இதயம் இடம் மாறியதே - 4

Advertisement

Indira75

Active Member
சென்னை. யோகம் டவர்ஸ்.
யோகம் குரூப் ஆப் கம்பெனிஸ் ன் தலைமையகம். நான்கு தளங்களுடன் பிரம்மாண்டமாக நின்றிருந்தது. பளிங்குத் தரையில் முகம் தெரிந்தது. நுழை வாயிலில் இருந்து தளம் முழுவதும் சுத்தமாக அழகுடன் பராமரிக்கப்பட்டு இருந்தது.
கௌதம் - டைரக்டர்
கதவில் போர்டு பளபளத்தது. கதவை திறந்தால் வேற யார் நம்ம ஹீரோ தான்.
கௌதம் ஸிஸ்ட்டத்தில் வந்த மெயில் களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.
இன்டெர்காம் சிணுங்க எடுத்து காதில் வைத்தவன் அந்த புறம் அவன் செகிரேட்டரி அனிதா சர் ரியல் எஸ்டேட் ஆஃபீஸ் ல இருந்து உங்களை பார்க்க வந்திருக்காங்க சர் என்றாள்.
ஐந்து நிமிடம் கழித்து உள்ளே அனுப்புங்க என்றவாறு போனை வைத்தவன்
பதில் அனுப்ப வேண்டிய மெயில்களுக்கு பதில் அனுப்பி முடிக்கவும் அவர்கள் வர சரியாக இருந்தது.
வந்தவர்களை பார்த்து உக்காருங்க என்றான்.
வந்தவர்கள் அமைதியாக இருக்க அவர்களின் முகங்களை கூர்ந்து பார்த்தவன்,
சொல்லுங்க மிஸ்டர் கவிதாஸன். நான் ஓகே பண்ண லேண்ட் பேசி முடிச்சுட்டீங்களா?
என்றான்.
இல்ல சர், வந்து அந்த லேண்ட் அ விட உங்களுக்கு வேற நல்ல லேண்ட் பார்த்திருக்கேன். அதை விட விலையும் அடிச்சு வாங்கலாம் சர் என்றார்.
ரேட் குறைக்கணும்னு நான் சொன்னதா எனக்கு நியாபகமே இல்லையே கவி? என கத்தி போல கூர்மையாக வந்து விழுந்தது வார்த்தைகள்.
நான் ஓகே பண்ண லேண்ட் என்ன ஆச்சு? என்றான்
என்ன ப்ரோப்ளேம்? என்றான்
சர் அந்த இடம் விலைக்கு தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.
என்றார்.
ஏன்? ரேட் பத்தலையா? அவுங்க எவ்ளோ கேக்கரங்களோ அவ்வளவு குடுக்க ரெடி ஆஹ் இருக்கேன்.
அப்புறம் என்ன?
இல்ல சர் அது ஒத்து வராது. என்றார்.
ஏன் என்ற பார்வையில்
கவிராஜன் நம்ம செல்வராசு கை பேசியில் பேசியதை அப்படியே தெரிவித்தார்.
கௌதமின் முகம் இறுகியது.
தான் கேட்டு ஒன்று கிடைக்கவில்லையா? அவனை பொருத்தவரை இந்த உலகில் அனைத்திற்கும் ஒரு விலை உள்ளது என்பது அவன் எண்ணம்.
டாமிட், பொழைக்க தெரியாதவங்க? அந்த இடத்துக்கு நான் கொடுக்கிற விலை அவுங்க இன்னும் அஞ்சு தலைமுறைக்கு உக்கார்ந்து சாப்பிடலாம். அது தெரியாம சீதனமாம், மண்ணாம் என்று கோபத்துடன் இரைந்தான் கௌதம்.
கவி எனக்கு அந்த லேண்ட் தான் வேணும், ரேட் double ஆஹ் கூட குடுத்துடலாம். என்றான்
இல்ல சர் ரேட் பிரச்சனையே இல்ல. அவுங்க இடத்தை பத்தி பேசவே கூடாதுன்னு சொல்றாங்க. அந்த ஊரில் அவுங்க பெரிய ஆளுங்க, அதனால எந்த நெருக்கடியும் தர முடியாது? புரிஞ்சுக்குங்க சர்
இன்னும் ஒன் வீக் ல நான் உங்களுக்கு இதே மாதிரி வேற லேண்ட் பார்த்து தரேன். என்றார் கவிராஜன்.
இதே மாதிரி வேண்டாம், இதே தான் வேணும். அவன் ஒன்றை நினைத்தால் அதை முடிக்கும் பிடிவாதம் கொண்டவன். தான் ஓகே சொன்ன இடத்தை விட்டுக் கொடுத்து விடுவானா? ஓகே கவி இதை நான் எப்படி டீல் பண்ணணுமோ அப்படி பண்ணிக்கிறேன். கண்டிப்பா அந்த லேண்ட் ஐ முடிக்கிறேன். முடிச்சதும் கால் பண்றேன் வந்து உங்களுக்கு வர வேண்டிய அமௌண்ட் ஐ கலெக்ட் பண்ணிக்கங்க. என்றான் கௌதம்.
சரிங்க சர். என்று கிளம்பினர்
கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல அந்த இடத்தை எப்படி அடைவது என்றவாறு யோசிக்க ஆரம்பித்தான். கைபேசியில் யாரையோ அழைத்து சில விவரங்கள் சொன்னவன் என்ன செய்வது என்று திட்டமிட ஆரம்பித்தான்.
கதவை திறந்து கொண்டு அத்தான் என்றவாறு மானசா உள்ளே வந்தாள்.
வந்தவளை பார்த்து ஹனி இங்க எங்கே வந்த?
உன்னை ஆபீஸ் time ல டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொல்லியிருக்கேன் இல்ல? என்றான்
நான் வீட்டுக்கு உங்களை பார்க்க வந்தால் நீங்க ஆஃபீஸ் கு வந்துட்டிங்க? நான் அத்தை கிட்ட இருந்து ஒரு வழியா தப்பிச்சு வந்துட்டேன். உங்க கூட லன்ச் க்கு வெளிய போலாம்னு வந்தா நீங்க இப்படி பேசறீங்க? என்றவாறு அவன் இருக்கையின் பின்னே நின்று அவளின் இருகைகளையம் அவன் கழுத்தில் கோர்த்து முன்புறம் சாய்ந்தாள். மேலே நிமிர்ந்து பார்த்தவனுக்கு மூச்சு முட்டியது.
ஹேய் அப்படி இல்லடா என்றவாறு அவளை முன்னே இழுத்தான்.
அவன் மடியில் வந்து விழுந்தவளின் அவன் கன்னங்களில் கோடிழுத்தவனின் விரல்கள் அவள் இதழில் வந்து நின்றது. லிப்ஸ்டிக் ஐ கொஞ்சம் குறை ஹனி? எனக்கு ரொம்ப டிஸ்டர்ப் ஆக இருக்கு என்று கூறி ஒரு கண்ணை சிமிட்டி சிரித்தான்
அவனது கண்களில் தெரிந்தது காதலா அல்லது காமமா என்று எப்போதும் வரும் சந்தேகம் இன்றும் மானசா விற்கு வந்தது.
மானசாவை பொருத்தவரை கௌதம் என்பவன் பொன்முட்டை இடும் வாத்து. தொழிலில் வளர்ந்து வரும் தொழிலதிபர்.தொழில் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவன்.அவளுக்கு தேவை கௌதமின் மனைவி என்ற ஸ்டேட்டஸ் மட்டுமே. அதனாலேயே அவனை விடாமல் துரத்திக் கொண்டிருந்தாள்.
ஆண்களை மயக்கும் வித்தையை நன்கு கற்றிருந்தாள்.
அதனால் அவள் மேல் இருக்கும் மயக்கம் தெளியாமல் அவனை வைத்திருந்தாள்.
எல்லாவற்றிலும் தெளிவாக இருக்கும் கௌதம் அவளிடம் மட்டும் புத்தியை உபயோக படுத்தாமல், மனது சொல்வதையும் கேக்காமல் அவள் பின்னே ஆட்டுக்குட்டி போல சுற்றிக்கொண்டு இருந்தான்
சரி வா கிளம்பலாம், என்றவாறு எழுந்து வெளியே வந்தான்.
வெளியே வந்து தனது சிவப்பு நிற ஆடி யை எடுத்தவன் அருகில் வந்து அமர்ந்து அவன் தோளில் சாய்ந்தவாறு அவனை சீண்டிக்கொண்டே வந்தாள்.
அத்தான் என் பிரின்ட்ஸ் எல்லாம் வோர்ல்டு டூர் பிளான் பண்ணி இருக்காங்க?
என்னையும் கண்டிப்பா வரணும் னு சொல்றாங்க? கௌதமை கல்யாணம் பண்ணிட்டா எங்களை மறந்துருவ, அதனால கல்யாணத்துக்கு முன்னாடி எங்க கூட வா ன்னு கூப்டுறாங்க? என்றாள்.
கண்டிப்பா போகணுமா? என்றான் கௌதம்.
இந்த ஒரு முறை மட்டும் போயிட்டு வர்றேன் அத்தான், இன்னும் ஆறு மாசத்துக்கு மேல இருக்கு நம்ம marriage க்கு
டூர் பிளான் பண்ணியதே இவள் தான். ஆண், பெண் என இருபாலரும் சேர்ந்து தான் செல்கிறார்கள்.
மானசா விற்கு ஆண் நண் பர்களுடன் பழகுவதற்கு மட்டுமல்ல, அனைத்தும் பிடிக்கும்.
ஆனால் அவளின் ஆண் நண்பர்கள் பற்றிய எந்த செய்தியும் கௌதமின் காதுகளில் விழாமல் மிகவும் கவனமாக இருப்பாள்.
சரி போயிட்டு வா? உனக்கு எவ்ளோ அமௌண்ட் வேணும்னு சொல்லு, நான் ட்ரான்ஸ்பெர் பன்றேன். என்றான்
Thankyou அத்தான் என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.
பார்க் ஷெராட்டன் வந்து கார் ஐ விட்டு இறங்கி பார்க் பண்ண கார் key கொடுத்துவிட்டு திரும்ப வலது கையில் சட்டென்று ஏதோ அடிக்க என்னவென்று திரும்ப, மங்கையவள் தன் நீண்ட பின்னலை சுழற்றி பின்னால் விட அது அவனின் கையில் வந்து அடித்தது.
இவ்வளவு நீள பின்னலா என அவன் வியந்து கொண்டிருக்கும்போதே நான்கைந்து கல்லூரி பெண்கள் கேப்ல் ஏறி ஹோட்டல் ஐ விட்டு கிளம்பினர்.
போன கேப் ஐ சிறிது நேரம் பார்த்திருந்தவன் மானசா வின் குரலில் திரும்பி திரும்பி பார்த்தவாறு உள்ளே சென்றான்.
 

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி கௌதம்
உன்னைய நல்லவன்னு நினைச்சா
இப்படி அந்த மேனாமினுக்கி மானசாவிடம் மயங்கிக் கிடக்கிறியே
மீனாட்சியம்மா பயந்தது சரியாய் இருக்கே

ஹா ஹா ஹா
தேன்மொழியை முன்னாடி முகத்தை
நீ பார்க்கலையா, கௌதம்
கையில் பின்னல் அடிச்ச அடியிலேயே
பையன் கவுந்துட்டானோ
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top