உனக்காகவே நான் - 13

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம்- 13


மித்ராவும் தன் பெட்டியுடன் வந்து சேர,பின் கதவை திறந்து உள்ளே உட்கார முயன்றாள்.அப்போது, “இங்கே...முன் இருக்கையில் வந்து உட்கார்” என அதிகாரமாக சொன்னான் ரிஷி.


“இ..இல்லை..நான் இங்கேயே” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே. “நான் ஒன்றும் உன வீட்டு கார் driverஇல்லை.அம்மையார் பின் இருக்கையில் முதலாளிப் போல் அமர காரை செலுத்த.அதனால் இங்கு வந்டு உட்கார்” என கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு பேசினான்.


அவன் சொல்வதும் சரி என பட்டப்போதும், ‘இதற்கு ஏன் இந்த கடுமை.ஒரு வேளை நான் அங்கு வருவதில் விருப்பமில்லையோ!.நான் வர மாட்டேன் என்று இருந்திருபான்.திடீரென்று வந்ததும் பொறுத்துக் கொள்ள முடியவில்லையோ!’என தனக்குள் கற்பனைகளை ஓட விட்டாள்.


“என்ன...பயணதிற்கு முன்பே தலைவலியா?”என வெகு அக்கறையாகவும் ஏளனமாகவும் கேட்டான்.முதலில் வர மறுத்ததால் வந்த கோபத்தினால் விழுந்த வார்த்தைகள் அவை.


என்ன தலைவலி’ என நினைத்தவள் தான் அதிக நேரம் யோசித்துக் கொண்டு நின்றதை சொல்கிறான் எனப்து புரிந்தது.உடனே முன் இருக்கையில் ஏறிக் கொண்டாள் மித்ரா. “இல்லை..நான் நன்றாகதான் இருக்கிறேன்” அவன் அருகில் அம்ரவது அவளுக்கு என்னமோ போல் இருந்தது.


“அப்படி என்றால் நல்லதுதான்” அவளையே சில வினாடிகள் ஆராயும் பார்வைப் பார்த்தான் ரிஷி.


பாட்டி,துரை தாத்தா,மரகதம் ஆன்டி என அனைவரிடமும் Byeசொன்ன மித்ரா,மாணிக்கம் அங்கிள் அவளிடம் எதையோ சொல்ல நினைப்பது அவர் முகத்தை பார்க்கும் போதே தெரிந்தது.


அவர் தவிப்பை உணர்ந்தவராய் மரகதம் ஆன்டி, “வள்ளியையும்,முத்துவையும் கேட்டதாக சொல்லு மித்ரா” என சொல்ல, “சரி ஆன்டி” என்று விடைப்பெற்றனர் ரிஷியும் மித்ராவும்.


மெதுவாக ஆரம்பித்தப் போதும் ,ரிஷி காரை ஜீவா அங்கிள் போல மெதுவாக செலுத்தவில்லை.அவனது இந்த வேகம் மித்ராவின் வயற்றில் பட்டம்பூச்சிப் போல எதுவோ செய்ய மனதில் சிறிது பயமும் உண்டானது.


‘இவன் ஏன் இவ்வள்வு வேகமாக காரை ஓட்டுக்கிறான்’ என நினைத்தாள்.அச்சத்தால் முகம் வெலுத்தாள் மித்ரா.இதை எதையும் அறியாமல் இறுகிய முகத்துடன் காரை செலுத்திக் கொண்டிருந்தான்.அதனோடு இது அவனது இயல்பான காரின் வேகம்தான் என்பதால் அவனக்கு எதுவும் வித்தாயாசம் தெரியவில்லை போலும்.


சில நிமிடங்கள் கண்களை மூடி இருந்தவள் ,இதற்கு மேலும் முடியாது என வெலுத்த முகத்துடன் , “கொ..கொஞ்சம் மெதுவாக காரை ஓட்ரீங்களா?”என அவனது இறுக்கிய முகத்தை பார்த்து தயங்கிய வண்ணம் கேட்டாள் மித்ரா.


அவனது முக இறுக்கம் மறையாமலே,”என்ன?”என கேட்ட போதும் காரின் வேகத்தைக் குறைத்து அவளைத் திரும்பி பார்த்துவிட்டு பாதையை கவனித்தான் ரிஷி.


“இல்லை..காரை மெதுவாகச் செலுத்த சொல்ல” என அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே, “ஓ...சரி..ஏன் பயமா இருக்க” என முக இறுக்கம் தளர்ந்து கேட்டான் ரிஷி.


“ஆமாம்” எனச் சொல்லிய வண்ணம் குழந்தை போல் முகத்தைத் தாழ்த்தி தலையை ஆட்டினாள் மித்ரா.


சில வினாடிகள் பதிலேதும் சொல்லாமல் காரை செலுத்தியவன் ஓரமாக அதை நிறுத்திவிட்டு,அவளை நோக்கித் திரும்பி நேராகப் பார்த்தான்.அவள் இன்னும் முகத்தை நிமிர்த்தினாள் இல்லை.


அவளைப் பார்த்த சில வினாடிகளில் அவன் கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து புன்னகை அரும்பியது. ‘இவள் முகம் எல்லா உணர்வுகளையும் மறைத்துப் புன்னகைக்க வைக்கிறதே!!’என வியந்தான் ரிஷி.


கார் நின்றதும் ‘என்ன’ என்பதுப் புரியாமல் ரிஷியை நிமிர்ந்து பார்த்தவள் அவன் தன்னையே யோசனையாகப் பார்ப்பது புரிய ‘ஏன் காரை நிறுத்தினான்’ என்று விளங்காமல் நிமிராமல் விழித்தாள்.இதய படபடப்பு ஏற்பட ஆரம்பித்தது.


இதுவே வேறொருவராக இருந்தால் மித்ரா, ‘என்ன?ஏன் அப்படி பார்கிறீங்க’ எனக் கேட்டிருப்பாள். ‘இவனிடம் என்னவென்று கேட்பது.இவனிடம் பேச நினைத்தாலே வார்த்தை வர மறுக்கிறது.அதுவும் இவ்வளவு அருகிலென்றான் இன்னும் மோஷம்’ எனத் தனது இயலாமை எண்ணி வருந்தினாள் .பேச முடியாமல் மித்ரா தவித்தாள்.


அவளது இந்த தவிப்பை காணாதவன் போல அவள் அமர்ந்திருந்த விதம் கண்டு ரிஷியின் முகம் மறுபடி இறுக்கமடைந்தது. “சீட் பெல்ட் போடும் அறிவு கூட இல்லையா?”எனக் கேட்டவன் அவள்புரம் திரும்பி அவனே சீட் பெல்டடின் ஒருமுனையை எடுத்தான்.
“சீட் பெல்ட் போடும் அறிவு கூட இல்லையா?”எனக் கேட்டவன் அவள்புரம் திரும்பி அவனே சீட் பெல்டடின் ஒருமுனையை எடுத்தான்.


‘என்ன செய்கிறான்’ எனப் புரியாமல் விழித்தவள் அவன் சீட் பெல்ட் போட தன் புரம் குனிந்த போது முகம் வியர்க்க அப்படியே அவன் தொட்டுவிடாதப்படி அவசரமாக தன் இருக்கையில் கண்களை மூடி மேலும் ஓட்டினாள் மித்ரா.இதைப் பார்த்த ரிஷி,சில வினாடிகள் தயங்கி,அவள் கண்களை திறக்கு முன்பாக சீட் பெல்டை இழுத்து மாட்டினான்.


என்னதான் மித்ரா இருக்கையில் ஒட்டி இருந்தாலும் அவனது சுவாசக் காற்று அவள் மீது விழுந்ததைத் தவிர்க்கமுடியவில்லை.பயத்தினால் அவளது கைகள் சில்லிட்டன.அவள் மீதே அவளுக்கு கோவம் வந்தது. ‘இது என்ன ஆண்ளுடன் பழகாதது போல் இந்தத் தயக்கம்,நடுக்கம்.இது வரை எந்த ஆணிடமும் வராத புதுவித உணர்வு.இந்தக் கன்னங்கள் வேறு அடிக்கடி சூடேறி என்ன இம்சிக்கிறது.’எனக் கன்னத்தை தடவினாள் மித்ரா.


‘முதலில் வீடு செல்ல வேண்டும்.இந்த காரிலிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நெஞ்சம் படபடத்துக் கொண்டே இருக்கு’ என எண்ணியவள்,”இ..இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் வீட்டுக்குப் போக” என தயங்கி நிமிந்தும் பாராமல் கேட்டாள் மித்ரா.


அவளது ஒவ்வொரு முக அசைவுகளையும் ரசித்துப் பார்த்திருந்த ரிஷி ,இத்தையேதான் எதிர்பார்த்தான் போலும் , “வேகமாகச் சென்றால் அரை மணி நேரத்தில் சென்றுவிடலாம்.இல்லை என்றால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆகும்” சிறு நமட்டு சிரிப்புடன் என்றான்.


“என்ன இன்னும் ஒரு மணி நேரமா?!!”என வாய் திறந்தே சொன்னவள்,சட்டென “கொஞ்சம் வேகம் குறைவாக ,அதே சமயம் சீக்கிரமாகப் போக முடியாதா?”எனக் கேட்டாள்.கேட்ட பிறகே அவளுக்கு அது அபத்தமாகப் பட்டது. ‘இது எப்படி நடக்கும்.’


“அது...சரி... “ என்றவன் வேறெதுவும் புன்னகைத்தவிதமாக பேசாமல் காரை செலுத்த ஆரம்பித்தான் ரிஷி.வேகமும் முன்பைவிட குறைந்திருந்தது.ஆனால் ஒரு மணி நேரத்திற்கும் முன்பாகவே வந்து சேர்ந்திருந்தனர்.


அவளை எதிர் பார்த்திருந்ததால்,வள்ளி ஆசையாக ஓடி வந்து மித்ராவை “சின்னம்மா” என அணைத்துக் கொண்டாள்.


மித்ராவும் குதுகலத்துடன் , “வள்ளி..எப்படி இருக்கிற?முத்தய்யா எங்க?”எனக் கேட்டுவிட்டு முத்தய்யாவை பார்வையாலே தேடினாள் மித்ரா.


“ம்ம்..நல்ல இருக்கேன் சின்னம்மா.அவுக இவ்வளவு நேரம் காத்திருந்துவிட்டு,இப்போதான் தூங்க போனாங்க” எனக் கோர்வையாக சொல்லிவிட்டு ,மித்ராவின் பெட்டியை எடுக்க எத்தனித்தாள் வள்ளி.இந்த சில வினாடிகள் ரிஷி இருப்பதை மறந்தேவிட்டாள் மித்ரா


“இரு வள்ளி .நானே எடுக்கிறேன்” எனத் திரும்பியவள்,ரிஷியின் தோற்றத்தை கண்டு இமைக்க மறந்து அவனை பார்த்துக் கொண்டே நின்றாள்.காரின் கதவின் மீது லாகவமாக சாய்ந்து,கைகளை தன் வயிற்றின் முன் கட்டிக் கொண்டு ,தன் ஒரு கணுக்காலை இன்னொன்றின் மீது வைத்து ,அந்த ராதையின் கிருஷ்ணனைப் போல நின்று புன்னகைத்த வண்ணம் அவர்கள் இருவரின் செய்கையை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.


அதன் பின் “என்ன?”என ரிஷிதான் அவள்முன் சொடுக்குப் போட்டு நினைவுக்குக் கொண்டுவர வேண்டிருந்தது.அவளது காது மடல் சிவக்க ஆரம்பித்தது.சட்டென முகம் தாழ்த்தி தன் கால் கட்டை விரலை அழுத்தி தன் முக சிவப்பை மறைக்க வெகுவாக கஷ்டப்பட்டாள்.


“இல்லை என் பெட்டி “ என சொல்லிக் கொண்டே ,வழிவிடச்சொல்லி அவளது கண்கள் கார் கதவைப் பார்த்தது. “ஓ...”அவளுக்கு வழிவிட்டு நின்றவன்.


பெட்டியை எடுத்தவள் அதன் பிறகு வள்ளியுடன் பேசிக்கொண்டே உள்ளே சென்று முன்பு வந்த அதே அறையில் போய் அமர்ந்தாள்.


“இருங்க சின்னம்மா.நான் போய் காபி போட்டுட்டு வரேன்” என சொல்லிக் கொண்டே வள்ளி சமையலறை நோக்கி விரைந்தாள்.


ஏனோ வள்ளியைப் பார்த்தது,மித்ராவிற்கு மிகவும் இதமாக இருந்தது.அவள் செல்வதையே பார்த்திருந்த மித்ரா , சரி என்று Refreshஆக டவலை எடுத்துக் கொண்டு எழுந்தாள்.


“என்ன மித்ரா.?”எனக் கேட்ட வண்ணம் ரிஷி அவளது அறைக்கு வந்தான்.


எதிர் பாராத அவனது குரலில் எடுத்தப் பொருட்களை தவறவிட்டு நிமிர்ந்தவள். “எ..என்ன என்ன?”எனப் புரியாமல் திரும்பவும் அவனியே கேட்டாள்.


“இல்லை வர மாட்டேன் என்றாயே!!இப்போது பார்த்தாயா?வள்ளி எவ்வளவு சந்தோஷ்ப்பட்டாள்.நீ ஏதோ ஓரே நாளில் அவளை மயக்கிவிட்டாய்.என நினைக்கிறேன்’ என மோகனமாய் புன்னகைத்தான்.


“அதெல்லாம் நான் எதுவும் மயக்கவில்லை.ஆனால் ஆமாம்.எனக்கும் சந்தோஷமே.!நான் ஒரு முட்டாள்.உங்க..”என ஆரம்பித்து,பின் நிறுத்தி ,”எதையோ எண்ணிப் பயந்து வர மறுத்துத் தவறு செய்ய இருந்தேன்.”என தன் தவற்றுக்கு மன்னிப்பு போல சொன்னாள்.


“ம்ம்..”எனப் புன்னகை செய்ய,அதற்குள் வள்ளி coffee-வுடன் வர அதனைக் குடித்துவிட்டு ரிஷி தன் officeக்கு சென்றுவிட்டான்.


அதன் பிறகு வள்ளியுடன் பேச மித்ராவிற்கு அந்த நாளின் நீளம் போதவில்லை.அதை இதை என மித்ரா அவளுடன் பேசிக் கொண்டே இருந்தாள்.இரு இளம் பெண்கள் சேர்ந்தால் பேசுவதற்கா வார்த்தைகளும்,கதைகளும் இல்லை.


அந்த நாள் அப்படியே மறைந்தது.அடுத்த நாள் இன்று பாட்டி சொன்னதை எடுத்துப் பேச முடிவு செய்தாள் மித்ரா.அதற்கான தருணத்தை எதிர் பார்த்திருந்தாள்.அன்று காலையிலே ரிஷி அவளது அறைக்கு வந்தான்.


வந்தவன், “நாளை நாம ஒரு இடத்துக்கு போகணும்.காலையிலே தயாராக இரு.இரவு நா வர தாமதமாகும்.அதனால்தான் இப்போதே சொல்கிறேன்” எனச் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தான்.


‘ஆமாம் நேற்றும் தாமதமாகத்தான் வந்தான்.’என நினைத்தவள் தொடர்ந்து,“எ..எங்கே?”என அவள் கேட்ட போது, “நாளை பார்க்கத்தானே போகிறாய்.அதற்குள் என்ன அவசரம்” எனப் புன்னகைத்ததை தவிர அவனிடம் பதில் வாங்க முடியாது என்பது அவனது வார்த்தைகள் வந்து விழுந்த நயத்தில் தெரிந்தது.அவளது பதிலுக்கும் காத்திராமல் அவன் office –க்கு சென்றுவிட்டான்.


சட்டென மித்ராவிற்கு ஒன்று தோன்றியது. ‘ஒரு வேளை officeக்கு கூட்டிட்டு போவானோ?!’என அச்சம் பரவியது.உடனே அங்கிளிடம் ஃபோன் செய்து அங்கு இல்லை என்பதைத் தெளிவு படுத்திக்கொண்டாள்.வேறெங்கு என்பதை அங்கிளும் சொல்ல மறுத்தார். ‘போய்தான் பாரேன்’ என்றார்.தெரியாத போதும் இருந்தும் அவளுக்கு ஒருவிதமாக நிம்மதியானது.ஆனால் இவனுடன் தனியே செல்வது போல் இருக்குமோ,!எனத் தயக்கம் வந்த போதும் ,வள்ளியை உடன் அழைத்துச் செல்லலாம் என தனக்குள் முடிவெடுத்தாள்


காலை உணவிற்குப்பின் மீண்டும் வள்ளியும் மித்ராவும் அவர்களது உரையாடலை ஆரம்பித்தனர்.


மித்ரா பாட்டி சொன்னதைச் செயல்படுத்த மெதுவாக அதற்கான வார்த்தைகளைத் தேடி பேச ஆரம்பித்தாள். “வள்ளி...உன்னை உன்னுடைய அப்பா கேட்டதாக சொன்னார்.”எனக் கேட்டாள்.கேட்டபின்பு ‘என்ன சொல்ல போகிறாளோ’ என நினைத்து மித்ராவினுள் நடுக்கம் உண்டானது.


அதற்கேற்ப,வள்ளியின் முகம் அப்பா என்ற வார்த்தையில் நெருப்பில் பட்ட அன்றில் மலர் போல வாடிச் சுருங்கியது.


“ஓ..”என்றதோடு வேறெதுவும் சொல்லாமல் வள்ளி இருந்தாள்.


அவள் மௌனத்தைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள் மித்ரா. “வள்ளி..நான் உன்னிடம் ஒன்றுக் கேட்கணும்.பேசலாமா?எனக்கு அதற்கு உரிமை இருக்கா என்று தெரியவில்லை.ஆனால் கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது” எனத் தான் நினைத்ததைச் சொன்னாள் மித்ரா.


“ஐய்யயோ..என்னங்க சின்னம்மா?இப்படி கேட்கிறீங்க.எதுவும் என்னிடம் கேட்க உங்களுக்கு முழு உரிமை இருக்கு” என அவசரமாக மித்ராவிற்கு பதிலளித்தாள் வள்ளி.


புன்னகைத்த மித்ரா, “தாங்க்ஸ் வள்ளி.எனக்குத் தெரியும் நா இப்போ பேசப் போறது உனக்குப் பிடிக்காது.ஆனால் நீ எதையும் missபண்ணக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்.அதனால்தான் இப்போ பேச போறேன்” எனத் தயங்கி சொன்னாள்.


வள்ளியின் முகம் புரியாத பாவனையில் மித்ராவின் முகத்தையே பார்த்திருந்தது.


“வள்ளி.நான் கேட்பதற்கு தயங்காமலும் ,மறைக்காமலும் பதில் சொல்ல வேண்டும்” என பீடிகையாக ஆரம்பித்தாள் மித்ரா.


“ம்ம்...சொல்லுங்க சின்னம்மா.கண்டிப்பா..உங்ககிட்ட சொல்லாம,வேற யாரிடம் சொல்ல போகிறேன்” எனப் பாசமுடன் சொன்னாள் வள்ளி.


“வள்ளி...உனக்கு..உனக்கு..உன் அப்பா மீது ஏன் கோபம்..”எனத் தயங்கி கேட்டாள் மித்ரா.


விருட்டென மித்ராவின் முகத்தைப் பார்த்த வள்ளி,மித்ராவின் தயங்கிய முகம் எதையோ சொல்ல,புன்னகை முகத்தில் மட்டும் படர, “அது...கோபமில்லை சின்னம்மா...அவர் மீது இருக்கும் வெறுப்பு.அவர் செய்ததற்கு அவரை வீட்டில் மீண்டும் அனுமதித்திருக்கக் கூடாது.ஆனால் எல்லாம் என் அம்மாவுக்காகத்தான்” என முகத்தில் வெறுப்பு தெரிய சொன்னாள் வள்ளி.


வள்ளியின் முகம் சகஜ நிலைக்கு வர சில நிமிடங்கள் ஆனது.அதற்கு நேரம் ஒதுக்கி,மித்ரா பொறுத்திருந்தாள்.


மீண்டும் வள்ளியே பேச ஆரம்பித்தாள், “சின்னம்மா..உங்களுக்கு தெரியுமா?எனக்கு அப்பா என்றால் எவ்வளவு பிடிக்குமென்று.என்னால் இப்போதும் நம்பமுடியவில்லை அவர் இப்படி செய்தார் என்று.”என கண்கள் கலங்க,குரல் தழுதழுக்க சொன்னாள் வள்ளி.


வள்ளியின் கலங்கிய முகம் தாங்காமல் மித்ரா அவள்து அருகில் அமர்ந்து அவளை தன் தோளோடு சாய்த்துக் கொண்டாள். ‘தன்னுள்ளே வள்ளி தன் வெறுப்பையும் கோபத்தையும் இத்தனை நாள் மறைத்து வைத்திருக்கிராள்’ என அவளுக்காக இரக்கப்பட்டாள் மித்ரா. ‘இப்போது பேச தோழியென தான் கிடைத்ததும்,அவள் மடைதிறந்த அணைப் போல பொங்கி அழுகிறாள்’ என நினைத்து மித்ராவும் எதுவும் பேசாமல் அமைதியாக வள்ளியின் முதுகை வருடி அவளை அமைதி படுத்த முயன்றாள்.


ஆசுவாச படுத்திக் கொள்ள நேரம் எடுத்துக் கொண்டாள் வள்ளி.ஆனால் மித்ரா பேச்சை இப்படியே விட நினைத்தாள் இல்லை. ‘பேசாமல் விட்டால் இந்த பிரட்ச்சனை முடிவது கடினம் .ஏன் முடியாமல் அப்படியே இருக்கவும் வாய்பிருக்கு.இதனால் வள்ளி அப்பாவின் அன்பை இழக்க நேரிடும்.அதனால் இப்போதே எதையும் பேசிவிட’ எண்ணினாள்.


‘இந்த அழுகை வள்ளி அவள் அப்பாவின் மீதுள்ள அன்பினால் வந்தவை.மாணிக்கம் அங்கிள் செய்த ஏதோ ஒரு தவறை மன்னிக்க முடியாமல் இவள் தவிப்பது தெரிக்கிறது.யாரிடமும் அவரை பற்றி பேச பிடிக்காமல் வள்ளி இருப்பது தெளிவாக புரிகிறது.ஆனால் மாணிக்கம் அங்கிளும்தான் இவள் மீது எவ்வளவு அன்பாக இருக்கிறார்.என்னை பார்க்கும் போது அவரின் விழியின் ஓரம் தெரியும் ஏக்கம் தன்னையே வள்ளி என சில சமயங்களில் அழைப்பது இதெல்லாம் அவரின் அன்பின் சான்றுகளே !!!.அன்பிற்கு ஏங்கும் இவரகளை பேச வைத்தே ஆக வேண்டும்’ என தனக்குள் உறுதிக் கொண்டவளாக மேலும் வள்ளியிடம் பேச்சை தொடுக்க எத்தனித்தாள் மித்ரா.


“வள்ளி...”என வள்ளியின் அழுகை சிறிது நின்றதும் மெதுவாக எழுப்பி,மேஜை மீது இருந்த தண்ணீரை கொடுத்து குடிக்கச் செய்தாள் மித்ரா.


“வள்ளி...நீ சொல்வதைப் பார்த்தால் மாணிக்கம் அங்கிள் ஏதோ தவறு செய்திருப்பது தெரிகிறது.ஆனால் என்னை கேட்டால் மனம் திருந்தி வந்திருப்பவர்களை நாம் மன்னிக்க வேண்டும் வள்ளி” என இழுத்துப்பிடுத்து சொன்னாள் மித்ரா.


“இல்ல சின்னம்மா..உங்களுக்கு தெரியாது.அவர் என் அம்மாக்கு துரோகம் செஞ்சவரு.”என பெரிய மூச்செடுத்தாள் வள்ளி.


வள்ளி பேச அவகாசம் கொடுத்தாள் மித்ரா.பிறகு வள்ளியே பேச ஆரம்பித்தாள்.


*****


“எனக்கு12வயசிருக்கும்.அப்போதெல்லாம் நாங்க எல்லாரும் குன்னூரில்தான் இருந்தோம்.நான்,சின்னய்யா,குரு அய்யா,பெரிய்யய்யா,லட்சுமி அம்மா என எல்லாரும்.என் அம்மா அவங்க சின்ன வயசிலிருந்தே அந்த வீட்டில்தான் வேலையிலிருந்தாங்க.அங்க கார் driver –ஆக என் அப்பா இருந்தார்.ரெண்டு பேருக்கும் ஒருத்தருக்கு புடிச்சிருக்குன்னு சொன்னதால,பாட்டிதான் அவங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சாங்க.அதுக்கப்புரம் நான் பொறந்தேன்.ஒரே பொண்ணாக நான் ரொம்ப அப்பா செல்லம்” என நிறுத்தினாள் வள்ளி.


ஒரே பெண்ணாக என்ற வார்த்தையில் மித்ராவின் கண்கள் வள்ளியின் நிலையை விடுத்து , ‘தானும் அப்படிதானே.அம்மாவின் கண்டிப்பும் ,அப்பாவின் அளவு மிகுந்த அன்பும்!!’எனப் பெருமூச்சுவிட்டாள்.வள்ளி அறியாதபடி முக மாற்றத்தை மறைத்து இயல்புக்கு வந்தாள். ‘எனக்குத்தான் இனி அந்த அன்பிற்கு வழியில்லை.ஆனால் வள்ளி,பழையதை எண்ணி முட்டாளின் சொர்கத்தில் அல்லவா இருக்கிறாள்.அவளுக்குப் புரிய வைத்தே ஆக வேண்டும்’ என மன உறுதிக் கொண்டாள் மித்ரா.தொடர்ந்து “ம்ம்…” என்றாள் மித்ரா.


“அப்போது எனக்கு லேசாக விடலைப் பருவம் மறைந்து ,விவரம் தெரிய ஆரம்பிக்கும் தருணம்.அப்போது அப்பா, ‘நான் கோவை போக போரேன்.எனக்கு ஒரு factory –ல் வேலைக் கிடைத்திருக்கிறது.அங்கே அதிக ஊதியமும் கிடைக்கும்.வள்ளிக்கு பணம் சேர்க்க வேண்டுமே.!!இப்பேதிருந்தே சேர்த்தால்தானே அவள் திருமணத்திற்குள் ஓரளவிற்கு சேரும்’ என என் அம்மாவிடம் சொன்னார்.என் அம்மாவிற்கு அவரை எண்ணி பெருமிதமே!ஆனால் பார்வதி பாட்டிக்கும்,லட்சுமி அம்மாக்கும் இதில் உடன்பாடில்லை. ‘வள்ளி நம் வீட்டுப் பெண் நாங்க கல்யாணம் செய்து வைக்க மாட்டோமா!!’என குறைபடத்தான் செய்தார்கள்.ஆனால் என் அம்மாதான் பாட்டியிடம் வேண்டி ‘அவர் விருப்பம் போல் செய்யட்டுமே அம்மா’ எனக் கேட்டார்.அதன்பின் மறுப்பு சொல்ல யாருக்கும் தோன்றவில்லை.அப்பாவும் கோவையிலே தங்கி வேலை செய்தார்.மாதம் ஒருமுறை மட்டுமென வீட்டிற்கு வந்தார்.வரும்போது எப்போதும் எனக்குத் தனி கவனிப்புதான்.அப்போதெல்லாம் நான் நினைத்துண்டு. ‘எனக்குப் போல் யாருக்கும் அப்பா இல்லை’ என்று.ஆனால் இப்போது அவரை போல் யாரும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். “ என சில வினாடிகள் மீண்டும் அமைதியானாள் வள்ளி.

 

banumathi jayaraman

Well-Known Member
மாணிக்கம் என்ன தப்பு செய்தார்?
தன் ஒரே பெண்ணுக்கு பணம் சேர்க்கணும்ன்னு போய் இன்னொரு குடும்பத்தை உருவாக்கி விட்டாரா?
நாளைக்கு மித்ரா எங்கே போகப்
போகிறாள்?
"யாவரும் கேளீர்"-க்கா?
மித்ரா ரொம்பவும் இன்னொசன்ட்டாக இருக்கிறாள்
ரிஷி இவளை கல்யாணம் செய்து
நல்லாப் பார்த்துக் கொள்வானா?
குரு எப்போ வருவான்?
அவனுக்கு என்ன ஆச்சு?
ஏதாவது விபத்து நடந்து விட்டதா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top