இருளில் ஒரு ஒளியாய் -5

Chandrika krishnan

Writers Team
Tamil Novel Writer
#1
இருளில் ஒரு ஒளியாய் -5

இது என்னடா லதுவிற்கு வந்த சோதனை?

பக்கத்தில் அமர்ந்திருந்த அகி வேறு என்னை சந்தேகமாக மீண்டும் பார்க்க, என் கோவம் எல்லாம் அந்த தீனாவின் மீது பாய்ந்தது.

'சரியான ஒனிடா.. அத்தனை பேரும் வாய் கிழிய பேசுறாங்கள..வாய்ய தொறந்து அதுலாம் இல்ல.. எங்களுக்குள்ள ஒரு கண்றாவியும் இல்லைனு சொல்லி தொலைஞ்சா என்னவாம்.. ' என் மனம் கடுக்கத் தொடங்கியது.

பாலாய் போன மூளை வேறு சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் தாறுமாறாக யோசிக்க தொடங்கியது.

'அவனுக்கு உன் மேல கண்ணு டி.. அதான் அமைதியாவே இருக்கான் ' மனம் அலைபாய,

மனசாட்சியோ 'தேஜுவை விடவா? ' என்று கேட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது.

'நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அழகு தான் நா '

'நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம் '

'எனக்கு என்ன கொறச்சல்.. '

'நீயே கொறச்சல் தான்.. அவன் தோள்பட்டைக்கு கூட எட்டமாட்டா '

'எதை பத்தி வேணாலும் பேசு.. ஹெயிட் பத்தி மட்டும் வேண்டாம் '

'உள்ளதா சொன்னா ஒடம்பு எரியுதாக்கும் '

மாற்றி மாற்றி எனக்குள்ளேயே வாதம் புரிய,

என் செல் சிந்தனையை கலைத்தது.
ஜோ தான்.


"சொல்லு ஜோ "

"வாழ்த்துக்கள் டி லது.. இப்போ தான் டிவில பாத்தேன்.. ஆனாலும் நீ என்கிட்ட கூட சொல்லல பாத்தியா? எனக்கு ஒரே ஒரு டவுட் டி.. சம்பவம் நடந்தப்போ நானும் தானே இருந்தேன்.. அப்பறம் எப்படி? லவ் அட் பர்ஸ்ட் சைட்டா? "

அவன் கேட்க கேட்க, எனக்குள் எரிமலை பொங்கியது.

பேசாமல் அமைதியாகவே நான் இருக்க,

"பதில் சொல்லுடி.. வாயாடி.. அமைதியா இருக்க.. என்ன வெட்கமா? "

"ஜோ.. போன வெச்சுரு.. "அடக்கிய குரலில் நான் சீர,

"லாஸ்ட்டா ஒன் டவுட்.. கொழந்த எந்த ஸ்கூல படிக்குது லது? " நக்கலாக அவன் கேட்க, வெடித்து விட்டேன் நான்.

"ஆமா டா.. பத்து புள்ள பெத்துக்கிட்டோம்.. எட்டுக்கு கல்யாணம் ஆகியிருச்சு.. ஒன்னு காலேஜ் போகுது.. இன்னோனு ஸ்கூல் போகுது.. இன்னொன்னு தெரியுமா? ஒன்னு இப்போ தான் வயித்துல ஒதைக்குது.. "

"அடிப்பாவி.. நீ எல்லாம் ஒரு நண்பியா? இதுலாம் சொல்லவே இல்லையே.. ஆக மொத்தம் நீ எனக்கு பன்னெண்டு ட்ரீட் தரணும்.. "
அவன் சொல்ல சொல்ல பிபி எகிறியது.

"சினம் கொண்ட சிங்கத்தை சீண்டிட்டே ஜோ.. இந்த நாள் உன் டைரில குறிச்சு வெச்சுக்கோ.. "

நான் முடிப்பதற்குள், "கண்டிப்பா லது.. இது தானே நீ ஊரறிய மிச்செஸ். தீனாவான தினம் "

"செருப்பு பறந்து வரும் டா.. ஜோ.. விளையாடாத.. நான் ஆல்ரெடி டென்ஷன்ல இருக்கேன்.. " விளையாட்டை வேடிக்கையை கைவிட்டு நடந்ததை அவனிடம் நான் சொல்ல, அடுத்த பதினைந்தாவது நிமிடம் ஹாஸ்பிடல்க்கு வந்து விட்டான் ஜோ.

"ஏ..லூசு இவ்ளோ நடந்துருக்கு.. முன்னாடியே சொல்லலாம்ல.. " உரிமையாக அவன் வினவ, என் கண்கள் பனித்தன.

"லூசுன்னு சொன்னது கரெக்ட் மிஸ்டர். ஜோசப்.. என்கிட்டயும் இவ இப்போ தான் சொன்னா.. கட்டிக்க போறவன்னு பொறுப்பே இல்ல.. நீங்க கொஞ்சம் புத்தி சொல்லுங்க.. இந்த சேட்டை அடாவடி எல்லாம் விட்டுட்டு அடக்கமா பொண்ணா இருக்க சொல்லுங்க.. "

நடுவில் புகுந்த அகி ஜோவிடம் என்னைப்பற்றி முறையிடவும், எனக்கு என்னவோ போல் மனம் கனத்தது.

அமைதியாக அவ்விடம் விட்டு எழுந்து ஐ. சி. யூ. வின் கண்ணாடி வழியே எட்டிப்பார்த்தேன்.

சுவாச குழாய் பொருத்தியதால் அம்மாவின் முகம் சரியாக தெரியவில்லை.

பச்சை போர்வை போர்த்தி அம்மா படுத்திருந்தார்கள்.

நெஞ்சு மட்டும் ஏறி ஏறி இறங்கிக்கொண்டியிருந்தது. மற்றபடி ஒரு அசைவும் இல்லை.

கண்கள் கலங்க திரும்பி நடந்து ஹாஸ்பிடல் வெளியே இருந்த பூங்காவிற்கு சென்றேன்.

அங்கு என் கவனத்தை ஈர்த்தது ஒரு குட்டி தேவதை.

அதன் அப்பாவின் தோளில் உரிமையாக சாய்ந்துகொண்டு ஆயிரம் பாவங்கள் காட்டியபடி பேசிக்கொண்டிருந்தது.

இனிமையான என் அப்பா நினைவுகள் என்னுள்.

அப்பா.. அவருக்கு எப்பொழுதுமே நான் ஒரு பொக்கிஷம்.

ஒரே பெண் என்பதால் கட்டுபாடற்ற செல்லம்.

பள்ளிக்கு அழைத்து செல்வதில் இருந்து சைக்கிள் ஓட்ட கற்று தந்தது வரை அனைத்தும் அப்பா தான்.

அவ்வப்போது சேட்டை செய்கிறேன் என்று அம்மா கண்டித்தால், அப்பா அவ்வளவு தான். அம்மாவிடம் பேசவே மாட்டார்.

அவருடைய கடைசி நாள் அன்று தான், அதிசயமாக அப்பா என்னை அழைத்து, கொஞ்சமே கொஞ்சம் வாலை குறைத்து கொள்ள சொன்னார்.

அப்போதும் "மத்தவங்களுக்காக இல்லப்பா.. உனக்காக தான் தங்கம் " என்றார்.

அப்பா கைபிடித்து மீண்டும் நடக்கவேண்டும் போல ஒரு ஆவல் பேரலையாக என்னுள்.

அப்பாவிற்கு பிறகு அம்மா தான்.

அம்மாவை அப்பாவிற்கு பின் முன் என்று இருபிரிவாக சொல்லலாம்.
முன்பு கனிவும் கண்டிப்பும் மட்டுமே. அப்பாவிற்கு பிறகு ஒரு காவலனாக தோழியாக என்னை காப்பது அம்மா தான்.

என்னை அறியாமல் ஒரு பெருமூச்சு வெளியேற, என் பின்னே "ஹலோ வாழக்கா " என்றது பரிட்சயமான அந்த குதூகல குரல்.

"ஓய் மிஸ்டர்.. " கோவமாக பேச எண்ணி நான் திரும்ப, சிரித்து மயங்கினான் அந்த மாயவன்.

அவன் சிரிப்பு ஏனோ அப்பாவை ஞாபக படுத்தியது.

'மோகனப்புன்னகையிலே.. மாயக்கண்ணன் எப்படி சிரித்திருப்பான்.. மயக்கி இருப்பான்.. பாவம் ராதை ' என்னை அறியாமல் மனம் பேதலிக்க,

என் முகத்தின் முன் சொடக்கிட்டான்.
அதற்குள் சுற்றுப்புறம் எங்களை வீடியோ எடுப்பதை என்னால் உணர முடிந்தது.

என் கைபிடித்து பக்கத்தில் இருந்த அவனது காரினுள் ஏற்றியவன், கதவை மூட, விடுபட முயன்று தோற்று கொண்டிருந்தேன் நான்.

"என்ன? எதுக்கு எப்போ? " நான் பேசுவதற்குள், கையை உயர்த்தி என் பேச்சை நிறுத்தியவன்

"சாரி வாழக்கா.. நான் சாதாரணமா உங்கிட்ட பேசவந்தது என் தப்பு தான்.. என்னவோ உன் மிஸ் பண்ணாம ஒடனே பேசணும்னு தோணுச்சு.. சாரி வாழக்கா.. " அவனது கெஞ்சல் குரல் கூட நன்றாக தான் இருக்கிறது.

மற்றதை மறந்து நான் சினேகமாக புன்னகைக்க..

"தட் இஸ் வாழக்கா.. " என்றவன், பரவி கிடந்த வதந்திகள் பற்றி சொல்லி சிரித்தான்.

"அதிலும் அந்த குழந்தை இருக்குனு சொன்னது தான் ஹைலைட்.. இல்லையா? சரி சொல்லு.. எப்போ கொழந்த பெத்துக்கலாம்? "

வேடிக்கையாக அவன் கேட்க நான் விளையாட்டாக, "எதற்காக கேட்கிறாய் குழந்தை? ஏன் தர வேண்டும் குழந்தை? நீ என்ன மாமனா மச்சானா? மானம் கெட்டவனே.. என்னை திருமணம் செய்தாயா? இல்லை காதல் தான் புரிந்தாயா? எதற்காக தரவேண்டும் குழந்தை " என்று நானும் பேச,

சட்டென "இதுலாம் செஞ்சா? " என்றான் புருவம் உயர்த்தி.

விளையாட்டாய் நான் உளறியது எனக்கே வினையாகிறதே என்பதை உணர்ந்ததும், காரை விட்டு இறங்க முற்பட்டேன்.

ஏதோ புரியாதது போல மர்மமான புன்னகை அவன் இதழில்.

குழப்பத்துடன் நான் இறங்கவும், பளிச்சென கண்ணை கூசின பிளாஷ் லைட்.

அவன் புன்னகைக்கான அர்த்தம் புரிந்தது.
 
#7
அய்யய்யோ
விளையாட்டு வினையாகுதே
இந்த வாழக்கா வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்

லது பேபி பாவம்ப்பா
அப்பாவின் அன்பை அறிந்து விட்டு பாதியிலே இல்லேன்னா கஷ்டமாத்தானே இருக்கும்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes