உனக்காகவே நான் - 17

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம்-17
Heroin.jpg

‘ஒருவேளை அம்மாவின் புகை படத்தை அணைத்தவிதமாக உறங்கியிருந்தாள் தூங்கி இருக்கக் கூடுமோ?!’ஆனால் என்ன செய்ய அதற்கும் வழியில்லாமல்,இரவெல்லாம் உறங்காமல் அழுததால் கண்கள் வீங்கி ஜுரம் வர ஆரம்பித்தது.அந்த ஜுர வேகத்தில் ‘அம்மா’ என்று அனத்த வண்ணம் கண் அயர்ந்தாள் மித்ரா.


இதை எதையும் அறியாத ரிஷி,விசிலடித்த வண்ணம் படி இறங்கி வந்தான்.அவன் வருகைக்காகவே காத்திருந்தவள் போல வள்ளி , “சின்னய்யா..சின்னம்மாவுக்கு ஒரே காச்சல்.நான் பேசரதும் அவங்களுக்குப் புரியவில்லை.ரொம்பவும் அதிகமான காச்சல்னு நினைக்கிறேன்.எனக்கு என்ன செய்ரதுனே தெரியல” என கைகளை பிசைந்த வண்ணம் சொன்னாள்.


உடனே வள்ளி பதிலும் சொல்லாமல் ,மித்ராவின் அறைக்கு விரைந்த ரிஷி ,கசங்கிய பூவாய் அவள் வாடி இருப்பதைப் பார்க்க முடியாமல் அவளருகில் ஓடிச் சென்று அவளது கைகளை பற்றினான்.


“மித்ரா..மித்ரா..”என இருமுறை அழைத்துப்பார்த்தான் ரிஷி.


ஆனால் சூழ்நிலை எதுவும் தெரிய கூடிய நிலையில் மித்ரா இல்லை.அவள் வாய் “அம்மா” என்ற ஒரு வார்த்தையையே முனங்கியது.கண்கள் திறக்க முடியாதபடி கனத்தது.வாயெல்லாம் உள்ளே நெருப்பு இருப்பது போல எரிந்தது.அறை மயக்க நிலையில் அவன் குரல் எங்கோ கேட்பது போல உணர்ந்தாள் மித்ரா.


மித்ரா அவன் குரலுக்கு இசைவு கொடுக்காததை தொடர்ந்து ,சட்டென வள்ளியின்புரம் திரும்பிய ரிஷி , “வள்ளி...நீ,பாட்டி சொல்லுவாங்கல..அந்த ஈரத் துணி வைத்தியம் செய்.நான் போய் டாக்டரை அழைத்து வருகிறேன்.”என்று சொல்லி விரைந்தான் ரிஷி.


வள்ளியின் கண்களிலும் கவலை தெரிந்தது.வேகமாகச் சென்று ஃப்ரிஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்துக் கொண்டு ஒரு காட்டன் துணியை நான்காக கிழித்துக் கொண்டு மித்ராவிடம் வந்தாள்.சதாரண காய்ச்சல் போல இருந்த போதும் அவள் அனத்தியவிதம் வள்ளியையும்,ரிஷியையும் நிலைகுலைய வைத்தது.


‘நேற்று இரவு வரை நன்றாகத் தானே இருந்தாங்க அதுக்குள்ள எப்படிக் காய்ச்சல் வந்திருக்கும்’ என யோசித்த வண்ணம் தண்ணீரில் நனைத்த காட்டன் துணியை பிழிந்து நெற்றி ,கைகள் என மித்ராவின் மீது வைத்தாள்.காய்ச்சலின் சூடு குறையக் கொடுக்கும் முதலுதவியாக.


‘எல்லாம் திருஷ்டிதான் காரணம்,இந்தச் சேலை வேற.முதலில் சின்னம்மாவுக்கு திருஷ்டி சுற்றி போட வேண்டும்’ என எண்ணிய வண்ணம் மீண்டும் துணியை எடுத்து நனைத்து மாற்றி மித்ராவின் மீது வைத்தாள் வள்ளி.


அதற்குள் ரிஷி டாக்டருடன் வந்துவிட்டான்.வசந்தி,ரிஷியின் குடும்ப டாக்டர்.அருகில்தான் வீடு என்பதால் அவர் clinicசெல்லும் முன் விரைந்து அவனால் அழைத்துவர முடிந்தது.


வந்து பரிசோதனை செய்தவர்கள் ,ரிஷியைப் பார்த்து புன்னகைத்தவிதமாக, “பெரியதாக ஒன்றுமில்லை ரிஷி..யாரையோ நினைத்து இரவெல்லாம் தூங்காமல் அழுதிருக்கிறாள்.அம்மா என்று முணுமுணுப்பதை பார்த்தாள் அவள் அம்மா நினைவில்தான் அழுதிருப்பாள் என்று நினைக்கிறேன்.அவளுடைய அம்மாவ வரச் சொல்லு.எல்லாம்Home sick தான் பாதி காரணம்.இருந்தும் இந்த மருந்தையும் கொடு.எல்லாம் சரியாகிடும்.இதற்கு போய் என்னைப் பயமுறுத்தி இப்படி அவசரப்பட்டு இழுத்து வந்தியே!!”எனக் கோர்வையாக சொன்னார் வசந்தி.


பின்னந்தலையில் தன் வலக்கையால் தடவிய வண்ணம் அசடு வழிந்தான் ரிஷி. “இல்ல டாக்டர்.நேற்று வரை நன்றாகத் தான் பேசிக் கொண்டிருந்தாள்.திடீரென்றதும் கொஞ்சம் பயந்துவிட்டோம்.அதுவும் நாங்க அழைப்பதும் அவள் காதில் விழவில்லையா?அது தான் கொஞ்சம் பயந்துவிட்டோம்.”என விளக்கம் கொடுத்தான்.


“ம்ம்..சரி சரி...பயப்பட ஒன்றுமே இல்லை?ஒருinjectionஇப்போ போட்டுவிட்டு போரேன்.சரியாகிடும்.ஒரு வேளை மாலைக்குள் குணமாகவில்லையென்றால் என்னுடைய clinicக்கு கூட்டிட்டு வா. Blood test பண்ணிடலாம்.சரியா?ஆனால் நன்றாகத் தூங்கினாலே சரியாகிடும்.”என்றதோடுinjectionபோட்டுவிட்டு,வள்ளியிடம் உணவு பற்றி சொல்லிவிட்டு வசந்தி கிளம்பிவிட்டார்.


புன்னகைத்தவிதமாக அவர்களை அழைத்துச் சென்று அவர்களது வீட்டில் விட்டு வந்தான் ரிஷி.அதற்குள் மெதுவாக நினைவு வந்த மித்ராவை மெல்ல எழுப்பி உடை மாற்றி ,உண்ண வைத்து,மாத்திரை கொடுத்து உறங்க வைத்தாள் வள்ளி.


அதன்பிறகு வந்த ரிஷி அவள் ஆழ்ந்து உறங்குவதையும் கொஞ்சம் தெளிவாக இருப்பதையும் பார்த்துவிட்டு,”முக்கியமானclientவருவதால் நான் போய்தான் ஆக வேண்டும் வள்ளி நீ மித்ராவை பார்த்துக் கொள்.எதுவேண்டும் வேண்டுமென்றால் உடனே ஃபோன் செய்.நான் அப்பாவிடம் பேசி மித்ராவின் அம்மாக்கு விவரம் சொல்லி வரவழைக்கிறேன்” என்றுவிட்டு ரிஷி Officeக்கு கிளம்பினான்.


Officeசென்றதும் முதல் வேலையாக ஜீவானந்தத்திற்கு ஃபோன் செய்தான் ரிஷி.நடந்தவற்றை எடுத்துச் சொல்லி, “மித்ராவின் அம்மாவை இங்கு வரச் சொல்ல முடியுமா அப்பா.? “ எனக் கேட்டான்.


திடுக்கிட்ட ஜீவானந்தம் ,உடனே சமாளித்து “ரிஷி...அவளா அம்மாவை வரச் சொல்லி உன்னைக் கேட்டாள்? “ எனக் கேட்டார்.


“இல்லை பா..அவள் அம்மா என்ற ஒரு வார்த்தை தவிர வேறெதுவும் சொல்லவில்லை.நாங்க பேசுவதும் அவளுக்குப் புரியவில்லை.”என விளக்கம் தந்தான்.


ஏதோ நிம்மதியுற்றவராக, “யாவரும் கேளிருக்கு போனீங்க இல்ல,அங்கே எதாவது அவளைப் பாதித்திருக்கும் என்று நினைக்கிறேன்.நான் அவளிடம் ஃபோன் செய்து பேசுகிறேன்.நீ விடு” என விலக்கிவிட நினைத்தார் ஜீவானந்தம்.


ஆனால் ரிஷி விடாமல் , “இல்லை வேண்டாம்பா.அவள் நன்றாகத் தூங்கட்டும்.நீங்க ஃபோன் செய்து அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.நீங்க மித்ரா அம்மாவை உடனே Flighபுடிச்சு வர சொல்லுங்க.அவங்க ஃபோன் எண்ணையும் கொடுங்க” எனக் கேட்டான்.


பிடிவாதம் மிகுந்த ரிஷியைத் தெரியும் ஆதலால், ‘இனி அவனிடம் மறைத்துப் பேசுவது எந்த வகையிலும் வழியில்லை’ என்பதை உணர்ந்தார் ஜீவானந்தம். ‘ஆனால் திடீரென்று ரிஷிக்கு எப்படி மித்ராவின் மீது இவ்வளவு அக்கறை வந்தது.வீட்டில் அவள் தங்குவதையே வெறுத்த ரிஷியா இப்போதும் பேசுவது?’என ஜீவானந்தத்தை எண்ண வைத்தது.அவனிடம் இருந்த மாற்றத்தால்,மித்ராவைப் பற்றி அவனிடம் பேசலாம் என்ற முடிவுக்கு வந்தார் ஜீவானந்தம்.


அவர் பதிலேதும் சொல்லாமல் சிந்தனையில் இருப்பதைக் கலைக்கும் விதமாக, “என்ன பா?அவள் அம்மாவின் எண்ணை சொல்றீங்கலா?நானே டிக்கெட் பதிவு செய்துடுரேன்” என அவனாக முடிவு செய்து பேசினான் ரிஷி.


‘இனியும் தயங்கிக் கொண்டிருப்பது சரியல்ல’ என உணர்ந்து, “ரிஷி… நான் சொல்வதை பொறுமையாகக் கேள்” எனத் தொடங்கியவர், “ரிஷி… மித்ரா… மித்ராவும் தேவியும் ஒருவரே” என்று திக்கி திணறி ஒருவழியாகச் சொன்னார் ஜீவானந்தம்.


புரியாமல், “என்னப்பா சொல்றீங்க… நான் என்ன கேட்டாள்..என்ன சொல்...”என சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரிஷிக்குப் புரிந்துவிட்டது. “என்ன… தேவிதான் மித்ராவா?”என அதிர்ந்து கேட்டான் ரிஷி.


“ஆமாம்..”என்றார் ஜீவானந்தம்.அடுத்து அவன் என்ன கேட்க போகிறான் என்பதையுணர்ந்த அவர், “அவள்தான் யாரிடமும் இப்போதைக்குச் சொல்ல வேண்டாம் என்றாள்” எனத் தன்னிலை விளக்கம் தந்தார்.


சில வினாடிகள் பேச்சிழந்த ரிஷி,”அந்த ஆக்ஸிடன்ட்ல அவளுடைய அப்பா அம்மா ரெண்டு பேரும் இறந்துட்டாங்கனு சொன்னீர்களே அந்தத் தேவியா?”என நம்பமாட்டாமல் கேட்டான் ரிஷி.


“ஆமாம்டா..அவள்தான்.நம்ம சென்னை வர்மா இன்ஃபோ டெக் ல வேலை பார்த்த அதே பெண்தான்” என முடித்தார் ஜீவானந்தம்.


என்ன சொல்வதென்றே தெரியாமல் சில வினாடிகள் இருந்த ரிஷி, “பாவம்பா..மித்ரா.இழக்கப் போகிறோம் என்று தெரிந்த போதும் அம்மா இறந்த போது எவ்வளவு வேதனையாக இருந்தது.இவள் எப்படி அம்மா அப்பா என இருவர் இழப்பையும் எதிர்பாராமல் தாங்கினாளோ?!!”எனக் குரலில் வலித் தெரிய பேசினான் ரிஷி.


“ம்ம்..உண்மைதான் ரிஷி.எப்படி அவள் இவ்வளவு விரைவில் சமாளித்து எழுந்தாள் என்று எனக்கும் வியப்புதான்.அவள் மன உறுதியுள்ள பெண்.ஆனால் நீ இப்படி அவள்முன் பரிதாபப் பட்டோ அல்லது அந்தச் சம்பவம் பற்றியோ அவளிடம் கேட்டோ வைத்துவிடாதே.தன்னை பற்றி அறிந்தவர்கள் எல்லாம்,பரிதாபப் பட்டே அவளை வேதனைக் குள்ளாக்கியதால்தான் யாரிடமும் சொல்ல வேண்டாம் எனச் சொன்னாள்.அதோடு அவளுக்கு தன்னால்தான் அந்த ஆக்ஸிடன்ட் ஆனது என்ற குற்ற உணர்வு வேறு” என்று ரிஷியிடம் அறிவுறுத்தினார் ஜீவானந்தம்.


உடனே, “நான் எதுவும் கேட்கவில்லை பா.ஆனால் அவளால்தான் என்றால்,புரியவில்லையே பா” என விளக்கம் கேட்டான் ரிஷி.


“அது ஒன்றுமில்லைடா.அமைதியாக வீட்டில் இருந்தவர்களை,அவள்தான் அறிவுறுத்தி Shoppingபோகலாம் என அழைத்திருக்கிறாள்.அதற்குப் போகும் போதுதான் ஆக்ஸின்ட்.முன் இருக்கையில் இருந்த சுந்தரமும் சாந்தியும் சம்பவ இடத்திலே இறந்துவிட்டனர்.பின் இருக்கையில் ஒரு deddy bear இருந்ததால்,அதை இறுகப் பற்றியிருந்த மித்ராவிற்கு அடியெதுவும் படாமல் தப்பினாள்.கால் முட்டியில் மட்டும் சிறு அடி.அப்போது அவள் பட்ட வேதனை இருக்கு பாரு.சொல்லி முடியாதுடா ரிஷி” எனக் குரலில் தழுதழுத்தார் ஜீவானந்தம்.
கவனமாகக் கேட்ட ரிஷி, “ம்ம்...புரிகிறதுபா...இது தெரியாமல் நான் வேறு அன்று சென்னையில் பிரட்ச்சனை என்றதும் பழைய காதலன் என்றெல்லாம் சொல்லிவிட்டேன்” என வேதனைப் பட்டு கூறினான்.






மென்மையாகப் புன்னகைத்த ஜீவானந்தம் ,”அது பரவாயில்லைடா.ஆனால் நீதான் இப்போது அவள் மீது அன்பாக இருக்கிறாயே!அது போதும்” என முடித்தார்.


‘என்ன நான் அன்பாக இருக்கிறேனே!’என எண்ணிய ரிஷி,அந்த எண்ணத்தைத் தொடராமல் , “ சரிப் பா...நான் என்ன செய்ய இப்போது.?அவள் அம்மா என்று அனத்திக் கொண்டிருக்கிறாளே” என தன் தந்தையிடம் யோசனையாகக் கேட்டான் ரிஷி.


“அவள் அம்மா அப்பா புகைப் படம் அவளிடம் இருக்கும்,அது எங்கிருக்கிறது என்று எடுத்து பார்த்துக் அதை அவளிடம் கொடு.அவள் எதையும் விரைவிலே சமாளித்துவிடுவாள்.வருத்தப் படாதே.”என்றார் ஜீவானந்தம்.


“ஓ...சரிப் பா..நானும் அந்தப் புகைப்படத்தை அவள் அறையில் பார்த்திருக்கிறேன்.அப்படியே செய்கிறேன்.சரிப்பா...நான் அப்பறம் அழைக்கிறேன்.ஏற்கனவே நேரமாகிவிட்டது” என ஃபோனை அணைத்தான்.


“ம்ம் சரி டா...அவளைப் பத்திரமாக பார்த்துக் கொள்” என ஃபோனை வைத்தார் ஜீவனந்தம்.


“ம்ம்...”என ஃபோனை வைத்தாலும்.,ரிஷி சில பல நிமிடங்கள் மித்ராவின் நினைவிலே இருந்தான்.அவள் சில சமயங்களில் ஏன் வேதனையுறுகிறாள் என்பதை இப்போது புரிந்து கொண்டான்.இருந்தும் அதிக நேரம் அவன் சிந்தனையில் விடாமல் வேலை அவனை அழைத்தது.அதனால் அதில் கவனம் செலுத்த அவள் நினைவு நின்றது.


******
மாலை டாக்டர் சொன்னது போல தெளிவானாள் மித்ரா.இருந்தும் வள்ளி ‘ஏன் அழுதீங்க’ என்று கேட்டாள் இல்லை.கேட்டு வேதனைப் படுத்த வள்ளி விரும்பவில்லை.டாக்டர் சொன்னது போல அம்மாவின் நினைவுதான் என ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் வள்ளி.


ஆனால் வள்ளி மாலை சிற்றுண்டிக்கு பதிலாகக் கொண்டுவந்த கசாயம்தான் மித்ராவை கசக்க வைத்தது.


“சின்னம்மா...இந்த ஜூஸை குடிங்க” என்று ஒரு பச்சை நிற திரவத்தை மித்ராவிடம் கொடுத்தாள் வள்ளி.


“என்ன ஜூஸ் வள்ளி.பச்சை நிறமாக இருக்கு” என்று வாங்கியவள் வள்ளி பதில் சொல்லுமுன் ஒரு மிடறு அருந்தியவள்.


“யாக்..இவ்வளவு கசப்பு..வேண்டாம் வள்ளி” என வள்ளியிடம் நீட்டினாள்.


“இந்தப் பேச்சே இல்லை.இதை முழுதும் குடிக்க வேண்டும்.பப்பாளி இலை சாறு.இதைக் குடித்தால் எந்தக் காய்ச்சலும் உங்களை தீண்டவே தீண்டாது.வைரஸ்,டெங்கு,மலேரியா அப்பிடினு எதுவும்” என்றவள் மாத்திரை சாப்பிட அடம் செய்யும் குழந்தையை மிரட்டுவது போல குடிக்கும் வரை கைகளைக் கட்டிக்கொண்டு விறைப்புடன் நின்றாள் வள்ளி.


“என்ன நீயும் உங்கம்மா போல எதையாவது செய்து அதைக் குடி இதை குடினு சொல்ற “ எனச் செல்லமாக சிணுங்கிய வண்ணம் கஷ்டப்பட்டு குடித்தாள்.


அம்மா என்ற பேச்சில் புன்னகைத்த வள்ளி , “எல்லாம் பாட்டி மூலம் அம்மாவுக்கும் எனக்கும் தெரியவந்த கை வைத்தியங்கள் சின்னம்மா” எனப் பெருமையாக சொன்னாள் வள்ளி.


“அதைச் சொல்.பாட்டிதான் எல்லாவற்றிற்கும் வித்தா?”என்றவள் “வா..வள்ளி...கொஞ்ச நேரம் தோட்டத்தில் நடந்துவிட்டு வரலாம்.”என அவளை அழைத்துவிட்டு எழுந்தாள் மித்ரா.


"ம்ம்...சரிங்க சின்னம்மா.ஆனால் ஆறு மணிக்குத் திரும்ப வந்துடணும்.இன்னும் நான் சமைக்கவே இல்லை.உங்களை நினைச்சுட்டு அப்படியே இருந்துட்டேன்” என வெகுளியாய் வள்ளி பதில் சொல்ல மித்ராவிற்கு இதமாக இருந்தது.


சிறு முறைப்புடன்,”ஏன் வள்ளி..?நான் நன்றாகத்தானே இருக்கிறேன்..அதுவும் நான் என்ன சின்னப்பிள்ளையா?வந்த காய்ச்சல் வந்தது தெரியாமல் போகப் போகிறது.இதற்கு இந்த ஆர்ப்பாட்டமா?”எனப் போலி கோபத்துடன் பேசிக்கொண்டே தோட்டத்துக்குள் வந்தனர்.


“அது...ஏனென்று தெரில சின்னம்மா.அப்படியே இருந்துட்டேன்.அவ்வளவுதான்.சின்னய்யாக்கு கூட உங்கள விட்டுவிட்டு போக மனசே இல்ல.ஏதோ முக்கியமான எதோ சொன்னார்.தவிர்க்க முடியாதென்றுதான் போனாரு” என்றாள் வள்ளி.


என்னவென்று சொல்ல தெரியாத வள்ளியின் அன்பு மித்ராவிற்கு இதம் தந்தது.ஆனால் ‘தனக்கு இந்த நிலை ஏன் வந்தது’ என யோசித்தவள் மனம் கலங்கியது. ‘எல்லாவற்றிற்கும் காரணமான ரிஷி தன்னை நினைத்துofficeபோக வருந்தினானா? ‘ மித்ராவிற்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது.இருந்தும் உள்ளம் தெளிவாக ஒரு முடிவெடுத்தது.முதலில் ரிஷியைப் பற்றி தெரிந்து கொள்வது.


‘அவனைப் பற்றி பேசும் போது ஏன் வள்ளி அவனுக்குப் பெண்கள் என்றால் வெறுப்பு என்று சொன்னாள்.ரிஷியும்தான் ஏன் இளம் பெண்கள் என்றால் வெறுப்பு என்று அன்று ஜீவா அங்கிளிடம் சொன்னான்.அவன் குரலில் ஒலித்தது உண்மையான வெறுப்பு.இரண்டும் தெரிய வேண்டும்.அதனோடு பாட்டி சொன்னபடி வள்ளியை அவள் அப்பாவிடம் பேச வைக்க வேண்டும்.அதற்காகவும் பேச வேண்டும்.’அதே உறுதியோடு மெதுவாக வள்ளியிடம் பேச ஆரம்பித்தாள்.


“வள்ளி...உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும்.சொல்வாயா?”எனப் பீடிகையுடன் ஆரம்பித்தாள் மித்ரா.


“சொல்லுங்க சின்னம்மா..என்ன விஷயம்” என்றாள் வெகுளியாக வள்ளி.


“வள்ளி...அது...உன் அப்பா..”எனத் திக்கினாள் மித்ரா.


‘என் அப்பா’ எனக் கேள்வியாய் மித்ராவின் தயங்கிய முகத்தைப் பார்த்தாள் வள்ளி.மேலும் மித்ராவை பேச வைக்க உந்தினாள் வள்ளி. “சொல்லுங்க சின்னம்மா.என் அப்பா..”


“இல்லை வள்ளி.உன் அப்பா அந்தக் கோவை பெண்ணை பற்றி ஏதோ ஒரு கதை சொன்னார் என்று அன்று சொன்னாயே.அது...அது..என்னது” எனத் தயங்கி கடினப் பட்டு சொல்லி முடித்தாள் மித்ரா.


புன்னகைத்த வள்ளி, “இப்போ அது எதற்கு சின்னம்மா.அந்தக் கதையை அப்பறம் இன்னொருநாள் சொல்றேன்.இப்போது கொஞ்ச நேரம் அமைதியாக நடந்துவிட்டுத் தூங்க போறீங்க” எனக் கண்டிப்பும் அக்கறையுமாகச் சொன்னாள் வள்ளி.


ஆனால் விடாமல் மித்ரா, “வள்ளி...காலையிலிருந்து தூங்கிக் கொண்டே இருந்ததால் ஒரு மாதிரி இருக்கு.போர் அடிக்குது.அதான் கேட்டேன்” என வாய்க்கு வந்ததைச் சொல்லி சிணுங்கினாள் மித்ரா. ‘போர் அடிக்கக் கேட்டும் விஷயமா இது’ என அவள் மனம் அவளையே முரண்டியது.


மித்ராவின் சலுகையான சிணுங்கலில் , “ஓ...அப்போ சரி.நான் சொல்கிறேன்.ஆனால் அதன் பிறகு வேறேதும் பேசுவதற்கில்லை.ஒழுங்காகச் சாப்பிட்டுவிட்டு தூங்க வேண்டும் சரியா? ” என நிபந்தனையிட்டாள் வள்ளி.


“சரிdeal..”என வள்ளி சொல்வதை கேட்பதற்கு ஆய்தமானாள் மித்ரா.


“ம்ம்...”எனப் பேச ஆரம்பித்தாள் வள்ளி.


“நான் சொன்னேன் இல்ல,அப்பா ஆறு மாசமா அந்த கோவைப் பெண்ணுடன் என்றும்,அதனால் வீட்டில் தெரிந்து சின்னய்யாவும் அப்பாவை வெளியில் போக சொன்னார் என்றும்.அதன் பிறகு இரண்டு மாதம் இருக்கும்.அப்போது அப்பாவோட Company-ல,அவர் ஏதோ கவன குறைவால மெஷின்ல அப்பவோட கை தெரியாம மாட்டி லேசா அடிப்பட்டுப் போச்சு.அந்த சமயத்தில அந்த கோவை பொண்ணொட வீட்லதான் இருந்திருக்காரு.கை அடிப்பட்டதால Company – ல ஏதோ கொஞ்சம் பணம் கொடுத்திருக்காங்க.ஆனா வேலைல கவனமில்லாதது அப்பாவோட தப்புதான் அப்படினு சொல்லி வேலையிலிருந்து அனுப்பிட்டாங்க.இது தெரிஞ்சதும்தான் அந்த பொண்ணோட உண்மையான சுயரூபம் என் அப்பாவுக்கு தெரிஞ்சதா சொன்னாரு.ஒரு வாரம் கூட தாக்குபிடிக்காம அப்பறம் அந்த பொண்ணு கிடச்ச வரை லாபம்னு அப்பாவை,கை அடிப்பட்டவர்னும் பாக்காம அப்படியே விட்டுட்டு ஓடி போய்ட்டதா சொன்னாரு.அப்பா அதன்பிறகு குன்னூர் வந்து,எங்க யாருக்கும் தெரியாமா கோவிலுக்கு போயிருந்த என் அம்மாவோட பேசி என் அம்மாக்கிட்ட மன்னிப்பு கேட்டாரு. ‘தெய்வமான உன் அன்ப மறந்து அவ பின்னாடி போனேனே.என்னை மன்னிச்சிடு மரகதம்’ என அம்மாவோட கையை பிடிச்சு அழுகையுடனே கேட்டிருக்காரு.என் அம்மா அப்பாவின் மீது ரொம்ப பாசமா இருப்பாங்களா.அவரோட பேச்சுல அப்படியே உருகி போய்ட்டாங்க.அவரை மன்னித்து ஏத்துக்கிட்டாங்க.அம்மாவே மன்னிச்சிட்ட பிறகு நம்ம வீட்ல யாரும் எதுவும் சொல்லல.ஆனா எனக்குதான் ஏத்துக்க மனசு இல்ல.அது எப்படி கல்யாணம் ஆன பிறகு,தன் மேல உயிரா இருக்கும் ஒருத்தி வீட்டில காத்திருப்பாள்னு இல்லாம,அவள் உலக அழகியாவே இருந்தாலும் அவள் பின்னாடி போவது.?”என தன் ஆற்றாமையைக் கேள்வியாய் உதிர்த்து பின் “ என்னால அவரை மன்னிக்க முடியாது சின்னம்மா.நீங்க சொல்லுங்க நான் சொல்றது சரிதானே.?என மித்ராவிடம் முறையிட்டாள் வள்ளி.


வள்ளி சொல்வதை இமி பிசிங்காமல் கவனித்த மித்ராவிற்கு வள்ளியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.ஆனால் சரிதான் என்றால் தான் மேற்கொண்ட உரையாடலின் பலன் இல்லாமல் போய்விடும் என சில நிமிடங்கள் வாளாவிருந்தாள் மித்ரா .வள்ளியின் கோபம் குறைய ஆருதலும் சொல்ல அவளால் முடியவில்லை.அதே சமயம் ஏதோ முழுமையாக அறியாத உணர்வு இருப்பதும் மித்ராவிற்கு புரிந்தது. ‘ ஏன் அந்தப் பெண் சென்றாள்.பணமில்லையென்றா?இல்லை.உடல் சுகமில்லாத மாணிக்கம் அங்கிளை கவனிக்கமுடியாமலா?எது எப்படி இருந்தாலும் இதில் எது பெண்கள் மீது ரிஷிக்கு வெறுப்பு வரக் காரணமானது.’என அவளுள் கேள்வி பிறந்தது.


மித்ரா சிந்தனையிலே இருப்பதைப் பார்த்துவிட்டு ,மீண்டும் வள்ளியே தொடர்ந்து ,”ஆனால் சின்னம்மா, என் அப்பாவின் மீதுதானே முதல் தவறு.அவர் முதல ஏன் அம்மாவையும் நினைக்காமல் அந்த பொண்ணோட பழகினார்.?இதுல அந்த கோவை பொண்ணு மேல சின்னய்யாவுக்கு ஏன் முழு கோபம்னு தெரில?அப்பாவிடம் சின்ன கோபம் கூட சின்னய்யா காட்டல.”என சொல்லிக் கொண்டிருக்கும் போதே,திடீரென நினைவு வந்தவளாக வள்ளி முகவாயில் கையை வைத்து ,”ஆ...ஆமா சின்னம்மா.அப்பா திரும்ப வந்த சமயத்துல அவர் சின்னய்யாவோட ஏதோ தனியா போய் பேசினார்.அப்போது நான் சின்ன பிள்ளையென்று எதையேணும் மறைத்திருப்பாரோ?”என யோசனையும் கேள்வியுமாக நிறுத்தினாள் வள்ளி.


வள்ளியின் இந்த யோசனையான கேள்வியில் ஏதோ பிடிமானம் கிடைத்த உணர்வு மித்ராவிற்கு சட்டென ஏற்பட்டது.அதை பிடித்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள் மித்ரா , “ஓ.....ம்ம்...இருக்கலாம் வள்ளி.ஆனால் அதை நீ கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது நீ சின்ன பிள்ளை இல்லையே.ஒரு வேளை அந்த விஷயம் உன் அப்பாவைப் பற்றின தவறான அபிப்ராயத்தைப் போக்க கூடியதாக இருக்கலாமே” என பரபரத்தாள் மித்ரா.ஏனென்றால் அவளுக்கும் இப்போது உண்மை தெரிந்து கொள்ள வேண்டும்!


மித்ராவின் பரபரப்பு வள்ளியையும் மெதுவாக தொற்றிக் கொண்டது. “ஆமாம் சின்னம்மா..ஒருவேளை நிஜமாகவே என் அப்பாவிடம் ,அவரின் செயலுக்கு தகுந்த காரணம் இருக்கக் கூடுமோ. ?!” என சில வினாடிகள் வியந்தாள்.


“நிச்சயமாக இருக்குமென்றுதான் தோன்றுகிறது” என மித்ரா அடித்துப் பேசினாள்.


வள்ளியின் இந்தப் பேச்சால் மித்ராவிற்குமே நம்பிக்கை வந்தது.வள்ளி கண்டிப்பாக அவள் அப்பாவிடம் பேசிவிடுவாள்’ என்று.அதை எண்ணும் போது மித்ராவிற்கு இதமாக இருந்தது.


வள்ளியின் உள்ளத்தின் உள்ளும் அவள் அப்பாவைப் பற்றின சின்னவயது ஞாபங்கள் வந்தது.அவர் அவள் மீது அன்பாகப் பழகிய நாட்கள் நினைவுக்குள் வந்தது.அதே நினைவில் “பழையதைத் திருப்பி யோசித்துப் பார்க்கும் போது தேவையில்லையென்று ஒதுக்கிய பக்கங்களும் நம் வாழ்வில் முக்கியமானதாகப் போகிறது இல்லை சின்னம்மா” என புடகமாக கேட்டாள்.


மித்ராவிற்கு புரியாமல் இல்லை.அவள் தேவையில்லையென்று எண்ணி இருந்தது.அவள் அப்பா ரிஷியிடம் அந்தச் சமயத்தில் ஏதோ பேசியதை.அதற்குப் பதில் கூறும் விதமாக மித்ரா வள்ளியிடம் பேசினாள்.


“ம்ம்...”என்றதோடு,வள்ளி யோசிக்கட்டும் எனக் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள் மித்ரா.


பிறகு “ நீதான் உன் அப்பவை பற்றி பேச ஆரம்பித்தாலே விருப்பமில்லாமல் விலக்க நினைத்தாயே.அந்தக் கோபத்தையே நெஞ்சில் பொதித்து வைத்ததால் என்ன நடந்திருக்குமென்று நீ யோசித்துப் பார்க்க கூட விரும்பாதவளாய் தெரிந்தாய்.அதை கண்டு கொண்டுதான் பாட்டி உன்னிடம் என்னை இதைப் பற்றி பேசச் சொன்னார்கள் .”என உண்மையை உரைத்தாள்.


“என்ன பாட்டியா?ஓ இதில் பாட்டியும் கூட்டுக் களவாணியா?”என ஆள்காட்டிவிடலால் பத்திரம் காட்டிய வள்ளி ,பிறகு “உண்மைதான் சின்னம்மா.வீட்டில் யார் இதைப் பற்றி பேசினாலும்,நான் ஒதுங்கியதுதான்.உங்களிடம் எனக்கு ஒதுக்கம் தெரியவில்லை.ஏனென்றும் புரியவில்லை.அதைப் பாட்டி எப்படி அறிந்தார்கள் என்று தெரியவில்லை” எனச் சிலாகித்தாள் வள்ளி.


பதிலுக்குப் புன்னகைத்த மித்ரா “உன்னிடமே மாற்றம் தெரியவில்லை. ? அன்று நீ உன் அப்பாவை பற்றி என்னிடம் பேசும் போது இருந்த அழுகை இன்று இல்லை.மாறாக யோசித்து இருக்கிறாய்.சில சமயங்களில் மனபாரம் குறையப் பேசுவதும் தெளிவை உண்டாக்கும்.அதோடு நல்ல முடிவுகளை எடுக்க வழி வகுக்கும்.”என வள்ளியின் நிலையைச் சொல்லி,அறிவுரையில் முடித்தாள் மித்ரா.


உடனே புன்னகைத்த வள்ளி, “நீங்க ரொம்ப திறமைசாலி சின்னம்மா.எத்தனையோ முறை என் அம்மா என்னை சமாதானம் படுத்த முயன்றிருக்கிறார்கள்.என் அப்பா பேச எத்தனித்திருக்கிறார்.யாருக்கும் முகம் கொடுத்தும் பேசவில்லை.அதன் பிறகு கொஞ்ச நாளில் யாரும் என்னிடம் அப்பா பற்றி பேச முயலவில்லை.சின்ன வயதில் படிந்த வடு இல்லையா.?எனக்கும் அவரை பற்றி பேசத் தோன்றியதில்லை.நீங்கள் வந்த பிறகுதான் யோசிக்கத் தோன்றியது.”என தன் வீம்புதனத்தின் காரணத்திற்கு விளக்கம் கொடுத்தாள் வள்ளி.


மென்னகை மிளிர அமைதியாக இருந்தாள் மித்ரா


“ஆனால் எப்படி அப்பாவிடம் நான் பேசுவது சின்னம்மா” எனத் தயக்கம் காட்டினாள் வள்ளி.


உந்துதலாக, “ம்ம்..வழி இருக்கு வள்ளி..அதற்குச் சனியன்று ,நீ என்னுடன் குன்னூர் வர வேண்டும்.உன் அப்பாவிடம் பேச வேண்டும்” என முடித்தாள் மித்ரா.


சில வினாடிகள் பேசாமல் யோசனையிலிருந்த வள்ளி மித்ராவிடம் திரும்பி, “இல்ல சின்னம்மா.என் வூட்டுகாரரை விட்டுவிட்டு எப்படி வர” என தன் தடையைச் சொன்னாள் வள்ளி.


உடனே புன்னகைத்த மித்ரா. “ அட இதை யோசிக்காமலா?அவரையும் உன் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்லலாம்.என்ன?”எனத் தகுந்த யோசனை கொடுத்தாள் மித்ரா. ‘ஹப்பா போகும் போது ரிஷியுடன் தனியே செல்ல வேண்டியதில்லை. ‘ எனப் பெருமூச்சுவிட்டாள்.



 

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவமே
அழுததால் மித்ராவுக்கு காய்ச்சல் வந்திடுச்சே
தேவிதான் எவ்வளவு சென்சிடிவ்வான பெண்?
இவளை நீ நல்லாப் பார்த்துக்கணும், ரிஷி
மித்ராதேவியைப் பற்றி ரிஷிக்கு தெரிந்து விட்டது
மகனின் மனமும் ஜீவாவுக்கு தெரிந்து விட்டது
அப்புறம் என்ன ஜீவானந்தம் சார்?
சட்டுபுட்டுன்னு இவங்க கல்யாணத்தை நடத்திடுங்க
ஆனால் ரிஷியை விட்டு விலகுவதிலேயே தேவி குறியாய் இருக்காளே
மாணிக்கம் திருந்தி திரும்பி வந்தது சந்தோஷமான விஷயம்தான்
ஆனால் பெண்களை ரிஷி வெறுக்கும் அளவுக்கு இதில் என்ன விஷயம் இருந்திருக்கும்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top