இதயம் இடம் மாறியதே 9.2

Advertisement

Indira75

Active Member
விஸ்வநாதனின் பேச்சை கேட்ட அனைவரின கண்க ளும் கலங்கி இருந்தது.
என்னவோ ஏதோ என்று கலங்கியிருந்த வடிவாம்பாள் விஸ்வநாதன் பேசியதை கேட்டதும் கண்களில் நீர் வழிய தன் மகனை பார்த்து ஐயா விசு இங்க வாய்யா என, அருகில் வந்த விஸ்வநாதனின் கைகளை பிடித்து அழ ஆரம்பித்ததும் உலகநாதன் அருகில் வந்து என்னம்மா என ஆறுதல் படுத்த , ஐயா எனக்கு இப்பதான் மனசு நெரஞ்சு இருக்குப்பா. நான் பெத்த வளர்த்த என் ரெண்டு பசங்களும் என் வளர்ப்பு சோடை போகலனு நிருபிச்சுடீங்க. ஐயா விசு எனக்கு நம்பிக்கை வந்திருச்சு. உனக்கும் கோமதிக்கும் ரொம்ப பெரிய மனசு என கண்ணீர் உகுக்க, அம்மா என்னம்மா இப்படி எல்லாம் பேசி என்னை சங்கடபடு த்தாதீங்க. அண்ணனும அண்ணியும் எனக்கு இன்னொரு அம்மா அப்பா. அவுங்க இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து என்னை அவுங்க கொழுந்தனாக பார்க்காமல், தன் பையன் மாதிரி தான்மா பார்துக்கிட்டாங்க. அண்ணனும அப்படிதானமமா.அப்படி இருக்கும் போது எப்ப டிம்மா நான் அவுங்கள விட்டு கொடுப்பேன் என கண்கலங்க
வடிவாம்பாள் தான் என்ன நினைத்து தமிழரசி ஐ உலகநாதன் க்கூ திருமணம் செய்து வைத்தாரோ அது சரியான முடிவு என்று பெருமிதம் கொண்டார்.
பூங்கொடியும் அருகில் வந்து அமர அனைவரையும் தாய் கோழி தன் சிறகுக்குள் குஞ்சுகளை அரவணைத்து கொள்வது போல் அனைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் வடிவாம்பாள். ராஜலிங்கத்தின் முகமும் சந்தோசத்தில் பிரகாசம் அடைந்தது.
தமிழரசி தன் கண்களை துடைத்துக் கொண்டு அனைவருக்கும் காபி கொண்டு வர சென்றார்.
வக்கீல் திருமூர்த்தி யம் இந்த காலத்தில் காலடி, அரை அடி நிலத்திற்கு அடிதடி, கோர்ட் கேஸ் என்று அலைந்து கொண்டு இருக்கும் சகோதரர்களுக்கு இடையே விஸ்வநாதநை நினைத்து ஆச்சரியம் கொண்டார். அவர் இந்த அளவுக்கு தெளிவாக பேச அவரின் அண்ணனின் பங்கும் உண்டு என்று தெள்ள தெளிவாக தெரிந்து இருந்தார். இவர்களின சந்தோசம் நிலைக்க கடவுளை வேண்டியவர், அம்மா அப்போ நான் தம்பி சொன்னபடி திருத்தம் பண்ணி பேப்பர் வேலை ஆரம்பிருசுட்டுங்களா என கேட்க, தாயின் பதிலை நோக்கி நிமிர்ந்து பார்த்தார் விசு.

முகம் நிறைய சந்தோசத்துடன் தன் கணவரை திரும்பி பார்த்த வடிவாம்பாள், அவர் தலை அசைத்ததும் அப்படியே பண்ணிடுந்க என்றவர், என்ன விசு சந்தோசமா என வாய் நிறைய சிரித்தார்.
இராமனும் லட்சுமணனும் இப்படிதான் இருந்து இருப்பார்களோ என தோன்றியது வாடிவாம்பாளுக்கு.
அந்த நேரம் கோமதி அனைவருக்கும் சிற்றுண்டி கொடுக்க தமிழரசி சூடான காஃபி யை அனைவருக்கும் கொடுத்தார்.
வக்கீல் கிளம்ப அனைவருடன் உள்ளே வந்தனரர். பூங்கொடிக்கு அவரின் நகைகளை எடுத்து கொடுக்க மருமகள்கள் இருவருக்கும் அவரவர் க்குகு உரியதை கொடுத்தார்.தன் பேத்திகளான தாமரை , தேன்மொழி மற்றும் கந்தவேலின் மனைவி சித்ராவுக்கம் ஒரே மாதிரி புதிய மோஸ்தரில் நெக்லஸ், ஆரம், வளையல், ஒட்டியாணம். வங்கி, நெத்தி சுட்டி என செய்து வைத்திருந்தார்.அதயும் எடுத்து கொடுக்க அதன் அழகில் அனைவரும் மனதை பறி கொடுத்தனர். தன் அம்மாவின் சேமிப்பை கண்ட மகன்கள் பிரமித்தனர்.

பூங்கொடி தான் வாய் திறந்து அம்மா நீங்க இத்தனை நகை வச்சிருக்கீங்க னு எனக்கே இன்னைக்கு தாம்மா தெரியும் என, கண்ணு சம்பாதிக்கிறது பெரிய விசயம் இல்ல, அதை எப்படி சேமிப்பு செய்யவேண்டும் என்பதில் தான் நம் வாழ்க்கையின் வெற்றியே இருக்கு. இத்தனை வருடமாக உங்க அய்யன் வர்ற வருமானத்தை அப்படியே என் கிட்ட கொண்டு வந்து கொடுப்பாங்க. நெல் வித்தது, வாழை வித்தது, தோப்பு வருமானம் எல்லாம். நாங்க ரெண்டு பேரும் உக்கார்ந்து பேசி நகையாகவும், மற்றும் இடஙகளாவும், காம்ப்ளெக்ஸ் ஆகவும் மாற்றியதை சொன்னவர், உங்க அப்பா விர்க்கு பிறகு உங்க அண்ணன் அப்படித்தான், அத்தனையம்
கொண்டு வந்து கொடுத்தான். அதுக்கு உங்க அண்ணிக ரெண்டு பேரும் எந்த கேள்வியும் கேட்டது இல்ல.அவுங்க நம்பிக்கை எல்லாம் நான் காப்பத்தணும் இல்ல. என்று வாழ்க்கையின் பெரிய தத்துவத்தை மிக எளிமையாக கூறினார் அந்த கிராமத்து பெண்மணி. நான் உங்க மூன்று பேருக்கும் யின்னொனும் குடுக்கணும் என்றவர் மூன்று புதிய நகை பெட்டிகளை கொடுத்தார். மூவரும் அதை திறக்க மூவரும் ஆச்சரியத்தில் வாயை பிளக்க அதில் ஒரே டிசைன்களில் நல்ல ஜாதி வைரத்தில் செய்த அட்டிகையும், கம்மழும், மோதிரமும், ஒற்றை கல் வரிசையில் செய்த வளையலும் கண்ணை பறித்தது. ரொம்ப நல்லா இருக்குது nga அத்தை என்ற கோமதி ஐ பார்த்து என் மருமக ரெண்டு பேர் குணம் இதை விட அழகு என்றவர், சித்ரா விக்கும் உரியதை கொடுத்து மற்ற அனைத்தையும் உள்ளே வைத்து விட்டு வந்தவர், உங்க எல்லார் கிட்டயும் முக்கியமான விசயம் ஒன்னு பேசணும என்றார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top