உனக்காகவே நான் -16

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம்-16
Heroin.jpg

அதன்பிறகு மித்ராவும் ரிஷியும் அனைவரிடமும் சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டனர்.காரில் சில வினாடிகள் நிசப்தம் நிலவியது.


மனதில் எழுந்த கேள்வியை ரிஷியிடம் கேட்க எண்ணி ,மித்ரா அவனிடம் எப்படிப் பேசுவது என்று வார்த்தைகளைத் தேடி பிடித்து ‘உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்?’என மனதினுள் சொல்லி பார்த்துவிட்டு அவனிடம் பேச எத்தனித்தாள்.


சாலையிலே கண்ணாக இருந்த ரிஷி அவளுக்கு முன் முதலில், “மித்ரா...நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்” என்று சொல்லி மித்ராவை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான். ‘இவனுக்கும் தன்னிடம் ஒன்று சொல்ல வேண்டுமா’ என.


அதன் பிறகு மித்ரா தன் யோசனையைத் தள்ளி ரிஷியிடம் , “ஓ...சொல்லுங்க...என்ன விஷயம்.நான் எதாவது செய்ய வேண்டுமா?”எனச் சன்னமான குரலில் திரும்பியும் பாராமல் சொன்னாள்.


அவள் சொல்வதை ஓர கண்ணால் பார்த்தவண்ணமிருந்த ரிஷி,ஒரு பெருமூச்செடுத்து பேச ஆரம்பித்தான். “பாரு மித்ரா...எனக்கு உன்னைப் பற்றி முழுதாக எதுவும் தெரியுமென்று இல்லை.இருந்தாலும் நாம் இருவரும் குடும்ப நண்பர்கள் ஆகிவிட்டோம்.சென்னைதான் உன் பூர்வீகம் என்பதால் நீ ஆண்களிடம் தயக்கம் காட்டிப் பேசும் பெண் என்று சொன்னால் அதை நான் நம்புவதற்கில்லை.சொல்லப் போனால் அங்குள்ள பெண்கள்தான் ஆண் பெண் என்று பால் வேறு பாடின்றி எந்தத் தயக்கமுமின்றி நட்பு முறையில் நன்றாகப் பழக கூடியவர்கள்.இது என் சொந்த கருத்தும்,அனுபவம் மிகுந்த கருத்தும் கூட.ஏதோ,என்றோ ஒரு நாள் அந்த lift – ல் நாம் இருவரும் முன்பின் தெரியாதவர்களாய் வாய் சண்டை போட்டுக் கொண்டோம்.ஒருவேளை அதை நினைத்து என்னிடம் நீ இயல்பாகப் பேச தயக்கம் காட்டினாய் என்றால் அதை மறந்துவிடு..,நானும் அதை மறந்துவிட்டேன்.என்னை ஒரு தோழனாக எண்ணி இயல்பு போல் பேசு.”எனச் சொல்லிவிட்டு மித்ராவை திரும்பி ஒரு கணம் பார்த்தான்.


‘தோழனாக என்றால் கரணைப் போல வா?அவனை டே வாடா போடா எல்லாம் சொல்வதுப் போலவா.?’என ஒரு வினாடி ரிஷியை அப்படி மனதினுள் அழைத்துப் பார்த்தாள் மித்ரா.அவளையும் அறியாமல் அவள் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.


மித்ராவின் நிலை கண்டு ,அவளும் எதையோ யோசித்துக் கொண்டிருப்பது புரிய மீண்டும் தொடர்ந்தான்.“நீ படித்த பெண்.புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன்.என்னைக் கண்டால் ஓடி ஒதுங்கத் தேவையில்லை.நான் உன்னிடம் செய்வது எதுவேணும் பிடிக்கவில்லை என்றால் தயங்காமல் சொல்லிவிடு.அதை விடுத்து நான் வரும் போது கண்ணில் படாமல் தோட்டத்து வீட்டுக்குள் சென்று மறைவது,பார்த்தும் பார்க்காதது போல் செல்வது,இதெல்லாம் நன்றாக இல்லை.ஒரே வீட்டில் இருந்து கொண்டு இரு வெவ்வேறு துருவங்களாக இருக்க முயற்சிப்பது எனக்குச் சரியென்று படவில்லை.நீ என்ன சொல்கிறாய்?நான் சொல்வது சரிதானே?!”என நீண்ட நெடிய வாக்கியங்களாகப் பேசி தன் மனதில் உறுத்திக் கொண்டிருந்ததை கேட்டுவிட்டான் ரிஷி.


‘அச்சோ...நான் ஒதுங்க நினைத்ததை கண்டு கொண்டானே’ என எண்ணி மித்ராவிற்கு வெட்கமாகப் போனது.


இதனால் மேலும் சில வினாடிகள் கழிய ரிஷி மித்ராவை ஊக்கினான். “என்ன மித்ரா?பதிலே இல்லை”


அவன் குரலில் மீண்டும் நினைவு வந்தவளாய் “ஒ...ஒன்றுமில்லைங்க..’மீண்டும் திக்கவும் ,ரிஷி மித்ராவின் புரம் திரும்பி முறைத்தான்.


“இப்பேதுதானே சொன்னேன்.மீண்டும் திக்கி பேசுகிறாய்.திரும்பவும் என்னிடம் புதியவர்களிடம் பேசும் போது இப்படித் திக்குமென்று கதை சொல்லாதே” எனக் குரலில் சிறிது கடுமை பரப்பிச் சொன்னான் ரிஷி.


இயல்பு போல் பேசியது இதமாக இருந்த போதும்,ரிஷியின் கோபம் மித்ராவை வருந்த வைத்தது. “இல்லைங்க” என அவசரமாக மறுத்த போது, “நான் ரிஷி...”என விறைப்புடன் சொன்னான்.


‘நீங்க ரிஷியென்று தெரியாதா?’என உள்ளுக்குள் அவனை பொருமியபடி, ‘நானும்தான் அவன் பெயர் சொல்லி அழைக்க இத்தினை தயக்கம் காட்டி இருக்கக் கூடாது’ என எண்ணி, “சரி ரிஷி...”என நிறுத்தி “இல்ல ரிஷி...தோழன் போல் என்றால் என் Friendகரண் போலவா?என யோசித்துக் கொண்டிருந்தேன் அதற்குள் உங்களுக்குக் கோபம் வந்துவிட்டது” என ஒருவாறு பேசிமுடித்தாள்.


“கரண் ஆ?யாரது? “ என அறியும் ஆவலில் கேட்டான் ரிஷி.


“அவன்...என் பள்ளி தோழன்...என்னுடைய எல்.கே.ஜீ லருந்து இப்போ வரை இருக்கும் ஒரே தோழன்.”எனப் பெருமையாக சொன்னாள் மித்ரா.


அவள் பதிலில் ரிஷியின் முகம் ஒரு கணம் வெறுமையை பிரதிபலிக்க,அவன் மௌனத்தில் எதையோ நினைக்கிறான் என்பதை உணர்ந்து,மீண்டும் கோபம் கொள்ளப் போரான் என எண்ணி, மித்ரா அவசரமாக , “நீங்க சொன்னது போல இயல்பாக இருவரும் நண்பர்களாக இருக்கலாம் ரிஷி” எனச் சொல்லிவிட்டு ரிஷியின் முகத்தைப் பார்த்தாள்.


சில வினாடிகள் வரை நீடித்த அவன் சிந்தனை முடிச்சு மித்ராவின் பதிலில் தெளிவடைய, “ம்ம்...மகிழ்ச்சி” என்றான் ரிஷி.


அப்போது ரிஷியின் ஃபோன் ரிங்காரமிட்டது.ஃபோனை எடுத்த ரிஷி, “இதோ அங்குதான் வந்து கொண்டிருக்கிறோம் சார். 5 mins” என்றுவிட்டு ஃபோனை அணைத்தான்.


அவனது பேச்சு காதில் விழுந்ததால், ‘வேறெங்கோ இப்போது போகிறோம்’ என யூகித்து மித்ரா ‘எங்கே’ எனக் கேட்க எண்ணி பிறகு விடுத்தாள்.


அவன் ஃபோனில் சொன்னது போல 5நிமிடத்தில் ஒரு இடத்தில் நிறுத்தினான்.அது ஒரு நகை கடை. ‘இறங்கு...’என்பது போல் அவளிடம் சைகை செய்துவிட்டு,அவள் இறங்கியதும் ,கார் பார்க்கிங் செய்துவிட்டு வந்தான் ரிஷி.


“வா...உள்ளே போகலாம்..”அவளை அழைத்தான் ரிஷி.


‘இங்கே இப்போது எதற்கு ?என யோசித்தாலும் இவனுக்கு ஆயிரம் வேலை இருக்கும்.அதையெல்லாம் தன்னிடம் இவன் சொல்லிக் கொண்டுதான் செய்ய வேண்டும் என்று என்ன இருக்கிறது’ என நினைத்து எதையும் கேட்காமல் உடன் நடந்தாள் மித்ரா.ஆனால் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவல் மிகுந்தது.


உள்ளே சென்றதும் ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று , {அது மோதிரங்கள் இருக்கும் section }, “மித்ரா...சனி அன்று குருவிற்கு பிறந்த நாள்.அவனுக்கு பிளாட்டினத்தில் மோதிரம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.நான் முன்பே வந்து சில designsதேர்வு செய்து வைத்திருக்கிறேன்.அதோனோடு அவனது கைவிரல்களுக்கும் பொருந்தும்விதமாக எடுத்து வைத்திருக்கிறேன்.நீ அவற்றைப் பார்த்து எது நன்றாக இருக்கிறதோ அதை எடுத்து வை..நான் இதோ வந்துவிடுகிறேன்” என ஒரே வாக்கியமாகச் சொல்லி சென்றான் ரிஷி.


‘எங்கே?’எனக் கேட்கும் முன்னரே,அவன் உற்சாக துள்ளலுடன் அவன் பறந்துவிட,அவன் நினைவை விடுத்து ,மித்ரா அவன் சொன்ன வேலையைச் செய்யலானாள்.
சிறிது நேரத்தில் அவள் ஒரு மோதிரத்தைத் தேர்ந்தெடுத்துவிட,அவன் வருவுக்காக காத்திருந்தாள்.அவன் வரத் தாமதம் ஆகும் போல் இருக்க,சும்மா இருக்காமல் அங்கிருந்தவர்களிடம் அவளது அளவுக்கு மோதிரம் எடுத்துக் காட்ட சொல்லிப் போட்டு பார்த்திருந்தாள் மித்ரா.பிளாட்டினத்தில் கூட மோதிரங்களில் நிறைய விதங்கள் இருக்கே என வியந்தாள்.ஒவ்வொன்றாகப் போட்டு பார்த்து அழகு பார்த்துக் கொண்டிருந்தவள் ரிஷி வந்ததைக் கவனிக்கவில்லை.


“போலாமா?”என்ற ரிஷியின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவளின் கையில் கொஞ்சம் சிறியதாக இருந்த மோதிரம் நன்கு உள்ளே மாட்டிக் கொண்டது.


“அ...ம்ம்...போகலாம்” என எழுந்தவிதமாக அந்த மோதிரத்தை கழட்ட முயற்சித்தாள் மித்ரா.ஆனால் அதுதான் நன்கு மாட்டிக் கொண்டதே!.


“தேர்வு செஞ்சிட்டியா?”என்றவன் அவள் கையில் மாட்டிக்கிட்ட மோதிரத்தை அவள் கழட்ட கஷ்ட படுவதைப் பார்த்து “என்ன?கையில் நன்கு சிக்கிக் கொண்டதா?”என அவள் மோதிரம் மாட்டியிருந்த கையை அவளது அடுத்த கையிலிருந்து பிரித்து தன்புறம் இழுத்தான்.


“ஆமாம்..நன்கு மாட்டிக் கொண்டது” என சிணுங்கும் குரலில் சொன்னவள் அவன் எதிர்பாராமல் தன் கையை பிடித்ததில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.அவன் விழிகள் அவளிடம் எதையோ சொல்ல,அவள் கைகள் நடுங்கின.


“ஈஸி...மித்ரா...உனதுவிழிகள் உன் உணர்வுகளை அப்படியே சொல்லிவிடுக்கிறது பார்..பயப்படாதே!நான் இதோ..இதோ” என மென்குரலில் பேசியவன் “கழட்டிவிட்டேனே!”எனச் சத்தமிட்டு அவளது கையிலிருந்து மோதிரத்தை கலட்டிவிட்டான் ரிஷி.


அவன் கையில் மோதிரத்தைக் காணவும்,வியப்புடன், “அது எப்படி?”என விழி தாழ்த்தாமல் அவனைக் கேட்டாள் மித்ரா.


“எது எப்படி?”என அவளைப் போல கேட்டான் ரிஷி. “இல்லை எப்படி கலட்டினீங்க” என்றாள்.


“அதெல்லாம் அப்படிதான்.. sir மந்திரமெல்லாம் கற்றவன்” என தன் காலரை தூக்கிவிட்டுக் கொண்டான் ரிஷி.


புன்னகைத்த மித்ரா , “அது சரி...மந்திரம் இதற்கு மட்டும்தான் என்றால் சரிதான் Sir ” என்றவள் அவனைப் பாராட்டும் விதமாகப் பார்த்துவிட்டு கைகளை விடுவித்துக் கொண்டாள்.


“தேர்வு செய்ததை காட்டு” என அவள் எடுத்துவைத்திருந்த மோதிரத்தைப் பார்த்தான் ரிஷி.


“ஐய...நினைத்தேன்..நீயும் அவனைப் போலவே இருக்க.இது என்ன ஓம் என்ற symbolஇருக்கிறது போல.இதைத்தான் நான் கடைசி தேர்வாக எடுத்து வைத்தது” எனக் கிண்டலாக முகம் சுளித்தான் ரிஷி.


“ஏன் இதற்கென்ன?உங்களுக்குத் தெரியுமா?ஒவ்வொருமுறை மோதிரத்தைப் பார்க்கும் போதும்.நம்மை அறியாமல் ஓம் என உச்சரிப்போம்.அது தியானம் செய்யும் போது உச்சரிப்பது போல் மனதுக்கு அமைதியைக் கொடுக்கும் அதனால்தான் தேர்ந்தெடுத்தேன்.உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் மாற்றிக் கொள்ளுங்கள்” எனத் தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் மித்ரா.


“சரி..சரித் தாயே...உன் தேர்வே போதும்..குருவிற்கும் இது மிகவும் பிடிக்கும்.இடையில் எனக்கென்ன?”என்றவன்,”இதற்காக எனக்கு Lectureஎடுக்காதே டீச்சரே!.நா காலேஜ்லயே அதையெல்லாம் கட் அடிச்சிட்டு படம் பார்க்க போனவன்” என வெண்பற்கள் பளிச்சிடச் சிரித்தான்.


முகம் மலரப் புன்னகைத்து திரும்பியவள் ரிஷியின் சிரிப்பை பார்த்து ‘வசிகரிக்கும் புன்னகை.ஆண்மையின் கம்பீரத்தோடு’ என நினைத்தாள்.


மோதிரத்தை வாங்கியதும் வெளியில் வந்த போது மித்ரா கேட்க தள்ளிப் போட்டதை ஆரம்பித்தாள். “ரிஷி உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்” இயல்பாக ஆனால் மென்குரலில் அவள் குரல் ஒலித்தது.


“ம்ம்...என்ன?”என்றவன் தன் பேக்கட்டில் இருந்து கார் சாவியை துழாவினான்.


“இல்லை...என்னை எதற்கு யாவரும் கேளிருக்கு அழைத்துச் சென்றீர்கள்” எனத் தயங்கி கேட்டாள்.


“சிம்பிள்....உன்னைச் சந்தோஷ படுத்த..”என்றவன் காரியத்தில் கண்ணாக கார் சாவியின் பட்டனை அழுத்தி அதைத் திறந்தான்.


“அதுதான்...ஏ” என மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஹே ரிஷி...நான் யாரென்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம்” என ஒரு இளம் பெண் ரிஷியின் கண்களை எட்டி தன் இருக் கைகளால் மூடினாள் அவள்.


திகைத்து விழித்த மித்ரா,சற்று தள்ளி நின்று செய்வது புரியாமல் நின்றாள்.


கண்களை மூடிய பெண்ணின் கையைத் தொட்டு பார்த்துக் கொண்டே, “ம்ம்...”என யோசிப்பதுப் போல் ,”ரினிட்டா...”எனவும் “ம்ம்கும்” என அவள் சொல்ல ,ரிஷி “ரேணு...,நிலோ..”என அடுக்க அவள் எல்லாவற்றிற்கும் “ம்ம்கும்” சொல்ல மித்ராவிற்கு தலை சுற்றியது.


‘இத்தினை பெண்கள் இவனிடம் இந்த அளவு நெருக்கமா?இவனுக்கா பெண்களிடம் வெறுப்பு..?சே...’என்றது மித்ராவின் மனது.எதிலோ தோற்றிவிட்ட உணர்வு.


“அட போங்க ரிஷி..நான் சுபலா..”என சிணுங்கிய வண்ணம் அவள் ரிஷியின் முன் வந்து நின்றாள்.


“ஹே சுபலா...என்ன இந்தப் பக்கம்.. “ என்றவன் விழிகள் மித்ராவின் முகத்தில் விழுந்தது.மித்ரா செய்வதறியாமல் தன் கைகளை பிசைந்த வண்ணம் தரையை நோக்கி இருப்பதைக் காண அவன் எதையோ கண்டுபிடித்தவன் போல நிம்மதியுற்று,சுபலாவின் புரம் திரும்பினான்.


“சும்மா..இந்த காம்பளக்ஃஸ் வந்தேன்.ஆட்டோவில் போக வேண்டுமே என்று நினைத்திருந்தேன்.நல்ல வேளை உங்களைப் பார்த்தேன்.என்னைக் கொஞ்சம் என் ஹாஸ்டலில் விட்டுவிடுறீங்கலா?”எனக் கேட்ட வண்ணம் அவன் அனுமதிக்கும் முன்னராக ஏறி முன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள் சுபலா.


சுபலாவின் கண்ணுக்கு ரிஷியின் அருகில் ஒரு பெண் இருந்தாள் என்பதே தெரியவில்லை.தெரியவில்லையா இல்லை வேண்டுமென்றே ஒதுக்கினாளா?என்றே இருந்தது மித்ராவிற்கு.


ரிஷியை மித்ரா ஏறிட்டான்.எங்கே ரிஷி தன் கண்களில் எதையேனும் கண்டு கொள்வானோ என அஞ்சி தலை தாழ்த்தினாள்.ரிஷி காரின் பின்புற கதவைத் திறந்து “ஏறிக்கொள்” என்றான்.


“ம்ம்...”என்றவள் நிமிர்ந்து ரிஷியைப் பார்த்தாள் இல்லை.அமைதியாக ஏறி உள்ளே அமர்ந்தாள்.ஒரே நிமிடத்தில் தான் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக எண்ணினாள் மித்ரா.மனம் மீண்டும் சோர்வுறுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.ஆனால் தன் முகம் கண்டே அனைத்தையும் அறியும் ரிஷியின் முன் தன்னை காட்டிக் கொள்ள விரும்பாதவளாய் ஜன்னலின் புரம் திரும்பிக்கொண்டாள் மித்ரா.


அப்போதுதான் பார்ப்பவள் போல “ஹே ரிஷி.யாரிந்த பெண்.உன்னுடைய புது Girl friend அ” என நக்கலாகக் கேட்டுவிட்டு மித்ராவை புழுவைப்பார்பவள் போலப் பார்த்தாள் சுபலா.


அப்படியே மனம் கூசி போன மித்ரா, ‘என்னது புது girl friend அ?அப்போது எத்தனைப் பேர் இவனுக்கு girl friend ஆக இருந்தார்கள்?’என அவள் கண்கள் உள்ளம் இரண்டும் கலங்கியது.மித்ராவின் உள்ளம் உலைக் கலமாய் கொதித்தது.


மித்ராவின் உள்ளம் உலைக் கலமாய் கொதித்தது.பிடிவாதமாக அவர்கள் பேசிவதை தவிர்த்து சாலையை வெறித்தாள்.வெளியில் தெரிந்த இருட்டு தன்னுள்ளும் குடி கொண்டதை அவள் உணர்ந்தாள்.எப்போது வீடு வரும் என வேண்டிவிரும்பி கண்களை மூடிக் கொண்டாள்.


சுபலாவின் கேள்வியில் ஓர கண்ணால் மித்ராவை பார்த்தான் ரிஷி.கண்கள் மூடி அவள் அமர்ந்திருந்த நிலை அவனை வெகுவாக யோசிக்க வைத்தது.சுபலா தன் பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்து, “இல்லை சுபலா..என்ன இது?எப்போதும் விளையாட்டுதானா?.இவள் என் வீட்டு விருந்தாளிப் பெண்” என விளக்கம் தந்தான்.


“சரி… சரி யாராக இருந்தால் என்ன?”என அலட்சியமாக அவள் தோளை குலுக்கினாள் சுபலா.


அதன்பிறகு சுபலாவும் ,ரிஷியும் எதையோ பேசிக்கொண்டிருக்க மித்ராவின் செவியில் எதுவும் விழுந்தது இல்லை.சுபலா வேண்டுமென்றே மித்ராவிற்கு தெரியாத விஷயமாகவும் ரிஷிக்கும் அவளுக்கும் மட்டும் தெரிய கூடிய விஷயங்களாகவும் பேசினாள்.


ஆனால் அதைப் பற்றி கேட்கும் மித்ராவிற்கு துளி கூட இல்லை.மித்ரா சிந்தனையில் ஆழ்ந்தாள். ‘அதுதான் எதுவேணும் பிடிக்கவில்லையென்றால் சொல் என்றானே!இதைப் பற்றி கேட்டுவிடலாமா?’என ஒரு கணம் யோசித்தவள் ‘உனக்குப் பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கிக் கொள்.இது என் சொந்த விஷயம் என்றால் என்னால் என்ன செய்ய முடியும்’ என அவள் உள்ளம் கலங்கியது.


அதற்குள் சுபலாவின் ஹாஸ்டல் வந்துவிட,அவள் ரிஷியிடம் Byeசொல்லிவிட்டு கிளாம்பிவிட்டாள்.மரியாதைக்காகக் கூட மித்ராவிடம் திரும்பவில்லை.அதை உணரும் நிலையில் மித்ராவுமில்லை.


“மித்ரா...முன் இருக்கையில் வந்து உட்கார்” என்றான் ரிஷி.


அவன் குரலில் நினைவு வந்தவளுக்கு,அவனுடன் பேசவும் பிடிக்காமல் போனது.ஆனால் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.


“நான் இங்கே இருந்து கொள்கிறேன்.எனக்குத் தூக்கம் வருகிறது.பின் இருக்கையில் இருந்தால்தான் எனக்கு வசதி” என வெடுக்கெனச் சொல்லிவிட்டு,அவன் பதிலுக்கும் காத்திராமல் உடனே படுத்துக் கொண்டாள்.


விசித்திரமாக மித்ராவை பார்த்தவன்,அவளை மேலும் வற்புறுத்தினான் இல்லை.காரை விரைந்து செலுத்தி வீட்டின் போர்டிக்கோவில் நிறுத்தினான்.


அவன் அருகில் அமர விரும்பமின்றி சொன்னதுதான்.ஆனால் உண்மையிலே அவள் மனச் சோர்வு அவள் கூற்றை மெய்ப்பிப்பது போல ,சில நிமிடங்களில் காரிலே உறங்கிவிட்டிருந்தாள்.


காரின் ஓசையைக் கேட்டு ஓடிவந்த வள்ளியிடம் ,ரிஷி வாய்மேல் விரல் வைத்து ‘பேசாதே,மித்ரா தூங்கிவிட்டாள்’ என மிகவும் மென்குரலில் சொன்னான் ரிஷி.


சரியென்பது போல தலையை ஆட்டிவிட்டு வந்த வள்ளி , மித்ராவை எட்டிப் பார்த்துவிட்டு அவள் அறையைத் திறந்துவிட்டு அவளுக்கான உணவு மற்றும் பாலை அவள் மேஜை மீது வைத்துவிட்டு ரிஷியிடம் “சின்னய்யா...சின்னம்மாவை தூக்கிட்டு வந்துடுங்க.ஏன் அவங்கள எழுப்பனும்.நடு இரவில் பசித்தாலும் இங்கேயே சாப்பிட்டுக் கொள்ளட்டும்.”என தனக்கு தெரிந்த யோசனையை வள்ளி சொன்னாள்.


அதுவும் சரிதான் என்பதை உணர்ந்த ரிஷி “பசிக்காது என்று நினைக்கிறேன் வள்ளி.ஆசிரமத்திலே சாப்பிட்டுவிட்டுதான் வந்தோம்” என்றவன் மித்ராவை தூக்க கார் கதவைத் திறந்தான். அவள் குழந்தை போல சுருண்டு படுத்திருக்கும்விதம் அவனுள் என்னமோ செய்ய,அவன் உணர்வுகளைக் கட்டு படுத்திக் கொண்டு அவளை அழகாக தன் இருக்கைகளில் ஏந்தினான்.சின்ன பிள்ளை போல அவன் கைகளுக்குள் அடங்கிய மித்ரா,இயல்பாக ரிஷியின் மார்பு சட்டையை பிடித்துக் கொண்டாள்.


ஒரு வழியாக அவளை அவளது அறையில்விட்டுவிட்டு அவளது கையை அவன் சட்டையிலிருந்து பிரித்தான்.சில வினாடிகள் அப்படியே நின்றவன்,அவள் அன்னிச்சைப் போல அவள் கையை அவள் கன்னத்தில் வைத்துக் கொண்டு இன்னும் இலகுவாகத் தூங்க அவளைப் பால் மனம் மாறா குழந்தையாகவே எண்ணினான்.பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்ற உந்துதலை கடினப்பட்டு மாற்றி வள்ளியிடம் முத்துவைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் விசாரித்துவிட்டு தன் அறை சென்றுவிட்டான்.


சில மணி நேரங்கள் உறக்கத்தில் சென்றாலும்,நடுநிசியில் மித்ரா விழித்துக் கொண்டாள்.விழித்தவள் சில வினாடிகள் இருக்குமிடம் புரியாமல் விழிக்க,அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை அவள் யூகிக்க முடியாமல் இல்லை. ‘சே இப்படித் தூங்கியதை’ எண்ணி வெட்கினாள்.


அவளையும் அறியாமல் அடக்கி வைத்திருந்த மன பாரம் கண்களில் கண்ணீராய் கரைந்தது.


மித்ரா இன்னும் அவள் மனம் உணராமல் இருக்க முட்டாள் இல்லை.மித்ரா அவனை விரும்புகிறாள்.அதுவும் இனி எல்லாம் இவன்தான் எனும் அளவிற்கு.இதை அறிய அவளுக்குப் பிரமாதமான மூளை தேவையில்லையே.அவன் அருகில் பெரியவர் முன்னிலையில் நின்ற அந்தத் தருணமே அவள் அவளது உள்ளத்தினை அறிந்துவிட்டாள்.இனி எல்லாமே அவன்தான் என.அப்படி இன்னொருவன் அருகில் நிற்கச் சொல்லியிருந்தால் பெரிவர்களுக்காகவே என்றாலும் சத்தியமாக நின்று இருக்க மாட்டாள்.இவள் உள்ளம் கவர்ந்தவன் அருகில் நிற்க அவளுக்கு நிம்மதியே உண்டானது.இல்லையென்றால் ‘என் கண்ணன்’ என்ற எண்ணம் வரக் கூடுமா?அவன் கைக்குள் தன் கை இருக்கும் போது படபடப்பு உண்டான போதும் இனி எதற்குமே பயமில்லை என்ற பாதுகாப்பு உணர்வு ஏன் வர வேண்டும்?ஆனால் தன் காதலுக்கு இப்படி ஒரு அற்பாயுசா?எல்லாப் பெண்களிடமும் இயல்பாகப் பழகும் இவன் தன்னிடமும் அப்படி எண்ணித்தான் பழகியிருப்பான்.அவன் பார்த்த ஆயிரத்தில் ஒருத்தியாக.இதை நினைக்கையில் அவள் மனம் வெதும்பியது.சொல்லப் போனால் தன்னைவிடத் தான் பார்த்த மற்ற இரு பெண்களிடமேதானே மிகவும் நெருக்கம் போல இருந்தது.சுரேகாவுடன் அவனைப் பார்க்கும் போதே எனக்குத் தெரிந்திருக்க வேண்டாம்.இன்னொரு சுபலாவும் வேண்டுமா?’எனத் தேற்றுவார் யாருமின்றி கண்ணீர் விட்டாள்


அடுத்து அவள் அம்மா அப்பாவின் நினைவில் அவர்களது புகை படத்தைத் தேடியவள் அதை எடுத்து வர மறந்ததை எண்ணி மேலும் வேதனையில் துடித்தாள். ‘அம்மா...அப்பா..’என அரற்றியவண்ணம் அழுதாள்.என்னதான் மன உறுதிக் கொண்டு அழுகையை நிறுத்த முயன்ற போதும் அத்தினை முயற்சியும் தோல்வியில் முடிந்தது.கண்ணீர் வற்றியதோ,இல்லை சக்தி குறைந்ததோ அழுகை நின்றது.ஆனால் உறக்கம் பிடிக்கவில்லை.விழி விரித்த நிலையில் விடியும் வரையிருந்தாள்.


‘ஒருவேளை அம்மாவின் புகை படத்தை அணைத்தவிதமாக உறங்கியிருந்தாள் தூங்கி இருக்கக் கூடுமோ?!’

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top