இதயம் இடம் மாறியதே - 6

Advertisement

Indira75

Active Member
வகுப்பு முடிந்தற்கான மணி அடித்தவுடன் ஓகே கைஸ் , ஸீ யூ டுமாரோ என்றவாறு அவர் கிளம்பியதும், மொழி தன் தோழி களை நோக்கி திரும்பி என்னடி ஆச்சு? என்றாள்.
அவள் தோழி சுமி, மொழி நம்ம சிவா சர் இன்னும் 3 months மெடிக்கல் லீவ்வாம். நமக்கு செமஸ்டர் வர்ரதால portion கவர் பண்ணனும்னு இவர் பார்ட் time ஆஹ் ஜாயின் பண்ணியிருக்காராம்
பேர் அரவிந்தன். நம்ம சீனியர் தான். இங்க கம்ப்ளிட் பண்ணிட்டு foreign ல mba கம்ப்ளீட் பண்ணிருக்காறாம்.
ஒரு முக்கியமான நியூஸ் டி, சர் இன்னும் பக்கா பேச்சலர். செமையா ஹீரோ மாதிரி இருக்காரு இல்லடி என்றவளை முறைத்தாள் மொழி.
எதுக்குடி என்ன முறைக்கிற? என்றவளை பார்த்து
முதல்ல உன் டேப் ஆஃப் பண்ணுடி, மழை ல ஊரே மிதந்துட்டு இருக்கு, இதுல நீ விட்ட ஜொள்ளு ல கிளாஸ் ரூம் முழுகிட போகுது என்றாள்.
அதுக்கு உனக்கு எதுக்கு டி இத்தன காண்டு என்றாள் சுமி.
ம்ம் அவரு என் மாமன் மகன், அதுனால தான் எனக்கு காண்டு ஆகுது. போடி போயி அடுத்த கிளாஸ் கவனி என்றவளை கொலைவெறி பார்வை பார்த்தபடி திரும்பினாள் சுமி.


சென்னை. யோகம் டவர்ஸ். கௌதம் ன் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார் வாசுதேவன். டாட் கூப்பிட்டிருந்தால் நானே வந்திருப்பேனே? என்ற கௌதமை
பரவால்ல பா, மார்னிங் உன்னை கேட்டேன், நீ வெளிய போயிருக்கிறதா சொன்னாங்க? என்றவாறு அமர்ந்தார்.
சொல்லுங்க ப்பா? என்றவனை
அந்த மால் ஒர்க் எப்படி போயிட்டு இருக்கு கௌதம்.
இன்னும் சிக்ஸ் மந்த் ல ஒர்க் முடிச்சு கொடுக்கணும். அதை நீ தானே follow பண்ற. அதை தெரிஞ்சுக்க தான் வந்தேன் என்றார்.
சொன்ன தேதி க்கு 15 டேஸ் முன்னாடியே complete பண்ணி ஹேண்ட் ஓவர் பண்ணிடலாம் பா. என்றான்
ஒகே, மை பாய் என்று எழுந்தவரை அப்பா, காபி சொல்லவா? என
ம்ம் சொல்லு, என்றபடி அமர்ந்தார்.
இன்டெர்காம் ல் காபி க்கு சொன்னான்.
கௌதம் உன் பேக்டரி லேண்ட் sourcing முடிஞ்சுதா? என்றார்.
இந்த மாதம் முடிஞ்சுடும் டாட் என்று சொன்னவனின் பார்வையில் வாசுதேவன் சற்று யோசனையானார்.
ஏனெனில் அவன் பார்வையில் இரை ஐ குறி வைக்கும் புலியின் பார்வை தெரிந்தது.

கல்லூரி முடிந்து ஹாஸ்டல் க்கு வரும் வரையில் மொழி ன் முகம் ஏதோ யோசனையிலேயே இருந்தது.
ஏய் மொழி என்ன யோசனை என்றாள்
தாமரை.
ஒன்னும் இல்லடி, என்றவளை யோசனையாய் பார்த்தவள்
சரி refresh ஆயிட்டு வா , டீ குடிக்க போலாம் என்றாள் தாமரை.
தாமரை நீ first refresh ஆயிட்டு போயி டீ குடிச்சுட்டு எனக்கு எடுத்துட்டு வாடி என்றாள்.
சரி என்றாள். தாமரை
அவள் சென்றதும் முகம் கழுவி இரவு உடைக்கு மாறியவள், கட்டிலில் அமர்ந்து தலையணை யை மடியில் வைத்து காலை நீட்டி அமர்ந்த்தாள்.
மனது ஒரே குழப்பமாக இருந்தது. அதில் இருந்து விடுபட நினைத்தவளை மனம் அதே இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. காலையில் எக்ஸ்க்யூஸ் மீ என்றதும் திரும்பிய அரவிந்தனின் முகத்திலேயே வந்து நின்றது. என்ன பார்வை அது? ஏதோ கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல ஒரு பார்வை? அந்த பார்வையில் என்ன இருந்தது என்று அறிய முயன்று சோர்ந்தாள் மொழி.
இது நாள் வரை யாருமே இப்படி ஒரு அலட்சிய பார்வை பார்த்ததில்லை.
எத்தனையோ பேர் அவளை ஆர்வமாக பார்க்கும் போதெல்லாம் ஒரு அலட்சிய த்துடன் அந்த பார்வைகளை கடந்து வந்திருக்கிறாள்.
கைபேசி சிணுங்க எடுத்து காதில் வைத்தவள் அம்மா என்றாள்.
தேனு என்ன பண்ணிட்டிருக்க
என்றார் தமிழரசி.
இப்போதான் மா ரூம் கு வந்தோம். தாமரை டீ எடுக்க போயிருக்கா, நான் ரூம் ல தான் இருக்கேன். என்றாள்
நீங்க என்ன பண்றீங்க? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? என்றாள் மொழி
அப்பா எங்கம்மா? என்றாள்.
அப்பா , அய்யாவை கூட்டிட்டு ஆஸ்பத்திரி போயிருக்காங்க, ஆத்தாவும் கூட போயிருக்காங்க என்றார் தமிழரசி.
ஏம்மா அய்யா நல்லா தானே இருக்காங்க ? என்றாள்.
இல்லடா, ஒரு வாரமாவே சரியா சாப்பிடுல, படுத்தே இருக்காங்க? மதியம் நெஞ்சு லேசா வலிக்குதுன்னு வேற சொன்னாங்க. அதான் அப்பா வும், சித்தப்பா வும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்க என்றாள்.
சரிம்மா அப்பா வந்ததும் போன் பண்ணுங்க, அண்ணி எப்படி இருக்காங்க? என்றாள்
உன் அண்ணி இங்கதான் இருக்கா, இரு குடுக்கறேன் என்றார்.
தேனு என்று அன்பாக அழைத்த சித்ராவின் குரலைக் கேட்டதும், அண்ணி எப்படி இருக்கீங்க, checkup கு போனீங்களா? அண்ணா உங்களை நல்லா பார்த்துக்குறாங்களா? என்று கேள்விகளை அடுக்கினாள்
ஏய் தேனு கொஞ்சம் மூச்சு விட்டுட்டு பேசுடா என்றவள், தன் அன்பான நாத்தனாரின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
தாமரை எங்க? என்றாள் சித்ரா
இதோ வந்துட்டா அண்ணி, என்றவள்
சித்ராவின் பிறந்த வீட்டை பற்றி விசாரித்தாள்.
அத்தை வந்தாங்களா அண்ணி? என்றாள்
இல்ல தேனு , அம்மா அடுத்த வாரம் வராங்க. வளைகாப்புக்கு தேதி குறிக்கணும் னு ஆத்தா சொன்னாங்க, அதான் அம்மா, அப்பா ரெண்டு பேரும் வராங்க. என்றாள்.
தேனு வளைகாப்புக்கு வரும்போது ஒரு வாரம் முன்னாடியே லீவ் போட்டுட்டு வா என்றாள்.
எனக்கு அதுக்குள்ள செமஸ்டர் முடிஞ்சுடும் அண்ணி, அதனால ஒன்னும் ப்ரோப்ளேம் இருக்காது என்றவள்
இருங்க சுண்ணி தாமரை பேசுறா, என்றவள் பேசி யை அவளிடம் குடுத்தாள்.
தாமரை வாங்கி பேசி முடிப்பதுர்க்குள்
டீ ஐ குடித்து முடித்தாள்.
எல்லோரிடமும் பேசிய பின் மனது சிறிது உற்சாகமுடன் இருந்தது போல் தோன்றியது.
பாவை அவளுக்குத் தெரியவில்லை, அது தற்காலிகம் தான் என்று
தாமரை பேசிமுடித்தாள்.
பக்கத்து அறை தோழிகள் சிலர் வந்து வம்பிழுத்துக் கொண்டு இருந்தனர்.
இரவு உணவு நேரம் வந்ததும் அனைவரும் சென்று உணவருந்தி அவரவர் அறைக்கு சென்றனர்.
அறைக்கு வந்த தாமரை படிக்க அமர, மொழி சிறிது நேரம் மொபைலை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு பின் படுக்க சென்றாள்.
ஏய் கொஞ்ச நேரம் படிக்கலாம்ல என்றாள் தாமரை
நான் காலைல நேரத்துல எந்திரிச்சு
படிக்கிறேண்டி என்றவளை
நீ? காலைல நேரத்துல? ம் என்றவள்
மொழி இன்னைக்கு மாதிரி நாளைக்கும் பண்ணிடாத, இன்னைக்கே மானம் போச்சு என்றதும்
சற்று மெல்லிய குரலில், இல்லே தாமரை இனி மேல் இப்படி நடக்காது என்று கூறியவள் போயி படுக்கையில் படுத்தாள்.
படுக்கை இல் படுத்தவளை மீண்டும் நினைவுகள் சூழ்ந்தது. அந்த அலட்சிய மான முகமே திரும்ப திரும்ப வந்தது.
மனித மனங்களின் இயல்பே இது தான். எது நம்மை அலட்சியப்படுத்துகிறதோ அதையே நாடும். அரவிந்தன் ஒரு சிரிப்புடன் கூடிய ஒரு பார்வையை பார்த்திருந்தால் மொழி ன் மனம் இப்படி அலைபாயாது. அவனின் அலட்சியமே அவனை மறுபடி மறுபடி நினைக்க தொடங்கியது.
 

banumathi jayaraman

Well-Known Member
அரவிந்தனின் அலட்சியம் தேன்மொழியை
ஏன் பாதிக்குது?
அரவிந்த் மீது தேனுவுக்கு லவ்ஸ் ஸ்டார்ட் ஆகிடுச்சா?
ஆனால் இது தப்பாச்சே
அங்கே ஒருத்தன் இவள் பெயரில்
இருக்கும் நிலத்திற்காக வில்லன்
பார்வை பார்க்கிறான்
ஒருவேளை வில்லன் வேலை ஏதும்
கௌதம் செய்வானோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top