இப்படிதான் இருக்கணுமுனு இதைவிட சிம்பிளா சொல்லமுடியாது

SahiMahi

Well-Known Member
#1
இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும்

புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும்

உள்ள ஒன்னும் இல்லாட்டாலும்

பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும்

அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும்

ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா

இருக்கனும்
உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும்

பொங்கல் மாதிரி குழைவா பேசனும்

அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும்

பிரியாணி மாதிரி பிரபலமா இருக்கனும்

சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும்

ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது

நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது

பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது

ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது

புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது

கேசரி மாதிரி இனிமையா பேசனும்

பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும்

அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும்

அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும்

புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும்

ஐஸ் கிரீம் மாதிரி கூலா இருக்கனும்

டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும்

நெய் மாதிரி அடுத்த வர் கஷ்டத்தைக் கண்டால் உருகணும்.

வாழை மாதிரி தன்னையே தரணும்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement