரியவில்லையே!நா...நான் நன்றாகத்தானே இருக்கிறேன் “ எனத் திக்கியவளின் கண்கள் அவள் கால்களையே பார்த்தது.


அவளின் பதட்டத்தை அவள் முகம் காட்ட ரிஷி அப்படியே நின்றான்.அவள் முன்பிருந்த கலங்கிய முகத்துடன் இல்லாமல் சிறிது தெம்புடன் இருப்பதையுணர்ந்து , ‘ஏன் கலங்கியிருந்தாய்’ என அதைக் கேட்டு அவளை மீண்டும் சோர்வடைய செய்ய ரிஷிக்கு விருப்பமில்லை. ‘அவளுக்குப் புரியாமல் இருப்பதும் நல்லதே’ என எண்ணி , “வா...சாப்பிடப் போகலாம்.. “ என அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமலே வந்த வழி பின்னோக்கி நடந்தான்.


பெரு மூச்சுவிட்ட மித்ரா, ‘இப்போது என்னதான் நடந்தது’ எனப் புரியாமல் மழுங்க விழித்தாள்.ஆனால் ரிஷியிடம் ‘எதற்கு வந்தீங்க?என்ன பேசினீங்க?ஒன்றும் புரியவில்லையே?’என்று கேட்க வேண்டும் போல் இருந்த எண்ணத்தை அப்படியே கைவிட்டாள் மித்ரா.அவன் அருகில் வந்து பாதியில் திரும்பியதில் நிம்மதியும் ஏமாற்றமும் ஒருசேர வருவதை உணர்ந்தாள்.ஆனால் அவனிடம் பேச இப்படித் திக்கும் வாயும் ,அவன் அருகில் அளவு மீறிப் படபடக்கும் இதயமும் கொண்டு என்ன பேசுவது?’எனச் சோர்ந்தாள்.


அவன் செல்வதையே பார்த்திருந்த மித்ரா, “ம்ம்..”என அவன் பின்னோடு சென்று அமைதியாக உண்டு மீண்டும் தன் அறை வந்தாள்.அதன் பிறகு ரிஷியும் குருவும்shoppingசென்று விட்டனர் .


காலை உணவிற்குப் பிறகு களைப்பு என ரிஷி சொன்னது உண்மையே என்பது போல் உறக்கம் கொண்டாள் மித்ரா.அதன் பிறகு மதிய உணவிற்காக ஜீவானந்தம் வந்து அழைத்த போதுதான் எழுந்தாள்.மதிய உண்ட பிறகு மீண்டும் மித்ரா வந்து படுக்கையில் அமர்ந்தாள்.ரிஷியைப் பற்றின எண்ணங்கள் அவள் மனத்ஹ்டிரையில் ஓட ஆரம்பித்தது.


ரிஷியை மித்ரா கணவனாக எண்ணும்போதே மித்ராவின் உள்ளம் மகிழ்ச்சியில் பூரித்தது.உள்ளமெல்லாம் இனித்தது.ஆனால் ஏதோ ஒன்று அவளுள் உறுத்தியது. ‘என்ன?’என அதிக நேரம் யோசித்த பின்,அதைக் கண்டுபிடித்தாள். ‘ரிஷியைப் பற்றின உண்மை.!அங்கிளும் சொன்னாரே!ஏதோ இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் நம் வீட்டில் நடந்தவை என்று...அது என்ன?இளம் பெண்கள் என்றால் நம்புவதற்கில்லை என்று அவன் வாயால் கேட்டிருக்கும் நிலையில் அதை தெரிந்து கொள்வது தன் கடமையே!ஆனால்....’என நினைவிலே ஏதோ உறுதிக் கொண்டு அதை தெரிந்து கொள்ள ஜீவானந்ததை தேடிச் சென்றாள் மித்ரா.


மித்ரா வரும் அரவம் கேட்டவர் எதையோ படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு,அவளை ஏறிட்டார்.அவள் கேள்வியோடு வந்திருப்பதை யூகித்தவராக, “என்ன மித்ராமா?என்ன தெரிய வேண்டும்?அடுத்த ஆனாலா? ” எனக் கேட்டு புன்னகைத்தார்.ஜீவானந்தம்.


“அது...அது வந்து..அது எப்படி அங்கிள் ? நான் ஆனால் என்று ஒன்று கேட்கத்தான் வந்திருக்கிறேன் என எப்படிக் கண்டுபிடித்தீர்கள் ?”என அறியா பிள்ளையாக கேட்டாள்.


“ரொம்ப சிம்பிள் .முதலில் உட்கார்” எனப் புன்னகை மறையாமல் அங்கிருந்த மூங்கில் நாற்காலியைக் காட்டினார்.


அமர்ந்தவள் “எப்படி அங்கிள்?”என்று விடாமல் அதிலே இருந்தாள் மித்ரா.


“நீ எதையாவது நினைக்கும் போது உன் முகத்தைக் கண்ணாடியில் பார் தெரியும் “ என்றார் பெரியவர்.அவள் புரியாமல் மழுங்க விழிக்க, “உன் முகம் உன் உள்ளத்தை அப்படியே காட்டுகிறது மித்ராமா” எனச் சொல்லி மேலும் விகசிக்கச் சிரித்தார் ஜீவானந்தம்.


“ஓ..”என வேறெதுவும் பேசாமல் , ‘இதுதான் ரிஷி தன்னை கண்டு என் மனதிலிருப்பதை எனக்குமுன் சொல்லிவிடுவதற்கான காரணமா?’என எண்ணி முகம் சிவந்தாள்.


அவள் வேறதுவும் பேசாமல் இருப்பதைப் பார்த்து “ம்ம்...சொல்லுமா?என்ன விஷயம்?”என்றார் ஜீவானந்தம்.


ஜீவானந்தத்தின் குரலில் தன்னிலை யுணர்ந்து, “அது அங்கிள்...எனக்கு ஒன்று தெரிய வேண்டும். “ எனத் தான் கேட்க வந்ததை ஆரம்பிப்பதற்கு அடித்தளமிட்டாள் மித்ரா.


“ம்ம்...என்ன தெரிய வேண்டும்?”என அவள் கேட்க நினைப்பதைத் தெரியாதவர் போல் கேட்டார் ஜீவானந்தம்.


“அங்கிள்...அவர்..அவரைப் பற்றி” என கைகளை பிசைந்த வண்ணம் இழுத்தவள் ஜீவானந்தத்தின் முகத்தைப் பார்க்கவில்லை.


“அவர் என்றால்?எவர்?”என நமட்டு சிரிப்புடன் கேட்டார் ஜீவானந்தம்.


பொறுமை இழந்த மித்ரா “அவர்தான் அங்கிள்...ரிஷியை பற்றித்தான் தெரிய வேண்டும்” என ஒருவாறு சிணுங்கிய சளிப்புடன் சொல்லி முடித்தாள்.


புன்னகைத்தவர், “அவனை பற்றியா?என்ன தெரிய வேண்டும்?”என்றவர் உடனே அவரே தெளிந்தவர் , “அன்று சொன்னேனே இரண்டு வருடத்திற்கு நம் வீட்டில் நடந்தவை அப்படியென்று அதுவா?”என நெற்றியில் யோசனை முடிச்சு விழ நிறுத்தினார்.


“ம்ம்...ஆமாம் அங்கிள்..அதனோடு அந்த அந்தப் பெண் சுமித்தா பற்றியும்?” எனத் தயங்கி சொல்லி நிறுத்தினாள் மித்ரா.


சுமித்தா என்ற பெயரை கேட்டதும் விருட்டென நிமிர்ந்தவர், “சுமித்தாவா?அவளைப் பற்றி உனக்கென்ன தெரியும் மித்ராமா?”எனக் கேட்டார் ஜீவானந்தம்.மீண்டும் மித்ரா பதில் சொல்லுமுன்னர் “நீ எதுவும் அந்தப் பெண்ணை பற்றி ரிஷியிடம் கேட்டு வைக்கவில்லையே!”எனத் தவிப்புடன் கேட்டார் ஜீவானந்தம்.


‘இல்லை’ என்பது போல் தலை அசைத்த மித்ரா, “யாரந்த பெண் அங்கிள்.வள்ளியும் ஓரிரு முறை அவள் பெயரை சொல்லக் கேட்டிருக்கிறேன்.ஆனால் உடனே வள்ளி பேச்சை மாற்றுவதையும் உணர்ந்திருக்கிறேன்.யார் அவள் அங்கிள்?அவளுக்கும் நம் குடும்பத்திற்கும் என்ன உறவு?”என தன் கேள்வியிலே இருந்தாள் மித்ரா.


‘இனி மறைத்தும் பயனில்லை.அதோனோடு மித்ராவிற்கு தெரியக்கூடாதென்று இந்தக் குடும்பத்தில் வேறெதுவும் இல்லையே! ‘ என எண்ணி “அவள்தான் மித்ராமா..ரிஷி இளம் பெண்களை வெறுக்கக் காரணம்” எனச் சொல்லி வேதனையுற்றார் ஜீவானந்தம்.


‘ஏதோ சொல்ல விரும்பாத காரணம் இருக்கிறது.’என்பதை மித்ரா அங்கிளின் முகத்தை பார்த்தே உணர்ந்தாள்.எதுவும் பேசமுடியாத தர்ம சங்கட நிலையை உணர்ந்தாள் மித்ரா.சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலையது.


‘ஒரு வேளை ரிஷி அந்தப் பெண்ணை நேசித்திருக்கக் கூடுமோ!!.அவள் இவனை ஏமாற்றியிருப்பாளா!’என எண்ணிய மனது ‘அவன் கடந்த காலத்திலும் வேறொரு பெண்ணை நினைத்திருப்பான்’ என்பதை ஏற்க முடியாமல் சத்தமின்றி அழுதது.


மேலும் சில நிமிடங்கள் அமைதியாகக் கடந்தது.பிறகு ஜீவானந்தம் மெதுவாகப் பேச ஆரம்பித்தார்.


“மித்ராமா...இதை உன்னிடம் முன்பே சொல்லியிருப்பேன்.ஆனால் மறக்க நினைக்கும் ஒன்றை நினைவு படுத்தும் எதையும் பேசி பயனில்லை அல்லவா?அதனால் ஒதுக்க நினைத்தேன்.ஆனால் நம் வீட்டுப் பெண் நீ...அனைத்தையும் நீ தெரிந்து கொள்வது அவசியம்.”எனத் தான் யோசித்ததைச் சொன்னார் ஜீவானந்தம்.


“ம்ம்..”என்பதை விட வேறெதுவும் பேச முடியாமல்,வேதனையுறும் அங்கிளுக்கு ஆருதல் சொல்லவும் முடியாமல் தவித்தாள்.அதே சமயம் ‘யாரந்த பெண் சுமித்தா?’எனத் தெரிய வேண்டிய தவிப்பிலிருந்தாள் மித்ரா.


“மித்ராமா..”என விழித்த ஜீவானந்தம் , தொண்டையில் சிக்கிய எதையோ விழுங்குவது போல தெரிந்தது.தொடர்ந்து “ குருவிற்கு ஏன் ஒரு கையும்,ஒரு காலும் செயலிழந்தது போல் ஆனது என்று தெரியுமா?”எனக் குரல் தழுதழுக்கக் கேட்டார்.


“பக்கவாதம்...”என்றவளின் குரலின் ஸ்ருதி குறைந்தது. ‘இந்த வயதில் ஆரோக்கியமான ஒரு ஆணுக்கு எப்படி திடீரென்று பக்கவாதம் வரக் கூடும்.எப்படியும் ரிஷியைப் போல தான் குரு அண்ணாவையும் வளர்த்திருப்பார்கள்’ என தன் மனதில் எண்ணியதை ஜீவானந்திடமும் கேட்டுவிட்டாள்.


“ம்ம்...ஆமாம்.நீ சொல்வது சரி...இது இயல்பாக வந்த பக்கவாதமல்ல...என்னவென்று தெரியாத மாத்திரைகள் அளவறியாமல் உடலில் சேர்ந்ததால் உண்டான பக்கவிளைவு” என மனம் கசந்து சொன்னார் ஜீவானந்தம்.


“என்ன அங்கிள் சொல்றீங்க?மாத்திரைகளா?அப்படியென்றால்.குரு அண்ணா..?”எனத் தொடங்கி ‘தற்கொலைக்கு முயன்றாரா?’என மனதில் நினைத்ததைக் கேட்காமல் நிறுத்தினாள் மித்ரா.


அவள் மனதை யூகித்த ஜீவானந்தம், “நீ நினைப்பது போல் இல்லை மித்ராமா..என் பிள்ளைகளை நான் மன உறுதியுடனே வளர்த்திருக்கிறேன்.தற்கொலை செய்து கொள்ளுமளவு கோழைகளாக ஒருபோதும் நான் வளர்க்கவில்லை.எந்த பிரட்ச்சனையையும் உறுதியுடன் அவர்கள் எப்போதும் எதிர் கொள்வர்” என்று தன் பிள்ளைகளின் பெருமை பாடியவர் சில வினாடிகள் மௌனித்தார்.


பிறகு, “இது குருவிற்கும் தெரியாமல் அவனுக்கான உணவில் கலக்க பட்ட உணவை அவன் உட்கொண்டதால் உண்டானது..அந்தப் பக்கவாதம். “ என நிறுத்தினார்.


மித்ராவிற்கு ஆச்சரியத்துடன் ‘இப்படியொரு மோசமான செயலை யார் செய்தது?இப்படி குரு அண்ணாவைத் தண்டிக்கும் அளவு என்ன தவறு அவர் செய்தார்?’எனக் கோபமும் வேதனையும் உற்றாள்.அங்கிளே எல்லாம் சொல்லக்கூடும் என மௌனம் காத்தாள் மித்ரா.


தொடர்ந்தார் ஜீவானந்தம் , “தகுந்த நேரத்தில் Hospital – ல் சேர்த்ததால் அவனை இவ்வளவிற்குக் காப்பாற்ற முடிந்தது.இல்லையெனில் உயிரே போயிருக்க கூடும்.முதல் ஒரு மாதம் வரை பேச்சுமில்லாமலும் இருந்தது.அதன் பிறகு சென்னையில் பக்கவாதத்திற்கென சிறப்பு மருத்துவர் மாதம் ஒருமுறை வெளி நாட்டிலிருந்து வருவதாகவும்,தொடர்ந்த சிகிச்சையும் குருவின் ஒத்துழைப்பும் இருந்தால் குரு பழைய நிலையை விரைவில் அடையக் கூடுமென்றும் கோவை மருத்துவர் சொல்ல அதன் படி இங்கு வந்து சேர்ந்தோம்.தீவிர சிகிச்சையும் குருவின் மன உறுதியும் அவன் உடல் நிலையில் முன்னேற்றம் தந்து ,இன்று அவன் பழைய படி மாறி வருகிறான்..இரண்டு வருடத்திற்கு முன்பு இங்கு வந்த புதிலில் ,தினமும் அவனுக்குப் பயிற்சியும் சிகிச்சையும் இருக்கும்.இப்போது கால்கள் பழையபடி அகிவிட்டன.கைகளும் விரையில் குணமாகிவிடும் என நம்பகமான வார்த்தைகள் டாக்டர்களிடமிருந்து வந்திருக்கிறது.”எனச் சொல்லி முடித்தாலும் ஏதோ வேதனையை உள்ளடக்கியவராக நிறுத்தினார் ஜீவானந்தம்.


‘குருவின் உடல் நிலை குறைவிற்கு இப்படி ஒரு காரணம் இருக்கக் கூடுமென்று மித்ரா கனவிலும் நினைக்கவில்லை.ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் குரு அண்ணாவை மனதினுள் உருவகித்து எண்ணிப் பார்த்து வேதனையுற்றாள்.ரிஷிக்கு இணையான கொஞ்சமும் ஆண்மை குறையாத கம்பீரத்துடன் குருவையும் நினைத்துப் பார்க்க மித்ராவிற்கு கண்கள் கலங்கியது.


அதே சமயம், ‘சுமித்தாவைப்பற்றிக் கேட்டாள் அங்கிள் ஏன் குரு அண்ணாவின் பக்கவாதத்தை பேசினார்’ என ஒரு கணம் சிந்தித்தவள்,பிரமித்து போனாள்.அவளது விழி இமைகள் செயலிழந்த வண்ணம் மனதில் தோன்றியதை ஜீவானந்ததிடம் சொன்னாள் மித்ரா. “அப்படியென்றால்,அப்படியென்றால்...சுமித்தா தான் அந்த மாத்திரைகளை குரு அண்ணாவின் உணவில் கலந்ததாக சொல்றீங்கலா அங்கிள்?”கூடவே ‘இப்படிப் பட்ட பெண்ணை ரிஷி மட்டுமல்ல யாவரும் வெறுக்கத்தானே செய்வார்கள்?ஆனால் அந்தப் பெண்ணை எண்ணி அனைவரையும் வெறுத்தேன் என்பதும் நியாயம் இல்லை ‘ என்றும் நினைத்தாள் மித்ரா.


அவள் கேள்வியில், “ம்ம்..அவள் கொண்டுவந்து தந்த உணவில்தான் இந்த மாத்திரைகள் கலந்திருந்தன.”என்றார் ஜீவானந்தம்.


“ம்ம்” என்ற மித்ராவினுள் குழப்பம் எழ ஆரம்பித்தது. “அங்கிள்...யாரந்த சுமித்தா..நம் சொந்தமா?அவள் எப்படி நம் வீட்டில்...அதுவும் குரு அண்ணாவிற்கு உணவுக் கொண்டு சென்று கொடுக்கும் அளவிற்கு அவளுக்கு என்ன உரிமை?”என தன் மனதைத் திறந்தாள்.


சில வினாடிகள் அமைதிக்குப்பின்,”மித்ராமா,சுமித்தா.........அவள்தான் குரு விரும்பிய பெண்” என விரும்பாத வார்த்தைகளைச் சொல்லிவிட்டு.மேஜை மேலிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார் ஜீவானந்தம்.


மித்ராவால் இதை நம்பவே முடியவில்லை. ‘குரு அண்ணாவின் காதலியே அவரைக் கொல்ல முயற்சிப்பதா?இது எப்படி முடியும் உண்மையாக நேசித்த ஒருவர் அவர் யாராக இருந்தாலும்,எங்கிருந்தாலும்,எப்படிபட்டவாரக இருந்தாலும் அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என எண்ணுவதுதானே காதல் கொண்ட தமிழ் பெண்ணின் உள்ளம்.கொல்லத் துணிவதென்றால்’ என நம்பமுடியாமல் நினைத்து , “என்ன சொல்றீங்க அங்கிள்?”நம்பாத குரலில் கேட்டாள் மித்ரா.


அவள் நம்புவது கடினம் என்பதை ஏற்கனவே யூகித்திருந்த ஜீவானந்தம் பேசலானார். “ம்ம்..சுமித்தாவை குரு விரும்பினான்.அதனோடு அவளே அவனது உணவில் மருந்து கலந்ததும்” என ஐயம் திரிபர மற்றொரு முறை சொன்னார் ஜீவானந்தம்.


மீண்டும் நம்பாத முகபாவ்னையுடன் மித்ரா தலை அசைக்கத் தொடங்கினாள்.கண் கலங்கினாள்.ரிஷியின் பயம் இப்போது அவளுக்குத் தவறாக தோன்றவில்லை.அதே சமயம் ‘இப்படி ஒரு பெண் இந்த உலகில் இருக்கக் கூடுமா?’ஊமையாக குருவின் நிலையை எண்ணி மித்ராவின் உள்ளம் அழுத்தது.


“பொறு மித்ராமா...முழுவதையும் சொல்லிவிடுகிறேன்.எனக்கும் இப்போது யாரிடமாவது இதைச் சொன்னால்தான் மனபாரம் குறையும் போல் தோன்றுகிறது” என்றவர் ஒரு பெரிய மூச்செடுத்தார் ஜீவானந்தம்.அங்கிளின் சொல்லில் எதுவும் பேசாமல் அவரது வார்த்தைகளுக்காக மௌனம் காத்தாள் மித்ரா.


“சுமார் ஏழு வருடமிருக்கும்.

 

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
Mithra ella epi layum ipdi vekkapadrathu mugam sivakkarathu padichitte irukka mari feel aaguthu..

kadasi vara apd thaan andha ponnu pandra pola eludhiruken Srinithi.. :confused: konjam adjust panikonga..

Idhu 6 years munadi eludhina my first story . So varthaiyadal konjam repeated . :oops:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top