உனக்காகவே நான் - 11

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம்- 11
Heroin.jpg

வார்த்தை வராமல் , “ம்ம்...”என்ற மித்ரா ,மறந்தும் நிமிர்ந்தாள் இல்லை.


“இதுவரை.பெண்கள் வெட்கப்பட்டால் அவர்களது கன்னங்கள் சிவக்கும் என்பதை நான் நம்பியதில்லை.இன்று நம்புகிறேன்.நீ வெட்கப்படும் போது மிகவும் அழகாய் இருக்கிறாய்.உன் கன்ன சிவப்பும் அழகாய் இருக்கிறது.”என அவளது கன்னத்தை செல்லமாகத் தட்டினான்.


எதிர் பாராத அவனது இந்தச் செய்கையால் மேலும் கன்னம் சிவக்க நின்றவள்,அவனை நிமிர்ந்து பார்க்க நினைத்துப் பார்க்க , ‘ மாலையும் இப்படிதானே அந்த சுரேகா அவனது கன்னத்தை தட்டினாள்’ என்று எண்ணும் போதே அவள் முகம் சோர்ந்தது.


அவளின் முக மாறுதலை உணர்ந்த ரிஷி , “என்னாச்சு.மயக்கம் வரும் போல் இருக்கிறதா” என்று அவளருகில் வந்து நின்றான்.


“இல்லை.நா..நான் தூங்க வேண்டும்” என்றாள் மித்ரா.


இவள் எதையோ அடிக்கடி நினைத்து ,நினைத்து வருந்துவது ரிஷிக்குப் புரிந்தது. “சரி..வா..”என்றான் ரிஷி.


“இல்லை.நானே போய் கொள்வேன்” என்றாள் மித்ரா.


“எனக்கும் உனது பக்கத்து அறைதான் அதனால் உன்னுடன்தான் வரவேண்டும்” என்று அழுத்தமாகக் கூறி தன் அருகாமையை உறுதி செய்து அவளை நடக்குமாறு செய்கை செய்தான் ரிஷி.


பதிலேதும் கூறாமல் அவள் அறை சென்று தாழிடவும் ரிஷிக்கு என்னமோ போல் இருந்தது.அதை என்னவென்று ஆராயும் மனமின்றி தவித்தான் ரிஷி.


அவனுக்கு இது புதுவித உணர்வாக இருந்தது.யாரோ எதையோ நினைத்து வேதனையுற்றால் அவனுக்கு என்ன வந்தது என அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.குட்டி போட்ட பூனை போல தன் அறையில் சில நிமிடங்கள் நடந்தவன் தன் தந்தைக்கு ஃபோன் செய்தான் ரிஷி.


சில நிமிடங்கள் அவருடன் பேசியவன்.மனம் தெளிவுற்றவனாக அமைதியாய் உறங்கியும் போனான் ரிஷி.


ஆனால் மித்ராவின் நிலை சற்று வித்தாயசமானது.அவளுக்கு லேசாகப் புரிந்தது.அவள் மனச் சோர்வின் காரணக் கரு யாரென்று!. ‘அது ரிஷிதான்.அவனேதான்.அவன் வந்த பிறகுதான் எனக்குள் ஒரு தவிப்பு.என்னவென்று தெளிவாக தெரியவில்லை என்றாலும்.,அவன் வந்த பிறகுதானே என் மன நிலையில் ஒரு மாற்றம்.இந்த மூன்று நாள் நான் நன்றாகத் தானே இருந்தேன்.அவன் வந்த பிறகுதான் எல்லாம்’ என கண்டு கொண்டாள் மித்ரா.


தனக்குள் ஒரு முடிவெடுத்தாள் மித்ரா. ‘இனி அவன் இருக்கும் இடம் விட்டு விலகி இருக்க வேண்டும்.அவன் வரும் வார இரு நாளிலும் அறையைவிட்டு முடிந்த அளவு வெளியில் வரக் கூடாது.அவனிடம் மறந்தும் பேச்சுக் கொடுக்கக் கூடாது’ எனக்குத் தானே இருமுறை சொல்லிக் கொண்டாள்.


ஆனால் மீண்டும் சோர்ந்தாள் மித்ரா. ‘ இது அவன் வீடு.அவன் எப்போது வேண்டுமென்றாலும் எங்கேயும் செல்ல முடியும்.இதோ!இன்று கூட இரவென்று பாராமல் இங்கே வரவில்லையா?இந்தச் சமயங்களில் என்ன செய்வது?’தன் இயலாமையை எண்ணி மேலும் வருந்தினாள் மித்ரா.


சிந்தனையில் இன்னும் சில வினாடிகள் கழிந்தன.வினாடிகள் நிமிடங்களானது.கடைசியில் மனதில் ஒரு யோசனை தோன்றியது.அதைச் செயல் படுத்த முடிவெடுத்தாள் மித்ரா. ‘ அவளுக்கும் இது எந்த அளவு கைக் கொடுக்கும் என்று இல்லை.ஆனால் ‘“எதுவுமில்லாததற்கு இது மேல் என”’ என தனக்குள் முடிவெடுத்துவிட்டு ,பல்துலக்கிவிட்டு தூங்கிவிட்டாள் மித்ரா.


நாம் நினைப்பதும் முடிவெடுப்பதும் நடந்துவிட்டால் ,அதன் பிறகு கடவுளை எப்படி நினைப்போம்.அதுபோல் தான் மித்ராவின் முடிவுகளும் ஆனது.


அடுத்த நாள் பொழுது இயல்பாக புலர்ந்தது.மித்ராவிற்கு தன் முடிவுகள் தெளிவாக புரிந்தது.அதைச் செயல்படுத்தும் வேகமும் இருந்தது.ஆனால் அதற்கான அவசியமில்லாமல் ரிஷி காலை விரைவிலே ,மேட்டுப் பாளையம் சென்றுவிட்டிருந்தான்.


மித்ராவினுள் ‘ஹப்பா.. ’ என்றிருந்தது. ‘எப்படியும் அடுத்த வாரம்தான் ரிஷி மீண்டும் வருவான்.அதற்குள் இன்னும் தன் முடிவுகளைச் செயல்படுத்த சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்’ என நினைத்தாள் மித்ரா.


அதனால் அவளால் இயல்பாக இருக்கமுடிந்தது.மெதுவாக நாட்களும் நகர்ந்தது.அவளும் இயல்பாக விட்டிலுள்ளவர்களுடன் பழக ஆரம்பித்துவிட்டாள் மித்ரா.


போன மூன்று நாட்களில் பாட்டி மற்றும் மரகதம் ஆன்டியுடன் மட்டும் நன்றாகப் பேசிக்கொண்டிருந்த மித்ரா ,துரைத் தாத்தா மற்றும் மாணிக்கம் அங்கிள் என அவர்களுடனும் பேச ஆரம்பித்தாள்.


வந்ததிலிருந்து மித்ராவினுள் ஒரு உறுத்தலிருந்தது.அது மாணிக்கம் அங்கிள்தான்.மாணிக்கம் வள்ளியின் அப்பா.இருந்தும் வள்ளி மித்ராவிடம் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே.!


‘ஏன் வரும் போது அம்மாவைக் கேட்டதாக சொல்லுங்க என்ற வள்ளி,அப்பவையும் விசாரிக்கச் சொல்லியிருக்கலாமே’ என்று திடீரென்று தோன்றியது மித்ராவிற்கு. ‘ஒருவேளை மறந்திருப்பாளோ!.சே சே.அப்பாவைப் போய் யாரும் மறப்பார்களா?வேறெதுவோ இருக்கிறது.இருவருக்குமிடையில் ஏதோ சிறிய மனவருத்தம்.’என்பது மட்டும் மித்ராவிற்கு புரிந்து.


இருந்தும் அதைக் கேட்டறியும் மனமில்லை.ஆனால் ‘இங்கிருந்து போவதற்குள் ,வள்ளியையும் மாணிக்கம் அங்கிளையும் ஒருவருக்குள் ஒருவரைப் பேச வைத்துவிட


வேண்டும்’ என்பதை மட்டும் முடிவு செய்தாள் மித்ரா.


***


அன்று மாலை வழக்கம் போல் நடப்பதற்காகப் பாட்டியை அழைக்கப் போனாள் மித்ரா.ஆனால் வழக்கத்துக்கு மாறாகப் பாட்டி தீவிரமாக எதையோ கணக்கிட்டுக் கொண்டிருப்பது தூரத்திலிருந்தே மித்ராவிற்கு தெரிந்தது.


இருந்தும் நடந்து வந்த மித்ரா பாட்டியின் கட்டிலில் உரிமையாய் அமர்ந்து கொண்டு., “என்ன பாட்டி மிகவும் உன்னிப்பாய் எதையோ கணக்கிடுவதுப் போல் இருக்கு.இன்று வெளியில் நடக்கப் போக வேண்டாமா?”எனச் சிறு ஏமாற்றத்துடன் கேட்டாள் மித்ரா.


புன்னகைத்த வண்ணம் நிமிர்ந்தவர் , “கொஞ்சம் வேலை இருக்கு மித்ரா.இன்று வேண்டாம்.”என்றார் பார்வதி.


இதமான குளிரில் சில நிமிடங்கள் நடப்பதே மனதுக்கு இதமான ஒன்று.அது இன்று இல்லை என்றதும் மித்ராவிற்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்.இருந்தும் பாட்டிக்கு உதவி செய்யும் எண்ணத்துடன் , “என்னிடம் சொல்லுங்க பாட்டி.நான் உதவி செய்கிறேன்.என்ன வேலை?”என்றாள் மித்ரா.


மென்னகையுடன் மித்ராவின் தலையை வருடி “அது..எதுக்கு இப்போ மித்ரா?பின்னொரு நாளில் சொல்லி தருகிறேன்.இப்போது போய் ஓய்வெடு.”எனச் செல்லமாக அதட்டினார்.


“போங்க பாட்டி.போரடிக்குது.இந்த மாலை நேர நடைக்காக எவ்வளவு ஆசையாக நான் தினமும் காத்திருக்கிறேன்.நீங்க இப்படி சொல்ட்ரீங்க” எனச் செல்லமாக கோபித்துக்கொண்டாள் மித்ரா.


“அது சரி..நீ துரை தாத்தாவுடன் நடந்துவிட்டு வா.நான் அவரிடம் சொல்கிறேன்.ஆனால் மிகத் தூரம் சென்றுவிடாதே.அதோடு அவரின் வேகத்துக்கு இடம் கொடுத்து இன்னும் மெதுவாக நடக்க வேண்டும்” என எச்சரித்துவிட்டு, “துரையை நான் கூப்பிட்டேன் என்று சொல்லி அழைத்துவா” என்றார் பாட்டி.


“ஐ..”எனச் சிட்டென் ஓடுச்சென்று மித்ரா துரை தாத்தாவை அழைத்து வந்தாள் மித்ரா.


பாட்டியின் சொல்படியே வழக்கமான பாதையிலே மித்ராவும் துரைத் தாத்தாவும் மெதுவாக நடக்க ஆரம்பித்தனர்.


மித்ரா தாத்தாவிடம் மெதுவாகப் பேச ஆரம்பித்தாள். “தாத்தா..நீங்க எவ்வளவு நாளா இங்க வேலை பார்க்றீங்க” எனக் கேட்டாள் மித்ரா.


சத்தமிட்டுச் சிரித்த தாத்தா அவரது பூர்வீகத்தை சில வரிகளில் தொடங்கி பல வரிகளில் முடித்தார்.


“நான் பொறந்ததிலிருந்தே இங்கதான் அம்மா.அப்போது என் அப்பா அம்மா எல்லாரும் நம்ம தேயிலைத் தோட்டதுலதான் வேல செஞ்சாங்க.என் அப்பாதான் என்ன இந்த வீட்டில விட்டுவிட்டு போனாங்க.நான் இந்த வீட்டுக்கு வந்தப்போ பார்வதி அக்காக்கு அப்போதான் கல்யாணம் ஆகிருந்தது.என்மேல துரை தம்பின்னு ரொம்ப பாசம்.எங்கிட்டதான் பெரியய்யாவுக்கு தினத்துக்கு மத்திய சாப்பாடு கொடுத்து அனுப்புவாங்க.பாசமட்டுமில்லாம,துடிப்பானவங்க.நான் சொன்னாதான் உனக்குத் தெரியும் அவங்க என்னவிட 8வருஷம் பெரியவங்கன்னு.அவ்வளாவு ஆரோக்கியமாக மனதையும் உடலையும் பார்த்துக்குவாங்க.அடுத்தவங்களுக்கும் சொல்வாங்க” என்றுவிட்டு மித்ராவைப் பார்த்தார் துரை.


‘ஆமாம் பாட்டியின் வயதைக் கனிப்பது கஷ்டம் தான்’ என மித்ரா வியப்பின் உச்சியில் இருந்து கொண்டு “ம்ம்..”என்றவண்ணம் கேட்டுக் கொண்டிருந்தாள் மித்ரா.


அவளைப் பார்த்து புன்னகைத்தவர் மேலும் தொடர்ந்தார். “எனக்கு ரெண்டு பொம்பள பிள்ளைங்க.ரெண்டு பேரையும் நல்ல எடமா பாத்துக் கல்யாணம் பன்னிவச்சாங்க.ரெண்டுங்களும் நல்லா இருக்குதுங்க.”என நெகிழ்ச்சியில் கண்கலங்கினார் துரை.


தாத்தா தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள சில நிமிடங்கள் அவர்களிடையே மௌனம் நிலவியது.


பிறகு “வாம்மா..திரும்பி நடக்கலாம்.பார்வதி அக்கா சொன்னதைவிட அதிக தூரம் போய்விடப் போகிறோம்.”என்றவர், “ மேலும் தொடர்ந்து, “ஏம்மா...அக்கா உன்னை இங்க இருக்கிற ஏரிக்கு கூட்டிப் போவாங்கலா?”என்று கேட்ட வண்ணம் ஏரி இருந்த பக்கம் கையைக் காட்டிவிட்டு தொடர்ந்து “ நல்லா இருக்கும்” எனக் கேட்டார் துரை.


“என்ன ஏரி இருக்கா?!எங்க தாத்தா?என்னை அங்கெல்லாம் கூட்டிப் போனதே இல்லையே!?வாங்க அங்க போய் பார்க்கலாம்?”என ஆர்வ மிகுதியால் துருதுருத்தாள் மித்ரா.


“ஓ...இப்போது வேண்டாம் மா.அடுத்த முறை அக்காவிடம் சொல்லிவிட்டு நாம் போவோம்” என்ன?”என தெளிவுற கூறினார் துரை.


“இப்போவே போகலாம் தாத்தா.ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்” என ஐஸ்க்ரீம்க்கு அடம்பிடிக்கும் குழந்தை போல கெஞ்சினாள் மித்ரா.


வியப்பாய் அவளை ஏறிட்ட துரை , “நீயும் ரிஷி குட்டிய போல ரொம்ப அடம்பன்னுவ போல இருக்கே.அதுவும் மறுக்க முடியாதபடி இப்புடி கெஞ்சினா.என்ன செய்றது” எனப் பொய் கவலையுற்றார் துரை.


அவர் சொன்ன பின் பகுதி காதில் விழுமுன்னரே “என்னது ரிஷி குட்டியா?அவர் ஆறடி இருப்பார் தாத்தா.அவரை குட்டினு நீங்க சொன்னா!!அப்பறம் குட்டியாக இருக்கிறவங்கள என்ன சொல்வீங்க” என ரிஷியைக் கிண்டலடித்தாள் மித்ரா.


உடனே சிரித்த துரை , “என்ன தைரியம்.என் ரிஷி குட்டிய கேலி செய்ற.இரு அவன் வரட்டும் .நீ கேலி செய்ததை சொல்கிறேன்.அவனிடம் நீ பேசி ஜெய்க்றீயானு பாக்கலாம்” என அவளைப் பார்க்காமல் பார்த்தார் தாத்தா.


‘ரிஷியிடம் பேசி ஜெய்பதா?அவன் தூர இருந்தால் எதோ கொஞ்சம் பேச வருகிறது.கிட்டவந்தால் வார்த்தையே வர மறுக்கிறது.இதில் எங்கு ஜெய்ப்பது.’என ஓடிய தன் எண்ணத்திற்கு கடிவாளமிட்டு., “போங்க தாத்தா.அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கொள்ளலாம்.நேரம் ஆகிறது.வாங்க நாம அந்த ஏரிக்கிட்ட போய் பார்த்துவிட்டு வரலாம்” என தன் காரியத்தில் கண்ணாக இருந்தாள் மித்ரா.


“ம்ம்...அதே அடம்..”சொல்லிச் சிரித்தவர்.மேலும் தொடர்ந்து “ஆனால் போன உடனே திரும்பிவிட வேண்டும்.அங்கே அமர்வதற்கெல்லாம் இது நேரமில்லை.இன்னொரு நாள் அங்கே செல்வதற்கு என வருவோம்.அதுவும் அந்த ஏரி கொஞ்சம் மரங்களுக்கிடையில்ருப்பதால் வெளிச்சமும் குறைவாகத்தான் இருக்கும்.“பெரியவராய் இருந்து பேசிவிட்டு மித்ராவை அழைத்துச் சென்றார் துரைத்தாத்தா.


“தாத்தாவின் சொல் மிக்க மந்திரமில்லை.”எனப் பணிவாக மொழிந்து சிரித்தவிட்டு,தாத்தாவினுடன் நடந்தாள் மித்ரா.


“அப்பறம் தாத்தா.எந்த ஊர்ல இருக்காங்க உங்க பெண்கள் “ என விட்ட கதையை தொடரத் தாத்தாவிடம் கேட்டாள் மித்ரா.


“அவங்க ரெண்டு பேரும் சிங்கபூர்ல இருக்காங்க.நல்ல வரங்களாக தன் பெண்களைப் போல் எண்ணி கல்யாணம் செஞ்சி வச்சது பார்வதி அக்காதான்.ஜீவா,மல்லிகாவைப் போல என் புள்ளைங்களுக்கும் அவங்களது புள்ளைகளாயே நெனச்சி எல்லாம் எடுத்து செஞ்சாங்க. “ எனப் பெருமையுடன் கூறினார்.


சில வினாடிகள் பேச முடியாமல் வியப்பில் இருந்த மித்ரா. ‘மனிதர்களிடம் எவ்வளவு நேசம்,பார்வதி பாட்டிக்கு.அவர்களின் செயல்களையெல்லாம் ஆதரிக்கும் இந்தக் குடும்பம்.,குடும்பத்தில் இருப்பவகளின் மனமும் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கும்’ என அவர்களின் மீது மித்ராவின் உள்ளத்தில் மதிப்பு உயர்ந்தது.


“அப்படியா?தாத்தா.ஆமாம் உங்கள் மீது பாட்டிக்கு ரொம்பவும் பாசம்.என்னிடமும் கூட ரொம்பதூரம் நடக்க வைக்கக் கூடாது என்றார்கள்” என்றாள் மித்ரா.


புன்னகைத்தவர், “என் புள்ளைங்க என்னையும் அவங்க கூட கூப்பிட்டாங்க.நான்தான் இங்கே இருக்கேன்னு சொல்லிட்டேன்.அத்தோட நா இங்க வேலை பார்க்கல மா.நான் இங்க தங்கியிருக்கிறேன்.அவ்வளவுதான்” எனச் சிரித்த வண்ணம் கூறினார்.


இந்த நினைவுகளின் நடுவே, “ஓ...மன்னிச்சிடுங்க தாத்தா.தப்பா நினைச்சுட்டேன்” என அசடு வலிய நேரிட்டது மித்ராவிற்கு.


“பரவாயில மா.”என்றார் துரை.


அதற்குள் அந்த ஏரி வந்துவிட ,அதன் அழகை ரசிக்க ஆரம்பித்தாள் மித்ரா.


ஏரி பெரியதாக இருக்குமென்று எதிர்பார்த்து வந்த மித்ராவிற்கு சிறிது ஏமாற்றம்தான்.ஆனால் சிறியதாக இருந்தபோதும் அதன் எழில் அருமையாக இருந்தது.அவர்கள் வந்த ஒத்தயடிப்பாதையை தவிர வேறெந்த பாதையும் இந்த ஏரிக்கு வருவதற்கு இருப்பதாக தெரியவில்லை.


நீள்வட்ட வடிவிலான அந்த ஏரியின் அந்தப் பக்கத்தில் பெரிய காடு போல் மரங்களடர்ந்திருந்தது.எங்கோ தண்ணீர் சலசலப்பதுப் போல் சத்தம் கேட்டது.எங்கே என்று ஆராய்ந்த விதமாக மித்ராவின் பார்வை அலைப்பாய்ந்தது.


“அதோ அங்கே..!!அங்கே இருக்கே!.அது அது குட்டியான நீர்வீழ்ச்சி.!!எவ்வளவு அழகாக இருக்கு!!தாத்தா..இது நிஜமாவே ஏரிதானா?இங்கு இருந்துக் கொண்டு இவற்றைப் பார்ப்பதற்கு,அற்புதமா இருக்கு.இதுப் போல நான் Discovery channel –ல தானே பார்த்திருக்கிறேன்.”என தன் வியப்பும் மகிழ்ச்சியும் கண்களில் ததும்ப கேட்டுக் கொண்டே போனாள் மித்ரா.


அங்கே இருப்புரமும் அரண்மனையின் திறந்த கதவு போல சின்ன புதர்கள் அமைந்து இருக்க அதன் வழியாக ஆயுதம் ஏந்தி வரும் படைவீரர்கள் போல நீர் சலசலத்துக் கொண்டு வருவது ரம்யமாக இருந்தது.


புன்னகைத்த தாத்தா, “ஏரி போல இருப்பதால் இதை ஏரினு சொல்வோம் மா.ஆனா இதனடியில் மெதுவாக நீரோட்டம் இருக்கு.தண்ணீர்லெல்லாம் கால் வைக்க கூடாது.”என எச்சரித்தவர் ,”அங்க பாரு..”என துரை ஒரு இடத்தை காட்டினார்.


ஆர்வமாக அந்த பக்கம் பார்த்த மித்ரா,சில வினாடிகள் உன்னிப்பாக பார்த்தாள்.அங்கே அந்த ஏரியிலிருந்து கீழ் நோக்கி நீர் சலசலத்துக் கொண்டிருந்தது.அதனோடு அந்த பக்கம் புதர் போலவும் அங்கே ஒரு பள்ளம் போல் இருப்பது,கவ்னித்து பார்த்தால் மட்டுமே தெரியும் போலவும் இருந்தது.புதிதாக வருபவர்களுக்கு கண்டிப்பாக அதை கண்டுப் பிடிப்பது கடினமே.


“அ..அது பள்ளம் போல இருக்கே தாத்தா!”என கண்கள் விரிய கேட்டாள்.


“ஆமாம் மா.இது பைக்கார நீர்வீழ்ச்சியோட ஒரு சின்ன கிளை நீரோட்டம்.இங்கு கொஞ்சம் குழிந்ததுப் போல் பள்ளம் அமைந்திருப்பதால்,ஏரிப் போல் தெரிகிறது.அதோட அந்த பக்கம் முழுதும் காடு.சில சமியங்களில் மிருங்கங்கள் வந்து தண்ணீர் குடித்துவிட்டு போகவும் கூடும்.அதானால்தான் பார்வதி அக்கா உன்னை இங்கு அழைத்துக் கொண்டுவரவில்லை என்று நினைக்கிறேன்.”என அடுக்காக காரணங்களையும் சொல்லலானார் துரை.


“ஓ...”என்றவள், “ஆனால் இங்கு இருப்பது மனதுக்கு ஏதோ இனம்புரியாத சந்தோஷத்தை தருது தாத்தா” என்றாள் மித்ரா.


“ம்ம்..ரிஷி குட்டியும் இதையேதான் சொல்வான்.சில சமயங்களில் லட்சுமி பொண்ணுக் கூட கோவிச்சுக்கிட்டு ரிஷி குட்டி இங்கே வந்து சில நிமிடங்கள் இருந்துவிட்டுதான் வருவான்.”என பழைய நினைவில் ஆழ்ந்தார் துரை.


‘யாரிந்த லட்சுமி.’என எண்ணிய மித்ரா,அதை கேட்க தயங்கினாள்.தொடர்ந்து பேச்சில் ரசனையாக “என்ன தாத்தா அவரை குட்டி குட்டினு அவர சின்ன பையனாக மாற்றிட்டீங்க.போங்க தாத்தா.எனக்கு அவரோட அந்த ஆறடி உருவம் மறந்து,சின்ன பையன் போல நினைவு வருது” என பொய் கோபம் கொண்டாள் மித்ரா.


“அது சரி...”எனச் சிரித்துவிட்டு “ வா...நாம போகலாம்.”என சொன்ன படி அவளை அழைத்துக்கொண்டு திரும்பினார் துரை தாத்தா.


“ம்ம்..”என்றவள் அவரிடம் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.


அதன் பின்னரும் பேசும்போது துரைத்தாத்தா ரிஷியைக் குட்டி என்று சொல்லியது , மித்ராவிற்கு அவனைச் சின்ன பையனாக உருவகப் படுத்த வைத்தது.தாத்தாவிடம் அப்படி சொல்லாதீங்க என்று சொல்ல மித்ராவிற்கு மனமில்லை.அவர் அப்படி அழைப்பதே அவளுக்கு மிகவும் ரசிக்கத்தக்க விதமாக இருந்தது.வீடும் வந்து அடைந்துவிட்டனர்.


அதன்பிறகு மித்ரா,அடிக்கடி தாத்தாவுடன் பேசி அரட்டை அடிக்க ஆரம்பித்தாள்.அவரது பேச்சில் பாதிக்குப் பாதி ரிஷியின் சின்ன வயது குறும்புகள்தான் இருந்தது.அவற்றைக் கேட்க கேட்கத் தெவிட்டாத சுவையாக இருந்தது.


ஒரு வாரம் எப்படிச் சென்றது என்றே தெரியாமல் நகர்ந்தது.அடுத்த சனிக்கிழமையும் வந்து.ரிஷியும் வந்தான்.
 

banumathi jayaraman

Well-Known Member
மித்ராதேவியின் மீது ரிஷிக்கு காதல் அரும்பத் தொடங்கி விட்டதோ?
அப்போ மித்ராவுக்கு?

ஜீவா @ ஜீவானந்தம் பார்வதியின் மகன்
ஓகே
மல்லிகா யாரு?
லட்சுமி யாரு?

எங்கள் ஊர் பைக்காராவிலிருந்து
வரும் ஒரு சிறிய கிளை ஏரியை
அழகா சொல்லியிருக்கீங்க,
யோகா டியர்
 
Last edited:

Ivna

Active Member
Wow...ud super...(y)
Sceneries explanation nice...(y)(y)
Rishi kutty paiyana irukurapa panunathu keka pidikutha!!ithu sari illaiyae!!;)
Rishi vanthutana??!!ini mithra calm thaa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top